Published:Updated:

தேவகோட்டையின் தேவதேவன்!

தேவகோட்டையின் தேவதேவன்!
பிரீமியம் ஸ்டோரி
தேவகோட்டையின் தேவதேவன்!

அருள்மிகு ஸ்ரீதண்டாயுதபாணி ஸ்வாமி திருக்கோயில்

தேவகோட்டையின் தேவதேவன்!

அருள்மிகு ஸ்ரீதண்டாயுதபாணி ஸ்வாமி திருக்கோயில்

Published:Updated:
தேவகோட்டையின் தேவதேவன்!
பிரீமியம் ஸ்டோரி
தேவகோட்டையின் தேவதேவன்!

`நீல நிறம் மேவிய கடலில் உதிக்கும் சூரியனைப் போல், நீண்ட தோகையுடைய மயிலின் மீது பேரொளியாக தோன்றும் முருகன், உலகம் உய்ய உருக்கொண்ட முழுமுதற் தெய்வம்' எனச் சிறப்பிக்கிறது  திருமுருகாற்றுப் படை. குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் குடி இருப்பான் என்பார்கள் பெரியோர்கள்.

தேவகோட்டையின் தேவதேவன்!

குன்றுகள் இல்லாத இடங்களிலும்... மிக உயர்ந்த தெய்வமான முருகப்பெருமான உயர்ந்ததொரு இடத்தில் வைத்து வழிபட விரும்பிய ஆன்மிக அன்பர்கள், கட்டுமலை என பெருங்கோயில்கள் எழுப்பி, அதில் முருகனை அமர்த்தி வழிபட்டிருக்கிறார்கள். சுவாமிமலை முருகன் கோயில் கட்டுமலையே. அவ்வகையில், தேவகோட்டையிலும் முருகனுக்கு உயர்ந்துநிற்கும் கோயில் எழுப்பி வழிபட்டு வருகிறார்கள் ஆன்றோர்கள்.

சிவகங்கை மாவட்டம், தேவக்கோட்டையிலிருந்து கண்டதேவி செல்லும் சாலையில் அமைந்துள்ளது கருதா ஊரணி. அதன் கிழக்குப் படித்துறைக்கு எதிரே வீடுகளுக்கு நடுவே உயர்ந்து நிற்கிறது, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில். சுமார் 48 அடி உயரம் வரை  கான்கிரீட் தூண்கள் அமைத்து, அவற்றின் மீது திருக்கோயிலை அமைத் துள்ளனர். தரைமட்டத்திலிருந்து ஒட்டுமொத்தமாக  சுமார் 75 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது திருக்கோயில்.

கோயிலுக்குச் செல்லும் படிக்கட்டுகளில் ஏறுவதற்கு முன், நுழைவாயிலிலேயே செல்வ விநாயகரை தரிசிக்கலாம்; இவர் சுமார் 100 ஆண்டுகள் பழைமையானவர் என்கிறார்கள். படிக்கட்டு நுழைவாயிலின் இடப்புறத்தில் இடும்பன் சந்நிதி.

செங்குத்தாகச் செல்லும் படிக்கட்டு களுக்கு இடையிடையே, சற்று இளைப்பாற வசதியாக தளம் அமைத்துள்ளார்கள். படிகள் ஏறி கோயிலை அடைந்ததுமே கருவறையை தரிசிக்க முடிகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தேவகோட்டையின் தேவதேவன்!

பழநியில் அருள்வதைப் போன்றே, இந்தக் கோயிலிலும்... ஒரு கரத்தில் ல் தண்டம் ஏந்தி, மறு கரத்தை இடுப்பில் ஊன்றியபடி, தண்டாயுதபாணியாக மேற்கு நோக்கி அருள் பாலிக்கிறார் முருகன்.

அவருக்கு நேர் எதிரில்  பசிய மயில் வாகனம். வளைந்த கழுத்தும், விரிந்த தோகையும், தூக்கிய ஒரு காலும், ஊன்றிய ஒரு காலு மாக... வாரியார் ஸ்வாமி கள் அருளியபடி பிரணவ வடிவத்துக்கு சாட்சியாகவே திகழ் கிறது இந்த மயில் வாகனம். பழநியாண்டிக்கு நேர் கீழாக (அடித்தளத்தில்) அவரின் வேலாயுதம் அமைந்துள்ளது விசேஷ அம்சம்.

கார்த்திகை தினங்கள், பங்குனி உத்தரம், வைகாசி விசாகம் ஆகிய நாள்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறு கின்றன. தைப்பூசம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. திருநீறு அலங்காரம், சந்தன அலங்காரம் ஆகியவற்றில் அருளும் முருகனை தரிசிக்க பெருங்கூட்டம் கூடுமாம். புத்தாண்டு தினத்தில் ராஜ அலங்காரத்தில் தரிசனம் தருவாராம் இந்தத் தண்டாயுதபாணி. இந்தக் கோயில் அமைந்துள்ள இடத்தில் முன்பு `காசி ஐயா சத்திரம்' என்ற சத்திரம் அமைந்திருந்தது என்பது கூடுதல் தகவல். கோயிலின் மேலாண்மை காரியதரிசி முத்துக்குமாரிடம்  பேசினோம்.

தேவகோட்டையின் தேவதேவன்!

“என் பெற்றோர் மு.சிவலிங்க செட்டியார் - ஆனந்த வள்ளி. இருவரும் தீவிர முருகபக்தர்கள். அவர்களின் கனவில் தோன்றி முருகன் அருளியபடி, குடும்பத்தினர் இணைந்து இக்கோயிலைப் பொது வழிபாட்டு தலமாக கட்டினோம். இந்தப் பகுதியில் அமைந்திருக்கும் நகரச் சிவன் கோயில் கோபுரத்தின் உயரத்தை மீறாதபடி முருகன் கோயிலை அமைக்கவேண்டும் என்பது இறைக்கட்டளை. அப்படியே அமைக்கப்பட்டது இந்தக் கோயில். பெற்றோர் மட்டுமல்ல, ஊர்மக்களில் பெரும்பாலானோர் முருக பக்தர்கள் ஆதலால், எல்லோருக்கும் பிரியமானவராக அருள்பாலிக்கிறார் எங்கள் தண்டாயுதபாணி'' என்று சிலிர்ப்புடன் பகிர்ந்துகொண்டார்.

சிவகங்கை சீமைக்குச் செல்லும் அன்பர்கள், அப்படியே தேவகோட்டைக்கும் சென்று தேவதேவனான ஸ்ரீதண்டாயுதபாணியை தரிசித்து வழிபட்டு வாருங்கள். வல்வினைகள் நீங்கும்; வேண்டும் வரம் கிடைக்கும்!

- ச.பிரபாகரன்

படங்கள்: சாய் தர்மராஜ்

தேவகோட்டையின் தேவதேவன்!

எப்படி செல்வது: சிவகங்கை மாவட்டம், காரைக்குடிக்கு அருகில் உள்ளது தேவகோட்டை. இவ்வூரில், கண்டதேவி சாலையில் சுமார் 1 கி.மீ தொலைவில், கருதா ஊரணியின் எதிர்ப்புறம் (நகரச் சிவன் கோயில் அருகே) அமைந் துள்ளது இந்த முருகன் கோயில் (தொடர்புக்கு: ரங்கன் குருக்கள்: 87605 68792).

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism