திருவள்ளூர் ஸ்ரீவீரராகவப் பெருமாளை தரிசிக்கச் சென்றிருந்தோம். எம்பெருமானைக் கண்ணாரச் சேவித்து சந்நிதியை விட்டு வெளியேறியபிறகும், பெருமாளின் சயனத் திருக்கோலம் மனம் முழுமையும் வியாபித்திருந் தது. மீண்டும் சென்று சந்நிதியிலேயே இருந்து விடலாமா என்றுகூடத் தோன்றியது.

நம்முடன் வந்த நண்பர், ‘`ஏன் இப்படியே மெய்ம்மறந்து நின்றுவிட்டீர்? இன்னும் சில புண்ணிய க்ஷேத்திரங்களுக்கும் சென்று பெருமாளை சேவிக்கலாமே...’’ என்றார்.

அச்சுதனைப் பாடுவது அவனை தரிசித்து மகிழ்வது எனும் பேறு கிடைத்துவிட்டால், வேறு எப்பேர்ப்பட்ட பேறுகள் கிடைத்தாலும் வேண்டேன் என்று ஆழ்வார்கள் உருகி உருகிப் பாடியதற்கு ஏற்ப, வெவ்வேறு கோலங்களில் அவனைத் தரிசிக்கும் வாய்ப்பு கசக்குமா என்ன? நண்பரின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டோம்.

திருவள்ளூருக்கு அருகிலேயே வேறுசில வைணவ க்ஷேத்திரங்கள் உண்டு என்று கூறிய நண்பர், நம்மை முதலில் அழைத்து சென்ற ஊர் ஈக்காடு.

மன்னனின் மகளாய்ப் பிறந்த சொர்ண சீதை!

ஈக்காடு எனும் அந்தத் தலத்துக்குச் செல்லும் வழிநெடுக, அதன் மகிமை களைச் சொல்லிக்கொண்டு வந்தார் நண்பர்.

“ஒருவகையில் ராமாயணத்தோடு தொடர்புடைய தலம் ஈக்காடு. ராமச்சந்திரமூர்த்தி ஒருமுறை அஸ்வமேத யாகம் செய்ய விரும்பினார். அப்போது சீதாபிராட்டியை வனத்துக்கு அனுப்பிவிட்ட நிலை. எனவே, பிராட்டியின் ஸ்தானத்தில் அவரைப் போலவே தங்கப் பிரதிமை ஒன்றைச் செய்து வைத்து யாகம் செய்தனர். யாகம் முடிந்து ராமபிரான் கிளம்பியபோது அந்த சொர்ண விக்கிரகம் பேசியது.

‘ஸ்வாமி, சீதாப் பிராட்டியின் ஸ்தானத்தில் வைத்து எனக்கு அருளினீர். தற்போது என்னைத் தனியாக விட்டுப் போகாமல் தங்களோடு அழைத்துச் செல்லவேண்டும்’ என்று விண்ணப்பம் செய்தாள், அந்தச் சொர்ண சீதை.

ராமசந்திரமூர்த்தியோ, ‘சொர்ண சீதையே, இந்த அவதாரத்தில் நான் ஏகபத்தினி விரதம் பூண்டுள்ளேன். எனவே சீதாவைத் தவிர வேறு பெண்ணை என் வாழ்வில் சிந்தையாலும் தொடேன். ஆனாலும் உனது பக்தியை நான் அறிகிறேன். கலியுகத்தில் நீ கனகவல்லியாக அவதாரம் செய்வாய். அப்போது, நான் உன்னைக் கரம் பிடிப்பேன்’ என்று வாக்குக் கொடுத்தார்.

யுகங்கள் கடந்தன. கலி யுகத்தில் தர்மசேனபுரம் என்னும் நகரை சத்தியம் தவறாமல் பரிபாலனம் செய்து வந்தார் மன்னன் தர்மசேனன். அவருக்கு மகளாக அவதரித்தாள் சொர்ணசீதை. மன்னன், அவளுக்கு வசுமதி என்று பெயரிட்டு வளர்த்து வந்தார்.

பேரழகியாக அன்னை வளர்ந்தார். அவளைக் கரம் பிடிக்கச் சரியான தருணம் வாய்க்கவும், ஸ்ரீவீரராகவப் பெருமாள் ஒரு ராஜகுமாரனின் தோற்றம் கொண்டு அவள் முன் தோன்றினார். ராஜகுமாரனின் சுந்தரத் தோற்றத்தைக் கண்டதும் வசுமதி மெய் சிலிர்த்தாள். அப்போதே, அவள் தன் பிறப்பின் ரகசியத்தையும் உணர்ந்தாள். ராஜகுமாரன் வசுமதியிடம் தன் காதலைச் சொல்லிக் கரம்பிடிக்க விண்ணப்பம் செய்தார். தந்தை சொல்லைப் பரிபாலனம் செய்தவர் ஆயிச்சே ராகவன். ஆகவே, அவரிடம் அன்னை ‘எனக்குத் தடையில்லை. ஆனபோதும் இந்தப் பிறவியில் என் தந்தையான தர்மசேனனின் அனுமதி கேளுங்கள்' என்று கூறினாள்.

ராஜகுமாரனும் தர்மசேனனிடம் சென்று வசுமதியை மணம் முடிக்க அனுமதி கேட்டார். ராகவனின் முகதரிசனம் கண்ட பின்னரும் அவர் விண்ணப்பத்தை ஏற்க மறுப்பார் உண்டோ? மகிழ்ச்சியுடன் மகள் வசுமதியை அவருக்குத் திருமணம் செய்து கொடுத்தார் மன்னன்.

திருமணம் ஆனதும் புதுமணத் தம்பதியும் தர்மசேனனும் அவர்களின் குலதெய்வமான வீரராகவப் பெருமாள் ஆலயத்துக்கு வழிபடச் சென்றனர்.

தம்பதி கைகோர்த்தவண்ணம் கருவறையை நோக்கிச் சென்றனர். வழிபடவே செல்கிறார்கள் என்று மன்னன் பார்த்திருந்தார். ஆனால், தம்பதியோ கருவறைக்குள் சென்று மறைந்தனர். அப்போதுதான் அவர்கள் இருவரும் யார் என்பது மன்னனுக்குத் தெரிந்தது. தனது பாக்கியத்தை எண்ணி மகிழ்ந்தார். அன்னை அவதரித்த தலத்தில் ஒரு கோயில் கட்டினார். அந்தக் கோயிலுக்குத்தான் இப்போது நாம் செல்கிறோம்'' என்று சொல்லி நண்பர் சொல்லி முடிக்கும் நேரத்தில் நாங்கள் ஈக்காடை அடைந்திருந்தோம்.

கோயில் பழைமையான கட்டடமாக இருந்தது. கோபுரங்கள் இல்லை. கோயிலுக்கு வெளியே கைகூப்பி நின்றருளும் சின்னத் திருவடியின் தரிசனம். கோயிலுக்கு முன்பாக ஒரு கல்மண்டபம். அதன் தூண்களில் நரசிம்மர், ஆஞ்சநேயர், கருடர் ஆகியோரின் திருவுருவங்களுடன், பல்வேறு உயிரினங்களின் சிலைகளும் காட்சி தந்தன. வலப்பக்கச் சுவரில் ராமாயணக் காட்சிகளும் நடன மங்கைக் காட்சிகளும் திகழ்கின்றன.

இந்தக் கோயிலின் வரலாறு குறித்த கல்வெட்டு எதுவும் காணக்கிடைக்கவில்லை. ஆனாலும், சிற்ப பாணியைக் காணும்போது, கோயில் விஜய நகரப் பேரரசின் காலத்தைச் சேர்ந்தது என்பதைக் கணிக்கமுடிகிறது.

உள்ளே சென்றதும் நமக்கு இடப்புறம் தாயாரின் சந்நிதி. வீரராகவனின் வரவை எதிர்நோக்கிக் காத்திருப்பது போல் தெற்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் அருள்கிறார், வசுமதித் தாயார்.

மேற்கு நோக்கிய சந்நிதியில் பெருமாள் கல்யாண வீரராகவராகக் அருள்பாலிக்கிறார். ஒரு கையால் அன்னையை ஆலிங்கனம் செய்தபடியும் மறுகையால் அபய ஹஸ்தம் காட்டியும் காட்சி கொடுக்கிறார். நாம் சென்றபோது திருமஞ்சனம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அற்புதமான தரிசனம்! அர்த்த மண்டபத்தில் கோதை நாச்சியார், ஸ்ரீநிவாசப் பெருமாள், விஷ்வக் சேனர், ராமாநுஜர் ஆகியோர் அருள்புரிகின்றனர். மூலவருக்கு எதிரில் பெரியதிருவடி கருடாழ்வார்.

ஆலய தரிசனத்துக்கு வந்திருந்த பெரியவர் ஒருவரிடம் பேசினோம்.

“என் பெயர் வாசுதேவன். தற்போது போரூரில் இருக்கிறேன். எனக்கு ஈக்காடுதான் சொந்த ஊர். சிறுவயதில் தினமும் வந்து சேவிப்பேன். இப்போ எனக்குப் பேரப்பிள்ளைகள் இருக்காங்க. என் பேத்திக்குப் பிறந்தநாள். அதுக்காகத்தான் சேவிக்க வந்திருக்கோம். இந்தப் பெருமாள் வரப்பிரசாதி. கேட்கிற வரம் எதுன்னாலும் உடனே அருள்புரிவார். இங்கு பெருமாள் கல்யாண வீரராகவரா இருக்கிறதால இங்க வேண்டிக்கிட்டா சீக்கிரம் கல்யாணம் நிச்சயமா கும். தாயார் கனகவல்லி. கனகம்னா தங்கம். அன்னையை வேண்டிக்கிட்டா வறுமை தீர்ந்து செல்வம் கொழிக்கும்’’ என்று பக்திப் பெருக்கோடு சொன்னார். திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், தைமாத பிரம்மோற்சவத்தின்போது மூன்று நாள்கள் இங்கு எழுந்தருளுகிறார் என்கிற தகவலையும் அவரே சொன்னார்.

திருவள்ளூர் வீரராகவப் பெருமாளைச் சேவிக்க வருபவர்களில் பலருக்கு, இந்தத் தலம் குறித்துத் தெரிவதில்லை. விசேஷநாள்களில் மட்டும் பக்தர்கள் இங்கு வருகிறார்கள். மற்றபடி ஆலயம் அமைதியாக இருக்கிறது. வருவாய் குறைந்தபோதும் அர்ச்சகர் தினமும் ஆராதனை களைக் குறைவில்லாமல் பார்த்துக் கொள்கிறார். வைகாநஸ ஆகம முறைப்படி தவறாமல் பூஜைகள் நடந்துவருகின்றன. ஒருமுறை வந்து பலன் கண்ட பக்தர்கள், தொடர்ந்து வந்து கோயிலுக்கு உதவுகிறார்கள் என்று தெரிந்துகொண்டோம்.

ராமாவதாரத்தில் சொன்ன வார்த்தையைக் காப்பாற்றுவதற்காக, கலியுகத்தில் ராஜகுமார னாகத் தோன்றி சொர்ணசீதையின் கரம்பிடித்த வீரராகவ பெருமாளின் தரிசனத்தில் மெய்ம்மறந்து லயித்திருந்த நிலையில், “இந்தத் தலத்திலேயே நின்றுவிட்டால் எப்படி? அடுத்து நோய் நீக்கி வளம் அருளும் தலம் நோக்கிச் செல்லவேண்டும். புறப்படுவோம்” என்ற நண்பரின் குரல் கேட்டு சுயநினைவு பெற்று, ஈக்காடு திருக்கோயிலை விட்டுப் புறப்பட மனமில்லாமல் புறப்பட்டோம்.

கல்யாண வரம் தரும் நரசிம்ம தரிசனம்!

திருவள்ளூரிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் இருக்கிறது பேரம்பாக்கம். அங்கிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது நரசிம்ம மூர்த்தியின் திருப்பெயரிலேயே அமைந்திருக்கும் நரசிங்கபுரம் திருத்தலம்.

செல்லும் வழியெங்கும், ‘பச்சை மாமலை போல் மேனி’ என்று ஆழ்வார் பாடிப் பரவசம் அடைந்த பெருமாளின் திருமேனி நிறத்தைப் போலவே, சுற்றிலும் பசுமை போர்த்திய வயல்கள்!

அவற்றுக்கு நடுவில், ஐந்து நிலை கோபுரத்துடன் காட்சி தருகிறது ஆலயம். கதவுகளில் தசாவதாரச் சிற்பங்கள் கலையழகுடன் வடிக்கப்பட்டிருக்கின்றன. மேலும் பெருமாளின் சயனக் கோலமும் மனதைக் கொள்ளைகொண்டது.

ஆலயத்தின் மூலவர் நரசிம்ம பெருமாள். ஏழரை அடி உயரத்தில் அன்னை லட்சுமியை மடியில் இருத்தி அமர்ந்திருக்கிறார். பொதுவாகத் தாயார் நரசிம்மரின் திருமுகத்தைப் பார்த்தபடி இருப்பது வழக்கம். இந்தத் தலத்திலோ, அன்னை பக்தர்களை நோக்கியபடி அமர்ந்திருக்கிறாள். பெருமாளும் தாயாரும் ஒருவரை ஒருவர் ஆலிங்கனம் செய்தபடி அமர்ந்திருக்கின்றனர். பெருமாள் தனது வலது கையில் அபயஹஸ்தம் காட்டி அருள்பாலிக்கிறார். இங்கு அன்னைக்கு மரகதவல்லி என்று திருநாமம். அன்னைக்குத் தனிச் சந்நிதியும் உண்டு.

இந்தத் தலத்தின் சிறப்புகள் குறித்து அர்ச்சகர் சம்பத் பேசினார்.

“ வேதாந்த தேசிகர் தனது தசாவதார ஸ்துதியில், ஒன்பது அவதாரங்களும் ஒன்பது கிரகங்களுக்கு அதிபதியாக இருப்பதையும், அதில் செவ்வாய் பகவானுக்கு அதிபதி நரசிம்ம மூர்த்தி என்றும் குறிப்பிட்டுள்ளார். எனவே, செவ்வாய் தோஷத்தினால் திருமணத் தடை, குழந்தைப்பேறின்மை ஆகிய குறைகளை உடையவர்கள் இந்தத் தலத்தில் வந்து வேண்டிக்கொண்டால் தோஷம் நீங்கும். பெருமாள் தாயாரை ஆலிங்கனம் செய்துகொண்டு அருள்பாலிப்பதால் திருமண யோகம் கிட்டும். மேலும் இது ருண ரோக விமோசன க்ஷேத்திரம். அதனால் இங்கு வேண்டிக்கொண்டால், நோய்கள் தீரும். கடன் தீர்ந்து செல்வம் சேரும். நாக தோஷம் உள்ளவர்கள் இங்கிருக்கும் நாகாபரணம் பூண்ட கருடாழ்வாரை வேண்டிக்கொள்ளலாம்” என்றார்.

பிரமாண்டமான இந்த ஆலயம் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டு, பின்னர் சோழர்கள் காலத்தில் புனரமைக்கப்பட்டதாகத் தெரிகிறது. சோழர்கள் மற்றும் விஜயநகர அரசர்கள் காலக் கல்வெட்டுகளும் ஆலயத்தின் தொன்மையைப் பறைசாற்றுகின்றன. அடுத்து நாங்கள் தரிசிக்கச் சென்றது, நாகம்பட்டு.

கையில் ஸ்ரீநரசிம்மரை ஏந்தி...

பேரம்பாக்கத்தில் இருந்து 14 கி.மீ தொலைவில் உள்ளது நாகம்பட்டு. எம்பார் சுவாமிகளின் அவதார ஸ்தலமான மதுரமங்கலத்துக்கு வடமேற்கில் 7 கி.மீ தொலைவில் உள்ளது இந்தத் தலம். இங்கே ஸ்ரீஆனந்தலட்சுமி நரசிம்மர் அற்புதமாகக் கோயில்கொண்டிருக்கிறார்.

அரைமணி நேரப் பயணத்தில் நாம் ஆலயத்தை அடைந்தோம். திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. பெருமாள் மூலவர் உற்சவர் சகிதம் ஆலயத்துக்குப் பின்புறம் உள்ள அறையில் சேவை சாதிக்கிறார். அன்னை மகாலட்சுமியை மடியில் அமர்த்தி ஆனந்தத் திருக்கோலத்தில் பெருமாள் காட்சி கொடுக்கிறார். ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் வேய்ந்த பக்கத்து அறையில் பத்மாவதி சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள் வாசம் செய்கிறார். மனதில் திருப்பதியிலும் சோளிங்கரிலும் ஒருங்கே சேவித்த திருப்தி ஏற்பட்டது.

ஒருமுறை இந்த ஆலயத்துக்கு வந்து ஸ்ரீஆனந்த லட்சுமி நரசிம்ம பெருமாளுக்கு 3 நெய்தீபம் ஏற்றி 9 முறை கோயிலை வலம் வந்து வழிபட்டால், வழக்குகளில் வெற்றி கிடைக்கும், குடும்பத்தில் உள்ள சிக்கல்கள் தீரும், கடன் நீங்கி செல்வச் செழிப்பு ஏற்படும் என்கின்றனர் பக்தர்கள்.

தீர்த்தமும் சடாரியும் தந்த அர்ச்சகர் மீண்டும் ஒருமுறை தீர்த்தம் தந்து கைகளைத் துடைத்துக் கொள்ளச் சொன்னார். நாமும் செய்தோம். உடனே ஒரு சிறிய தீர்த்தப் பாத்திரத்தில், நரசிம்மரின் சிறிய விக்கிரகத்தை வைத்து நம் கையில் தந்தார். இந்த நடைமுறை வேறு ஆலயங்களில் உள்ளதா எனத் தெரியவில்லை.

இந்தத் தலத்தின் ஆதி உற்சவரான ஆனந்த லஷ்மி நரசிம்மரைக் கையில் ஏந்தியதும் மனம் பேரானந்தம் கொண்டது. இங்கு மனக்குறையோடு வரும் அனைவரின் கரங்களிலும் மூர்த்தத்தைத் தந்து வேண்டிக்கொள்ளச் சொல்கிறார்கள். சுவாமியைக் கையில் ஏந்தி மானசீகமாக வேண்டிக் கொள்ளும் யாவும் உடனே நிறைவேறும் என்பதற்கு ஆதாரமாக, அந்தக் கணமே பக்தர்கள் மனதில் ஆறுதல் பிறக்குமாம். நாமும் அந்த ஆனந்தத்தை அனுபவித்தோம்.

இந்த ஆலயத்தின் அர்ச்சகர் முகுந்தன், “தாத்தா வழித் தாத்தா காலத்திலிருந்து இந்த ஆலயத்தில் பூஜை செய்கிறோம். பொருள் தந்து ஆதரிப்பார் யாரும் இல்லாமல் கோயில் குறைவுபட்டு வந்தது. எனது தந்தையார் ‘எந்தக் காலத்திலும் எந்தக் கஷ்டம் நேர்ந்தாலும் பெருமாள் சேவையை நிறுத்திவிடாதே’ என்று சத்தியம் வாங்கிக்கொண்டார். அதனால் பெருமாள் மேல் பாரத்தைப் போட்டு இன்றுவரை எந்தக் குறைவும் இல்லாமல் பூஜைகளைச் செய்துவருகிறேன். ஆனால் திருப்பணிகள்தான் பொருளாதாரப் பிரச்னைகளால் மெதுவாக நடைபெறுகிறது. வரும் ஜூன் மாதம் ஆலயத்தின் சம்ப்ரோக்ஷணம் தேதி குறித்தாயிற்று. எல்லாவற்றையும் நடத்துபவன் அவன்தானே, அதனால் அவன் மேல் நம்பிக்கை வைத்துத் திருப்பணிகளைத் தொடர்கிறோம்” என்று நம்பிக்கையோடு கூறினார்.

இறை மேல் வைத்த நம்பிக்கை பொய்க்குமா? நிச்சயம் திருப்பணிகள் விரைவில் நடந்தேறி, ஸ்வாமியின் திருவருளால் கோலாகலமாக சம்ப்ரோக்ஷணம் நடைபெறும். அந்த வைபவத்துக் கும் நிச்சயம் வருவோம் என்று சங்கல்பித்துக் கொண்டு, மீண்டுமொருமுறை ஸ்ரீஆனந்தலட்சுமி நரசிம்மரை வழிபட்டுவிட்டுப் புறப்பட்டோம்.

ஒரே நாளில், திருவள்ளூர் வீரராகவர் கோயிலுடன் மேலும் மூன்று தலங்களைச் சேவித்த ஆனந்தம் நமக்கு; நம்மை அழைத்துச் சென்ற ஆத்மதிருப்தி நண்பருக்கு. நண்பருக்கு நன்றி கூறி விடைபெற்றோம்.

நீங்களும் அடுத்தமுறை திருவள்ளூர் கோயிலுக்குச் செல்லும்போது, அருகிலேயே அமைந்திருக்கும் இந்தத் தலங்களுக்கும் சென்று தரிசித்து வாருங்கள். உங்கள் வாழ்க்கை செழிக்கும்; எதிர்காலம் சிறக்கும்!

-சைலபதி

படங்கள்: சி.ரவிக்குமார்

பக்தர்கள் கவனத்துக்கு...

ஈக்காடு : திருவள்ளூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோயிலிலிருந்து சுமார் 1.5 கி.மீ தொலைவில் உள்ளது. தரிசன நேரம் : காலை 7 முதல் பகல் 12 மணி வரை; மாலை 5 முதல் 7:30 மணி வரை.

நரசிங்கபுரம் : திருவள்ளூரிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ளது. கடம்பத்தூர் அல்லது மப்பேடு வழியாக பேரம்பாக்கம் செல்ல வேண்டும். பேரம்பாக்கத்திலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது நரசிங்கபுரம். தரிசன நேரம் : காலை 6 முதல் 12 மணி வரை; மாலை 4.30 முதல் 8:30 மணி வரை.

நாகம்பட்டு : பேரம்பாக்கத்திலிருந்து 14 கி.மீ. தொலைவு. மதுரமங்கலம், ஏகனாபுரம் வழி. தரிசன நேரம் : காலை 6 மணி முதல் 11 மணி வரை; மாலை 4 முதல் இரவு 8 மணி வரை. (விசேஷநாள்களுக்கு இந்த நேரம் பொருந்தாது.)