Published:Updated:

ரூ.515 கோடியில் 10,961 கோயில்களில் குடமுழுக்கு: பட்ஜெட்டில் ஓ.பி.எஸ் தகவல்

ரூ.515 கோடியில் 10,961 கோயில்களில் குடமுழுக்கு: பட்ஜெட்டில் ஓ.பி.எஸ் தகவல்
ரூ.515 கோடியில் 10,961 கோயில்களில் குடமுழுக்கு: பட்ஜெட்டில் ஓ.பி.எஸ் தகவல்

தமிழக சட்டப்பேரவையில் 2019 - 20-ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். இந்து அறநிலையத்துறையின் கீழ் அவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்:

* தமிழகத்தில் உள்ள 754 கோயில்களில் அன்னதானத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

* 2011-ம் ஆண்டு முதல் இதுவரை 10,961 கோயில்களுக்கு ரூ.515.05 கோடி செலவில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.

* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள 6,159 கோயில்களின் திருப்பணிக்காக 2011-ம் ஆண்டு முதல் இதுவரை ரூ.43.39 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. 

* கிராமப்புற கோயில்களுக்கென்று தனி நிதியுதவித் திட்டமும், ஒரு கால பூஜை திட்டமும் தொடர்ந்து செயல்படுத்தப்படும். 

* 2019-20 ஆண்டுக்கான வரவு செலவு திட்ட மதிப்பீடுகளில் இந்து சமய அறநிலையத் துறைக்கு ரூ.281.86 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.