கொல்லூர் - மூகாம்பிகா, வடகரா- லோகாம்பிகை, பாலக்காடு- ஹேமாம்பிகை, கொடுங்கல்லூர் - மகா பகவதி, கன்னியாகுமரி - பாலாம்பிகா ஆகியோர் அருளும் ஐந்து தலங்களையும் `பஞ்ச பகவதி தலங்கள்' என்பார்கள். இவை, ஸ்ரீபரசுராமரால் நிறுவப்பட்டவை.

கன்னியாகுமரியில் அருளும் குமரி அம்மனின் மூக்குத்தி மகிமை மிக்கது. இதுகுறித்து, சிலிர்ப்பூட்டும் சுவாரஸ்யத் தகவல்கள் பல உண்டு.

பனை ஏறும் தொழிலாளியான வீரமார்த்தாண்டன், ஒரு முறை அபூர்வமான ரத்தினக் கல் ஒன்றைக் கண்டெடுத்தார். அதை அவர், திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்டவர்மனிடம் தர, மன்னர் அதை மூக்குத்தியாக்கி (கி.பி. 18-ஆம் நூற்றாண்டில்) குமரி பகவதிக்குச் சமர்ப்பித்தாராம். வேறுவிதமாகவும் சொல்வார்கள்.

வீரசூரன் என்பவனைத் தீண்ட வந்த நாகமொன்று, அவனை நெருங்கி நாகமணியைக் கக்கியதாம். உடனே சாணத்தால் அதை மூடினானாம் வீரசூரன். பிறகு, அந்த நாகமணியை அரசன் மார்த்தாண்டனிடம் ஒப்படைத்தான். மன்னர் அதை மூக்குத்தியாக்கி கன்னி பகவதிக்கு அர்ப்பணித்தாராம்.

ஒரு முறை, ஜப்பான் நாட்டைச் சார்ந்த கப்பல் ஒன்று கடலில் திசை மாறிச் சென்றது. ஆனால், பகவதியின் மூக்குத்தி ஒளியைக் கண்ணுற்ற அதன் மாலுமிகள், கப்பலை குமரிக்கரை நோக்கித் திருப்பினராம். அப்படியும் கப்பல் கட்டுப்பாட்டை இழந்து (தற்போது விவேகானந்தர் ஆலயம் உள்ள) பாறையில் மோதி உடைந்ததாம்.

வேறொருமுறை, கடற்கொள்ளையர்கள் அம்மனின் மூக்குத்தியைத் திருடத் திட்டமிட்டனர். ஆனால், அம்மனின் சக்தியினால் அவர்களது கப்பல் நொறுங்கியது. தப்பிப்பிழைத்த கொள்ளையர்கள் கோயிலுக்குள் சென்று மூக்குத்தியை எடுக்க முயன்றபோது, அவர்களது பார்வை பறிபோனது; நகர முடியாமல் அந்த இடத்திலேயே தத்தளித் தனர். விடிந்ததும் கோயில் சிப்பந்திகள் அவர்களை மன்னரிடம் ஒப்படைத்தனர்.

அன்று முதல் மன்னனின் கட்டளைப்படி கிழக்குக் கதவை மூடினர்; அதற்குப் பதிலாக அந்தக் கதவில் அமைக்கப்பட்ட சிறிய துவாரத்தை இன்றும் காணலாம். ஆராட்டு, திருக்கார்த்திகை, விஜயதசமி, இரண்டு அமாவாசைகள் ஆகிய ஐந்து தினங்களில் மட்டுமே இந்தக் கதவு திறக்கப்படுகிறது.

குமரி அம்மனின் நாகமணி மூக்குத்தியை கிழக்கு வாசல் வழியாக வந்த ஒருவன் அபகரித்துச் சென்றுவிட்டானாம். அதன் பிறகு திருவிதாங்கூர் மன்னர், கோயிலுக்குக் காணிக்கையாக வழங்கிய இரண்டு வைரங்களே அன்னையின் மூக்குத்தியில் இடம்பெற்றிருக்கின்றன என்றும் கூறுவர்!

- வி.ரேணுகா, தூத்துக்குடி

ஓவியம்: ரமணன்

அபிஷேகம் இல்லை!

திருக்கழுக்குன்றம் கோயிலில் திரிபுரசுந்தரி அம்மனுக்கு ஆடிப்பூரம், பங்குனி உத்திரம், நவராத்திரியில் நவமி ஆகிய மூன்று நாள்கள் மட்டுமே முழு அபிஷேகம் செய்யப்படுகிறது. மற்ற நாள்களில் பாத அபிஷேகம் மட்டுமே!

- ஜி. ஜெயலட்சுமி, சென்னை-64