சிவ நாமம் சகல பாவங்களையும் போக்க வல்லது என்று சகல வேதங்களும் புராணங்களும் சொல்கின்றன. பசுமாட்டைக் கொன்றதால் பெரும் பாவத்துக்கு ஆளான அன்பன் ஒருவன், அதன் உரிமையாளரிடம் மன்னிப்பு கேட்கச் சென்றான்.

உரிமையாளரின் பெயர் அவனுக்குத் தெரியாத காரணத்தால், வாசலில் இருந்தபடியே ‘சிவ - சிவா’ என்று அழைத்தான். வெளியே வந்த பசுவின் உரிமையாளர் விவரம் கேட்டறிந்தார். “நீ சிவ நாமம் சொல்லி அழைத்தாய் அல்லவா? அந்த நாம மகிமையே உனது பாவத்தைப் போக்கிவிட்டது போ’’ என்றார். இதைப்பற்றிக் கேள்விப்பட்ட ஊர்மக்கள், ‘`சிவ நாமம் சொன்னால், பாவம் எப்படித் தொலையும்’’ என்று கேலி பேசினார்கள்.

உடனே பசுவின் உரிமையாளர், பசுவைக் கொன்ற அன்பனை அருகில் அழைத்து ஒரு கட்டுப் புல்லைக் கொடுத்து, ‘‘இந்தப் புல்லை எடுத்துச் சென்று கோயிலில் உள்ள கல் நந்திக்குக் கொடு. `சிவநாமத்தால் உன் பாவம் தொலைந்துவிட்டது’ என்று நான் சொன்னது உண்மையானால், கல் நந்தி இந்தப் புல்லைத் தின்னும்’’ என்று கூறினார். அந்த மனிதனும் அப்படியே கோயிலுக்குச் சென்று கல் நந்திக்குப் புல்லைக் கொடுக்க, கல் நந்தி தன் வாயைத் திறந்து புல்லைத் தின்றது. இந்த அற்புதம் நிகழ்ந்த திருத்தலம் கஞ்சனூர். இந்த அற்புதத்தால் ஊரார்க்கு சிவநாம மகிமையை உணர்த்திய அருளாளர், ஹரதத்தர்.

12-ம் நூற்றாண்டில், கும்பகோணத்தில் வாழ்ந்த வைணவரான வாசுதேவர் என்பவருக்கு மகனாக அவதரித்தவர் ஹரதத்தர். ஹரியும் ஹரனும் ஒன்று எனும் உயர் தத்துவத்தை விளக்க, அந்த வைகுண்ட வாசனே ஹரதத்தராக அவதரித்தார் என்பார்கள்.

தன் வாழ்வில் பல அற்புதங்களைச் செய்த ஹரதத்தர் தினமும் கஞ்சனூர் மற்றும் அதனைச் சுற்றியிருக்கும் 6 சிவத்தலங்களுக்குச் சென்று வழிபடுவதை, தன்னுடைய நித்ய அனுஷ்டானங்களில் ஒன்றாகக் கொண்டிருந்தார். இந்த ஏழு தலங்களும் ‘ஹர சப்த ஸ்தானத் தலங்கள்’ எனப்படுகின்றன.

கஞ்சனூர் சுற்றுவட்டாரத்தில் ‘ஏழூர்ப் பல்லக்கு விழா’ பிரசித்திபெற்றது. கஞ்சனூர் மாசிமகத் திருவிழா நிறைவில், ஹரதத்தர் திருமேனியைப் பல்லக்கில் அமர்த்தி, அவர் வழிபட்ட ஏழு ஆலயங்களையும் அடியார்கள் வலம் வருவர். ஒவ்வோர் ஊரிலும் பூரணக் கும்ப மரியாதையுடன் ஹரதத்தரை எதிர்க்கொண்டு அழைப்பது வழக்கம். அதேபோல் ஏழு தலங்களின் இறைவர்களும் ஓரிடத்தில் கூடி அருள்காட்சி தருவதும் சிறப்பாகும். திருவாவடுதுறையில், சுந்தரர் ஹரதத்தரை எதிர்க்கொண்டு அழைக்கும் மரபு உண்டு.

திருவாவடுதுறை ஸ்ரீலஸ்ரீ குருமகா சந்நிதானம் மடத்து முகப்பில் ஹரதத்தரை எதிர்க் கொண்டழைத்து வழிபடுவதும், அடியார்களுக்கு விருந்தோம்பல் செய்வதும், கண்கொள்ளா காட்சிகளாகும். மகிமைமிகு ஹர சப்த ஸ்தான தலங்களை நாமும் தரிசிப்போமா?

மூன்றுகோடி ரிஷிகள் வழிபட்ட திருக்கோடீஸ்வரர்

தலம்: திருக்கோடிக்காவல்

ஸ்வாமி: ஸ்ரீதிருக்கோடீஸ்வர ஸ்வாமி

அம்பாள்: ஸ்ரீதிரிபுரசுந்தரி

திருத்தலச் சிறப்புகள்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல்பெற்ற தலம். மூன்று கோடி மந்திர தேவதைகளும், மூன்று கோடி ரிஷிகளும், மூன்று கோடி தேவர்களும் பூஜித்ததால், இத்தலத்து இறைவன் திருக்கோடீஸ்வரர் என்றழைக்கப்படுகிறார்.

லோககாந்தா என்ற பெண்ணின் வேண்டுகோளுக்கு இணங்கி, `இந்தத் தலத்துக்கு வந்து வழிபடும் அன்பர்களைத் துன்புறுத்தக்கூடாது’ என்று யமனுக்கும், சித்திரகுப்தனுக்கும் இறைவன் ஆணையிட்டாராம். ஆகவே, இங்கு வந்து வழிபடும் அன்பர்களுக்கு மரண அவஸ்தை, யம பயம் ஆகியவை இல்லை. அகத்தியருக்கு இறைவன் ஆனந்த தாண்டவத்தைக் காட்டியருளிய தலமிது. அன்னை திரிபுரசுந்தரி இங்கு சங்கு-சக்கரம் ஏந்தி, ஸ்ரீவத்ஸமும் கெளஸ்துப மாலையும் தரித்தவளாக, சாட்சாத் திருவேங்கடவனின் திருக்கோலத்தில் பன்னீராயிரம் வைணவர்களுக்குக் காட்சி தந்தாளாம்.

வழிபாட்டுச் சிறப்புகள்: “இங்கு வந்து ஈஸ்வரனை வழிபட்டால் மரண பயம் நீங்கும், பித்ரு தோஷம் நிவர்த்தியாகும், புத்திரப்பேறு கிட்டும். இங்கு அருளும் கரையேற்று விநாயகர் துர்வாச முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். சதுர்த்தியும் செவ்வாய்க்கிழமையும் கூடிய நாளில் இவரை வழிபட்டால், துன்பங்களிலிருந்து விடுபடலாம். வறுமை நீங்கி செல்வம் பெருக இங்குள்ள வடுக பைரவருக்கு நெய் தீபமேற்றி அர்ச்சனை செய்யவேண்டும்” என்கிறார் ஆலய குருக்கள் தியாகராஜன் (தொடர்புக்கு: 91595 14727).

அமைவிடம்: கல்லணை - பூம்புகார் வழித்தடத்தில் மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் பேருந்து மார்க்கத்தில் 18 கி.மீ. தொலைவில் உள்ளது.

பரதனுக்குப் பிள்ளை வரம் தந்த ஈஸ்வரன்!

தலம்: திருவாலங்காடு

ஸ்வாமி: ஸ்ரீவடாரண்யேஸ்வரர்

அம்பாள்: ஸ்ரீவண்டார்குழலி

திருத்தலச் சிறப்புகள்: மீனாட்சி சுந்தரம்பிள்ளை இயற்றிய திருத்துருத்திப் புராணம் இந்தத் தலச் சிறப்பினைப் பாடுகிறது. குழந்தைப்பேறு இல்லாமல் வருந்திய பரதன் (துஷ்யந்தன் - சகுந்தலையின் மைந்தன்), தன் மனைவியுடன் வந்து, இங்குள்ள புத்திரகாமேஸ்வர தீர்த்தத்தில் நீராடி, புத்திரகாமேஸ்வரரையும், வடாரண்யேஸ்வரரையும் வழிபட்டு, புத்திர பாக்கியமும் சகல செல்வங்களும் பெற்றாராம். இங்கு, இந்தத் தலத்தில் சனிபகவானின் மகனாகிய மாந்தி தனிச் சந்நிதி கொண்டுள்ளது விசேஷம். இங்கு அருள்பாலிக்கும் ஜுரஹரேஸ்வரருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், காய்ச்சல் முதலான பிணிகள் நீங்கும். இந்தத் தலத்தில் ஆடிப்பூரத் திருவிழா சிறப்பானது. இதில் கலந்துகொண்டு அம்மனை வணங்க மங்கல வாழ்வு பெறுவர்.

வழிபாட்டுச் சிறப்புகள்: “இந்தத் தலத்து இறைவனை வழிபட்டால், மகப்பேறு உண்டாகும். இங்கே சந்நிதி கொண்டிருக்கும் யமன், அவன் மனைவி சுதுர்மதா மற்றும் சித்திரகுப்தரை வணங்கி அர்ச்சனை செய்ய நீண்ட ஆயுள் கிடைக்கும்; கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். இங்குள்ள மாந்திக்கு, சனிக்கிழமை ராகு கால வழிபாடு விசேஷம். அப்போது, பருத்திக்கொட்டையைத் தரையில் பரப்பி, அதன் மீது நல்லெண்ணெய் நிரப்பப்பட்ட பஞ்ச தீபங்களை ஏற்றி வழிபட்டால் திருமணத்தடை, வியாபாரத்தடை, உத்தியோகத்தடை, குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஆகிய அனைத்தும் நீங்கி வளம் பெறுவர்” என்கிறார் கோயிலின் சேனாதிபதி குருக்கள் (தொடர்புக்கு: 75981 72063).

அமைவிடம்: மயிலாடுதுறை-கும்பகோணம் பேருந்து மார்க்கத்தில் மயிலாடுதுறையிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது.

நால்வரும் நவகோடி சித்தர்களும் போற்றிய தலம்

தலம்: திருவாவடுதுறை

ஸ்வாமி: ஸ்ரீமாசிலாமணீஸ்வரர்

அம்பாள்: ஸ்ரீஒப்பிலாமுலையம்மை

திருத்தலச் சிறப்பு: உமையவள் பசு வடிவில் வந்து ஈசனை வழிபட்ட திருத்தலம். சமயக் குரவர் நால்வராலும் பாடல் பெற்ற க்ஷேத்திரம். தமிழகத்திலேயே மிகப் பெரிய நந்தி (சுமார் 14 அடி உயரம்) இங்குதான் அமைந்திருக்கிறது. அகத்தியரின் பிணி தீர்த்த தலம்; குரு துரோகம் புரிந்த அக்னிக்கு, சாபவிமோசனம் கிடைத்த க்ஷேத்திரம்.

திருஞானசம்பந்தர், தம் தந்தையின் வேள்விக்காக இந்தத் தலத்து இறைவனிடமிருந்து 1000 பொற்காசுகள் பெற்றாராம். அதேபோல், சுந்தர மூர்த்தி நாயனார், உடற்பிணி தீர உளமுருகிப் பாடிய திருத்தலமுகூட. இந்தத் தலத்தில் உள்ள அரச மரத்தின் அடியில்தான் 3000 ஆண்டுகள் யோகத்திலிருந்து திருமந்திரம் எனும் ஞானப்பொக்கிஷத்தை அருளினார் திருமூலர். நவகோடி சித்தர்களும் வழிபட்ட தலம் இது.

வழிபாட்டுச் சிறப்பு: “இங்குள்ள ஸ்ரீகன்னி விநாயகரை மனமுருகி வழிபட்டால், சகல காரியங்களிலும் மேன்மை அடையலாம் என்கிறது காசிக்காண்டம். இங்கு அருள்பாலிக்கும் அணைத்தெழுந்த நாயகரை அர்ச்சித்து வழிபட்டால், தம்பதி ஒற்றுமை மேலோங்கும்; இல்லறம் நல்லறமாகும். அதுமட்டுமா? முசுகுந்தருக்குப் புத்திரப்பேறு வழங்கிய தலம் இது. ஆகவே, குழந்தை பாக்கியம் வேண்டுவோர் வழிபட வேண்டிய கோயில் இது” என்கிறார் கோயிலின் ஜெயக்குமார் குருக்கள் (தொடர்புக்கு: 95978 32541).

அமைவிடம்: மயிலாடுதுறை - கும்பகோணம் பேருந்து மார்க்கத்தில், திருவாலங்காட்டிலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவிலுள்ளது திருவாவடுதுறை. திருவாலங்காட்டிலிருந்து ஆட்டோ வசதியுண்டு.

இசையில் மேன்மை பெற இறையருள் வேண்டுமா?

தலம்: திருஆடுதுறை

ஸ்வாமி: ஸ்ரீஆபத்சகாயேசுவரர்

அம்பாள்: ஸ்ரீபவளக்கொடியம்மை

திருத்தலச் சிறப்புகள்: தன்னை வழிபடுவோரின் சகல ஆபத்துகளையும் நீக்குவதால், இந்தத் தலத்தின் இறைவனுக்கு அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் என்று திருப்பெயர். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரி நாதர் ஆகியோரால் பாடல் பெற்ற திருத்தலம். சுக்ரீவன் பூஜித்த இந்தத் தலத்தில், அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சொர்ணபைரவர் அமைந்திருப்பது சிறப்பு. நாரதரால் சாபம் பெற்ற அனுமன், சாப விமோசனம் பெற்ற க்ஷேத்திரம்.

திருச்சி மலைக்கோட்டை தாயுமானவரைப் போன்றே, இந்தத் தலத்தின் இறைவனும்... கர்ப்பிணிப் பெண்ணொருத்திக்கு, அவளின் தாயின் உருவில் வந்து பிரசவம் பார்த்து அருளியதாகச் சொல்கிறது தலபுராணம்.

வழிபாட்டுச் சிறப்பு: “இந்த ஊருக்கு நடராஜபுரம் என்ற திருப்பெயரும் உண்டு. சித்திரை மாதம் 5, 6, 7 ஆகிய நாட்களில் சூரியனின் கதிர்கள் நேரடியாக இறைவன் மீது விழும். அந்த நாள்களில் நடைபெறும் சூரிய பூஜையை தரிசித்து வழிபடும் அன்பர்களுக்கு வேண்டும் வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். அனுமனுக்கு இசை ஞானம் அருளிய தலம் என்பதால், இசைப் பிரியர்கள் அனைவரும் வந்து வழிபடவேண்டிய தலமும்கூட. இங்கு வந்து ஈசனை மனதார வழிபட்டு வேண்டிக்கொண்டால் கர்ப்பிணிகளுக்குச் சுகப்பிரசவம் நடக்கும் என்பது ஐதீகம்” என்று கோயிலின் வழிபாட்டுச் சிறப்புகளைப் பகிர்ந்து கொள்கிறார் நந்தகுமார் குருக்கள் (தொடர்புக்கு: 94434 63119).

அமைவிடம்: மயிலாடுதுறை-கும்பகோணம் பிரதான சாலையில், மயிலாடு துறையிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ளது.

மாங்கல்ய பலம் அருள்வாள் மங்களாம்பிகை!

தலம்: திருமங்கலக்குடி

ஸ்வாமி: ஸ்ரீபிராணநாத ஸ்வாமி

அம்பாள்: ஸ்ரீமங்களாம்பிகை

திருத்தலச் சிறப்புகள்: அப்பர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற தலம். ஒருமுறை, காலவ முனிவரின் கோபத்துக்கும் சாபத்துக்கும் ஆளானார்கள் நவகிரகங்கள். அந்தச் சாபத்தின் பாதிப்பிலிருந்து விமோசனம் பெற, இந்தப் பகுதியிலுள்ள வெள்ளெருக்கு வனத்தில் கடுந்தவம் இருந்து விமோசனம் அடைந்தார்கள். நவகிரகங்கள் தவமிருந்த இடம்தான் சூரியனார் கோயில்.

அரசாங்கத்துக்காக வரிவசூல் செய்த பணத்தைக்கொண்டு இந்தக் கோயிலைக் கட்டியவர், அனல்வாணர் என்பவர். அவரின் செய்கையால் கோபம் கொண்ட மன்னன், அனல்வாணரைச் சிரச்சேதம் செய்யும்படி உத்தரவிட்டான். தண்டனை நிறைவேற்றப்பட்டது. மந்திரியின் மனைவி மங்களாம்பிகையைச் சரணடைந்தாள். அம்பாள் மனமிரங்கி அருள் பாலிக்க, பிராணநாதேஸ்வரர் அனலவாணருக்கு உயிர் கொடுத்தார் என்கிறது தல வரலாறு.

வழிபாட்டுச் சிறப்புகள்: “ஸ்ரீமங்களாம்பிகைக்கு 5 வெள்ளிக்கிழமைகள் அர்ச்சனை செய்து வழிபடுவதால், திருமணத்தடை, களத்திரதோஷம் ஆகியவை நீங்கும்; மாங்கல்யபலம் கூடும். இறைவனுக்குத் தொடர்ந்து 11 அமாவாசை தினங்களில் அபிஷேகம் செய்து, அகத்தியர் தேவாரத்திரட்டு பாராயணம் செய்து வழிபட்டால், பித்ரு தோஷம் நிவர்த்தியாகும். அதேபோல், பிராணநாதருக்கு 11 ஞாயிற்றுக் கிழமைகள்... எருக்கன் இலையில் தயிர் அன்னம் நிவேதனம் செய்து, பிரசாதமாகப் பெற்று சாப்பிடுவதால் நோய் நீங்கி நீண்ட ஆயுள் பெறலாம்’’ என்கிறார் கோயிலின் கார்த்திகேய குருக்கள் (90957 15181)

அமைவிடம்: கல்லணை - பூம்புகார் வழித்தடம்; மயிலாடுதுறையிலிருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில் உள்ளது.

மாமருந்தாகும் அட்சயதிரிதியை பஞ்சாமிர்தம்!

தலம்: திருமாந்துறை

ஸ்வாமி: ஸ்ரீஅட்சயநாதர்

அம்பாள்: ஸ்ரீயோகநாயகி

திருத்தலச் சிறப்புகள்: சோழப் பேரரசி செம்பியன்மாதேவியரால் திருப்பணி செய்யப்பட்ட கோயில் என்று கல்வெட்டுத் தகவல் கூறுகிறது. தட்சனின் சாபத்தால் பொலிவிழந்த சந்திரன், இந்தத் தலத்தின் இறைவனின் அருளைப் பெற்று, மீண்டும் பொலிவடைந்தான் என்கிறது தலபுராணம். இங்கு வந்து வழிபட்டால், உடல் மற்றும் மனப்பிணிகள் நீங்கும் என்பது நம்பிக்கை. இங்கு அருள்பாலிக்கும் அம்மையும் அப்பனும், வற்றாத செல்வத்தையும், குறையில் லாத வாழ்க்கையையும் வரமாகத் தந்தருளும் வரப்பிரசாதிகள் என்கின்றன ஞானநூல்கள். மேலும், இந்தத் திருத்தலம் ரோகிணி நட்சத்திரக்காரர்கள் - விருச்சிக ராசிக்காரர்கள் வழிபடவேண்டிய திருத்தலம் ஆகும்.

வழிபாட்டுச் சிறப்புகள்: “அட்சயநாதரை வணங்கினால், உடல் நோய், மன நோய் நீங்கி, நலம் பெறலாம். தொடர்ந்து 11 திங்கள்கிழமைகள் இந்தத் தலத்துக்கு வந்து தேங்காய், வாழைப்பழம், அச்சுவெல்லம் ஆகியவற்றைச் சமர்ப்பித்து அர்ச்சனை செய்து வழிபட்டால், புத்திரப்பேறு கிடைக்கும். சித்திரை மாதத்தில் வரும் அட்சயதிரிதியை இந்தக் கோயிலில் விசேஷமாக அனுஷ்டிக்கப்படும். அன்று 64 விதமான மூலிகைகளாலும், பலவித பழங்களாலும் பஞ்சாமிர்தம் செய்யப்பட்டு, இறைவனுக்குப் படைக்கப்படுகிறது. இந்தப் பஞ்சாமிர்தம் சகல நோய்களுக்கும் மாமருந்து” என்கிறார் இக்கோயிலின் குருக்கள் ராஜூ சிவம் (தொடர்புக்கு: 96262 78648).

அமைவிடம்: கல்லணை - பூம்புகார் வழித்தடம்; மயிலாடுதுறை - கும்பகோணம் பேரூந்து மார்க்கத்தில், மயிலாடுதுறையிலிருந்து சுமார் 21 கி.மீ. தொலைவில் உள்ளது.

குபேர சம்பத்து அருளும் ஸ்தல விருட்சம்!

தலம்: கஞ்சனூர்

ஸ்வாமி: ஸ்ரீஅக்னீஸ்வரர்

அம்பாள்: ஸ்ரீகற்பகாம்பாள்

திருத்தலச் சிறப்புகள்: ஹரதத்தர் வாழ்ந்த ஊர். சுக்கிரன் அமர்ந்து அருள்பாலிக்கும் இந்தத் தலத்தை திருநாவுக்கரசர், சுந்தரர் மற்றும் சேக்கிழார் ஆகியோர் பாடியுள்ளனர். இறைவன், தர்மசிவன் என்ற அன்பரின் சிவத்தொண்டை உலகுக்குணர்த்தி அவரை ஆட்கொண்ட தலம் இது. சுரைக் காயுடன் தொடர்புடைய திருக்கதை இந்த அன்பருடையது. இன்றைக்கும் இங்கு அன்னாபிஷேகத் திருநாளன்று, சுரைக்காயை இரண்டாக அரிந்து வேகவைத்து, அன்னத்துடன் சேர்த்து ஸ்வாமிக்கு அர்ப்பணிக்கின்றனர்.

வழிபாட்டுச் சிறப்புகள்: “காசி - கங்கையைப் போன்று, இந்தத் தலத்தில் தெற்கிலிருந்து வடக்குநோக்கிப் பாய்கிறது காவிரி. இதில் ஒருமுறை நீராடினால், கங்கையில் 12 ஆண்டுகள் நீராடிய பலன் கிடைக்கும். தலவிருட்சமான பொரச மரத்தை ஒரு மண்டல காலம் தினமும் 11 முறை வலம் வந்து வழிபட்டால், குபேர சம்பத்துகளைப் பெறலாம். இங்குள்ள சுக்கிரனை வழிபட்டால் சுகபோகம், வேலைவாய்ப்பு, தொழில், திருமணம், இலக்கியப் படைப்புகளில் மேன்மை ஆகிய வரங்களை அருள்வார். இங்கு புரட்டாசி சனிக்கிழமைகளிலும், அனுமன் ஜயந்தி அன்றும் அனுமனுக்குச் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது விசேஷம்” என்கிறார், கணேச குருக்கள் (தொடர்புக்கு: 95436 38232).

அமைவிடம்: தஞ்சை மாவட்டம் கல்லணை - பூம்புகார் சாலையில் கும்பகோணத்திலிருந்து கிழக்கில் 18 கி.மீ. தொலைவிலும், மயிலாடு துறையிலிருந்து மேற்கில் 20 கி.மீ. தொலைவிலும் கஞ்சனூர் அமைந்துள்ளது. இங்கிருந்து 4 கி.மீ தூரம் சுற்றளவுக்குள் இருக்கும் மற்ற கோயில்களுக்கும் செல்ல ஆட்டோ வசதியுண்டு.

மு.இராகவன், படங்கள்: பா.பிரசன்னா