Published:Updated:

`ஆசார்யர்களுக்கு அன்னையாய்...’ - உள்ளம் உருக்கும் ஓவிய அனுபவம்

`ஆசார்யர்களுக்கு அன்னையாய்...’ - உள்ளம் உருக்கும் ஓவிய அனுபவம்
பிரீமியம் ஸ்டோரி
`ஆசார்யர்களுக்கு அன்னையாய்...’ - உள்ளம் உருக்கும் ஓவிய அனுபவம்

`ஆசார்யர்களுக்கு அன்னையாய்...’ - உள்ளம் உருக்கும் ஓவிய அனுபவம்

`ஆசார்யர்களுக்கு அன்னையாய்...’ - உள்ளம் உருக்கும் ஓவிய அனுபவம்

`ஆசார்யர்களுக்கு அன்னையாய்...’ - உள்ளம் உருக்கும் ஓவிய அனுபவம்

Published:Updated:
`ஆசார்யர்களுக்கு அன்னையாய்...’ - உள்ளம் உருக்கும் ஓவிய அனுபவம்
பிரீமியம் ஸ்டோரி
`ஆசார்யர்களுக்கு அன்னையாய்...’ - உள்ளம் உருக்கும் ஓவிய அனுபவம்
`ஆசார்யர்களுக்கு அன்னையாய்...’ - உள்ளம் உருக்கும் ஓவிய அனுபவம்

குருவருள் இருந்தால் திருவருள் ஸித்திக்கும் என்பார்கள். இரண்டும் ஒருங்கே வாய்த்திருக்கின்றன ஸ்ரீரங்கம் மங்களம் மாமிக்கு. அவருக்கு மட்டுமா... அவர் செய்த பெரும்பணியால் நமக்கும் வாய்த்திருக்கிறது அந்தப் பெரும்பாக்கியம்.

ஆம்! ஜகத்குரு ஆதிசங்கரர் தொடங்கி, ஸ்ரீஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் வரை, புகழ் பெற்ற காஞ்சி சங்கர மடத்தின் குருபரம்பரை ஆசார்யர்களின் ஓவியங்களை வரைந்து அளித்திருக்கிறார் மங்களம் மாமி. விரைவில் காஞ்சி மடத்தில் இடம் பெறப் போகும் அந்த ஓவியங்களை தரிசிக்கும்  பக்தர்கள் அனைவருமே பெரும் பாக்கியசாலிகள் அல்லவா?!

எப்படி கிடைத்தது இந்த  கொடுப்பினை?

திருச்சி ஸ்ரீரங்கத்தில் வசிக்கிறார் மங்களம் மாமி. கணவர் சீனிவாசன் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். சிறுவயதிலேயே அம்மாவின் தூண்டுதலால் கோலங்களில் சாமிப்படங்களை விதவிதமாகப் போடுவதில் கைதேர்ந்த மங்கள மாமி, முறைப்படி ஓவியங்கள் வரையக் கற்றுக்கொண்டது, திருமணத்துக்குப் பிறகுதான். 2013-ல் தமிழக அரசு சார்பில், ‘100 மகளிருக்கான தஞ்சை ஓவியப் பயிற்சித் திட்டம்’ அறிவிக்கப்பட, அதன் மூலம் ஓவியப் பயிற்சி கிடைத்தது மங்களம் மாமிக்கு.

அவர் வரைந்திருக்கும் தெய்வ ஓவியங்கள் அத்தனையும் அற்புதம். குறிப்பாக லலிதா சகஸ்ரநாம ஓவியம் மிக அருமை. அதியற்புதமான ஸ்ரீலலிதாசகஸ்ரநாமம் எனும் ஞானப்பொக்கிஷம் உருவான தருணத்தை தத்ரூபமாகக் கண்முன் காட்டும் ஓவியம் அது. மகாபெரியவரின் பக்தரும், முத்ராதிகாரியாக பணிபுரிந்தவரும்,  நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலை நிர்மாணித்தவருமான ரமணி அண்ணா, இந்த ஓவியத்தைப் பார்த்துவிட்டு, ‘சாட்சாத் ஸ்ரீபுரம் சிந்தாமணி கிருகத்துக்கே சென்று தரிசித்த உணர்வை ஏற்படுத்துகிறது’ என்று பாராட்டினாராம்.

`ஆசார்யர்களுக்கு அன்னையாய்...’ - உள்ளம் உருக்கும் ஓவிய அனுபவம்

``அந்த ஓவியமே காஞ்சி சங்கரமடத்தின் குருபரம்பரை ஆசார்யர்களை வரையும் வாய்ப்பைப் பெற்றுத் தந்தது’’ என்கிறார், மங்களம் மாமி.  தொடர்ந்து அவர் சொன்ன விவரங்கள் அப்படியே இங்கே...

“ஒருமுறை ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கோவிந்தபுரம் போயிருந்தபோது, அங்கே குருபரம்பரை படங்கள் முழுவதும் இருந்ததைப் பார்த்துட்டு, ‘இதேபோல காஞ்சிமடத்துலேயும் செய்து வைக்க வேண்டும்’ என்று தனது விருப்பத்தைச் சொல்லியிருக்கிறார். ஏற்கெனவே, என்னுடைய ஓவியங்கள் குறித்த தகவலும் காஞ்சி மடம் தரப்புக்குத் தெரிந்திருக்கும் போலும். என்னைத் தொடர்புகொண்டு கேட்டார்கள். உடனே ஒப்புக்கொண்டேன்.

ஒருமுறை கோவிந்தபுரத்துக்குச் சென்று அங்கிருக்கும் படங்களைப் பார்த்துவிட்டு வரும்படி சொன்னார்கள். நானும், என் வீட்டுக்காரருமா போய் பார்த்துண்டு வந்தோம். அடுத்த ஒரு வாரத்துல ஸ்ரீஆதிசங்கர பகவத்பா தாளோட படத்தை வரைஞ்சு அனுப்பிச்சேன். அதைப் பார்த்ததும் அவங்களுக்கே ரொம்பவும் சந்தோஷமாயிடுத்து. உடனே வேலையைத் தொடங்கிடுங்கன்னு சொன்னாங்க. ஆசீர்வாதமா பெரியவா போட்டிருந்த மாலை, அப்புறம் ஒரு டாலர் இரண்டையும் வெச்சிக் கொடுத்தாங்க. தினமும் ஒரு நிமிஷம் அதைத் தொட்டுக் கும்பிட்டுட்டுத்தான், இந்த வேலைகளை ஆரம்பிப்பேன்.  அந்த அனுகிரஹத்தினாலேதானோ என்னமோ, ஒரு இடத்துலகூட இந்த வேலையில தடங்கலே வரலை.

நான் மட்டுமில்லை, என் டீம்ல 12 பேர் இருக்கோம். இவ்ளோ பெரிய பொறுப்பை ஒத்துகிட்டேனே தவிர, எனக்குப் பெரியவா பத்தியோ குருபரம்பரை பத்தியோ பெருசா எதுவும் தெரியாது. என் கல்யாணப் பத்திரிகையில, ‘பெரியவா துணை’ன்னு போட்ட அளவுக்குத்தான் எனக்குப் பெரியவாவைத் தெரியும். ஆனா பாருங்கோ, நான் வரையறேன்னு தெரிஞ்சதும், யார் யாரோ ஆசை ஆசையா, பெரியவா தொடர்பான புக்ஸ், குருபரம்பரை குறித்த செய்திகள்னு எனக்கு அனுப்ப ஆரம்பிச்சாங்க. அப்பப்போ ‘பெரியவா திருவுருவத்தையெல்லாம் வரையற தகுதி நமக்கு இருக்கா’ன்னு நினைச்சுப்பேன். அவரை பிரார்த்திச்சுண்டே ஒவ்வொரு நாளும் வேலையைத் தொடங்குவேன். பகவானோட கிருபைல எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது’’ என்கிறார் சிலிர்ப்போடு.

`ஆசார்யர்களுக்கு அன்னையாய்...’ - உள்ளம் உருக்கும் ஓவிய அனுபவம்

ஆசார்யர்களை வரைந்த அனுபவம்!

“ஆசார்யாள் ஒவ்வொருத்தரும் பல்வேறு நூற்றாண்டுகளுக்கு முன்னாடி வாழ்ந்தவங்க. வரைய ஆரம்பிக்கிறபோது, அவாளைப் பத்திப் படிக்கிறப்போ, எனக்குள்ளே பக்தியை விட பாசம் அதிகமாச்சுன்னுதான் சொல்வேன். நான் இப்படிச் சொல்றது சரியான்னு தெரியலை, ஆனாலும் சொல்றேன். பெரியவா ஒவ்வொருத்தர் பிம்பத்தையும் வரையறப்போ, அவாளோட அம்மாவாட்டம் என்னை நினைச்சுப்பேன். ஒரு அம்மாவா இருந்து, அவா திருமேனியை வரைஞ்சு அழகு பார்ப்பேன். ஒரு தாயாட்டம் அவாளோட பேசுற மாதிரியெல்லாம் தோணும். முழுசா வரைஞ்சு முடிச்சதும், அவாள்ளாம் என் குழந்தைன்னு தோணும். ஏன் அப்படித் தோணித்துன்னு எனக்குத் தெரியாது. இந்தத் திருப்பணியில ஈடுபட்ட அந்த ஐந்து மாசமும் நான் இருந்த உலகமே வேறன்னுதான் சொல்லணும்’’ என்றவர் தொடர்ந்து பேசினார்.

‘‘ஓவியங்களை வரையத் தொடங்கறப்போ, பெரியவா ஒரு உபாயம் சொன்னா. சமீபமா 600, 700 வருஷங்களுக்குள்ள இருந்த ஆசார்யாள் பத்தின டீடெய்ல்ஸ் ஆவணமா இருக்கிறதால, அதை இந்தப் படங்களுக்குள்ள கொண்டு வந்தா நன்னாயிருக்கும்னு ஒரு யோசனை சொன்னா.

அதாவது, ஒரு ஆசார்யாள் ராமேஸ்வரம் யாத்திரை போய்ட்டு வந்தார், மற்றொருவர், பூரி ஜகந்நாதர் யாத்திரை போய்ட்டு வந்திருக்கார், இன்னொருத்தர் கைலாஷ் யாத்ரா போய் வந்திருக்கார். ஒரு ஆசார்யா திருவானைக்கா அகிலாண்டேஸ்வரிக்குத் தாடங்கம் போட்டுத் தேர் செஞ்சவா. இப்படி டீட்டெய்ல் இருக்கிற ஆசார்யா ஒவ்வொருத்தருக்கும், சைடு வியூல அந்த டீடெயில் வர்ற மாதிரிப் பண்ணினேன்’’ என்றவரிடம்,

`ஆசார்யர்களுக்கு அன்னையாய்...’ - உள்ளம் உருக்கும் ஓவிய அனுபவம்

``ஒட்டு மொத்த ஓவியங்களையும் வரைவதற்கு எவ்வளவு காலம் எடுத்துக் கொண்டீர்கள்’’ என்று கேட்டோம்.

‘‘காஞ்சி மடத்துத் தரப்பிலிருந்து, மே மாசத்துக்குள்ள முடிச்சிட முடியுமான்னு கேட்டப்போ, எனக்கு என்ன தோணித்தோ தெரியலை, பிப்ரவரி 5-க்குள்ள முடிச்சிடலாம்னு சொல்லிட்டேன். என் ஆத்துக்காரரோ,  ‘அது எப்படி முடியும். எவ்ளோ வேலையிருக்கு’ன்னு பயந்தார். ஆனால், நம்மைப் பண்ண வைக்கிறது ஆசார்யாள்தான் இல்லையா... சொன்ன தேதிக்கு ஒருநாள் கூடுதலா எடுத்துகிட்டு, பிப்ரவரி 6 - ம் தேதி முடிச்சுட்டேன்.

70 படங்களும் முடிஞ்சதும் ஒருநாள், எங்க வீட்டுல கணபதிஹோமம், வேதபாராயணங்கள் எல்லாம் பண்ணி, நைவேத்தியம் செய்து, பிறகுதான் கண் திறந்தேன்’’ என்று விவரித்தார்.

பாராட்டும் பரவசமும்!

‘‘படங்களை எல்லாம் மடத்துல சேர்ப்பிச்சதும், அதை அழகா டிஸ்பிளே பண்ணினா. பெரியவா ஸ்ரீஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் வந்து பார்த்துட்டு, ‘ரொம்ப நன்னா வந்திருக்கு’ன்னு சொல்லி, குங்குமச் சிமிழ் ஒண்ணைப் பரிசா கொடுத்தா. புதுப் பெரியவாளும் சந்தோஷப்பட்டு பாராட்டினார். அந்தக் கணத்தில் நான் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே கிடையாது.

என்னோட வாழ்க்கையில அர்த்தம் நிறைஞ்ச நாள்கள்னா, பெரியவா படம் வரைய நான் செலவு பண்ணின இந்த நாள்களைத்தான் சொல்லுவேன். இது, என் ஒருத்தியோட வெற்றி மட்டுமில்ல, என் கணவர், என் குழந்தைகள், என் டீம் எல்லோருக்கும் கிடைச்ச வெற்றி.

ஆனா, இது மனித சாமர்த்தியங்களை எல்லாம் தாண்டின காரியம். தெய்வ அனுகிரகமும், குருவோட அனுகிரகமும் பரிபூர்ணமா கிடைச்சதாலதான் எங்களால் இது சாத்தியமாச்சு’’ என்று பேட்டியை நிறைவு செய்தார் மங்களம் மாமி.

குருவருளோடும் திருவருளோடும் அவரது ஓவியப்பணி தொடர நாமும் வாழ்த்தி விடைபெற்றோம்.

-சைலபதி

காஞ்சி சங்கர மடம் குருபரம்பரை ஆசார்யர்களின் ஓவியங்களை ஒருங்கே தரிசிக்க இங்குள்ள QR Code-ஐ பயன்படுத்தவும்.

`ஆசார்யர்களுக்கு அன்னையாய்...’ - உள்ளம் உருக்கும் ஓவிய அனுபவம்