Published:Updated:

சிந்தை மகிழ்வித்த சிவராத்திரி வைபவம்...

சிந்தை மகிழ்வித்த சிவராத்திரி வைபவம்...
பிரீமியம் ஸ்டோரி
சிந்தை மகிழ்வித்த சிவராத்திரி வைபவம்...

மகா சிவராத்திரி கொண்டாட்டம்!

சிந்தை மகிழ்வித்த சிவராத்திரி வைபவம்...

மகா சிவராத்திரி கொண்டாட்டம்!

Published:Updated:
சிந்தை மகிழ்வித்த சிவராத்திரி வைபவம்...
பிரீமியம் ஸ்டோரி
சிந்தை மகிழ்வித்த சிவராத்திரி வைபவம்...

க்தி விகடன் அகத்தியர் பசுமை உலகம் அமைப்புடன் இணைந்து, வேலூர் மாவட்டம் ஏகாம்பரநல்லூரில் அமைந்திருக்கும் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் நடத்திய சிவராத்திரி வைபவம் மிகவும் விமர்சையாக நடைபெற்றது. தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலிருந்தும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க... ஊர்த் திருவிழாவைப் போன்று கோலாகலமாக நடந்தேறியது மகா சிவராத்திரி வைபவம்.

சிந்தை மகிழ்வித்த சிவராத்திரி வைபவம்...

•  சிவபெருமான் அம்பிகைக்கு சிவபூஜை நியதிகளை உபதேசம் செய்த திருத்தலம் ஏகாம்பரநல்லூர். இவ்வூரில் இந்த வைபவம் நடைபெற்றது முதன்மை சிறப்பு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• மாலை 4 மணி முதல் வாசகர்கள் வரத் தொடங்க, 7 மணியளவில் முதல் கால பூஜையுடன் விழா ஆரம்பித்தது. முறையே 7, 10, நள்ளிரவு 1 மணி மற்றும் மறுநாள் அதிகாலை 4 மணி என்று நடைபெற்ற நான்கு கால பூஜைகளிலும்... ஒவ்வொரு காலத்துக்கும் ஒவ்வொரு சிவலிங்க மூர்த்தத்துக்கு தாங்களே ஆத்மார்த்த அபிஷேகம் செய்து வழிபட்டது,  நம் வாசகர்களுக்கு மிகச் சிலிர்ப்பான அனுபவமாக அமைந்தது.

• ஒரு வேளைக்கு 108 பேர் என நான்கு கால பூஜைகளில் மொத்தமாக 432 பேர் இந்த சிவராத்திரி பூஜையில் கலந்துகொண்டார்கள். மற்றவர்கள் பார்வையாளர்களாக தரிசித்து மகிழ்ந்தனர். பூஜையில், 92 விதமான சாங்கியங்கள் செய்து ஈசனை வணங்கினார்கள். அபிஷேகம், வஸ்திரம், ஆபரணம், மலர்கள், பழம், பத்ரம், தூபம், தீபம், வாசானாதி திரவியங்கள், ஸ்தோத்திரங்கள், வாத்தியங்கள் என ஒவ்வொரு வேளைக்கும் விதவிதமாக வழிபட்டு வாசகர்கள் நெகிழ்ந்துபோனார்கள்.

சிந்தை மகிழ்வித்த சிவராத்திரி வைபவம்...

• முதல் காலத்தில் சுத்த அன்னத்தால் உருவாக்கப்பட்ட அன்ன லிங்கம்; இரண்டாம் காலத்தில் ருத்ராட்ச லிங்கம்; மூன்றாம் காலத்தில் மஞ்சள் லிங்கம்; நான்காம் கால பூஜையில் புற்றுமண் லிங்கம் என்று நான்கு க்ஷணிக லிங்கங்கள் வாசக அன்பர்களுக்கு வழங்கப்பட்டன.

• ஆத்மலிங்கத்துக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்ற அதேவேளையில், எதிரே பிரமாண்டமான பச்சைக்கல் லிங்கத்திருமேனிக்குப் பரார்த்த அபிஷேகமும் நடைபெற்றது. அடியார் சரவண குமார் பூஜைக்கான ஒவ்வொரு சாங்கியத்தையும் அழகாகச் சொல்லிக்கொடுத்து வழிகாட்டினார்.

• மகா சிவராத்திரிக்கு மூன்று நாள்களுக்கு முன்பிருந்தே அகத்திய பசுமை உலகம் அமைப்பைச் சேர்ந்த சரவணன் ஐயா வழிகாட்டுதலின்படி அடியார்கள் விழா ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கி, விழா சிறப்பான முறையில் நிகழ்த்திச் சிவத்தொண்டு ஆற்றினர்.

சிந்தை மகிழ்வித்த சிவராத்திரி வைபவம்...

• அகில், சந்தனம், தேவதாரு, குங்கிலியம், ஜவ்வாது, மலைத்தேன், புனுகு, பச்சைக் கற்பூரம், ஏலம், முந்திரி, கரும்பு, நாட்டு சர்க்கரை, பழங்கள், மலர்கள், மூலிகைகள், நெய், எண்ணெய், மண் பாண்டங்கள் என பூஜைக்குரிய பொருள்கள் யாவும் அந்தந்தப் பொருள்களுக்கு விசேஷமாகத் திகழும் ஊர்களிலிருந்து வரவழைப்பட்டிருந்தது.

• ஒவ்வொரு கால பூஜையும் நிறைவு பெற்றவுடன், ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முதல் கால பூஜை முடிந்ததும், நர்த்தனாலயா குழுவினரின் ‘குற்றாலக் குறவஞ்சி’ நாட்டிய நாடகம் நடைபெற்றது. இரண்டாம் கால பூஜைக்குப் பிறகு செல்வி நிவேதிதை சிவ கீர்த்தனைகள் பாடி அசத்தினார்.

 

• விழாவில், உலக சித்தக் கலைகள் ஆய்வு மையத்தைச் சேர்ந்தவர்களின், ‘நந்தி நர்த்தனம்’ என்ற களரி ஆட்டம் நடைபெற்றது. திருஏகாம்பரநல்லூருக்கு அருகில் உள்ளது காஞ்சனகிரி. அதன் தலபுராணத்தை - சிவக்கட்டளைப் படி காஞ்சன் எனும் அசுரனை நந்திதேவர் வதைத்த புராணத்தை, மிக தத்ரூபமாக நம் கண்முன் நிறுத்தியது, இந்தக் களறியாட்டம்.

• மூன்றாம் கால பூஜைக்குப் பிறகு, ஆன்மிகப் பெரியோர்களான பி.என்.பரசுராமன் மற்றும் வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன் ஆகியோரின் சொற்பொழிவு நடைபெற்றது. சிந்தை சிலிர்க்கக் கிடைத்த அவர்களின் உரையும், வழிகாட்டலும் மிக அற்புதம்.

சிந்தை மகிழ்வித்த சிவராத்திரி வைபவம்...

• `என் ஆயுளில் இதுபோன்ற முழுமையான சிவபூஜையை நான் கண்டதில்லை' என்று நெகிழ்ந்துபோனார் திருப்புகழ் அமுதன் வலையப்பேட்டை ரா. கிருஷ்ணன். அற்புதமான சிவபூஜையை மிகுந்த பொருள்செலவில் செய்து கொடுத்த சரவணன் ஐயாவுக்கு நம் சார்பில் மிக நெகிழ்ச்சியோடு நன்றியைப் பகிர்ந்து கொண்டார் சொல்லின் செல்வன் பி.என்.பரசுராமன். வந்திருந்த வாசகர்களும் தங்களது மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் பலவாறு பகிர்ந்துகொண்டார்கள்.

• உழவாரப் படையைச் சேர்ந்த அன்பர்களும் அவர்களின் குழந்தைகளும் இடைவிடாத செய்த தொண்டும் இறைப்பணியும் நெகிழவைத்தன. விழாவையொட்டி மூன்று நாள்களாக அந்த ஊரில் அன்னதானமும் நைவேத்திய விநியோகமும் தொடர்ந்து நடைபெற்று வந்தது குறிப்பிடத் தக்கது.

• ஒவ்வொரு கால வழிபாட்டின்போதும் சங்கநாத முழக்கம், சிவாகம நெறிப்படியான பூஜை, தூபப் புகை... என அந்த இடம் திருக் கயிலாயமாகவே மாறிவிட்டது என்றே சொல்ல லாம். மேலும், மத பேதமின்றி மாற்று மதத்து அன்பர்களும் வழிபாட்டில் கலந்துகொண்டது, குறிப்பிடத்தக்கது. ஆலயத்தின் அருகிலுள்ள அம்மன் கோயிலில் வைக்கப்பட்டிருந்த, சக்தி விகடனின் (7 அடி உயர) ருத்ராட்ச லிங்க தரிசனமும் பக்தர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது.

சிந்தை மகிழ்வித்த சிவராத்திரி வைபவம்...

• விழாவுக்குச் சிறப்பு சேர்க்கும் வண்ணம் அமைந்திருந்தது, `தேடி வாடும் நெஞ்சமே' எனும் சக்தி விகடனின் மகாசிவராத்திரி சிறப்புப் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி. அந்தப் பாடலுக்கு இசையமைத்த `ஜெ' மற்றும் பாடகர் உதய் பிரகாஷ் ஆகியோருக்கு விழாத் திடலிலேயே பெரும் பாராட்டையும் தங்களின் மகிழ்ச்சியையும்  மிக ஆரவாரமாகத் தெரிவித்தார்கள் நம் வாசகர்கள்.

• `இசையும் குரலும் வரிகளும் பின்னிப்பிணைந்து சிவதாண்டவத்தையே நிகழ்த்துகின்றன' என்று நம்மிடமும் மனமார்ந்த பாராட்டைப் பகிர்ந்து கொண்டார்கள் வாசகர்கள்.

• சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டிக், பாலிதீன் போன்ற எந்தப் பொருளும் பயன்படுத்தாமல், இயற்கையோடு இயைந்த இறைவழிபாடாக அமைந்திருந்ததைக் கண்டு அனைவரும் பாராட்டினர்.

சிந்தை மகிழ்வித்த சிவராத்திரி வைபவம்...

• வாழை, தென்னை, மாவிலை, பாக்கு தோரணங்கள் மட்டுமின்றி மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு, ஊரே விழாக்கோலம் பூண்டிருந்தது. வந்திருந்த வாசகர்களை தங்களின் சொந்த விருந்தினராகவே கருதி, உபசரித்த ஊர் மக்களுக்கு, நெகிழ்ச்சியுடன் கூடிய நன்றியைத் தெரிவித்தோம். மட்டுமின்றி, வேளைக்கு ஒரு நைவேத்தியம், பானகம் என வழங்கிக்கொண்டே இருந்தார்கள், அகத்தியர் பசுமை உலகம் அமைப்பின் அடியார்கள். அவர்களின் இறைப்பணி மகத்துவமானது.

• தங்களுக்கு இத்தகைய மகத்தான வாய்ப்பினை வழங்கிய சக்தி விகடனுக்கு நன்றி தெரிவித்ததுடன்... திருவிளக்கு பூஜை, வேல்மாறல் பாராயணம், சக்தி யாத்திரை, உழவாரம் எனத் தொடரும் சக்திவிகடனின் இறைப்பணிகள் மேலும் சிறக்க வாழ்த்தி விடைபெற்றார்கள் நம் வாசகர்கள்.

அவர்களின் வாழ்த்துகளோடு தொடரும் நம் இறைப்பணி!

-சைலபதி

படங்கள்: ச.வெங்கடேசன்,  பெ.ராகேஷ், ச.மஹாவீ

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism