Published:Updated:

ஆன்மிகத் துளிகள்

ஆன்மிகத் துளிகள்
பிரீமியம் ஸ்டோரி
ஆன்மிகத் துளிகள்

ஆன்மிகத் துளிகள்

ஆன்மிகத் துளிகள்

ஆன்மிகத் துளிகள்

Published:Updated:
ஆன்மிகத் துளிகள்
பிரீமியம் ஸ்டோரி
ஆன்மிகத் துளிகள்

திருவரங்கனுக்குக் கிச்சடி நைவேத்தியம்!

ஆன்மிகத் துளிகள்
ஆன்மிகத் துளிகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருவரங்கனின் திருவருளைப் பெற்று அவர் திருச்சந்நிதியிலேயே ஐக்கியமான பெண், டில்லி சுல்தானின் மகள். `துலுக்க நாச்சியார்' என்ற பெயரால் அழைக்கப்படும் இவருக்காகவே, அரங்கன் ரொட்டி, வெண்ணெய், பருப்பு, கிச்சடி ஆகிய வட இந்திய உணவு வகைகளை நைவேத்தியமாக ஏற்கிறாராம்.

- கே.தேவிகா, தூத்துக்குடி

தோஷம் நீங்கும் சர்ப்பம்!

ஆன்மிகத் துளிகள்

குடந்தை ஸ்ரீராமசாமி கோயிலில் கொடிமரம் அருகில் ஒரு தூணில் ஆஞ்சநேயர் அருள்கிறார். அடுத்துள்ள மண்டப விட்டத்தில் ராகு பகவான் ஆறடி நீளத்தில் ஒரு சர்ப்ப ரூபத்தில், பெருமானை வழிபடுவது போல ஓர் உருவம் அமைந்துள்ளது. அதன் கீழ் நின்று ‘ஓம் ஸ்ரீ ராகவே நம:’ என்று 108 தடவையும், ஸ்ரீராகு காயத்ரியை 16 தடவையும் சொல்லிப் பிரார்த்தித்தால், ராகு தோஷங்கள் அனைத்தும் நீங்கி, சகல சௌபாக்கியங்களும் உண்டாகும்.

- ஏ.சீனிவாசன், கும்பகோணம்-1.

நெல்லையைச் சுற்றி நவகிரக தலங்கள்

ஆன்மிகத் துளிகள்

திருநெல்வேலியைச் சுற்றியுள்ள சிறப்பு மிகு நவக்கிரகத் திருத்தலங்கள்:

ஆன்மிகத் துளிகள்


* பாபநாசம் - சூரியன்  * சேரன்மகாதேவி - சந்திரன்

* கோடகநல்லூர் - செவ்வாய்  * தென்திருப்பேரை - புதன்

* முறப்பநாடு - குரு * சேர்ந்தபூமங்கலம் - சுக்கிரன்

* ஸ்ரீவைகுண்டம் - சனீஸ்வரன்  * குன்னத்தூர் - ராகு

* ராஜபதி - கேது

கொடியில் சரஸ்வதிதேவி!

ன்னர்கள், புலவர்களுடன் மொழி விவாதம் செய்யும்போது, அவர்கள் அமர்ந்திருக்கும் ஆசனத்தின் மேற்புறம் ‘சாரதா த்வஜம்’ எனப்படும் சரஸ்வதிதேவியின் திருவுருவம் பொறிக்கப்பட்ட கொடி பறக்குமாம்!

- எஸ். லதா சம்பத், திருச்சி-21

மன்னனுக்கும் பூஜை உண்டு!

ஆன்மிகத் துளிகள்

திருநெல்வேலியிலிருந்து 59 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள கோவில்பட்டியில் செண்பகவல்லியம்மன் சமேதராக கோயில் கொண்டிருக்கிறார், பூவனநாதர். இக்கோயிலைக் கட்டிய செண்பக மன்னனுக்கும் இங்கே  சந்நிதி உள்ளது. அம்பாளுக்கு பூஜை நடந்து முடிந்த பிறகு, இங்கு பூஜை நடக்கிறது. திருப்பெருந்துறையில் மணிவாசருக்கு அடுத்து ஒரு தனி மனிதனுக்கு பூஜை நடப்பது இங்கு மட்டுமே.

குழந்தை வரம் அருளும் வழிபாடு!

ஆன்மிகத் துளிகள்

ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு கால நேரத்தில் பைரவருக்கு ருத்திராட்சம், விபூதி அபிஷேகம் செய்து, வடை மாலை சாற்றி சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால், தடைகள் நீங்கி திருமணம் நடைபெறும். அதேபோல், ஆறு தேய்பிறை அஷ்டமியில் சிவப்பு அரளி மாலை சாற்றி சகஸ்ரநாம அர்ச்சனை செய்து பைரவரை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வறுமை நீங்க: வெள்ளிக் கிழமை மாலையில் வில்வ இலை, வாசனை மலர்களால் அர்ச்சனை செய்யலாம்.

வாகனங்களுக்கும் திருவமுது!

ஆன்மிகத் துளிகள்

திருவரங்கம் ஸ்ரீரங்கநாதர் திருக்கோயில் மட்டுமே ஸ்ரீபெருமாளுக்குத் திருவமுது செய்வதுடன், அவருடைய வாகனங்களுக்கும் திருவமுது செய்விக்கிறார்கள். உற்சவ நாள்களில் யானை வாகனத்துக்கு முழுக் கரும்பு, வாழைத்தார் போன்றவற்றையும் குதிரை வாகனத்துக்கு சர்க்கரை பொங்கலையும் ‘திருவமுது’ செய்கிறார்கள்.

- கே.ராஜலட்சுமி, சென்னை-61

அஸ்வமேத யாகம் செய்த பலன்!

ஆன்மிகத் துளிகள்

ரித்திரருக்கு அளிக்கும் தானம், பூஜை நடக்காமல் இருக்கும் கோயில்களில் பூஜை ஏற்படுத்துதல், அநாதைப் பிரேதங்களின் தகனத்துக்கு உதவுதல் ஆகிய மூன்றும் ஓர் அசுவமேத யாகம் செய்வதற்குச் சமம் என்று வேதங்கள் கூறுகின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism