Published:Updated:

பரிகார தலங்கள்

பரிகார தலங்கள்
பிரீமியம் ஸ்டோரி
பரிகார தலங்கள்

தொகுப்பு: பரணிவேல்

பரிகார தலங்கள்

தொகுப்பு: பரணிவேல்

Published:Updated:
பரிகார தலங்கள்
பிரீமியம் ஸ்டோரி
பரிகார தலங்கள்
பரிகார தலங்கள்

இல்லறம் இனிக்க...

சென்னை - திருவல்லிக்கேணி காமகலா ஈஸ்வரர் திருக்கோயில்

இறைவன்: ஸ்ரீகாமகலா காமேஸ்வரர்;

இறைவி: ஸ்ரீகாமகலா காமேஸ்வரி.

பரிகாரம்:  காசி க்ஷேத்திரத்திலிருந்து கொண்டுவரப்பட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்படிக லிங்கமாம் ஸ்வாமியின் திருமேனி. அதிலும், ஸ்வேத பாணலிங்கமாக... ரேகையுடன் கூடிய வெண் சிவப்பு மேனியராக இவர் திகழ்வது விசேஷ அம்சம் என்கிறார்கள்.

மன்மத தம்பதிக்கு அருளிய தலம் இது. உள்ளம் நிறைந்த பக்தியுடன் இந்த ஆலயத்துக்கு வந்து, ஸ்வாமி அம்பாளை மெய்யுருக தரிசித்து, மனதார வழிபட்டால், பிரிந்த தம்பதி ஒன்று சேருவர்; இல்லறம் செழிக்கும்; வாழ்வு வரமாகும்!

சர்க்கரை நோய் நீங்கும்!

வெண்ணி கரும்பேஸ்வரர் ஆலயம், கோயில்வெண்ணி கும்பகோணத்திலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவிலுள்ளது இந்தத் திருத்தலம்.

இறைவன் - ஸ்ரீகரும்பேஸ்வரர்

அம்பாள் - ஸ்ரீசெளந்தர நாயகி

பரிகாரம் - சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள், வெள்ளை சர்க்கரையும் ரவையும் கலந்த கலவையை வெண்ணி கரும்பேசுவரர் ஆலயப் பிராகாரத்தில் போட்டு வலம் வர வேண்டும். அதை எறும்புகள் சாப்பிட்டு விடுவதால், சர்க்கரை காணாமல் போவதைப் போல, நம்முடைய சர்க்கரை நோயும் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை. இதேபோல், சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள பாடாலூரிலிருந்து சுமார் 5 கி.மி. தூரத்தில் உள்ள ஊட்டத்தூரில் கோயில்கொண்டிருக்கும், அருள்மிகு சுத்தரத்தினேஸ்வரரை வழிபட்டு, கோயிலில் தரப்படும் வெட்டிவேர் ஊறிய தீர்த்தத்தைப் பருகினால் சர்க்கரை நோய் விலகும் என்பது ஐதீகம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அருமருந்தாகும் நவ மிளகு!

லட்சுமிநாராயண பெருமாள் ஆலயம் சின்னமனூர். தேனி- சின்னமனூரில், சுரபி நதிக்கரைக்கு அருகில், வயல்களும் தென்னந்தோப்பும் சூழ நடுவில் அமைந்துள்ளது ஸ்ரீலட்சுமி நாராயணபெருமாள் ஆலயம்.

இறைவன்: ஸ்ரீலட்சுமிநாராயணர்

இறைவி: ஸ்ரீமகாலட்சுமி தாயார்

பரிகாரம்: தீராத வயிற்றுவலியால் அவதிப்படுவோர், புதிதாகத் துண்டு (அங்கவஸ்திரம்) ஒன்றை வாங்கி வந்து, ஸ்வாமியிடம் சமர்ப்பிக்கின்றனர். அந்தத் துண்டை, பெருமாளின் இடுப்பில் கட்டிவிட்டுத் திருமஞ்சனம் செய்து, பிரார்த்திக்கின்றனர். பிறகு அந்தத் துண்டை, கோயில் பட்டாச்சார்யர் பிரசாதமாகத் தர, அதை வீட்டுக்கு எடுத்துச் சென்று, தினமும் இடுப்பில் கட்டிக்கொண்டால், வயிற்றுவலி விரைவில் நீங்கி குணம் பெறலாம் என்கின்றனர் பக்தர்கள்.

அதேபோல் பெருமாளின் திருப்பாதத்தில் 9 மிளகுகளை வைத்து வழிபட்டுப் பெற்றுக்கொண்டு, அவற்றைத் தினமும் ஒன்று வீதம் சாப்பிட, தீராத நோயும் தீரும்; உடல் வலி அனைத்தும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை!

பிள்ளை வரம் வாய்க்கும்!

புரந்தீஸ்வரர் கோயில் - மருதாடு திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியிலிருந்து மேல்மருவத்தூர் செல்லும் வழியில், சுமார் 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மருதாடு. பிரதான சாலையிலேயே அமைந்துள்ளது ஸ்ரீபுரந்தரீஸ்வரர் திருக்கோயில்!

இறைவன்: ஸ்ரீபுரந்தரீஸ்வரர்

இறைவி: ஸ்ரீஇந்திரப்பிரசாதவல்லி

பரிகாரம்:  புரந்தரனாகிய இந்திரன் வழிபட்டு அருள்பெற்ற ஸ்தலம் இது. சோம வாரம் (திங்கள்கிழமை), சுக்கிர வாரம் (வெள்ளிக்கிழமை) ஆகிய தினங்களில், அம்பாள் பிராகார வலம் வருவதை தரிசித்து வழிபட்டால் (இதற்கென இரண்டு உற்ஸவ மூர்த்தங்கள் உள்ளன), கன்னிப்பெண்களுக்கு நல்ல கணவன் அமைவான்; குழந்தை இல்லாத அன்பர்களுக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதேபோல், மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை, அம்பிகையின் இரண்டு மூர்த்தங்களும் பிராகார வலம் வருவதை தரிசிப்பதும் புண்ணியம்; சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கப் பெறுவர்!

கோயிலின் இன்னொரு சிறப்பு... இந்தக் கோயிலில் வில்வமரம், வன்னிமரம் என இரண்டு தலவிருட்சங்கள் அமைந்துள்ளன. வன்னி மரத்தடியில், நான்கு தலைகளுடன் திகழும் நாகேந்திரனை வணங்கினால், நாக தோஷம் விலகும்; திருமண பாக்கியம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism