திருத்தலங்கள்
ஜோதிடம்
தொடர்கள்
விழாக்கள் / விசேஷங்கள்
Published:Updated:

கஜுராஹோ கலைகளின் கனவு நிலம்

கஜுராஹோ கலைகளின் கனவு நிலம்
பிரீமியம் ஸ்டோரி
News
கஜுராஹோ கலைகளின் கனவு நிலம்

கஜுராஹோ கலைகளின் கனவு நிலம்

ஜுராஹோ என்பது `கர்ஜூர்' எனும் வடமொழிச் சொல்லி லிருந்து பிறந்தது. கர்ஜூர் என்றால் பேரிச்சம்பழம் என்று பொருள்.

த்தியபிரதேச மாநிலம், ஜான்சி நகருக்கு அருகில், சுமார் 20 சதுர கி.மீ பரப்பளவில், சிற்ப பூமியாகத் திகழும் கஜுராஹோவில் 85 கோயில்கள் இருந்தனவாம். காலவெள்ளத்தில் சிதைந்தவை போக, இன்று எஞ்சியிருப்பவை 25 கோயில்களே.

கஜுராஹோ கலைகளின் கனவு நிலம்

ஜுராகோவின் ஒட்டுமொத்தப் பகுதியும் எட்டு வாயில்கள் கொண்ட மதிற்சுவரால் சூழப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாயிலிலும் இரு சிற்பப் பேரீச்ச மரங்கள் அலங்கரிக்கின்றன.

ங்குள்ள கோயில்கள், பஞ்சதாயனம் எனப்படும் கட்டுமான பாணியில் ஆனவை. மையக் கருவறைக்கு இருபுறங்களிலும் நான்கு துணைக் கருவறைகளைக் கொண்ட அமைப்பே `பஞ்ச தாயனம்' எனப்படும்.

கஜுராஹோ கலைகளின் கனவு நிலம்

ஞ்சதாயனக் கோயில்களில் லட்சுமணர் கோயிலும் ஒன்று. இந்தக் கோயிலின் உள்ளே, மூலவராக நான்கு கரங்களும் மூன்று முகங்களும் கொண்டு அருள்கிறார், வைகுண்ட விஷ்ணு.

ங்கிருக்கும் மாதங்கேஸ்வரர் ஆலயத்தின் உள்ளே 8 அடி உயர பிரமாண்ட லிங்கத் திருமேனியராக அருள்பாலிக்கிறார், ஈசன்.

கஜுராஹோ கலைகளின் கனவு நிலம்

விஸ்வநாதர் ஆலயத்துக்கு எதிரில் அமர்ந்து தரிசனம் கொடுக்கிறார் பிரமாண்டமான  நந்திகேஸ்வரர். 2.2 மீட்டர் நீளமும், 1.8 மீட்டர் உயரமும் கொண்ட இந்த நந்தி, சிற்பப் பொக்கிஷமே!

ங்குள்ள சித்ரகுப்தர் கோயில் வித்தியாசமான கட்டுமானத்துடன் திகழ்கிறது. எண்கோணக் குவிமாடம் கொண்ட மகாமண்டபத்தைக் கொண்டது இந்தக் கோயில். இங்குள்ள பிரம்மா - சரஸ்வதி சிற்பம் மிகவும் புகழ்பெற்றது.

- சைலபதி, படங்கள்: பெ.ராகேஷ்