Published:Updated:

திருவருள் செல்வர்கள்! - 22 - ஆனந்தக்கடலின் அலைத்திரள்!

திருவருள் செல்வர்கள்! - 22 - ஆனந்தக்கடலின் அலைத்திரள்!
பிரீமியம் ஸ்டோரி
திருவருள் செல்வர்கள்! - 22 - ஆனந்தக்கடலின் அலைத்திரள்!

ஸ்ரீநீலகண்ட தீக்ஷிதர்

திருவருள் செல்வர்கள்! - 22 - ஆனந்தக்கடலின் அலைத்திரள்!

ஸ்ரீநீலகண்ட தீக்ஷிதர்

Published:Updated:
திருவருள் செல்வர்கள்! - 22 - ஆனந்தக்கடலின் அலைத்திரள்!
பிரீமியம் ஸ்டோரி
திருவருள் செல்வர்கள்! - 22 - ஆனந்தக்கடலின் அலைத்திரள்!

காஞ்சி ஸ்ரீமகாசுவாமிகள் `கும்மரமிடம்’ எனும் கிராமத்தில் முகாமிட்டிருந்த நேரம். அவருடைய அருளைப் பெற்று அச்சிட வேண்டும் என்ற நோக்கில், நூல் ஒன்று மகா சுவாமிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

அந்த நூல், மகா சுவாமிகளின் அருளாசியோடு வெளியிடப்பட்டது. 1944-ம் ஆண்டு, அந்த நூலுக்கான ஆசியுரையில்  மகா சுவாமிகள் குறிப் பிட்டதில் சில அமுதத்துளிகள் உங்களுக்காக...

“இந்த நூல், எல்லோரும் எளிதாக உணரும் படியாக வெளிவருவதை அறியும்போது, உள்ளம் ஆனந்த வெள்ளத்தில் மூழ்குகிறது” என்று தொடங்கி, “பரதேவதையின் ஸாக்ஷாத் காரத்தினால் பரிபூர்ணமாக உண்டான  ‘ஆனந்தக் கடலின் அலைத்திரள் வடிவு’ எனப்படும் இந்த ஸ்தோத்ரமானது, படனம், மனனம், த்யானம் செய்பவர்கள் யாவர்க்கும் ஆனந்த ஸாக்ஷாத்காரமிகுதியான பலன், ஸ்ரீசந்த்ரமௌளீஸ்வரர் அருளால், அவசியம் பயக்குமாறு ஆசீர்வதிக்கிறோம்” என நிறைவு செய்திருக்கிறார்.

திருவருள் செல்வர்கள்! - 22 - ஆனந்தக்கடலின் அலைத்திரள்!

மகா சுவாமிகளால் ‘ஆனந்தக்கடலின் அலைத்திரள் வடிவு’ எனக்கூறப்பட்ட ‘ஆனந்த ஸாகர ஸ்தவம்’ எனும் அந்த நூலை எழுதியவர் ஸ்ரீநீலகண்ட தீக்ஷிதர். இந்த மகானின் மகிமைகள் பற்றிய ஒருசில தகவல்களை தரிசிக்கலாம்.

ஆம்! அருந்துதி பாடி அம்பாளை தரிசித்த அபூர்வமான வரலாறுதான் இது.

ஸ்ரீதீக்ஷிதர், மதுரையில் திருமலை நாயக்கருக்கு மந்திரியாக இருந்த நேரம் அது. ஆலயத்தில் ‘புது மண்டபம்’ நிர்மாணிக்கும் வேலை,  தீக்ஷிதரின் மேற்பார்வையில் நடந்து வந்தது.

வேலைகளை மும்முரமாகச் செய்த சிற்பி, திருமலைநாயக்கரின் சிலையை உருவாக்கிவிட்டு, அவரின் மனைவியான பட்டத்தரசியின் சிலையை உருவாக்கிக் கொண்டிருந்தார். என்ன முயன்றும் பட்டத்து அரசியின் சிலை, சரியாக உருவாகவில்லை. சிலையின் இடது தொடைப் பகுதியிலிருந்து, ஒரு சில்லு பெயர்ந்துவிட்டது. பின்னப்பட்ட சிலையைக் கண்டு வருந்தினார் சிற்பி.

உடனடியாக வேறு சிலையைத் தயாரிக்கும் முயற்சியில் இறங்கினார். அந்த நேரத்தில், வேலைகளை மேற்பார்வையிடுவதற்காக ஸ்ரீதீக்ஷிதர் அங்கு வந்து கொண்டிருந்தார்.

சிற்பியின் வருத்தம்கண்ட அவர், “என்ன ஆயிற்று... வருத்தமாக இருக்கிறாயே” என்று விசாரித்தார்.

“ஸ்வாமி... எவ்வளவோ கவனமாகத்தான் இந்த ராணியின் சிலையைச் செய்தேன். ஆனாலும், சிலையின் தொடையிலிருந்து ஒரு சில்லு பெயர்ந்து விழுந்து, சிலை பின்னமாகி விட்டது. இதுவரை இப்படி ஆனதேயில்லை. அதுதான் வருத்தம்...” என்று தழுதழுத்தக் குரலில் சொன்னார் சிற்பி.

ஒரு விநாடி சிந்தனையில் ஆழ்ந்த தீக்ஷிதரின் முகம், பின்னர் மென்மையாக மலர்ந்தது.

“அப்பா... சிற்பியே! இனி நீ எவ்வளவுதான் முயன்றாலும், இந்தச் சிலை இப்படித்தான் ஆகும். இதில் தெய்வ அனுக்கிரகம் பரிபூர்ணமாக இருக்கிறது. உன் பக்தி மிகுதிக்கும், உன் அந்தரங்க சுத்திக்கும், உன் உயர்ந்த குணங்களுக்கும் பிரசன்னமாகி... ஈச்வரன் உனக்குத் தெரியாத அம்சங்களையும் உள்ளபடியே இருக்கச்செய்து, இந்தச் சிற்பத்தைச் சிறப்பிக்க நினைக்கிறார்.

உத்தம ஸ்திரீலக்ஷணம் பொருந்திய மகாராணிக்கு, இடது தொடையில் இதே இடத்தில் பெரியதோர் மச்சம் இருக்கவேண்டும். சாமுத்ரிகா லக்ஷணங்களில் சொல்லப்பட்டுள்ளது. ஆகையால், இந்தச் சிலையை இப்படியே வைத்துவிடு!’’ என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருவருள் செல்வர்கள்! - 22 - ஆனந்தக்கடலின் அலைத்திரள்!

சிற்பியும் அப்படியே வைத்துவிட்டார். மற்ற வேலைகள் அனைத்தும் முடிந்ததும் மேற்பார்வையிட வந்தார் மன்னர். ராணி சிலையின் தொடையில் பின்னம் இருப்பதைக் கண்ட மன்னர், சிற்பியிடம் காரணம் கேட்டார்.

சிற்பியும் ஒருவாறு, நடந்ததைச் சொல்லி, தீக்ஷிதர் சொன்னதையும் எடுத்துரைத்தார்.

மன்னருக்கு எப்படியிருக்கும்? கண்கள் சிவக்க, மீசைத் துடிக்க, தலை கிறுகிறுத்து அரண்மனைக்குத் திரும்பினார்.

அன்று முழுவதும் மனக் குழப்பத்திலேயே இருந்தார்; யாருடனும் பேசவில்லை. ‘நம் மனைவியின் தொடையில் உள்ள மச்சம், அந்த நீலகண்ட தீக்ஷிதருக்கு எப்படித் தெரிந்தது’ என்று எண்ணிய அரசர், இரவு முழுதும் தூங்க வில்லை. விபரீதமான முடிவுக்கு வந்தார்.

மறுநாள் பொழுது விடிந்ததும், அதிகாரி ஒருவரை அழைத்து,  “ஸ்ரீதீக்ஷிதர் அவர்களைப் பார்க்கவேண்டும். உடனே போய் அழைத்து வாருங்கள்” என்று ஏவினார்.

அதிகாரியும் அவரின் உதவியாளர்களும் போன நேரம், தீக்ஷிதர் பூஜையில் இருந்தார். அரசரின் அழைப்பு அவரிடம் தெரிவிக்கப்பட்டது.

“என்ன இது? புதிதாக இருக் கிறதே... மன்னர் இவ்வாறு முறை மாறி நடக்கக் காரணம் என்ன?” என்று யோசித்துப் பார்த்தார்.

அம்பிகையின் அருளை முழுமையாகப் பெற்றிருந்த தீக்ஷிதருக்கு உண்மை புரிந்தது. மன்னர், விபரீத எண்ணத் தால் தன் மீது கோபம் கொண்டிருக்கிறார்; அதன்பொருட்டே இந்த அழைப்பு என்பது விளங்கியது; மனம் வருந்தினார்.

‘ஹூம்..! அரசர்களின் பேதமை இதுதான் போலும். இந்த நிலையில் அரசரைப் பார்ப்பது கூடாது’ என நினைத்த ஸ்ரீதீக்ஷிதர், அம்பாளிடம் தனது துயரத்தை வெளியிட்டுப் பிரார்த்தித்து, கற்பூர ஆரத்தி செய்தார்.

அடுத்த விநாடி, அங்கிருந்தவர்கள் யாவரும் நடுங்கும்படியாக ஒரு காரியத்தைச் செய்தார். எவரும் எளிதில் செய்யத் துணியாத காரியம் அது!

- திருவருள் பெருகும்...

-  சொல்லின்செல்வன் பி.என்.பரசுராமன்