Published:Updated:

ஆதியும் அந்தமும் - 2 - மறை சொல்லும் மகிமைகள்

ஆதியும் அந்தமும் - 2 - மறை சொல்லும் மகிமைகள்
பிரீமியம் ஸ்டோரி
ஆதியும் அந்தமும் - 2 - மறை சொல்லும் மகிமைகள்

மகாமகோபாத்யாய சேஷாத்ரிநாத சாஸ்திரிகள், ஓவியம்: மாருதி

ஆதியும் அந்தமும் - 2 - மறை சொல்லும் மகிமைகள்

மகாமகோபாத்யாய சேஷாத்ரிநாத சாஸ்திரிகள், ஓவியம்: மாருதி

Published:Updated:
ஆதியும் அந்தமும் - 2 - மறை சொல்லும் மகிமைகள்
பிரீமியம் ஸ்டோரி
ஆதியும் அந்தமும் - 2 - மறை சொல்லும் மகிமைகள்

தியும் அந்தமும் - நாம் இந்த இரண்டையும் பற்றி அடிக்கடி பேசுவது உண்டு. இதன் தத்துவம் - உண்மை விளக்கம் என்ன?

உலகத்தில் நாம் கண்களால் பார்க்கக்கூடிய, புலன்களால் அறியக்கூடிய அனைத்துப் பொருள் களுக்கும் ஓர் ஆதி உண்டு; அந்தமும் உண்டு.  மனிதப் பிறப்புக்கு ஒரு தனித்தன்மை உண்டு. அவனுக்குச் சிந்தனை செய்யக்கூடிய சக்தி, சிந்தனை வளம் அவன் பிறக்கும்போதே - சிருஷ்டியிலேயே இருக்கிறது.  மற்ற உயிரினங்களிடமிருந்து மனிதனைத் தனிமைப்படுத்துவது அந்தத் தகுதிதான். இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது?

மனிதன் சிந்தனை செய்துதான் வாழவேண்டும். இல்லையென்றால், சிந்திக்கும் திறன் என்ற உருப்படியை அவனுக்கு இல்லாமல் செய்திருக்க லாமே. எந்த உருப்படி நாம் பிறக்கும்போது நமக்குக் கிடைக்கிறதோ, அந்த உருப்படியை நாம் பயன்படுத்தவேண்டும். இல்லையென்றால் ஒரு பயனும் இல்லை.

இந்தச் சிந்தனை என்ற தனித்தன்மையான திறமையே மனிதனை மற்ற உயிரினங்களைவிட செழுமையாக வைத்திருக்கிறது. சிந்தனையின் மூலம் மனிதன் ஆதியை அறிய முடியும்; அந்தம் இருக்கிறது என்பதையும் தெரிந்துகொள்ள முடியும். அதன் மூலம், தன் முன்னேற்றத்தையும் ஏற்படுத்திக்கொள்ள முடியும்.

மனிதனுக்கு இப்படியான சிந்தனா சக்தி கிடைத்திருப்பதற்குக் காரணம், ஈஸ்வர கடாட்சம் என்றுதான் சொல்லவேண்டும். ‘சிந்தனை செய் மனமே’ என்று சொல்வார்கள். சிந்தனை செய்யும் போதுதான், நமக்கும் உலகத்துக்கும் சாதகம் எது, பாதகம் எது என்பதை அறியமுடியும்.

ஆதியும் அந்தமும் - 2 - மறை சொல்லும் மகிமைகள்

சிந்தனை என்று இருந்தால், அதற்கு ஆதி மற்றும் அந்தம் குறித்து தெரிந்திருக்கவேண்டும். இல்லையெனில், அந்தச் சிந்தனை அரைகுறையா கவே முடியும். மனிதனுக்குச் சிந்தனையை செயல்படுத்தும் தகுதி எப்போது கிடைக்கிறது? ஆதி - அந்தம் பற்றிய தெளிவு அவன் மனதில் ஏற்பட்டிருந்தால், அவனுடைய சிந்தனை தெளிவான - அழகான ஒரு முடிவை எட்டுவதற்கு  உதவும். மனிதனின் சிந்தனைக்கு `ஆத்யந்தம்' என்ற தத்துவம் தேவை.

ஒரு விஷயம் சொல்கிறேன். டார்வின் பரிணாம தத்துவத்தைக் கண்டுபிடித்தார். `விகாஸ வாதம்' என்று சொல்வார்கள். அவருக்கு ஆத்யந்தம் பற்றிய ஒரு தெளிவு இருந்தது. அதேபோல் அது சரியா, தவறா என்பதை மனிதன் ஆராய்ந்து அறியலாமே. அவனுக்குத்தான் சிந்திக்கும் திறன் இருக்கிறதே.

அன்றைக்கு டார்வின் அந்தத் தத்துவத்தைச் சொன்னபோது, `டார்வினின் தியரி பர்ஃபெக்ட்' என்று எல்லோரும் பாராட்டி வரவேற்றார்கள். பின்னர் வந்த விஞ்ஞானிகள்... விஞ்ஞானம் என்பது பரம்பரை. விஞ்ஞானத்துக்குக்கூட ஆதியும் உண்டு; அந்தமும் உண்டு. அவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமோ? வேதங்கள், அதன் உண்மைகள் அனைத்தையும் ஆய்ந்தறிந்த பிறகு, டார்வினின் பரிணாம தத்துவம் தவறு என்று கூறினார்கள்.

மிகவும் எளிமையாகச் சொல்கிறேன். அதிகம் சொன்னால் பாமர மக்களுக்குப் புரியாது. மிருகத்திலிருந்துதான் மனிதன் வந்தான். குரங்கு ஒரு மிருகம். அதிலிருந்து மாறுபட்டு பரிணாமமாகத்தான் மனிதன் வந்தான். அவனுக்கு ஒன்றும் தெரியாது. ஆடை உடுத்தக்கூடத் தெரியாது. அவனுக்கு நல்லது கெட்டது தெரியாது; வெட்கம் மானமும் தெரியாது. படிப்படியாக வளர்ந்து அறிவுத் தெளிவு பெற்று, கல்லைக் கண்டுபிடித்தான்; கல்லிலிருந்து நெருப்பைக் கண்டுபிடித்தான். உணவுக்கு விலங்குகளை வேட்டையாடத் தொடங்கினான்.

பின்னர் படிப்படியாக வளர்ந்த நிலையில், தற்காலத்தில் சந்திர மண்டலத்துக்குக்கூட சென்று வந்துவிட்டான். எனவே, மனிதர்கள் சிறப்பான சிந்தனை சக்தியைப் பெற்றுவிட்டதாகச் சொல் கிறார்கள்.

வேதகால ரிஷிகள் இருக்கிறார்களே, அவர்கள் தங்கள் மூளையினாலே ஆகாயத்தில் சூட்சும ரூபமான இருக்கக்கூடிய ஒலி - சப்தம்... அந்த ஒலி வடிவத்தில் இருக்கக்கூடிய சப்தத்தைக் கிரகித்து மூளையில் சேமித்து, சிந்தனையைச் செயல்படுத்தி உயர்ந்த ரிஷிகளாக இருந்தார்கள். அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள்? எளிமையாக அதேநேரம் உயர்ந்த சிந்தனைகளுடன் வாழ்ந்தார்கள் (Simple living and High thinking).

ஆனால், இன்றைய மனிதர்களின் நிலை? எங்கு பார்த்தாலும்  வன்முறை, தீவிரவாதம் என்றிருக்கிறது. மிருகத்தன்மைக்கு மாறிவிட்டான். காரணம் அவனுக்குச் சுயநலம் அதிகரித்துவிட்டதுதான். எந்தத் தவறு செய்யவும், எந்த நிலைக்குக் கீழிறங்கி வரவும் தயாராகிவிட்டான். என்றால் பரிணாம வாதம் தவறாகிவிட்டதாகத்தான் அர்த்தம்.

மற்றபடி சந்திரமண்டலத்துக்குப் போவது, செயற்கைக்கோள் ஏவுவது போன்ற எல்லாமே தங்களுடைய வளர்ச்சிக்காகத்தான் செய்கிறார் களே தவிர, அதனால் மனித ஜீவிதத்துக்கோ, தரத்துக்கோ, வளர்ச்சிக்கோ, மனித குலத்தை உயர்த்துவதற்கோ எந்தப் பயனும் இல்லை.

விஞ்ஞானம் வளர்ந்து வருகிறது. அதில் சந்தேகம் இல்லை. ஆனால், ஒவ்வொரு விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கும் ஆதியும் உண்டு; அந்தமும் உண்டு. முன்பெல்லாம் வெளியூரில் இருப்பவர்களுடன் பேச  டிரங்கால் புக் பண்ணி பேசவேண்டும். பிறகு, செல்போன் மூலம் பட்டனை அழுத்தி, நினைத்த நேரத்தில் நாம் பேச விரும்பும் நபரிடம் பேச முடிந்தது. இப்போது பட்டனை அழுத்தக்கூடத் தேவையில்லை. ஸ்கிரீனைத் தடவினால் போதும்! கேட்டால், `டச் போன்' என்று சொல்கிறார்கள்! நாளை இதுமாதிரியான உபகரணங்கள் எதுவும் இல்லாமல், எங்கு எது நடந்தாலும் எந்த மூலையிலிருந்து எவர் பேசினா லும் அவற்றை அறியும் ஆற்றலைப் பெறும் நிலை ஏற்படலாம்.

அந்த மாதிரியான ஒரு நிலையில்தான் ரிஷிகள் இருந்தார்கள். அந்த நிலையை நாம் எட்ட முடியும். இதுதான் ரிஷிகளுடைய சிந்தனையின் எல்லை. அந்த நிலையை மனிதன் அடைந்துவிட்டால், அந்தக் காலத்தில் ஆகாயத்தில் சப்த அலை களாகப் பரவியிருந்த மந்திர உண்மைகளை ரிஷிகள் கண்டறிந்ததுபோல், உலகத்தில் எங்கு நடப்பதையும் மனிதன் தன் மனதாலேயே கண்டறிய முடியும். இதற்கு என்ன தேவை என்று கேட்டால், மனிதருக்குச் சிந்தனை வளம் தேவை.
எல்லா ஜீவராசிகளும் உயிர் என்ற விஷயத்தில் மட்டும்தான் ஒன்று. மற்றபடி சுபாவம் வேறு வேறாக இருக்கிறது. வாழும் விதம், நடைமுறை என்று எல்லாமே பின்னம். மனிதர்களில்கூட ஒரு மனிதனிலிருந்து மற்றொரு மனிதன் வேறுபட்டு இருக்கிறான். எல்லோரும் ஒன்று என்ற கோட்பாடு இருக்கிறதே, அதைச் செயல்படுத்துவது கடினம். பேச்சளவிலேயே சொல்லிக்கொண்டிருக்கலாம்.

ஓர் அப்பாவுக்கு நான்கு குழந்தைகள். ஒருவன் திறமைசாலி; மற்றொருவன் சோம்பேறி; மூன்றா வது பையன் திருடன்; நான்காவது பிள்ளையோ முரடனா இருக்கிறான். ஆக, தகப்பனுக்குப் பிறந்த நான்கு பிள்ளைகள் நான்கு விதமாகத்தானே இருக்கிறார்கள்? அப்பா - அம்மாவின் சுபாவமே வரவில்லையே. எல்லாமே பின்னம்.

உலகம் பல தினுசாக இருந்தால்தான் லோகம் ருசிக்கும். எல்லாம் ஒரே மாதிரியாக இருந்தால் ருசிக்காது. நாமேகூட தினமும் ஒரே குழம்பாக இருந்தால் சாப்பிடமாட்டோம். பலவாறாகத் தோன்றுவதுதான் லோகத்தின் சொரூபம். எல்லாவற்றையும் ஒன்றாகச் செய்யவேண்டும் என்று சொன்னால், அது சரிப்பட்டு வராது. அந்த சிந்தனை வளமானதுமல்ல.

சிந்தனை வளமாக இருக்கவேண்டும் என்றால், மனிதனுக்கு ஆதியைப் பற்றித் தெரிந்திருக்க வேண்டும். கடவுள் உலகத்தைச் சிருஷ்டி செய்த போது, பலவாறாக சிருஷ்டி செய்யத்தான் நினைத்தார். அவர் விசித்திரத்தைத்தான் சிருஷ்டி செய்தார். எல்லாவற்றையும் ஒன்றுபோல் சிருஷ்டி செய்யவில்லை. மின்சாரம் ஒன்றுதான். ஆனால், அது ஒளியைத் தருகிறது; குளிர்ச்சியைத் தருகிறது; வெப்பத்தைத் தருகிறது; எரிக்கவும் செய்கிறது. ஆனால், மின்சாரம் ஒன்றுதான்.
அதேபோல், தான் படைத்த பிரபஞ்சத்திலுள்ள அனைத்து படைப்புகளிலும் பரப்பிரம்மம் நீக்கமற நிறைந்திருக்கிறது. கடவுள் எல்லா உயிர்களிடத்தும் நிலைத்திருக்கிறான் என்பதுதான் நம்முடைய கோட்பாடு. இந்த மாதிரியான சிந்தனைகள் வளரவேண்டும் என்றால், முதலில் நாம் ஆதி என்ன, அந்தம் என்ன என்பது பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும். இதை நாம் முதலில் தெரிந்துகொண்டால், நம் சிந்தனை சரியானதாக (Proper) இருக்கும். உயர்ந்த தத்துவங்களை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கருதி, அந்தத் தத்துவங்களை எல்லாம் அவர்களின் நிலைக்கு ஏற்றார்போல் நாம் எளிமைப்படுத்திச் சொல்லலாம் என்று கருதுவது தவறு. அது, தத்துவத்தை மலினப்படுத்தியதாக ஆகிவிடும்.

உயர்ந்த தத்துவங்களை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு மக்களின் மனநிலை உயரவேண்டும். அதேபோல் தத்துவங்களைச் சொல்பவர்களும் மனிதர்களின் சிந்தனை வளம் பெருக எப்படி சொல்லவேண்டுமோ அப்படிச் சொல்லவேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஓர் உதாரணம் சொல்கிறேன்...

-பிரபஞ்சம் விரியும்...

ஆதியும் அந்தமும் - 2 - மறை சொல்லும் மகிமைகள்

ஆலயங்களும் அற்புதங்களும்...

டராஜருக்கு சிதம்பரம், குற்றாலம், செப்பறை என மூன்று கோயில்களில் மட்டுமே தனித்தேர்கள் உள்ளன.

மதுரையைப்போலவே திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலிலும் பொற்றாமரைக் குளம் உள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிவசைலம் கோயிலில் லிங்கத்தின் பின்புறம் சடைமுடி வளர்ந்திருக்கும் மூலவரை தரிசிக்கலாம். அங்குள்ள அம்மன் சந்நிதிக்கு முன்பாக துவாரபாலகிகளாக கங்கையும் யமுனையும் அருள்பாலிக்கிறார்கள்.

நெல்லையப்பர் கோயிலில் மூலவர் லிங்கத்துக்கு அபிஷேகம் நடைபெறும்போது, பாணத்தின் நடுவே அம்பாள் உருவம் தெரிவதைக் கண்டு தரிசிக்கலாம். இது ஒரு அபூர்வ தரிசனம் என்கிறார்கள்.

- அ. யாழினி பர்வதம், சென்னை - 78

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism