Published:Updated:

திருவருள் திருவுலா

திருவருள் திருவுலா
பிரீமியம் ஸ்டோரி
திருவருள் திருவுலா

திருவருள் திருவுலா

திருவருள் திருவுலா

திருவருள் திருவுலா

Published:Updated:
திருவருள் திருவுலா
பிரீமியம் ஸ்டோரி
திருவருள் திருவுலா
திருவருள் திருவுலா

கல்வியில் சிறக்க...

பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க!   - 01.கல்வி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

    திருக்கோயில்: சிவகங்கை நாகநாத சுவாமி திருக்கோயில்

    சுவாமி: ஸ்ரீநாகநாத ஸ்வாமி

    அம்பாள்: பெரியநாயகி அம்மன்

திருவருள் திருவுலா

    திருத்தலச் சிறப்பு: சேதுக்கடற்கரைப் பகுதியில் நானூறு ஆண்டுகளுக்கு முன்பு பித்ருக்களுக்கு திதி கொடுத்துக்கொண்டிருந்த மக்கள், கரை ஒதுங்கிய இந்த ஈஸ்வர மூர்த்தத்தைக்  கண்டு மகிழ்ந்தனர். அந்த மூர்த்தத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.

    சிறப்பு : இந்த ஆலயத்தில் ஸ்ரீதட்சிணாமூர்த்தியும், ஸ்ரீலட்சுமி ஹயக்ரீ வரும் னித்தனிச்ச ந்நிதியில்ரி அருள்புரிகின்றார் லட்சுமி ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை சமர்ப்பித்து வேண்டிக்கொள்ள மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர். இங்கு அட்சராப்பியாசம் எனப்படும் நெல்லில் குழந்தைகளை எழுதச் செய்யும் வைபவம் சிறப்புற நடைபெறுகிறது.

    எப்படிச் செல்வது? : காரைக்குடியில் இருந்து தேவகோட்டை செல்லும்வழியில், நடராஜா தியேட்டருக்கு அருகில் உள்ளது நாகநாதபுரம்.

ஆயுள் விருத்தி பெற...

பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க! - 02. ஆயுள் பெருக

    திருக்கோயில்: மதுரை தென் திருவாலவாயர் கோயில்

    சுவாமி: திருவாலவாயர்   

    அம்பாள்: ஸ்ரீமீனாட்சி அம்பாள்

திருவருள் திருவுலா

    திருத்தலச் சிறப்பு: மார்க்கண்டேயனின் உயிரைக் கவர யமன் வீசிய பாசக்கயிறு சிவன் மேல் விழுந்தது. இதனால் சிவனாரின் கோபத்துக்கு ஆட்பட்ட யமன், அவருடைய கோபத்தைத் தணித்து அருள் பெறவேண்டி தவம் செய்து பேறு பெற்ற  தலம் இது. 

    வழிபாட்டுச் சிறப்பு : யமன் வழிபட்ட தலம் என்பதால், இங்கு இறைவனை வழிபட் டால் ஆயுள் விருத்தி ஏற்படும். இங்கு 16 திங்கள்கிழமைகளில் சிவனாருக்கு விரதமிருந்து, மறுநாள் செவ்வாய்க்கிழமை 16 லட்டுகள் நைவேத்தியம் செய்து வழிபட்டால், ஆயுள் விருத்தி ஏற்படும். திருக்கடையூர் திருத்தலம் போலவே, அறுபது மற்றும் எண்பதாம் கல்யாணங்கள் இங்கேயும் சிறப்புற நடத்தப்படுகின்றன.

    எப்படிச் செல்வது?: மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்த ஆலயம்.

திருக்கோயில்: குருவாயூர் - கிருஷ்ணன் கோயில்

பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க! - 3. நல்ல நட்பு

   
சுவாமி : உன்னி கிருஷ்ணன்

திருவருள் திருவுலா

    திருத்தலச் சிறப்பு: பகவான் கிருஷ்ணனே தனது திருக்கரங்களால் செய்த விக்கிரகமே இந்தத் தலத்தில் மூலவராக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. குருபகவானும், வாயுதேவனும் இணைந்து இந்தத் தலத்தில் கிருஷ்ணனை பிரதிஷ்டை செய்ததாக தலபுராணம் தெரிவிக்கின்றது.

    வழிபாட்டுச் சிறப்பு : மார்கழி மாதத்தில் முதல் புதன்கிழமை அன்று குசேலர் நண்பராகச் சென்று கிருஷ்ணனை தரிசனம் செய்து பயன்பெற்றார். எனவே ஒவ்வொரு மார்கழி மாதத்திலும் முதல் புதன்கிழமை இங்கு ‘குசேலர் தினம்’ அனுசரிக்கப்படுகிறது. நட்புக்குப் பகவானே முக்கியத்துவம் தந்து சிறப்பித்த இந்த தலத்தில் தரிசித்தால் நல்ல நட்புகள் கிடைக்கும். நண்பர்களின் நலம் பெருகும். குசேலர் இறைவனுக்குப் படைத்த அவலை நெய்யோடும் வெல்லத்தோடும் படைத்து வழிபட வறுமை நீங்கி செல்வச் செழிப்பு கிட்டும்.

    எப்படிச் செல்வது?: கேரளாவின் திருச்சூர் மாவட்டம், குருவாயூரில் உள்ளது இந்த ஆலயம்.

திருக்கோயில்: இலம்பையங்கோட்டூர் தெய்வநாயகேஸ்வரர் கோயில்

பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க! - 04. தேகப்பொலிவு

   
சுவாமி: தெய்வநாயகேஸ்வரர்   

    அம்பாள் :     கனககுஜாம்பிகை

திருவருள் திருவுலா

    திருத்தலச் சிறப்பு: தெய்வலோக மங்கையர்களான ரம்பை, ஊர்வசி, மேனகை ஆகியோர், தாங்கள் பெற்ற சாபத்தை, இங்கு வந்து வழிபட்டு நிவர்த்தி செய்துகொண்டதாகவும் தங்களின் இளமையையும் பொலிவையும் மீண்டும் பெற்றதாகவும் சொல்கிறது தலவரலாறு. ஈசன் திருஞான சம்பந்தரை இங்கு வரவழைக்க குழந்தையாகவும், முதியவராகவும், காளை மாடாகவும் வந்து திருவிளையாடல் புரிந்து அருள்கோலம் காட்டிய தலம் இது.

    வழிபாட்டுச் சிறப்பு :    இங்கு கோயில் கொண்டிருக்கும் தெய்வநாயகேஸ்வரரை வழிபடத் தோற்றப்பொலிவும் இளமையும் கூடும் என்பது ஐதீகம்

    எப்படிச் செல்வது?: சென்னை - பூந்தமல்லியிலிருந்து 9 கி.மீ தொலைவிலுள்ளது மேவளூர் குப்பம். இந்த ஊரிலிருந்து வலப்பக்கம் சென்று பேரம்பாக்கம் அடைந்தால், அங்கிருந்து 5 கி.மீ தொலைவில், நரசிங்கபுரம் திருக்கோயில் செல்லும் வழியில் உள்ளது இலம்பையங்கோட்டூர்.

திருக்கோயில்: திருநின்றவூர் - பக்தவத்சல பெருமாள் கோயில்

பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க!

05. குன்றாத வளம்

   
சுவாமி: ஸ்ரீபக்தவத்சல பெருமாள்

     தாயார் : என்னைப் பெற்ற தாயார்

திருவருள் திருவுலா

    திருத்தலச் சிறப்பு: ஒருமுறை, வைகுண்டத்தில் பெருமாளோடு கோபித்துக்கொண்டு, பூமிக்கு வந்துவிட்ட லட்சுமி தேவி இங்கேயே தங்கிவிடுகிறாள். திருமகள் வந்து நின்ற தலம்தான் திருநின்றவூர். லட்சுமியின் கோபம் தணிக்க பெருமாள் சார்பாக, லட்சுமி தேவியின்  தந்தை சமுத்திரராஜன் இங்கு வந்து, ‘என்னைப் பெற்ற தாயே’ என்று அழைத்தமையால், இங்குள்ள தாயாருக்கு ‘என்னைப் பெற்ற தாயார்’ என்ற திருநாமமே விளங்குகிறது.

    வழிபாட்டுச் சிறப்பு: திருமகள் கோயில் கொண்டு நின்ற தலம் ஆதலால் இங்கு வழிபட செல்வவளம் சூழும். ஒன்பது பௌர்ணமி அல்லது ஒன்பது வெள்ளிக்கிழமை அன்று 81 நாணயங்கள் வைத்து வழிபட செல்வவளம், திருமண யோகம், குழந்தைப் பேறு ஆகிய வரங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    எப்படிச் செல்வது?: சென்னை - அரக்கோணம் ரயிலில் சென்று திருநின்றவூரை அடையலாம். ஆவடி, பட்டாபிராம் தாண்டி திருநின்றவூரை சாலை வழியாக அடையலாம்.

திருக்கோயில்: திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில்

பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க! - 06. நோயற்ற வாழ்க்கை

   
சுவாமி : மருந்தீஸ்வரர்

    அம்பாள் :     திரிபுரசுந்தரி

திருவருள் திருவுலா

    திருத்தலச் சிறப்பு: பக்தனுக்காக திரும்பி நின்று காட்சி தந்த தலம்: வால்மீகி முனிவரும் காமதேனுவும் தங்களின் சாபங்கள் தீர வழிபட்ட தலம். அகத்திய முனிவருக்குத் திருமணக்கோலம்காட்டி அருளியதும் இந்தத் தலத்தில் இருக்கும் வன்னி மரத்தடியில்தான். இங்குதான் அகத்தியருக்கு மருந்தீஸ்வர பெருமான் சித்த வைத்திய முறையை கற்றுத்தந்து உலகில் மனிதர்கள் நோயில்லா வாழ்வைப் பெற அருளினாராம்.

    வழிபாட்டுச் சிறப்பு: இந்தக் கோயிலில் நடைபெறும் அதிகாலை கோபூஜையும், அர்த்தஜாம பால் அபிஷேகமும் சிறப்பு மிக்கவை. காமதேனுவே பசுவாக வந்து இறைவனை வழிபட்ட தலம் ஆதலால், இங்கு வழங்கப்படும் அபிஷேகப் பால் சகல வியாதிகளையும் தீர்க்கும் மருந்து என்று நம்பப்படுகிறது. நோய்கள் நீங்கச் சென்று வணங்கவேண்டிய தலம்.

    எப்படிச் செல்வது?: சென்னையில் இருந்து மகாபலிபுரம் செல்லும் கிழக்குக் கடற்கரைச் சாலையின் தொடக்கத்தில் திருவான்மியூரில் உள்ளது இந்த ஆலயம்.

திருக்கோயில்: திருமீயச்சூர் மேகநாத சுவாமி கோயில்

பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க! - 07. சளைக்காத பக்தி

   
சுவாமி: மேகநாத சுவாமி   
   
    அம்பாள் :    ஸ்ரீலலிதாம்பிகை

திருவருள் திருவுலா

    திருத்தலச் சிறப்பு: அருணன் காஷ்யபரின் புதல்வன். உடலில் குறை உள்ளவனாகப் பிறந்த அருணன் உள்ளத்தில் இறைபக்தி நிறைந்தவனாக இருந்தான். ஒளி மிகுந்த கர்வத்தில் சூர்யதேவன், அருணனின் பக்தியை இகழ்ந்தான். அடியார்க்கு அவமானம் நேர்ந்தால், அந்த ஆலவாயன் பொறுப்பானா ? சூரியனை சபித்தான். சூரியன் ஒளியிழந்து போனான். தன் தவற்றை உணர்ந்து இறைவனை வழிபட்டு தன் இழந்த ஒளியை மீண்டும் பெற்றான்.

    வழிபாட்டுச் சிறப்பு: பிறர் எள்ளல்களைப் பொறுத்துக்கொண்டு, அருணன் வைராக்கிய பக்திகொண்டு இறைவனின்  தரிசனம் பெற்ற தலம் இது. எனவே இந்தத் தலத்து இறைவனையும் இறைவியையும் வேண்டிக்கொண்டால், எப்போதும் குன்றாத பக்தி ஏற்படும். இங்குள்ள லலிதாம்பிகையை லலிதா சகஸ்ரநாமம் பாடி வேண்டிக்கொண்டால், சகல நன்மைகளும் கிட்டும். 

எப்படிச் செல்வது?: திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், பேரளம் புகைவண்டி நிலையத்திலிருந்து மேற்கே சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்தத் தலம்.

திருக்கோயில்: பரிக்கல் லட்சுமி நரசிம்மர் திருக்கோயில்

பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க! - 08. அன்பான மனைவி

   
சுவாமி: ஸ்ரீலட்சுமி நரசிம்மர்.

    தாயார் : ஸ்ரீகனகவல்லித் தாயார்

திருவருள் திருவுலா

    திருத்தலச் சிறப்பு: முக்கண்ணன் அழித்த திரிபுர அசுரர்களின் தளபதி பரிகலாசுரன். அவன், உயிர்தப்பி விருத்தாசலம் அருகே வந்து பதுங்கிக்கொண்டான். அங்கு நரசிம்மருக்குக் கோயில் கட்ட முயன்ற வசந்த ராஜன் என்னும் மன்னனை அவன் தாக்க, நரஹரி ஓடிவந்து அவனைக் காத்தார். நரசிம்ம ரூபம் எடுத்து பரிகலாசுரனை வதம் செய்தார். வசந்த ராஜன் வேண்டிக்கொண்டதற்கிணங்க, அந்தத் திருத்தலத்திலேயே அன்னை மகாலட்சுமியோடு சாந்த மூர்த்தியாகக் கோயில்கொண்டார்.

    வழிபாட்டுச் சிறப்பு : கனகவல்லித் தாயாரைத் தன் மடியில் அமர்த்தி, சாந்த ரூபமாய்க் காட்சிகொடுக்கும், பரிக்கல் நரசிம்மரை வேண்டிக்கொள்ள, பரிவுடைய இல்வாழ்க்கைத் துணை அமையும். சுவாதி நட்சத்திரத்தன்று, பரிக்கல் நரசிம்ம மூர்த்தியை தரிசனம் செய்ய சகல நன்மைகளும் கிட்டும் என்பது ஐதீகம்..

   எப்படிச் செல்வது : விழுப்புரம்- உளுந்தூர்ப்பேட்டை நெடுஞ்சாலையில் விழுப்புரத்தில் இருந்து 22 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

திருக்கோயில்: திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை திருக்கோயில்

பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க! - 09. நன்மக்கள்

   
சுவாமி : முல்லைவனநாதர்.

    அம்பாள் : கர்ப்பரட்சாம்பிகை

திருவருள் திருவுலா

    திருத்தலச் சிறப்பு: வேதிகை என்னும் பெண், முல்லைவன நாதரையும் கர்ப்பரட்சாம்பிகையையும் வேண்டி கர்ப்பம் தரித்திருந்தாள். ஒருநாள் அவள் தனிமையில் இருக்கும்போது, ஊர்த்துவபாதர் என்னும் முனிவர் வந்து பிட்சை கேட்டார். கர்ப்ப அவஸ்தையில் இருந்த வேதிகையால் பிட்சை இட இயலவில்லை. உடனே கோபம் கொண்ட முனிவர் அவளைச் சபித்தார். இதனால் வேதிகையின் கர்ப்பம் கலைந்தது.

        கலைந்த கர்ப்பத்தை அன்னை ஓடிவந்து தாங்கினாள். அதை ஒரு குடத்தினுள் இட்டுக் காத்து உரிய தருணத்தில் அம்மகவை வேதிகையிடம் தந்தாள். கர்ப்பத்தைக் காத்து ரட்சித்ததால் அன்னைக்கு, கர்ப்பரட்சாம்பிகை என்ற திருப்பெயர்  ஏற்பட்டது.

    வழிபாட்டுச் சிறப்பு : குழந்தை வரம் வேண்டுவோர் இங்கு வந்து வேண்டிக் கொண்டால், அவர்களுக்கு விரைவிலேயே நன் மக்கட் பேறு கிடைக்கும் என்பதே இந்தத் தலத்தின் சிறப்பு. அன்னையில் பாதத்தில் வைத்துத் தரப்படும் நெய்யினை 48 நாள்கள் உண்டுவர அவர்களின் வேண்டுதல் பூர்த்தியாகும் என்று பலன் பெற்ற பக்தர்கள் சொல்கின்றனர்..

    எப்படிச் செல்வது?: தஞ்சை மாவட்டம் பாபநாசத்துக்கு தெற்கே 6 கி.மீ தூரத்தில் உள்ளது திருக்கருகாவூர்.

திருக்கோயில்: தஞ்சாவூர் தஞ்சபுரீஸ்வரர் திருக்கோயில்

பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க! - 10. மங்காத புகழ்

   
சுவாமி : குபேரபுரீஸ்வரர்     

    அம்பாள் : ஆனந்தவல்லி    

திருவருள் திருவுலா

திருத்தலச் சிறப்பு: தனது ராஜ்ஜியம், செல்வம் அனைத்தையும் ராவணனிடம் இழந்த குபேரன், சசிவனம் என்று அழைக்கப்பட்ட வன்னிக்காட்டுப் பகுதியில் தஞ்சம் அடைந்தார். அந்த வன்னிக்காட்டில் சுயம்புவாக எழுந்தருளியிருந்த தஞ்சபுரீஸ்வரரை அனுதினமும் வழிபட்டு வந்தார். குபேரனின் தவத்தில் மகிழ்ந்த ஈசன், தரிசனம் கொடுத்து, குபேரனை வட திசைக்கு அதிபதியாக நியமித்ததுடன், நவ நிதிகளையும் தந்து அருள் புரிந்த தலம் இது.

    வழிபாட்டுச் சிறப்பு :    சிவபெருமான், 'உலகத்தில் செல்வம் வேண்டுவோர் அனைவரும் குபேரனை வழிபட வேண்டும்' என்ற சிறப்பினை குபேரனுக்கு அருளினார்..குபேரனும் சிவனிடம், “ எனக்கு அருள்புரிந்தது போன்றே, இங்கு வந்து தங்களை வழிபடும் அன்பர்களுக்கும் அருள வேண்டும்’’ என்று வேண்டிக்கொண்டார். அதற்கிணங்க சிவபெருமான் இங்கு வந்து வேண்டிக்கொள்ளும் அனைவருக்கும் குபேரனுக்கு இணையான புகழை வழங்கியருள்கிறார்.

    எப்படிச் செல்வது?: தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து திருவையாறு செல்லும் சாலையில் சுமார் 2 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது அருள்மிகு தஞ்சபுரீஸ்வரர் கோயில்.

திருக்கோயில்: திருப்பெருந்துறை ஆத்மநாதர் ஆலயம்

பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க! - 11. வாக்கு தவறாமை
   
          
சுவாமி: ஸ்ரீஆத்மநாதர்   
 
         அம்பாள் :    ஸ்ரீயோகாம்பிகை

திருவருள் திருவுலா

    திருத்தலச் சிறப்பு: திருப்பெருந்துறை ஈசன், மாணிக்கவாசகரைக்  காக்கும் பொருட்டு, நரிகளையெல்லாம் பரிகளாக்கித்  திருவிளையாடல் புரிந்த தலம். பக்தனுக்காக தாம் வாக்களித்தபடி குதிரை வியாபாரியாக ஈசனே உருமாறிய தலமிது.

    வழிபாட்டுச் சிறப்பு : இங்கு ஈசன், உருவம், அருவம், அருவுருவம், என மூன்று நிலைகளிலும் அருள்புரிகிறான். ஈசன், மாணிக்கவாசகரின் சொல் காத்து அருளிய தலம் என்பதால் இங்கு வேண்டிக்கொண்டால், வாழ்வில் எப்போதும் சொன்ன சொல் தவறாத சீலர்களாக வாழ இறைவன் நமக்கு அருள்புரிவான். ஸ்ரீஆத்மநாதருக்கு மதியத்தில் புழுங்கல் அரிசி சாதம் மற்றும் கீரை வகைகள், இரவில் சாதத்துடன் பாகற்காய் சேர்த்து நைவேத்தியம் செய்யப்படுகிறது. ஸ்வாமிக்கு படைக்கப்பட்ட நைவேத்தியத்தைச் சாப்பிட்டால், மனோவியாதி, மன அழுத்தம், சித்தம் கலங்கிய நிலை ஆகியவற்றில் இருந்து நிவாரணம் பெறலாம் என்பது ஐதீகம்!

    எப்படிச் செல்வது?: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்பெருந்துறை எனப்படும் ஆவுடையார்கோவில்.

திருக்கோயில்: திருவீழிமிழலை வீழிநாதர் ஆலயம்

பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க! - 12. வள்ளல் தன்மை

   
சுவாமி : ஸ்ரீவீழிநாதர்

    அம்பாள் : ஸ்ரீசுந்தரகுசாம்பிகை

திருவருள் திருவுலா

திருத்தலச் சிறப்பு: சலந்திரன் என்னும் அசுரன், மகாவிஷ்ணுவின் சக்ராயுதத்தைப் பறித்துக்கொண்டு மறைந்துவிட்டான். அதை மீட்கத் திருமால் இந்தத் தலத்துக்கு வந்து நாள்தோறும் ஆயிரம் மலர்கொண்டு சிவபூஜை செய்துவந்தார். ஒருநாள் ஆயிரம் மலரில் ஒன்றுகுறைவு படவே, விஷ்ணு தன் விழியையே ஆயிரமாவது மலராகத் தந்து வழிபாடு செய்தார். இதனால் மனம் நெகிழ்ந்த ஈசன், சலந்திரனை வதம் செய்து திருமாலுக்குச் சக்ராயுதம் மீண்டும் கிடைக்குமாறு செய்தார். திருமால் வேண்டியதை எல்லாம் வாரித்தந்த வள்ளலாக ஈசன் அருள்வதால், இங்கு வழிபட்டால் வள்ளல்தன்மையோடு வாழ்வாங்கு வாழலாம்.

    வழிபாட்டுச் சிறப்பு : இங்கு உற்சவர் கல்யாண சுந்தர மூர்த்தி. எனவே, ஒருமுறை இங்கு வந்து இறைவனுக்கு மாலை அணிவித்து, தரிசித்து, மனதாரப் பிரார்த்தித்து, அதன்பின் வீட்டில் இருந்தபடி 48 நாள்கள் தொடர்ந்து அவரை நினைத்து வழிபட்டால், நல்ல வரன் சீக்கிரமே அமையும் என்பது ஐதீகம்.

    எப்படிச் செல்வது?: காவிரி தென்கரையில் உள்ள இந்தத் திருத்தலம், கும்பகோணத்தில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

    திருக்கோயில்: காஞ்சி வரதராஜர் ஆலயம்

பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க! - 13. நிலைத்த செல்வம்

   
சுவாமி : வரதராஜ பெருமாள்   

    தாயார் : பெருந்தேவி

திருவருள் திருவுலா

திருத்தலச் சிறப்பு: பிரமன் தன் மனதை தூய்மை செய்ய மகாவிஷ்ணுவை நினைத்து யாகம் செய்த தலம். அப்போது, பெருமாள் அவருடைய தவத்துக்கு  மனமிரங்கி, யாகத்தைத் தடைகள் இன்றி முடிக்க உதவினார். பின்பு பிரமனுக்கு வேண்டும் வரம் தந்தருளியதால் வரதராஜர் என்னும் பெயர் பெற்றார்.

    வழிபாட்டுச் சிறப்பு : ‘ஆதிமூலமே’ என்று கஜேந்திரன் அழைத்த குரலுக்கு பெருமாள் ஓடோடி வந்து அருளிய தலம். கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து, யாராலும் அழிக்க முடியாத நிலைத்த செல்வமான முக்திபேறை வழங்குபவன். பெருந்தேவி தாயார் தன்னை நாடிவரும் பக்தர்களுக்குச் செல்வ வளம் அருள்பவள். மண்டபத்தின் அருகே ‘அனந்த சரஸ்’ எனும் தீர்த்தம் உள்ளது.  இதில்  சனிக்கிழமைகளில் நீராடுவோருக்கு காவிரியில் நீராடிய பலன் கிட்டும். இங்கு வந்து வழிபட்டால் நீங்காத செல்வங்கள் நிலைத்து நின்று நம்மை வாழ்விக்கும்.

எப்படிச் செல்வது?: காஞ்சிபுரத்தின் நுழைவு வாயிலான விஷ்ணு காஞ்சி எனப்படும் சின்ன காஞ்சிபுரத்தில் ஆலயம் அமைந்துள்ளது.

திருக்கோயில்: ராமநாதபுரம் ராமநாதீஸ்வரர் ஆலயம்

பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க! - 14. அறச்செயல்கள்

   
சுவாமி : ராமநாத சுவாமி   

    அம்பாள் :    பர்வதவர்த்தினி

திருவருள் திருவுலா

    திருத்தலச் சிறப்பு: 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் தமிழகத்தில் இருக்கும் ஒரே தலம். ராவணனை வதம் செய்த காரணத்தால், ராமபிரானுக்கு உண்டான பிரம்மஹத்தி தோஷம் நீங்க, ராமர் சிவனை வழிபட்ட தலம். ராமபிரான் கடற்கரை மணலிலேயே லிங்கம் செய்து அதை அன்னை சீதாவுடன் சேர்ந்து பூஜை செய்து தன் தோஷம் நீங்கப் பெற்றார்.

    வழிபாட்டுச் சிறப்பு : தன் வாழ்க்கை முழுவதும் மேற்கொண்ட அறத்திலிருந்து தவறாமல் வாழ்ந்தவர் ராமச்சந்திரமூர்த்தி. ராவண வதத்தால் அவருக்கு நேர்ந்த தோஷமும் இங்கு சிவனை பூஜித்ததால் அகன்றது. எனவே அறத்தின் வழி நிற்பவர்கள் தங்களுக்கு நேரும் இன்னல்கள் தீர இங்குள்ள ஈசனை வழிபட வேண்டும். வாழ்க்கை முழுவதும் அறவழியை விட்டு அகலாத வரம் அருள்வார் ராமநாதீஸ்வரர். ஆலயத்தின் உள் இருக்கும் 22 தீர்த்தங்களிலும் நீராடினால் சகல பாவங்களும் நீங்கி நல்வழி பிறக்கும் என்பது ஐதீகம்.

    எப்படிச் செல்வது : ராமநாதபுர மாவட்டத்தில் ராமேஸ்வரம் தீவில் அமைந்துள்ளது ராமநாதசுவாமி ஆலயம்.

திருக்கோயில்: பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயம்

பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க! - 15. துன்பமற்ற வாழ்க்கை

அம்பாள் :     பவானி அம்மன்

திருவருள் திருவுலா

திருத்தலச் சிறப்பு: கம்சன், தன் சகோதரியான தேவகியின் 8 வது மகனால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அறிந்ததால், பிறந்த ஏழு குழந்தைகளையும் கொன்றான். எட்டாவது குழந்தை பெண்மகவாகப் பிறந்திருப்பது அறிந்ததும், அதையும் கொல்ல முடிவு செய்து வாளை வீசினான். ஆனால், அந்தக் குழந்தை அவனிடம், “உன்னை வதம் செய்யப் பிறந்தவன் கோகுலத்தில் வளர்கிறான்” என்று சொல்லி மறைந்தாள். அங்கிருந்து சங்கு சக்கரதாரியாக வந்த அன்னை, புண்ணிய பூமியான பெரியபாளையத்தில் புற்றுவடிவில் கோயில்கொண்டாள் என்கிறது தலவரலாறு.

    வழிபாட்டுச் சிறப்பு : அன்னை இங்கு கருணையே வடிவாக வீற்றிருப்பதால், வேண்டுவோர் துன்பம் தீர்த்து அருள்புரிகிறாள். தீமைகளை அழிக்கும் சங்கு, சக்கரமும் வாளும் ஏந்தி, நன்மை வழங்கும் அமுத கலசத்தையும் தாங்கி நிற்கும் பவானியம்மனை வழிபட்டால் சகல துன்பங்களில் இருந்தும் நிவாரணம் பெற்று வாழலாம். இங்கு நடைபெறும் சித்ரா பௌர்ணமி விழா சிறப்பு மிக்கது.

எப்படிச் செல்வது : சென்னையில் இருந்து 43 கி.மீ தூரத்தில் செங்குன்றம் தாண்டி அமைந்துள்ளது பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயம்.

திருக்கோயில்: திருவேட்டீஸ்வரர் ஆலயம்

பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க! - 16. இறைச்சிந்தனையில் இன்பம்

    இறைவன் :
திருவேட்டீஸ்வரர்

    அம்பாள் : செண்பகாம்பிகை

திருவருள் திருவுலா

திருத்தலச் சிறப்பு: பாசுபதாஸ்திரம் வாங்க சிவனோடு போரிட்டு அவரை வில்லால் அடித்தான் அர்ச்சுனன். இந்த பாவம் நீங்க தலம்தோறும் சென்று சிவதரிசனம் செய்தான் பார்த்தீபன். திருவேட்டீஸ்வரத்தில் சுயம்புவாகத் தோன்றிய லிங்கத்தைக் கண்டு வணங்கி அர்ச்சுனன் வழிபட்ட காரணத்தால் இந்த இறைவனுக்கு பார்த்தபிரகரலிங்கம் என்று பெயர். இறைவனின் சிந்தனையில் பார்த்தன் மகிழ்ந்து கொண்டாடிய தலமிது.

    வழிபாட்டுச் சிறப்பு : பதினேழு நித்யலிங்க ஸ்தலங்களுள் இதுவும் ஒன்று. இந்த ஆலயத்தில் சுவாமி சந்நிதி முன்பாக ராகு, கேது நாகவடிவில் எழுந்தருளியுள்ளனர். எனவே இங்குள்ள இறைவனை வழிபாடு செய்தால் ராகு - கேது கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும். ஞானகாரகன் கேதுவின் அருளால், மெய்ஞ்ஞானம் உண்டாகி, இறைச் சிந்தனையில் மனம் நிலைத்திருக்கும். வாழ்வின் எல்லா குழப்பங்களும் நீங்கி மெய்ஞ்ஞான அறிவோடு திகழ இங்கு வந்து வணங்குங்கள்.

    எப்படிச் செல்வது : சென்னை, திருவல்லிக்கேணி பகுதியில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

தொகுப்பு : மு.ஹரி காமராஜ், சைலபதி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism