Published:Updated:

திருவருள் திருவுலா - திருவிளையாடல் திருக்கோயில்கள்!

திருவருள் திருவுலா - திருவிளையாடல் திருக்கோயில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
திருவருள் திருவுலா - திருவிளையாடல் திருக்கோயில்கள்!

மதுரை தரிசனம்

திருவருள் திருவுலா - திருவிளையாடல் திருக்கோயில்கள்!

மதுரை தரிசனம்

Published:Updated:
திருவருள் திருவுலா - திருவிளையாடல் திருக்கோயில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
திருவருள் திருவுலா - திருவிளையாடல் திருக்கோயில்கள்!
திருவருள் திருவுலா - திருவிளையாடல் திருக்கோயில்கள்!

ரித்திரத்தில் பெரும்புகழ்பெற்ற மாமதுரையை சிவராஜதானி என்று போற்றுகின்றன ஞானநூல்கள். தடாதகை பிராட்டியாய் மதுரையை அரசாண்ட மீனாட்சியை மணந்து, மதுரையின் தலைவனாய் ஈசன்

திருவருள் திருவுலா - திருவிளையாடல் திருக்கோயில்கள்!

அருள்பாலித்த கதையைச் சிலாகித்துச் சொல்கின்றன புராணங்கள்.

மட்டுமின்றி அடியார்களுக்கு அருளவும், மதுரையைக் காக்கவும், தமிழுக்கு ஏற்றம் தரவும் சிவம் திருவிளையாடல்கள் பல நிகழ்த்திய பதி இது. அதன்பின்னரும் தொடர்ந்த ஐயனின் அருளாடல்களையும் தலப் புராணங்கள் பல விவரிக்கின்றன. இப்படிச் சிவத் திருவிளையாடல்களும் அற்புதங்களும் நிகழ்ந்த இடங்கள் மதுரையிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியிலும் மிகச் சாந்நித்தியத்துடன் திகழ்கின்றன. அவற்றில் குறிப்பிட்ட சில திருதலங்களின் சிறப்புகளும் தகவல்களும் உங்களுக்காக...

திருவருள் திருவுலா - திருவிளையாடல் திருக்கோயில்கள்!

ஆதிசொக்கநாதர் திருக்கோயில் 

 சுவாமி: ஸ்ரீஆதிசொக்கநாதர்

 அம்பாள்: ஸ்ரீமீனாட்சியம்மன்

திருவருள் திருவுலா - திருவிளையாடல் திருக்கோயில்கள்!

திருத்தலச் சிறப்புகள்: ஒருமுறை இடைக்காட்டுச் சித்தரின் பாடலைச் செவிமடுத்தும், பாண்டிய மன்னன் தன் முகத்தில் எவ்வித உணர்ச்சியையும்  காட்டாமல் பொறாமை மேலோங்க அமர்ந்திருந்தானாம். இதனால் கோபம் கொண்ட சித்தர், இறைவனிடம் சென்று முறையிட்டார். பாண்டியனுக்குச் சித்தரின் மகிமையை எடுத்துரைக்கத் திருவுளம் கொண்ட இறைவனும் இறைவியும், மதுரை திருக்கோயிலை விடுத்து, வடக்குப் புறத்தில் சென்று அமர்ந்தனர். விவரமறிந்த மன்னன், தன் தவற்றை உணர்ந்து சித்தரைத் தொழுதான். இறைவன் அவ்வாறு வந்தமர்ந்த இடம்தான் ஆதி சொக்கநாதர் ஆலயம்; ‘வடதிருஆலவாய்’ என்றும் அழைப்பர்.இங்கு  சித்தருக்குத் தனிச் சந்நிதி உள்ளது. புதன், குபேரன் ஆகியோர் வழிபட்ட கோயில் இது.

திருவருள் திருவுலா - திருவிளையாடல் திருக்கோயில்கள்!

வழிபாட்டுச் சிறப்புகள்:  இங்கு இடைக்காட்டுச் சித்தருக்குப் பூக்கூடார வழிபாடு செய்தால், அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம். புதன்கிழமைகளில் புத ஹோரையில் இந்தத் தலத்தை வழிபடுதல் மிகுந்த சிறப்பு. குபேரன் வழிபட்ட ஆலயம் ஆதலால், இங்கு இறைவனைத் தொழுதுகொண்டால், வறுமை ஒழிந்து செல்வ வளம் சேரும்.

 அமைவிடம்: சிம்மக்கல் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ளது. பெரியார், மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் பேருந்துநிலையங்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

தென்திருவாலவாய் திருக்கோயில்

 சுவாமி: ஸ்ரீதென்திருவாலவாயசுவாமி

 அம்பாள்: ஸ்ரீமீனாட்சியம்மன்

திருவருள் திருவுலா - திருவிளையாடல் திருக்கோயில்கள்!

திருத்தலச் சிறப்புகள்:  இது திருஞானசம்பந்தர், கூன்பாண்டியனுக்குத் திருநீறு பூசி வெப்புநோய் தீர்த்த தலம். மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் உபகோயில்களில் ஒன்றான இந்தத் திருக்கோயில், மதுரைநகரின் பஞ்சபூதத் தலங்களில் நெருப்புத் தலமாகக் கருதப்படுகிறது. இக்கோயிலின் இறைவனை யமன் பூஜித்து அருள்பெற்றான். சண்டிகேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, துர்கை, பிள்ளையார், முருகன், லிங்கோத்பவர் ஆகிய மூர்த்திகளும் இங்கு அருள்பாலிக்கின்றனர். தலவிருட்சம் அரசமரம். இந்த அரசமரத்தின் வேரானது, திருமலைநாயக்கர் மஹால் வரை நீண்டிருப்பதாகக் கூறுகின்றனர். 

திருவருள் திருவுலா - திருவிளையாடல் திருக்கோயில்கள்!

வழிபாட்டுச் சிறப்புகள்: இங்கு வந்து வழிபட்டால் தீராத பிணிகளும் தீரும், யம உபாதைகள் நீங்கும்; ஆயுள் பெருகும். சரீரத்திலிருந்து உயிர் பிரியும் தருணத்தில், இந்தத் தலத்து மூலவரின் பிரசாதமான வில்வ இலை, திருநீறு ஆகியவற்றை நீரில் கலந்து குடிக்கச் செய்தால், அவஸ்தையின்றி ஆன்மா சிவபதம் அடையும். ஜன்ம நட்சத்திரத்தில் இங்குள்ள அரசமரப் பிள்ளையாரை... வயதுக்குத் தக்கபடி 11, 27 மற்றும் 57 முறைகள் வலம் வந்தால் நலம் பெருகும்.

 அமைவிடம்: விளக்குத்தூண் பகுதியில் - தெற்குமாசிவீதியில் வடக்குப் பார்த்து அமைந்துள்ள இந்தக்கோயிலுக்கு, பெரியார் மற்றும் ஆரப்பாளையம் பேருந்துநிலையத்தில் இருந்து அரசு மினிபஸ்கள் இயங்குகின்றன.

காசிவிஸ்வநாதர் திருக்கோயில்

 சுவாமி: ஸ்ரீகாசிவிஸ்வநாதர்

 அம்பாள்: ஸ்ரீகாசிவிசாலாட்சி

திருவருள் திருவுலா - திருவிளையாடல் திருக்கோயில்கள்!

திருத்தலச் சிறப்புகள்:   தெற்கு ஆவணிமூல வீதியில் அமைந்துள்ளது, இக்கோயில்.

இங்குள்ள மாணிக்க மண்டபம் பிரசித்திபெற்றது. மன்னன் வீரபாண்டியன் வேட்டைக்குச் செல்லும்போது மரணம் அடைந்தான். அப்போது அவன் மகன் மிகச் சிறியவன். இதைப் பயன்படுத்தி துரோகிகள் சிலர் அரசப் பொக்கிஷங் களை அபகரித்துச் சென்றனர். முடிசூட்டுவதற்கு மணி மகுடம், அரியணை எதுவும் இல்லாததைக் கண்டு வருந்திய மந்திரிப் பிரதானிகள், சோம சுந்தரக் கடவுளை வணங்கினர். இறைவன், மாணிக்க வியாபாரியாக வந்து, உரிய ஆபரணங்களை அளித்து மன்னன் மகனுக்கு அபிஷேகப் பாண்டியன் என்று பெயரும் சூட்டியருளினார். இந்த லீலை நடந்த இடத்தில் உள்ளது இக்கோயில். மாசிமகம், ஆவணிமூலத் திருவிழா, கோடை உற்சவம் ஆகிய மூன்று திருவிழாக்களிலும் சோமசுந்தரரும் மீனாட்சியம்மையும் இந்த மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர். ஆவணிமூலத் திருவிழாவின்போது, ‘மாணிக்கம் விற்ற லீலை’ இங்குள்ள மண்டபத்தில்தான் நடத்தப்படும். 

திருவருள் திருவுலா - திருவிளையாடல் திருக்கோயில்கள்!

வழிபாட்டுச் சிறப்புகள்:  ஸ்ரீகாசிவிஸ்வநாதரை வழிபட்டால், மன்னன் மகனைப் போல நாமும் இழந்த செல்வங்களை மீண்டும் பெறலாம் என்கிறார்கள் நம்பிக்கையுடன்.

 அமைவிடம்: மாசிவீதி வரை அரசு மினிப் பேருந்துகள் செல்கின்றன. அங்கிருந்து தெற்கு ஆவணிமூல வீதிக்கு நடந்தே சென்றுவிடலாம்.

புட்டுசொக்கநாதர் திருக்கோயில்

 சுவாமி: ஸ்ரீபுட்டுசொக்கநாதசுவாமி

 அம்பாள்: ஸ்ரீமீனாட்சியம்மன்

திருவருள் திருவுலா - திருவிளையாடல் திருக்கோயில்கள்!

திருத்தலச் சிறப்புகள்: வந்திக் கிழவியின் பொருட்டு இறைவன் கூலியாளாக வந்து பிட்க்கு மண் சுமந்த கதையும், மன்னன் இறைவனின் பிரம்பால் அடித்த அடி, சகல உயிர்களின் முதுகிலும் விழுந்த அற்புதத்தையும் நாமறிவோம். இந்தத் திருவிளையாடல் நிகழ்ந்த இடத்தில்தான் புட்டுசொக்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது. ஆவணி மாதப் பூரம் நட்சத்திரத்தில், பிட்டுக்கு மண்சுமந்த லீலை இங்கே திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. தன் உதிரத்தையே நெய்யாக்கி இறைவனுக்கு தீபமேற்றி வழிபட்ட, கலிய நாயனாரும் இக்கோயிலில் அருள்பாலிக்கிறார். வந்திக்கிழவியும் தனிச் சந்நிதி கொண்டிருக்கிறார்.

திருவருள் திருவுலா - திருவிளையாடல் திருக்கோயில்கள்!

வழிபாட்டுச் சிறப்புகள்:  இங்கு வந்து வந்திக் கிழவிக்குத் துளசி கொண்டு அர்ச்சித்து வழிபட்டால், நீண்ட ஆயுள் கிடைக்கும். இங்கு அருளும் இரட்டைக் காலபைரவரை வழிபட்டால், கடன்பிரச்னைகள் தீரும்; வழக்குகள் சாதகமாகும். மணக்கோலத்தில் அருளும் கல்யாணநாதரை மனமுருகி வழிபட்டால் மணவாழ்வு விரைவில் கைகூடும். திருமுறைகள் பாடிய நால்வரை, அவர்களின் நட்சத்திரத் திருநாளில் வழிபட்டால், இசை ஞானம் பெருகும்.

 அமைவிடம்: மதுரை-ஆரப்பாளையம் பேருந்துநிலையத்தை அடுத்த, கிராஸ்ரோடு நிறுத்தத்தின் அருகில், வைகைக் கரையில் அமைந்துள்ளது இந்தத் திருக்கோயில்.

மேலைக்கடை திருக்கோயில்

 சுவாமி: ஸ்ரீகழுவீஸ்வரர்

 அம்பாள்: ஸ்ரீமீனாட்சி

திருவருள் திருவுலா - திருவிளையாடல் திருக்கோயில்கள்!

திருத்தலச் சிறப்புகள்: பாண்டிய மன்னனின் பிணியை திருஞானசம்பந்தர் தீர்த்து அருளிய பிறகு, திருஞானசம்பந்ரை அனல் வாதத்துக்கும் புனல் வாதத்துக்கும் அழைத்தனர், சமணர்கள். இந்தப் போட்டிகளிலும் தோற்றுப்போனால், தங்களைக் கழுவில் ஏற்றலாம் எனவும் வாக்குறுதி அளித்தனர்.

இறையருளால் அனல் வாதம், புனல் வாதம் இரண்டிலும் ஞானக்கொழுந்தாம்  திருஞானசம்பந்தரே வெற்றிபெற்றார். எதிர்தரப்பினரும் தாங்கள் வாக்களித்தபடியே கழுவில் ஏறினார்கள். அப்படி, அவர்கள் ஏறிய கழு வரிசையின் மேலைக்கொடி இந்த இடம். அதாவது, மதுரைக்கு மேற்கில் வைகையின் தென் கரையில் சுமார் 9 கி.மீ. தொலைவிலுள்ள இந்த இடமே தற்போது மேலக்கடை என்று வழங்கப்படுகிறது.

திருவருள் திருவுலா - திருவிளையாடல் திருக்கோயில்கள்!

வழிபாட்டுச் சிறப்புகள்: இப்பகுதியெங்கும் சுற்றியலைந்த சமணர்களின் ஆத்மாக்கள், இந்த இடத்தில் அமைதியடைந்தன என்பது நம்பிக்கை. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், நாகதோஷம் உள்ளவர்கள், இந்தத் தலத்துக்கு வந்து பக்தியோடு இறைவனையும் அம்பாளையும் வழிபட்டால், விரைவில் நலம் பெறலாம் என்பது ஐதீகம்.

 அமைவிடம்: பெரியார்நிலையத்திலிருந்து மேலக்கடை பகுதிக்கு நிறைய பேருந்துகள் செல்கின்றன.

திருஆலவாயநல்லூர் திருக்கோயில்

 சுவாமி: ஸ்ரீதிருஆலவாய சுவாமி

 அம்பாள்: ஸ்ரீமீனாட்சியம்மன்

திருவருள் திருவுலா - திருவிளையாடல் திருக்கோயில்கள்!

திருத்தலச் சிறப்புகள்: முன்னொருகாலத்தில், ஏழுகடல் சூழ்ந்ததால் எல்லையிழந்தது, மதுரை. மதுரையைச் சுற்றி எல்லையைக் காட்ட, சித்த மூர்த்தியாய் மண்ணில் தோன்றிய சிவனார், தன் திருக்கரத்தில் கங்கணமாகத் திகழ்ந்த நாகத்தைத் தரையில் வீசினார். அந்தப் பெரிய நாகம், தனது உடலை வளைத்துக் கட்டி, மதுரையின் எல்லையைக் காட்டியது. அப்போது, அந்தப் பாம்பின் வாயும் வாலும் இணைந்த இடம்தான், திருவாலவாயநல்லூர்; மதுரைக்கு வடமேற்கே சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்தத் திருத்தலத்தில் சுவாமியும் மீனாட்சியம்மையும் ஒரே சந்நிதியில் அருள்கின்றனர். சந்தனம், குங்குமம், திருநீறு, அபிஷேகப்பால் ஆகியவை பிரசாதமாக வழங்கப்படுகின்றன. இன்றும் சித்தர்கள் இங்கே வந்து வழிபடுகின்றனர் என்று நம்பப்படுகிறது. 

திருவருள் திருவுலா - திருவிளையாடல் திருக்கோயில்கள்!

வழிபாட்டுச் சிறப்புகள்: குடும்பப் பிரச்னைகள் நீங்கிட, தொழில்வளம் பெருகிட, இங்குள்ள காலபைரவருக்கு வடைமாலை சாத்தி வழிபடு கிறார்கள் பக்தர்கள். இவருக்குத் தேய்பிறை அஷ்டமி பூஜை விசேஷம். அதேபோல் ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு எலுமிச்சை மாலை அணிவித்து, எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடுவதும் விசேஷம்.

 அமைவிடம்: மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து வாடிப்பாடி செல்லும் 71-ம் நம்பர் பேருந்து இந்த ஊரில் நிற்கும். 

திருப்பாச்சேத்தி திருக்கோயில் 

 சுவாமி: ஸ்ரீதிருநோக்கிய அழகியநாதர்

 அம்பாள்: ஸ்ரீமருநோக்கும் பூங்குழலி

திருவருள் திருவுலா - திருவிளையாடல் திருக்கோயில்கள்!

திருத்தலச் சிறப்புகள்: திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற தலம். மூலவர் சுயம்பு லிங்கமூர்த்தி. லட்சுமி வந்து தவமிருந்து வழிபட்ட தலம். லட்சுமி சமேதராய் பெருமாளும் அருள்பாலிப்பது சிறப்பு. இங்கு, சண்டிகேஸ்வரருக்கான பொறுப்பை பைரவர் தலைமேற்கொண்டுள்ளார். இந்தத் தலத்துப் பைரவர், கஷ்ட நிவாரண பைரவர். இவர் சூரிய கலை, சந்திர கலை என இரண்டு வாகனங்களோடு திகழும இவரது உக்கிரத்தைத் தணிக்க, திருமயம், திருப்பத்தூர், வைரவன்பட்டி உள்ளிட்ட ஐந்து தலங்களில் இருந்து பிடிமண் எடுத்து வந்து இட்டு, பைரவரை மீண்டும் பிரதிஷ்டை செய்துள்ளனராம். இங்கே ஸ்ரீநடராஜர் திருவுருவம் இசைக்கல் திருமேனியாய் வடிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை சமஸ்தான நிர்வாகத்தின்கீழ் மதுராந்தக நாச்சியாரின் பொறுப்பில் இந்தத் திருக்கோயில் உள்ளது.

திருவருள் திருவுலா - திருவிளையாடல் திருக்கோயில்கள்!

வழிபாட்டுச் சிறப்புகள்: பிரதோஷ தினங் களில் மரகத லிங்க வழிபாடு நடைபெறுகிறது. ஆனித் திருமஞ்சனம், கார்த்திகை தேய்பிறை அஷ்டமி பூஜை இங்கே விசேஷம். தொடர்ந்து 9 வாரங்கள் கஷ்ட நிவாரண பைரவரை வணங்கி வந்தால், நினைத்த காரியம் ஈடேறும்.

 அமைவிடம்: திருப்பாச்சேத்தி - படமாத்தூர்  மார்க்கத்தில், நான்கு வழிச்சாலை அருகே அழகியநாயகியம்மன் கோயிலையொட்டி ஒரு வீதி பிரிந்து செல்லும். அவ்வீதி இந்தத் திருக் கோயிலைச் சென்றடையும். 

திருவேடகம் திருக்கோயில்

 சுவாமி: ஸ்ரீஏடகநாதர்

 அம்பாள்: ஸ்ரீஏலவார்குழலி

திருவருள் திருவுலா - திருவிளையாடல் திருக்கோயில்கள்!

திருத்தலச் சிறப்புகள்: பாடல்பெற்ற தலம். திருஞானசம்பந்தருக்கும் சமணர்களுக்கும் இடையே அனல் வாதம், புனல் வாதம் நடைபெற்றன. இவற்றில் புனல் வாதத்தின்போது, சைவ மேன்மையை நிலைநாட்டும்பொருட்டு வைகை நீரில் இடப்பட்ட திருஞானசம்பந்தரின் ஏடுகள், வைகையின் நீர்ப்போக்கினை எதிர்த்து சென்று கரைசேர்ந்தன. அப்படி ஏடுகள் கரைசேர்ந்த இடமே திருஏடகம் ஆகும். காசிக்கு ஒப்பான தலம் என்று ஞானநூல்கள் போற்றுகின்றன.

இந்தத் தலத்தில் பிரம்மன், கருடன், விஷ்ணு ஆகியோர் சிவபெருமானை வழிபட்டு அருள்பெற்றனர் . இங்கு சப்தமாதர்கள் சந்நிதியும் உள்ளது. வராகிக்குத் தேய்பிறை பஞ்சமியிலும், பைரவருக்குத் தேய்பிறை அஷ்டமியிலும் விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. மாதப் பௌர்ணமிகளில் நடைபெறும் ஏகதின உற்சவங்கள், இத்தலத்தின் சிறப்பம்சம். ஆவணிப் பௌர்ணமியில் ‘ஏடேறுதல்’ உற்சவம் மிக விசேஷமாக நடைபெறும். 

திருவருள் திருவுலா - திருவிளையாடல் திருக்கோயில்கள்!

வழிபாட்டுச் சிறப்புகள்: இங்கு வந்து சிவனை வழிபட, பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். இங்குள்ள வராகியை வணங்கி வழிபட்டால், திருமணம், தொழில் ஆகியவற்றில் உள்ள தடைகள் நீங்கும்.

 அமைவிடம்: மதுரைக்கு வடமேற்கில் சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது. பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து திருவேடகத்துக்கு நகரப் பேருந்துகள் உள்ளன.

-முத்துக்குமரன்.மு

படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்