Published:Updated:

அட்சய திரிதியை அற்புதங்கள்!

அட்சய திரிதியை அற்புதங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
அட்சய திரிதியை அற்புதங்கள்!

ஆர். நந்தினி, மதுரை

அட்சய திரிதியை அற்புதங்கள்!

ஆர். நந்தினி, மதுரை

Published:Updated:
அட்சய திரிதியை அற்புதங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
அட்சய திரிதியை அற்புதங்கள்!
அட்சய திரிதியை அற்புதங்கள்!

ஷ்ட லட்சுமிகளில் ஐஸ்வர்ய லட்சுமி, தான்ய லட்சுமி ஆகிய இருதேவியரும் தோன்றியது அட்சய திரிதியை நாளில்தான் என்கின்றன புராணங்கள்.

குபேரன், இழந்த செல்வங்களை திருமகளிடம் வேண்டிப்பெற்றதும் இந்நாளே. வங்காளத்தில் அட்சயதிரிதியை திருநாள் ‘அல்கதா’ என்ற பெயரில் விநாயகர் மற்றும் லட்சுமியைத் துதிக்கும் நாளாகவும், புதுக்கணக்கு தொடங்கும் நாளாகவும் திகழ்கிறது.

வடநாட்டில், ஜாட் சமூகத்தினர் அட்சய திரிதியை நாளை விவசாயத் திருவிழாவாகக் கொண்டாடு கிறார்கள். அந்நாளில் மண்வெட்டியுடன் நிலத்துக்குச் செல்லும் விவசாயி, அங்கு காணும்  விலங்குகள், பறவைகள் போன்றவற்றை நிமித்தமாகக்கொண்டு அந்த ஆண்டுக்கான விளைச்சலைக் கணிப்பார்கள். 

கெளரவர்கள் சபையில் துன்பப்பட்ட திரௌபதிக்கு ‘அட்சய’ என்று சொல்லி கிருஷ்ணர் துகில் கொடுத்தத் திருநாளும் இதுவே.

அட்சய திரிதியை நாளில் பச்சரிசி, உப்பு, மஞ்சள் போன்றவற்றை வாங்குவது தென்னாட்டு மக்களின் வழக்கம். இவை மங்கலப் பொருள்கள் என்பதோடு, லட்சுமி கடாட்சம் நிரம்பியவை ஆகும்.

கிருதயுகம் பிறந்தது ஓர் அட்சய திரிதியை திருநாளில்தான் என்று புராணங்கள் கூறுகின்றன.  

தட்சனின் சாபத்தால் பொலிவிழந்த சந்திரன், விமோசனம் பெற்று மீண்டும் வளரத் தொடங்கிய திருநாள் அட்சய திரிதியை.

அட்சய திரிதியை அற்புதங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மகாதயன் என்ற வணிகர், முதன்முதலாக அட்சதையைக் கொண்டு இந்நாளில் பெருமாளை வணங்கினார் என்றும் அவரே காசி அரசனாக அவதரித்தார் என்றும் புராணங்கள் கூறுகின்றன. 

மகாலட்சுமி, திருமாலின் திருமார்பில் நீங்காமல் வசிக்கும் வரத்தைப் பெற்ற நாளும் இதுதான்.

இந்தத் திருநாளில் கனகதாரா ஸ்தோத்திரம், குசேல புராணம் போன்றவை வாசிப்பது தரித்திரத்தை நீக்கி சுபிட்சத்தை அருளும்.

அட்சய திரிதியை நாளில் செய்யப்படும் பித்ரு தர்ப்பணம், பித்ருக்களின் அளவில்லாத ஆசிகளை வழங்கும் என்கின்றன ஞானநூல்கள்.

குறையாத செல்வத்தை அருளும் நாள் இது என்பதால், கல்விச் செல்வம் பெருகும் பொருட்டு, இந்நாளில் குழந்தைகளுக்கு அட்சரப்பியாசம் ஆரம்பிப்பதும் சிறப்பானது.

புண்ணிய நதியாம் கங்கை, பகீரதனுக்காகப் பூமியை அடைந்ததும் அட்சய திரிதியை அன்றுதான்.

‘அலப்ய யோகம்’ எனப்படும் சிறப்பான நாள் அட்சய திரிதியை நாள். இந்த நாளில் ஆரம்பிக்கப் படும் எந்தக் காரியமும் தடையின்றி நடக்கும் என்பது ஜோதிட நூல்களின் நம்பிக்கை.

இந்தத் திருநாளில் கங்கை உள்ளிட்ட புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதும், வழிபடுவதும் புண்ணிய பலன் தரும்.

ஜோதிட நூல்களின் கூற்றுப்படி, சூரியனும் சந்திரனும் சம அளவு வல்லமை பெற்றிருக்கும் நாள் அட்சய திரிதியை என்பார்கள்.

வேதவியாசர், கணேசரை மகாபாரதம் எழுதச்சொல்லி வேண்டிக்கொண்ட திருநாளும் இதுவே.

சிவபெருமான் அன்னபூரணியிடம் பிக்ஷை பெற்று தோஷம் நீங்கப்பெற்றதும் இந்த நன்னாளில்தான்.

அள்ள அள்ளக் குறையாமல் அன்னம் அருளும் அட்சய பாத்திரத்தை திரெளபதி அடைந்ததும், ஓர் அட்சய திரிதியை திருநாளில்தான். அதேபோல், மணிமேகலைக்கு அட்சய பாத்திரம் கிடைத்ததும் இந்த நாளில்தான் என்றொரு தகவல் உண்டு.

அட்சய என்றால் வளருதல் - பெருகுதல் என்று பொருள். ஆகவே, அட்சய திரிதிய நாளில் செய்யப் படும் அனைத்துவிதமான மங்கலகாரியங்களும், புண்ணிய காரியங்களும் பன்மடங்கு பலன்களை வழங்கும் என்பது ஐதீகம்.

அட்சய திரிதியை அற்புதங்கள்!

அளவிலாச் செல்வம் அருள்வாய் போற்றி
ஆனந்த அறிவொளி விளக்கே போற்றி

இந்தத் திருநாளில் ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்குச் செய்யும் தான, தர்மங்கள் மகாலட்சுமியை மகிழ்ச்சியடையச் செய்யும்.

இந்தத் திருநாளில் வெள்ளி வாங்கினால் சரும நோய்கள், மனக்குழப்பம், நிம்மதியின்மை ஆகியவை தீரும் என்றும், தங்கம் வாங்கினால் ஏழ்மையை நீக்கி செல்வவளம் அளிக்கும் என்பது  நம்பிக்கை.

இந்த நாளில் வெண்ணெய் சேர்த்த தயிர் அன்னத்தைத் தானமாக ஏழைகளுக்குத் தருவதால், நம்முடைய 11 தலைமுறை சந்ததியினருக்குக்  குறைவில்லா அன்னம் கிடைக்க வழிபிறக்கும் என்று  ஆன்மிக நூல்கள் கூறுகின்றன.

விவசாயத்தைச் செழிக்கச் செய்யும் அருள்மிகு சாகம்பரிதேவி பூவுலகில் முதல் தாவர சிருஷ்டிகளை உருவாக்கியது இந்நாளில்தான் என்று கூறப்படுகிறது. 

தானியங்கள் விதைக்க, நீண்ட பயணம் செல்ல, வீடு கட்ட, கிணறு தோண்ட, திருமணங்கள் முதலான சுபகாரியங்களை அட்சய திரிதியை அன்று செய்வதாலும் தொடங்குவதாலும் நன்மைகள் விளையும் என்பார்கள்.

அமாவாசைக்கு 3-ம் நாளான அட்சய திரிதியை குருவுக்கு விசேஷமானது. 3-ம் எண்ணுக்கு அதிபதி குரு. குருவுக்கு `பொன்னன்’ என்ற திருநாமமும்  உண்டு. குருவை மகிழ்விக்கவே அட்சய திரிதியை நாளில் பொன் வாங்குவது வழக்கமானது. பொன் வாங்க முடியாதவர்கள் உப்பு வாங்கலாம்; அதே அளவு பலன் கிட்டும் என்பது ஆன்றோர் வாக்கு.

தான தர்மங்கள் செய்து மற்றவர்களை மகிழ்வித்து உய்ய வேண்டிய இந்தத் திருநாளில் தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் வாங்கி மகிழ்வதோடு, நம் புண்ணியங்களைப் பெருக்கிக்கொள்ளும் விதம் நிறைய தர்ம காரியங்களையும் செய்வோம்.

வீட்டில் மகாலட்சுமிக்கு நெய்தீபங்கள் ஏற்றி வைத்து வழிபடுவதுடன், நம்மால் இயன்றளவுக்கு ஏழைகளுக்கு அன்னமிட்டு மகிழ்வோம். இறையருள் நம் இல்லத்தில் பொங்கிப்பெருகிட, சிறப்பான வாழ்வைப் பெறுவோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism