Published:Updated:

`கல்யாணத் தடை நீங்க பரிகாரம் என்ன?’

`கல்யாணத் தடை நீங்க பரிகாரம் என்ன?’
பிரீமியம் ஸ்டோரி
`கல்யாணத் தடை நீங்க பரிகாரம் என்ன?’

`கல்யாணத் தடை நீங்க பரிகாரம் என்ன?’

`கல்யாணத் தடை நீங்க பரிகாரம் என்ன?’

`கல்யாணத் தடை நீங்க பரிகாரம் என்ன?’

Published:Updated:
`கல்யாணத் தடை நீங்க பரிகாரம் என்ன?’
பிரீமியம் ஸ்டோரி
`கல்யாணத் தடை நீங்க பரிகாரம் என்ன?’

? எனக்கு 34 வயது. இன்னும் திருமணம் நடைபெறவில்லை. ஜாதகப் படி எனக்கு எப்போது திருமணம் நடைபெறும், ஏதேனும் பரிகாரம் செய்யவேண்டுமா?

- பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகர்


!தங்களின் நட்சத்திரம் பூராடம் 2-ம் பாதம். லக்னத்துக்கு 7-ம் அதிபதி யான குரு 4-ல் இருப்பதாலும் - தன் வீட்டிலேயே இருப்பதாலும் கேந்திராதிபத்திய தோஷம் ஏற்பட்டுள்ளது. குருவுடன் சுக்கிரன், சந்திரன், புதன் ஆகியோரும் சேர்க்கை பெற்றுள்ளனர். சுக ஸ்தானம் எனும் 4-ம் வீட்டில் நான்கு கிரகங்கள் இருப்பது, சந்நியாச யோகத்தைக் குறிப்பிடும். எனவே, திருமணம் நடைபெறுவதில் சிற்சில தடைகள் காணப்படுகின்றன. மேலும் 5-க்கு 5-ம் வீடான 9-ம் வீட்டில் ராகு உள்ளார். 5-ல் செவ்வாய் உச்சம் பெற்றிருந்தாலும், அவர் அசுபக் கோள். மேலும் 5-ம் வீட்டுக்கு 12-ம் வீட்டில் 5-ம் பாவத்துக்கு உரிய குரு உள்ளார். இவையும் திருமணத்தடை ஏற்படுத்த காரணங்களாகின்றன.

`கல்யாணத் தடை நீங்க பரிகாரம் என்ன?’

தங்களின் எதிர்காலத்தைப் பொறுத்தவரை... கர்மாதிபதியான புதன் 4-ம் வீட்டிலிருந்து, 7-ம் பார்வையால் 10-வது வீடும் தன் ஆட்சி வீடுமாகிய மிதுனத்தைப் பார்ப்பதால், நிச்சயம் நல்ல வேலை கிடைக்கும்.

திருமணத்தைப் பொறுத்தவரையிலும்... கேந்திராதிபத்திய தோஷம் இருப்பதால், கல்யாணகாரகரான சுக்கிரனுக்குப் புருஷ சூக்த ஹோமம் மற்றும் பூஜைகள் செய்து, பிராமண சமாராதனையும் செய்ய வேண்டும். அதன் மூலம் அனுகூலம் ஏற்படும். தற்போது ஜன்மச் சனி நடப்பதால், சற்று சிரமமான நிலையே. சூரியனுடன் கேதுவும் உள்ளதால், மனதில் அவ்வப்போது குழப்பம் ஏற்படுகிறது. துர்கையை வழிபடுவது சிறந்தது.

? ஜாதகப்படி, நான் இப்போதுள்ள வேலையில் தொடரலாமா அல்லது வேறு வேலைக்கு முயற்சி செய்யலாமா?

- ரவிசங்கர்

!தங்களின் ஜாதகத்தைச் சந்திர லக்னப்படி கணித்ததில், சந்திரனுக்கு 10-ல் எந்தக் கிரகமும் இல்லை. மேலும், கடக லக்னத்தின் அதிபதி சந்திரன் 4-ல் உள்ளார்.

`கல்யாணத் தடை நீங்க பரிகாரம் என்ன?’

தற்போது நேரமும் காலமும் அனுகூலமாக உள்ளன என்றாலும், வேலை வாய்ப்பைப் பொறுத்தவரை, சற்றுச் சிரமமான சூழ்நிலையே காணப்படுகிறது. எனவே, புதிய வேலை கிடைக்க 10-ம் பாவகாரகரான சூரியனுடன், குரு, சனி ஆகியோரையும் வழிபடுவது நல்லது.

தொடர்ந்து  ஆறு ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியனுக்குச் செம்பருத்தி மலர் சாத்தி, நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்யவும். கோதுமை பாயசம் நைவேத்தியம் செய்து பக்தர்களுக்குப் பிரசாதமாகக் கொடுக்கவும். ஆதித்ய ஹிருதயம் பாராயணம் செய்வதும் நல்ல பலன் தரும்.

? தற்போது எனக்கு என்ன தசை நடக் கிறது, எனக்கு வீடு- மனை வாங்கும் யோகம் உண்டா? மேலும், என் சகோதரனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஏதேனும் பரிகாரம் செய்யவேண்டுமா?

- பி.வி.சுகவனம், பெங்களூர்


!உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் 10-ல் உச்சம் பெற்று காணப்படுகிறார். எனவே, தீர்க்காயுள் உண்டு. தற்போது சுக்கிர தசை 20.1.2022 வரை உள்ளது. நீங்கள் பகவான் கிருஷ்ணரை ஆத்மார்த்தமாக வழிபடுவதுடன், பகவத் கீதையில் ஓரிரு ஸ்லோகங்களைப் பாராயணம் செய்து வரவும். தங்கள் சகோதரரின் ஜாதகம் துலா லக்ன ஜாதகம். லக்னத்துக்கு 7-ம் பாவ அதிபதியான செவ்வாயும், 7-ம் பாவ காரகருமான சுக்கிரனும் 12-ம் வீட்டில் மறைவு பெற்றிருக்கின்றனர். மேலும் அந்த இடத்தில் சுக்கிரன் நீசமடைந்துள்ளார்.

லக்னாதிபதி நீசம் பெற்றிருப்பதும், 7-ம் பாவ அதிபதி 12-ல் மறைந்திருப்பதும் திருமண யோகத்துக்குத் தடைகளாகின்றன. எனினும் கன்னியில் இருக்கும் செவ்வாய் 8-ம் பார்வையால், 7-ம் பாவமும் தன் வீடுமாகிய மேஷத்தைப் பார்ப்பதால், திருமணத்துக்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். சுக்கிரனுக்குப் ப்ரீதியாக சுக்கிர சாந்தி ஹோமத்தையும், செவ்வாயை ப்ரீதி செய்ய முருகனுக்கு உரிய ஹோமம் மற்றும் பூஜைகளைச் செய்வதும் திருமண பாக்கியத்தைத் தரும்.

? என் மகன் விவாகரத்துப் பெற்றவன். ஜாதகப்படி அவனுக்கு மறுமணத் துக்கு வாய்ப்பு உண்டா?

- ஷண்முக சுந்தரம், சென்னை - 600100

!தங்களின் மகன் மகர லக்கினத்தில் பிறந்திருக்கிறார். 7-ம் இடமான கடகத்தில் சுக்கிரன் காணப்படுகிறார். மேலும் லக்கினாதிபதி சனி 8-ல் மறைவு பெற்றிருக்கிறார். குருவும் 6-ல் மறைவு பெற்றிருக்கிறார்.

சுக்கிரன் 7-ல் இருப்பதால், ‘காரகோ பாவநாஸ:’ என்றபடி திருமணம் நடைபெற வாய்ப்பு உண்டு. எனினும், ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற வாழ்க்கைத்துணையே அமையும். அந்தத் திருமண வாழ்க்கை செழிக்க சுக்கிரனுக்குரிய ஹோமம் மற்றும் பூஜைகளின் மூலம் பரிகாரம் செய்துகொள்ளவேண்டும்.

லக்னத்துக்கு 7-ம் அதிபதியான சந்திரன் உச்சம் பெற்று காணப்படுவதும், பத்ரயோகம் எனும் யோகத்தைத் தரக்கூடிய புதனும் சூரியனும் 9-ல் அனுகூலமாக உள்ளதாலும், நிச்சயம் திருமணம் நடைபெறும். முன் சொன்ன பரிகாரங்களைச் செய்வது அவசியம்.

- பதில்கள் தொடரும்...

- வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள்

வாசகர்களே... ஜோதிடம் தொடர்பான கேள்விகளுக்குப் பதில் தருகிறார், வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள். கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: சக்தி ஜோதிடம் கேள்வி-பதில், சக்தி விகடன் 757, அண்ணாசாலை, சென்னை-600 002 Email: sakthi@vikatan.com