Published:Updated:

ஒரே நாளில்... 16 தெய்வத் திருமணங்கள்!

ஒரே நாளில்... 16 தெய்வத் திருமணங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
ஒரே நாளில்... 16 தெய்வத் திருமணங்கள்!

ஒரே நாளில்... 16 தெய்வத் திருமணங்கள்!

ஒரே நாளில்... 16 தெய்வத் திருமணங்கள்!

ஒரே நாளில்... 16 தெய்வத் திருமணங்கள்!

Published:Updated:
ஒரே நாளில்... 16 தெய்வத் திருமணங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
ஒரே நாளில்... 16 தெய்வத் திருமணங்கள்!

ங்குனி மாதம் பிறக்கப்போகிறது. தெய்வத் திருமணங்கள் பலவும் நடந்தேறிய புண்ணிய மாதம் இது. பங்குனியில் மட்டுமின்றி, வேறு சில மாதங்களிலும் `உலக நன்மைக்காக’ எனும் பொது சங்கல்பத்தோடு, சீதா கல்யாணம், சீனிவாச கல்யாணம் என்று தெய்வத் திருமண வைபவங்களை ஆன்மிக அன்பர்கள் நிகழ்த்துவது உண்டு.

ஒரே நாளில்... 16 தெய்வத் திருமணங்கள்!

ஆனால், ஒரே நேரத்தில் பதினாறு தெய்வத் திருமணங்கள் நடைபெறுவது என்பது அரிதிலும் அரிதான ஒன்று. அப்படியான அற்புத வைபவம், வேலூர் மாவட்டம் - வாலாஜாபேட்டை அருகிலுள்ள ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் நிகழவுள்ளது.

ஸ்ரீதன்வந்திரி பீடத்தின் 15-வது ஆண்டு விழா, சஹஸ்ர கலசாபிஷேகத்துடன் பதினாறு தெய்வத் திருமணங்கள், பீடாதிபதி ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகளின் 58-வது ஜயந்தி விழா என்று முப்பெரும் விழாவாக வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட உள்ளது.

விழா பற்றிய விவரங்களை அறிந்துகொள்ள ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகளைச் சந்தித்துப் பேசினோம்.

‘`இந்த தன்வந்திரி பீடம் தொடங்கப் பட்டு 14 வருடங்கள் நிறைவுபெற்று தற்போது 15-வது ஆண்டு நடைபெற்று வருகிறது. பீடத்தின் 15-வது ஆண்டு விழாவை  முன்னிட்டு, இந்த வைபவம் நடைபெற உள்ளது.

ஐந்து நாள்கள் நடைபெற இருக்கும் இந்த விழாவில்... முதல் நாள் 108 சுமங்கலி பூஜை, சமஷ்டி உபநயனம் மற்றும் கோமாதா திருக்கல்யாணம் நடைபெறும். இரண்டாவது நாள் துளசி - நெல்லிச் செடி திருமணமும், 108 கன்யா பூஜையும் நடைபெறும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரே நாளில்... 16 தெய்வத் திருமணங்கள்!

மூன்றாவது நாள் அரசு - வேம்பு திருக் கல்யாணமும் 108 தம்பதி பூஜையும் நடைபெறும். நான்காவது நாள் 600-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்கும் நாத சங்கமம் இசை நிகழ்ச்சியுடன், ஸ்ரீஆரோக்கிய லட்சுமி சமேத ஸ்ரீதன்வந்திரி பெருமாளுக்கு, மகா தன்வந்திரி யாகத்துடன், சஹஸ்ர கலச திருமஞ்சனமும் நடைபெறும். அன்று மாலையில் ஸ்ரீதேவி பூதேவி சமேத  ஸ்ரீநிவாசர் திருக்கல்யாணம் சதுர்வேத பாராயணத்துடன் நடைபெறவுள்ளது.

விழாவின் நிறைவு நாளில் பதினாறு தெய்வத் திருமணங்கள் ஒரே நேரத்தில் நடைபெறும். அன்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அன்று என்னுடைய ஜயந்தி விழாவும் கொண்டாடப்பட உள்ளது’’ என்றவர், தொடர்ந்து ஒவ்வொரு வைபவத்தின் மூலம் பக்தர்களுக்குக் கிடைக்கும் பலன்களையும் விளக்கினார். அந்த விவரம்:

கோமாதா திருக்கல்யாணம்:

முப்பத்து முக்கோடி தேவர்களின் ஆசிகளைப் பெற்றுத் தரும். அன்று நடைபெறும் சுமங்கலி பூஜை, கணவருக்குத் தீர்க்காயுள் தரும். சமஷ்டி உபநயனம் வேதங்களைப் போற்றுவதன் மூலம், வேத மாதாவின் அருளைப் பெற்றுத் தரும்.

துளசி - நெல்லி  திருக்கல்யாணம்:

மகாவிஷ்ணு - மகாலட்சுமியின் அருளால் வாழ்க்கையில் அனைத்து வளங்களும் சேரும். அன்று நடைபெறும் கன்யா பூஜை பெண் சாபம், குலதெய்வ சாபம் போன்றவற்றிலிருந்து நிவாரணம் தரும்.

வேம்பு - அரசு திருக்கல்யாணம்:

 மழை பெருகவும், இயற்கை வளம் செழிக்கவும், விவசாயப் பெருமக்களின் நலம் வேண்டியும், கிராம தேவதைகளின் அருள் வேண்டியும் நடைபெறுகிறது. தம்பதி ஒற்றுமை சிறக்கவும், அனைத்து சௌபாக்கியங்கள் கிடைக்கவும் 108 தம்பதி பூஜை நடைபெறுகிறது.

ஒரே நாளில்... 16 தெய்வத் திருமணங்கள்!

தன்வந்திரி ஹோமம், ஸ்ரீநிவாசர் திருக்கல்யாணம்:

உடல், மன நோய்களிலிருந்து நிவாரணம் பெறவும், அனைவரும் ஆரோக்கியமாக வாழவும் ஸ்ரீதன்வந்திரி மகா யாகமும், சஹஸ்ர கலச அபிஷேகமும் நடைபெறுகின்றன.

அன்று சுமார் 600-க்கும் மேற்பட்ட நாகஸ்வர, தவில் கலைஞர்களின் நாத சங்கமம் நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது. மாலை ஸ்ரீபத்மாவதி சமேத ஸ்ரீநிவாசரின் அருள் வேண்டி ஸ்ரீதேவி-பூதேவி சமேத ஸ்ரீநிவாசர் திருக்கல்யாணம் நடைபெறும்.

ஷோடச தெய்வத் திருக்கல்யாணம்:

விழாவின் நிறைவு நாளான 17-ம் தேதி காணாபத்யம், சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், சௌரம் ஆகிய ஷண்மதங்களுக்கு உரிய தெய்வங்களின் திருக்கல்யாண வைபவம் ஒரே நேரத்தில் மிக பிரமாண்டமாக நடைபெறும். காண்பதற்கரிய இந்தத் தெய்விகத் திருமணங் களை ஒருசேர தரிசிப்பதன் மூலம் சகல சௌபாக் கியங்களையும் பெற்றுச் சிறப்புற வாழலாம்.

மேற்காணும் விவரங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்ட ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள் தொடர்ந்து, ‘`இந்த வைபவம் சிறப்பான முறையில் நடைபெறவேண்டும் என்பதற்காக, தெய்வத் திருமணங்களுக்குப் பிரசித்தி பெற்ற பல புண்ணியத் தலங்களுக்கு யாத்திரை சென்று வழிபட்டு, மகோற்சவ பத்திரிகையை இறைவன் - இறைவி சந்நிதியில் வைத்து வழிபட்டு வந்தோம். மேலும் அந்தந்தத் தலத்தின் தீர்த்தம், கற்கள், மூலிகை சமித்துகள் போன்றவற்றையும் கொண்டு வந்தோம். உலக நன்மை ஒன்றை மட்டுமே பிரதானமாகக் கொண்டு நடைபெறும் இந்தப் பெருவிழாவில் அனைவரும் பங்கேற்று, ஸ்ரீஆரோக்கியலக்ஷ்மி சமேத ஸ்ரீதன்வந்திரி பெருமாளின் அருள் பெறலாம்’’ என்றார்.

இந்த அற்புத வைபவத்தில் நாமும் கலந்து கொள்வோம்.  நம்முள் இறையருள் பெருகிடவும் நம் இல்லங்களில் மங்கலங்கள் நிறைந்திடவும் இந்த வைபவங்கள் துணைசெய்யும்.

 -எஸ்.கண்ணன் கோபாலன்

படங்கள்: ச.வெங்கடேசன்

பக்தர்கள் கவனத்துக்கு...

ஸ்ரீதன்வந்திரி பீடத்தில், முப்பெரும் விழா மார்ச் 13-ம் தேதி தொடங்கி, 17-ம் தேதி வரை நடைபெறுகிறது.

எப்படிச் செல்வது?: வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை - சோளிங்கர் சாலையில் வாலாஜாபேட்டையிலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் கீழ்ப்புதுப்பேட்டை என்ற இடத்தில் ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடம் அமைந்திருக்கிறது. வாலாஜாபேட்டை பேருந்து நிலையத்திலிருந்து ஆட்டோ வசதி உண்டு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism