Published:Updated:

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் முதன்முறையாகத் தங்கத் தேரோட்டம்! - பக்தர்கள் மகிழ்ச்சி

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் முதன்முறையாகத் தங்கத் தேரோட்டம்! - பக்தர்கள் மகிழ்ச்சி
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் முதன்முறையாகத் தங்கத் தேரோட்டம்! - பக்தர்கள் மகிழ்ச்சி

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் நன்கொடையாக வழங்கிய தங்கத்தேர் ஓடாமல் ஓராண்டாக இருந்தது. அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி ஏற்பட்டதால் தங்கத்தேர் ஓட வழியும் பிறந்தது.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் முதன்முறையாகத் தங்கத் தேரோட்டம்! - பக்தர்கள் மகிழ்ச்சி

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற கோயில்களில் ஒன்று மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில். அம்மன் சுயம்புவாகவே புற்றுவடிவில் காட்சியளிக்கும் புனிதத்தலம். கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் 41 நாள்கள் விரதம் இருந்து இருமுடிக் கட்டி வருவதால் பெண்களின் சபரிமலை என அழைக்கப்படுகிறது. இந்தக் கோயிலின் கொடிமரம் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தால் வழங்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் எந்தக் கோயிலிலும் தங்கத்தேர் இல்லை என்பதால் பா.ஜ.க.வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முயற்சியால் சுமார் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தங்கத்தேர் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 29-ம் தேதி சித்ரா பவுர்ணமி தினத்தில் தங்கத்தேரை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கோயிலுக்கு அர்ப்பணித்தார்.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் முதன்முறையாகத் தங்கத் தேரோட்டம்! - பக்தர்கள் மகிழ்ச்சி

மேலும் அலாரம் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளுடன் தங்கத்தேர் நிறுத்தும் அறையும் அமைத்துக் கொடுத்தார். கோயிலுக்கு காணிக்கைச் செலுத்தி தங்கத்தேர் இழுக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்துசமய அறநிலையத்துறை சார்பில் கடந்த ஓராண்டாக இதற்கான ஆணை பிறப்பிக்கப்படவில்லை. இதனால் தங்கத்தேர் ஓடாமல் அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தது. இந்தநிலையில் கடந்த 3-ம் தேதி மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக் கொடைவிழா கொடியேற்றுவிழா நடந்தது. இதில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது தளவாய் சுந்தரத்திடம் தங்கத்தேர் ஓடாமல் இருக்கும் விஷயத்தை பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். உடனே அறநிலையத்துறை உயர் அதிகாரியை போனில் பிடித்து வறுத்தெடுத்தார் தளவாய்சுந்தரம். இதையடுத்து அன்றைய தினமே தங்கத்தேர் ஓடுவதற்கு அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்தது. அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் கூட்டணி ஏற்படுத்திக்கொண்டதால் தங்கத்தேர் ஓராண்டுக்குப் பிறகு எந்தச் சிக்கலும் இல்லாமல் ஓடியதில் பக்தர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.