Published:Updated:

கேள்வி - பதில் - குருவை பகவான் என்று அழைக்கலாமா?

கேள்வி - பதில் - குருவை பகவான் என்று அழைக்கலாமா?
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி - பதில் - குருவை பகவான் என்று அழைக்கலாமா?

கேள்வி - பதில் - குருவை பகவான் என்று அழைக்கலாமா?

கேள்வி - பதில் - குருவை பகவான் என்று அழைக்கலாமா?

கேள்வி - பதில் - குருவை பகவான் என்று அழைக்கலாமா?

Published:Updated:
கேள்வி - பதில் - குருவை பகவான் என்று அழைக்கலாமா?
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி - பதில் - குருவை பகவான் என்று அழைக்கலாமா?
கேள்வி - பதில் - குருவை பகவான் என்று அழைக்கலாமா?

? எல்லா திருக்கோயில்களிலும் ஸ்தல விருட்சம் அமைந்திருப்பதற்கான  தாத்பர்யம் என்ன?

- ரேணுகா, திருவாரூர்


ஆகமங்களில், ஆலயங்கள் எப்படிப் பராமரிக்கப்படவேண்டும் என்ற வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன. கிராமம் அல்லது நகரத்தின் ஒவ்வொரு திசையிலும் - எல்லைகளில் என்ன மரம் இருக்கவேண்டும் என்பதையும் அவற்றின் தன்மைகள் என்ன என்பதையும் ஆகமங்கள் கூறியுள்ளன.

பயணம் செய்யும் ஒருவர், ஒரு பகுதியில் குறிப்பிட்ட மரங்கள் இருப்பதைக் கண்டால், தான் எந்தத் திசையில் இருக்கிறோம் என்பதை அறிந்துகொள்ளும் அனுபவ அறிவு உடையவர் களாக இருந்தனர்! ஒவ்வோர் ஆலயத் திலும் அந்த ஆலயங்களுக்கென்று பிரத்தியேகமாக மரங்கள் நட்டு, போற்றிப் பாதுகாத்து வந்தனர் நம் முன்னோர். இதன் மூலம் பல வகையான மரங்கள் பாதுகாக்கப்பட்டு, அதன் மூலம் சமுதாயமும் பயன்பெற்று வந்தது.

கேள்வி - பதில் - குருவை பகவான் என்று அழைக்கலாமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆலயத்தில் ஏதேனும் குறைகள் ஏற்பட்டால், இறை சாந்நித்தியம் அங்கிருந்து நீங்கக்கூடும் என்பது ஆகமங்களின் அறிவுரை. அந்த வகையில், ஒரு கோயிலில் முறையாக பூஜைகள் நடைபெறாமல் இருந்தால், இறைவனின் அருள் சாந்நித்தியம் கருவறையிலிருந்து வெளிப்பட்டு, ஆலயத்தில் ஏதேனும் ஓரிடத்தில் குறிப்பிட்ட காலம் இருந்த பிறகே, ஆலயத்தைவிட்டு முழுவதுமாக நீங்குமாம்.

அப்படி, இறைவனின் அருள் சாந்நித்தியம் நிலைபெறும்  இடங்களில் தலவிருட்சமும் ஒன்று. மறுபடியும் ஆலயத்தைப் புனரமைக்கும்போது, அந்த விருட்சத்தில் எழுந்தருளியுள்ள இறைச் சாந்நித்தியத்தைக் கலசத்தில் எழுந்தருளச் செய்து, பின்னர் மூலவரிடம் சமர்ப்பிக்கப்படுவது நடைமுறையில் உண்டு. எனவே, ஆகமங்களின்படி அமைக்கப்பட்ட ஆலயங்களில் கண்டிப்பாக நந்தவனம் ஏற்படுத்திப் பராமரித்து வரவேண்டும்.

? இல்லறம், துறவறம் இவற்றில் எது சிறந்தது?

- எஸ்.தேவராஜ், டி.தேவனூர்


இரண்டும் சிறப்பு வாய்ந்தவையே!

 பிரம்மசர்யம், கிரஹஸ்தம், வானபிரஸ்தம், சந்நியாசம் ஆகிய தர்மங்களில் ஒவ்வொன்றையும் நிறைவாகக் கடக்கலாம். அல்லது ஏதேனும் ஒன்றில் முழுமையாக ஈடுபட்டு இறையருளைப் பெறலாம். இறையருள் என்பது, இவ்வுலக வாழ்க்கை நன்றாக அமைந்து, முடிவில் மோட்சம் அடைவதே. எந்தத் தர்மமாக இருந்தாலும் அதை முழுமையாகக் கடைப்பிடிப்பதே முக்கியம்.

? ஸ்வாமிக்கு அர்ச்சனை செய்வதற்கு முன்பு, பக்தர்களிடம் அர்ச்சனைத் தட்டை நீட்டி, தொட்டுக் கும்பிடச் சொல்வது ஏன்?


-வெ.லட்சுமி நாராயணன், வடலூர்


ஒருவருக்கு இந்த இடத்தில், இந்தக் காலத்தில், இப்படி ஒரு வேண்டுதலை முன்னிட்டு, இன்ன பூஜை செய்யப்படுகிறது என்று சொல்லி பூஜை செய்வதே சங்கல்பமாகும். செல்போன் மூலம் நாம் இருக்கும் இடத்தைத் தேவைப்படுபவர்களுக்கு அனுப்புகிறோம் அல்லவா... அதுபோன்றதுதான் இதுவும். இப்படியான சங்கல்பத்தின் பொருட்டே அர்ச்சனைத் தட்டை தொட்டுக் கும்பிடச் சொல்வார்கள்.

ஆலயங்களில் பக்தர்கள் தனித்தனியாக அர்ச்சனை செய்வது காம்ய பூஜை ஆகும். அதாவது, நாம் ஒன்றை வேண்டிக்கொண்டு நம்முடைய பிரார்த்தனையைக் கடவுளிடம் சமர்ப்பிப்பது, காம்ய பூஜை.

தாங்கள் தனியாக ஆலயத்துக்குச் சென்று வழிபட்டாலும் கூட்டத்துடன் சேர்ந்து வழிபட்டாலும், இறைவனின் அருள் அனைத்து ஜீவராசிகளுக்கும் நன்மையே செய்யும். அதன்பொருட்டே ஆலயங்களில் அர்ச்சகர் பெருமக்களால் ஆகம முறைப்படி இன்றளவும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அவர்கள், அனுதினமும் சங்கல்பம் செய்துகொண்டு பூஜைகளைத் தொடங்குவார்கள்.

கோயிலுக்கு வரும் பக்தர்கள் அர்ச்சனை செய்ய விரும்பினால், தட்டிலுள்ள புஷ்பத்தையோ, குங்குமத்தையோ அவர்களின் பெயர், நட்சத்திரத்தைக் கூறித் தொடச் சொல்வது மரபு.

தற்காலத்தில், பயோமெட்ரிக் முறையில் நம் விரல் ரேகையைப் பதித்து, நாம் வந்திருக்கிறோம் என்று பதிவு செய்வதைப் போன்றது, இந்தச் செயல். ஓர் ஆத்ம தொடர்பை ஏற்படுத்தும் அற்புதமான செயல்பாடு இது.

? ஸ்தூல உடம்புடன் இருக்கும் குருமார்களை `பகவான்’ என்று குறிப்பிடலாமா:?


- கூந்தலூர் வி.சந்திரசேகரன், கும்பகோணம்

`பகவான்’ என்ற சொல்லுக்கு `இறைவன்’ என்றே பொருள். ஆறுவிதத் தன்மைகள் கொண்ட பரம்பொருளையே பகவான் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. குரு என்பவர், நம்மை இறைவனை நோக்கி அழைத்துச் செல்லும் சக்தி படைத்தவர் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

சிலர், இறைவனின் அருள்சக்தி நமக்குக் கிடைக்கும்படிச் செய்பவர்கள் என்பதால், அப்படியான குருமார்களை `பகவான்' என்று அழைக்கிறார்கள். இது சரியா, தவறா என்றெல்லாம் பார்க்காமல், பக்தர்கள் தங்களின் ஆரம்பநிலை பக்தியின் காரணமாக அப்படி அழைக்கிறார்கள் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.

படிப்படியாக மனப்பக்குவம் பெற்ற பிறகு, குரு என்பவர் தங்களை இறைவனிடம் அழைத்துச் செல்லக்கூடியவர் என்பதை உணர்ந்துகொண்டு, குருவை முறைப்படி அழைப்பார்கள்.

? கனவில் மகான்கள் தரிசனம் தருவது எதைக் குறிக்கிறது?

-வி.சந்தோஷ், காரைக்குடி


மகான்களிடம் அளவற்ற பக்திகொண்டு, `அருள்திறம் நிறைந்தவர்கள்’ என்ற நம்பிக்கையில் அவர்களை வணங்கினாலோ, அவர்களின் திவ்ய சரிதத்தைக் கேட்டு, அதைப்பற்றியே நினைத்திருந்தாலோ, அவர்களின் ஆசீர்வாதங்கள் இதுபோன்ற கனவுகள் மூலமாக நமக்குக் கிடைக்கும்.

நமக்கு நல்ல விஷயங்கள் நடைபெறுவதற்கு அவர்களுடைய திருவருள் கிடைத்ததையே இதுபோன்ற கனவுகள் குறிக்கும்.

 - பதில்கள் தொடரும்...

 காளிகாம்பாள் கோயில் சிவஸ்ரீ சண்முகசிவாசார்யர்

வாசகர்களே... ஆன்மிகம் தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தருகிறார், சென்னை `காளிகாம்பாள் கோயில்'  சிவஸ்ரீசண்முக சிவாசார்யர்.

கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: கேள்வி-பதில், சக்தி விகடன் 757, அண்ணாசாலை, சென்னை-600 002