Published:Updated:

கேள்வி - பதில் - சரபேஸ்வரரை வழிபடுவது எப்படி?

கேள்வி - பதில் - சரபேஸ்வரரை வழிபடுவது எப்படி?
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி - பதில் - சரபேஸ்வரரை வழிபடுவது எப்படி?

கேள்வி - பதில் - சரபேஸ்வரரை வழிபடுவது எப்படி?

கேள்வி - பதில் - சரபேஸ்வரரை வழிபடுவது எப்படி?

கேள்வி - பதில் - சரபேஸ்வரரை வழிபடுவது எப்படி?

Published:Updated:
கேள்வி - பதில் - சரபேஸ்வரரை வழிபடுவது எப்படி?
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி - பதில் - சரபேஸ்வரரை வழிபடுவது எப்படி?
கேள்வி - பதில் - சரபேஸ்வரரை வழிபடுவது எப்படி?

? சிவபெருமானுக்கு உகந்த ருத்ர மந்திரத்தை வீட்டில் சிடி வழி  கேட்பது சரியல்ல என்கிறார் நண்பர்.  அவர் கூறுவது சரியா?

-ராமகிருஷ்ணன், பெங்களூரு

அந்தக் காலத்தில், அனைவரும் தங்களுடைய வீடுகளை பெரும்பாலும்  ஆலயங்கள் இருக்கும் பகுதிகளிலேயே அமைத்திருப்பார்கள். அனுதினமும் கோயிலுக்கு நேரிலேயே சென்று, இறைவனை தரிசித்தும், கோயில்களில் ஒலிக்கும் இறைநாமாக்களைக் கேட்டும் மகிழ்ந்து, ஆலயத்தின் தெய்விகச் சக்தியை அனுபவித்து வந்தனர். வாழ்க்கை முறையும் அதற்கு வசதியாக இருந்தது.

பிற்காலத்தில், நமது வாழ்க்கை முறை யில் பல மாறுதல்கள் உண்டாயின. வீடுகளிலும் சரி, வெளியே தொழில் சம்பந்தமான விஷயங்களிலும் சரி... நம்மால் நம் முன்னோர் அளவுக்குச் சகலத்தையும் கடைப்பிடிப்பது என்பது சற்றுச் சிரமம்தான்.

கேள்வி - பதில் - சரபேஸ்வரரை வழிபடுவது எப்படி?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ருத்ரம் மட்டுமல்ல, அனைத்து மந்திரங்களையுமே ஆசார்யர்களின் மூலம் பெறுவதே சிறப்பானது. அவர் வழி பெறப்படும் மந்திரத்தின் ஒலிக்கும் சிடி வழி கிடைக்கும் அதிர்வுகளுக்கும் நிச்சயம் வேறுபாடு உண்டு.

`அப்படியானால் சிடி மூலமாக மந்திரம் கேட்கக் கூடாதா’ என்று கேட்டால்... கேட்கலாம் தவறில்லை. ஆனால், அதுவே  முழுமையானது; அது போதும் என்று இருந்துவிடக்கூடாது. ஓர் ஆலயத்துக்குச் சென்று, அங்கு நடைபெறும் உபசாரங்களின்போது, ஓதுவாமூர்த்திகளின் மூலமாக பாடல் களைக் கேட்டு மகிழும் அனுபவம் அலாதியானது; அற்புதமானது.

ஆகவே, சிடி போன்றவற்றின் மூலம் துதிப்பாடல்கள், வேத மந்திரங்களைச் செவிமடுத்து மகிழும் வழக்கம் இருந்தாலும், இயன்றபோதெல்லாம் வேதவித்வான்களின் மூலமாக பாராயணங்கள் நடக்கும் இடத்துக்குச் சென்று இறையனுபூதியை அனுபவித்து வாருங்கள். அது விசேஷமான பலன் களைக் கொடுக்கும்.

? சரபேஸ்வரரை வழிபடுவதற்கான  ஸ்தோத்திரங்கள் ஏதேனும் உண்டா, வழிபாட்டு நியதிகள் என்ன?

-ஆர்.செந்தில்குமார், திருவள்ளூர்

சிவபெருமானின் ஓர் அம்சமாகப் போற்றப்படுகிறார் ஸ்ரீசரபேஸ்வரர். சூலிணி மற்றும் பிரத்யங்கிராதேவி ஆகிய சக்திகளை தன்னுடைய இரு இறக்கைகளாக் கொண்டவர். அவரை வழிபடுவதால், சகலவிதமான தீய சக்திகளும் அழிக்கப்பட்டுவிடும்.

கேள்வி - பதில் - சரபேஸ்வரரை வழிபடுவது எப்படி?

லிங்க புராணம், ஸ்ரீஆகாச பைரவ கல்பம் முதலான ஞானநூல்களிலும்,  பல தந்த்ர நூல்களிலும் ஸ்ரீசரபேஸ்வரர் ஆராதனை குறித்து மிகச் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளன.

மாதப்பிறப்பு, பௌர்ணமி, அமாவாசை மற்றும் ஞாயிற்றுக் கிழமை ஆகிய நாள்களில் அவரை வழிபடுவதால், மிகுந்த பலன்கள் கிடைக்கும் என்றும், அவரையே உபாசனை மூர்த்தியாகக் கொண்டவர்கள் எல்லா காலங் களிலும் வழிபடலாம் என்றும் கூறுகின்றன, ஞானநூல்கள்.

`சங்க்ராந்தௌ விஷுவே சைவ பௌர்ணமாஸ்யாம் விசேஷத:...  ஸர்வதா ஸர்வகாமார்த்தி...' என்று காலத்தை விளக்கியுள்ள நூல்கள் `போக மோக்ஷப்ரதம்...' என்று கூறி, போகத்தையும் மோக்ஷத்தையும் ஸ்ரீசரபேச்வரர் அருளுவார் என்று உறுதியாக கூறுகின்றன.

இந்தத் தெய்வத்தின் ஆற்றலை நாம் பெற்று பலனடையும் விதம், பல மூல மந்திரங்கள் கூறப்பட்டுள்ளன.   இவற்றைத் தகுந்த குருவிடமிருந்து  உபதேசம் பெற்றே உபாசிக்க வேண்டும். எனினும் சரபமூர்த்தியின் அனைவரும் கூறி வழிபடலாம்.

ஸ்ரீசரப சாந்தி ஸ்தோத்ரம் எனும் தொகுப்பில் வரும் ஸ்தோத்திரம் ஒன்றை கீழே அளித்துள்ளேன். பாரா யணம் செய்து அருள் பெறலாம்.

“ருத்ர: சங்கர் ஈச்வர:
    புரஹர: ஸ்தாணு: கபர்தீ சிவ:
வாகீசோ வ்ருஷயத்வஜ:
    ஸ்மரஹரோ பக்தப்ரியஸ்த்ரயம்பக:
பூதேசோ ஜகதீச்வரஸ்ச சரபோ
    ம்ருத்யுஞ்ஜய: ஸ்ரீபதி:
அஸ்மாந் காலகலோ அவதாத் பசுபதி:    
    சம்பு: பினாகீ ஹர:

அல்லது ஓம் சரபேச்வராய நம: என்று கூறியும் வணங்கி வழிபட்டு வரம் பெறலாம்.

? தீபம் ஏற்ற உகந்த எண்ணெய் எது?

- எழில்ராணி வேல்முருகன், திட்டக்குடி

நல்லெண்ணெய் அல்லது தூய பசுவிலிருந்து தருவிக்கப்பட்ட நெய் ஆகிய இரண்டுமே கோயில்களிலும் வீட்டுப் பூஜை அறைகளிலும் தீபம் ஏற்றுவதற்கு உகந்தவையாகக் கூறப்பட்டுள்ளன.

`திலாஃபாபஹரா:’ என்றோரு வாக்கியம் உண்டு. எள் நம் பாபங்களை அகற்றும். `ஆயுர் வை க்ருதம்’ - நல்ல நெய், நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வழிவகுக்கும்.

தீபம் ஏற்றுவது, புற இருளை நீக்கி வெளிச்சம் ஏற்படுத்தவேண்டும் என்பதற்காக மட்டுமல்ல. அதற்கு மின்சார விளக்குகளே போதுமானவை. நாம் ஏற்றும் தீபம் நமது அக இருளையும் அழிக்கவல்லது. சாஸ்திரங்களில் கூறப்பட்ட திரவியங்கள் தீப ஒளியுடன் கலந்து, ஒருவித அதிர்வுகளை ஏற்படுத்தி, நமது மனதையும் அங்கு இருக்கக்கூடிய சுற்றுப்புறச் சூழலையும் நல்ல நிலையில் அமைக்கக்கூடிய ஆற்றல்கொண்டவை.

கேள்வி - பதில் - சரபேஸ்வரரை வழிபடுவது எப்படி?

`க்ருத தீபே தக்ஷிணே ஸ்யாத் தைல தீபஸ்து வாமத:’ என்ற வாக்கியத்தின் மூலம், வலது பாகத்தில் நெய் தீபத்தையும் இடது பக்கத்தில் நல்லெண்ணெய் தீபத்தையும் வைத்து வழிபாடுகள் நடத்தவேண்டும் என்று சாக்த தந்திரங்கள் கட்டளையிடுகின்றன.

குறிப்பிட்ட பரிகாரங்களுக்காகக் குறிப்பிட்ட எண்ணெய் பரிந்துரைக்கப்பட்டால், அந்த நேரத்தில் மட்டும் அவற்றைப் பயன்படுத்தலாம்.

? எங்களுக்குக் கன்னித் தெய்வம் உண்டு. வீட்டில் ஓர் அறைக்குள் வைத்து வழிபடுகிறோம். அப்படியே தொடரலாமா அல்லது வெளியில் தனிக்கோயில் கட்டி வழிபடுவது நல்லதா?

- எஸ்.பிரபாவதி, அகஸ்தீஸ்வரம்

தங்கள் வீட்டில், தனியாக தூய்மையாகப் பராமரிக்கப்படும் அறை எனில், அப்படியே தொடரலாம். அதுவே சிறந்தது. உங்களின் முன்னோர்கள், அந்தத் தெய்வத்துக்குக் கோயில் கட்டி வழிபட நினைத்திருந்தால், அதை அப்போதே செய்திருப்பார்கள்.

முடிந்த அளவு, நாம் நம் முன்னோர்கள் சென்ற பாதையில் செல்வதே சிறந்தது. தாத்பர்யங்களை அறியாமல், வழக்கத்தை மாற்றினால், முழுமையான பலன்கள் கிடைக்காது. சூழலின் காரணமாகத் தவிர்க்க முடியாத நிலை எனில், அந்தச் சக்தியிடமே உத்தரவு பெற்று வேறு இடத்துக்கு மாற்றுவது நலம்.


? எமகண்டத்தில் நல்ல காரியங்களைச் செய்யக் கூடாது என்று சிலரும் செய்யலாம் என்று சிலரும் கூறுகிறார்களே... எது சரி?

- எஸ்.ஆர்.ராமலிங்கம், திருவண்ணாமலை

ராகு காலம் மற்றும் எமகண்ட காலங்களில் நல்ல காரியங்களைச் செய்யக் கூடாது. ஒரு நாளில் 24 மணி நேரத்தில், குறிப்பிட்ட இந்த மூன்று மணி நேரத்தில் சுப காரியங்களைத் தவிர்ப்பது நல்லது.

நாம் எவ்வளவுதான் சாமர்த்தியமாக வண்டியை ஓட்டினாலும், பாதையில் ஏதேனும் தடுப்பு இருந்தால், நம்மால் மேற்கொண்டு வண்டியைச் செலுத்த முடியாது. அதுபோல், காலம் சரியாக இல்லை எனில், அதனால் ஏற்படும் பலன்களும் வேறுபட்டே அமையும். எனவே, ஒன்றரை மணி நேரம் எமகண்டத்திலும், ஒன்றரை மணி நேரம் ராகு காலத்திலும் சுப காரியங்களைத் தவிர்த்து, நல்ல நேரம் பார்த்து செய்தலே சிறந்தது. வழக்கமான வேலைகளுக்கு இவற்றைப் பார்க்கவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் புதிதாக ஏதேனும் தொடங்கும்போது ராகுகாலம், எமகண்டத்தைத் தவிர்க்கவேண்டும்.

- பதில்கள் தொடரும்...

-காளிகாம்பாள் கோயில் சிவஸ்ரீ சண்முகசிவாசார்யர்

வாசகர்களே... ஆன்மிகம் தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தருகிறார், சென்னை `காளிகாம்பாள் கோயில்'  சிவஸ்ரீசண்முக சிவாசார்யர். கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: கேள்வி-பதில், சக்தி விகடன் 757, அண்ணாசாலை, சென்னை-600 002