திருவையாறு மேட்டுத் தெருவில் வீற்றிருக்கிறார் ஸ்ரீஅபீஷ்டவரத மகா கணபதி. சமுத்திர ராஜன் மகள் திருமணத்தை நடத்தி வைத்தவர் என்பதால், இவரை வழிபட்டால், தடைகள் நீங்கி திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை. இந்தக் கோயிலின் முன் புறமுள்ள திருக்குளத்தில் மூழ்கி எழுந்த பின்னர்தான் அப்பர் சுவாமிக்கு ஈசன் திருக்கயிலாயக் காட்சி கொடுத்ததாக தல புராணம் கூறுகிறது.

- கே.என்.மகாலிங்கம், பாண்டிச்சேரி-4

நந்தி இல்லாத சிவாலயம்!

கேரளத்தின் பம்பா நதிக்கரையில் மாணார் கிராமத்தில் திருக்குரட்டி எனும் பகுதியில் உள்ளது ஸ்ரீமகாதேவர் கோயில். இது, ஒரே இரவில் பூத கணங்களால் கட்டி முடிக்கப்பட்டது என்பது ஐதீகம்.

ஒரு முறை தட்ச யாகத்துக்குச் செல்ல, ஈசனிடம் அனுமதி வேண்டினார் பார்வதிதேவி. சிவபெருமான் மறுத்தார். பிறகு, பார்வதிதேவியின் வற்புறுத்தலுக்கிணங்க தட்ச யாகத்துக்குச் செல்ல அவரை அனுமதித்தார். தேவிக்குத் துணையாக நந்தி தேவரையும் உடன் அனுப்பினார். அதன் பிறகு, ரௌத்ரத்துடன் புறப்பட்ட சிவபெருமான், திருக்குரட்டியில் வந்து குடியேறினார். நந்தி, பார்வதி தேவிக்குத் துணையாகப் போனதால், இங்கு நந்தி கிடையாது.

- எஸ்.எஸ். மணி, திருவனந்தபுரம்-40

தோஷத்தை விரட்டிய விநாயகர்!

திருமறைக்காடு என்று தேவாரப் பெயர் பெற்ற தலம் வேதாரண்யம். திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் பதிகம் பாடி, மூடிய கதவைத் திறந்து இறைவனை வழிபட்ட திருத்தலம். இந்த ஆலயத்தின் மேற்குக் கோபுர வாயிலில் ஒற்றைக் காலைத் தூக்கியபடி காட்சியளிக்கிறார் விநாயகர். ராவணனை வதைத்த ராமபிரானை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக் கொண்டது. ஸ்ரீராமர், சேதுவில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து, பூஜித்த பிறகு பிரம்ம ஹத்தி தோஷம் நீங்கியது. ஆனால் வீரஹத்தி தோஷம் தொடர்ந்தது. அந்த தோஷத்தில் இருந்து விடுபட ஸ்ரீராமன் வேதாரண்யம் வந்து சிவலிங்க வழிபாடு செய்தார். அப்போது அவரைப் பின்தொடர்ந்து வந்த வீரஹத்திப் பேயை விநாயகப் பெருமான் காலைத் தூக்கி விரட்டினாராம். வேதாரண்யம் திருத்தலத்துக்கு வந்து இந்த விநாயகரை வழிபட்டால், சகல தோஷங்களும் நீங்கி நலம் பெறலாம்.

- ஆர். பிருந்தா, மதுரை-20

ஓவியம் : பிரேம் டாவின்ஸி