Published:Updated:

வாழையடி வாழையாகச் செழித்து வாழ வைக்கும் மாசி அமாவாசை!

வாழையடி வாழையாகச் செழித்து வாழ வைக்கும் மாசி அமாவாசை!
வாழையடி வாழையாகச் செழித்து வாழ வைக்கும் மாசி அமாவாசை!

மாவாசை நாளில் நீர்நிலைகளில் புனித நீராடி மறைந்த தமது முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம். இதன் மூலம், முன்னோர்களின் ஆசியைப் பெறலாம் என்பது நம்பிக்கை. நாளை (6.3.2019) மாசி அமாவாசை, முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்து நேர்த்திக்கடன் செலுத்த உகந்த நாளாகும்.

மனிதர்கள் தாம் வாழும் காலத்தில், தான தருமங்கள் நிறைய செய்ய வேண்டும். நம்மைப் பெற்ற தாய், தகப்பன் உயிருடன் இருக்கும் காலத்தில், அவர்களின் மனம் நோகாமல் நடந்துகொள்வதே மிகப் பெரிய தர்மம் ஆகும். அவர்கள் இறந்த பிறகு, அவர்களின் ஆத்ம சாந்திக்காகச் செய்வதே தர்ப்பணம்.

இறந்தவர்களுக்குச் செய்யும் தர்ப்பணமானது அவர்களின் பாவத்தை நீக்கும். அமாவாசை நாளில் முன்னோருக்குச் செய்கிற ஆராதனையானது நம்மையும், நம் சந்ததியையும் இனிதாக வாழ வைக்கும் என்கிறது கருடபுராணம். அமாவாசை என்பது முன்னோர்களுக்கான நாள். நம் முன்னோர்களான பித்ருக்களை வழிபடுவதற்கான அற்புதமான நாள்.

மாதந்தோறும் வருகிற அமாவாசையில் நீர் நிலைகளில் நீராடி, தர்ப்பணம் செய்து, முன்னோர்களை நினைத்து ஆராதித்து, வணங்கினால், நாமும் நம் வழி வரும் சந்ததியினரும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் வாழலாம். அமாவாசை தர்ப்பணம் பித்ருக்களின் சாபம் அனைத்தையும் போக்கும் வல்லமை கொண்டது. முன்னோர் வழிபாடு நம் சந்ததியை வாழையடி வாழையாகத் தழைக்கச் செய்யும்.