Published:Updated:

நாரதர் உலா - அகமகிழச் செய்யுமா அத்திவரதர் தரிசனம்?

நாரதர் உலா - அகமகிழச் செய்யுமா அத்திவரதர் தரிசனம்?
பிரீமியம் ஸ்டோரி
நாரதர் உலா - அகமகிழச் செய்யுமா அத்திவரதர் தரிசனம்?

நாரதர் உலா - அகமகிழச் செய்யுமா அத்திவரதர் தரிசனம்?

நாரதர் உலா - அகமகிழச் செய்யுமா அத்திவரதர் தரிசனம்?

நாரதர் உலா - அகமகிழச் செய்யுமா அத்திவரதர் தரிசனம்?

Published:Updated:
நாரதர் உலா - அகமகிழச் செய்யுமா அத்திவரதர் தரிசனம்?
பிரீமியம் ஸ்டோரி
நாரதர் உலா - அகமகிழச் செய்யுமா அத்திவரதர் தரிசனம்?

நாரதர் வரும்போதே, ``காஞ்சி தரிசனத்துக்குத் தயாராகிவிட்டீரா'' என்று கேட்டபடியே நுழைந்தார்.

``அத்திவரதர் வைபவத்தை மனதில் வைத்துக் கேட்கிறீரா... நாங்கள்  எப்போதோ தயாராகிவிட்டோம். அதுசரி, நீர் காஞ்சிக்குப் போயிருந்தீரா.  விழா வைபவ ஏற்பாடுகள் எல்லாம் எப்படி?''

‘`விரிவாகப் பகிர்கிறேன். முன்னதாக, அந்த வைபவத்தின் சிறப்பைச் சொல்கிறேன் கேளும்...'' என்றபடியே பேசத் தொடங்கினார் நாரதர்.

நாரதர் உலா - அகமகிழச் செய்யுமா அத்திவரதர் தரிசனம்?

``காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலின் ஆதிமூலவரான அத்தி வரதர் மூர்த்தம், பிரம்மா நடத்திய யாகத்தின்போது பின்னமானதாம். பின்னர், பெருமாளின் உத்தரவின்படி அந்த மூர்த்தத்தை ஒரு வெள்ளிப் பேழையில் வைத்து, கோயிலின் தீர்த்தக்குளத்துக்குள் வைத்துவிட்டார்கள். நாற்பது வருடங்களுக்கு ஒருமுறை அத்திவரதரை வெளியில் எடுத்து, பக்தர்களின் தரிசனத்துக்கு வைப்பார்கள். அதன்படி கடந்த 1979-ம் வருடம் அத்திவரதர் எல்லோருக்கும் தரிசனம் தந்தார். 40 வருடங்கள் கழித்து வரும் ஜூலை 1 முதல் அத்தி வரதர் தரிசன வைபவம் தொடங்குகிறது'' என்ற நாரதரிடம், ``ஏற்பாடுகள் எல்லாம் சர்ச்சைகள் இல்லாமல் சிறப்பாக நடைபெறுகின்றனவா'' என்று கேட்டோம்.

``சர்ச்சைகள் இல்லை என்று சொல்லமுடியாது.

1979-ல் விழா நடந்தபோது,  போக்குவரத்து - சாலைவசதி குறைபாடுகள் காரணமாக விபத்துகள் அதிகம் நிகழ்ந்ததாகச் சொல்கிறார்கள் பெரியவர்கள் சிலர். இந்த முறை அதற்கு இடம்கொடுக்காமல், மிகுந்த கவனத்துடன் முன்னேற்பாடுகளைச் செய்யவேண்டும் என்று அறிவுறுத்து கிறார்கள் அவர்கள்.

மட்டுமன்றி, அவ்வப்போது   சம்பிரதாயம் சார்ந்து திருக்கோயிலில் இருபிரிவினருக்கு இடையே நிகழும் பிரச்னைகள் இந்த வைபவத்தில் எழக் கூடாது என்றும் தெரிவிக்கிறார்கள், பக்தர்கள்'' என்ற நாரதர், விழா ஏற்பாடுகளைக் குறித்து விவரித்தார்.

‘`அத்திவரதர் தரிசன விழாவுக்காக மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒரு குழு அமைத்திருக்கிறார்கள். அந்தக் குழுவில் இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம், கோயில் நிர்வாகம், காவல்துறை எனப் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாரதர் உலா - அகமகிழச் செய்யுமா அத்திவரதர் தரிசனம்?

ஆனால், மாவட்ட ஆட்சியரும் காவல்துறைக் கண்காணிப்பாளரும் என்னதான் சிறப்பாகப் பணிகளைச் செய்தாலும், அவர்களால் அதில் முழுக் கவனம் செலுத்த முடியுமா என்பது சந்தேகமே என்கிறார்கள் உள்ளூர்க்காரர்கள். காரணம், ஏற்கெனவே குடிநீர், போக்குவரத்து என்று பல பிரச்னைகள் தலைவிரித்தாடு கின்றன. போதாக்குறைக்கு விபத்து, மணல்கடத்தல், வழிப்பறி போன்றவற்றைத் தடுப்பதிலும் காவல்துறைக்கு நெருக்கடி இருக்கிறதாம். இவற்றைக் கவனிப்பதற்கே மாவட்ட நிர்வாகத்துக்கும் காவல்துறைக்கும் நேரம் சரியாக இருக்கும். ஆகவே, அத்திவரதர் தரிசனத்துக்காகச் சிறப்பு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை நியமிக்கவேண்டும் என்று காஞ்சிபுரம் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.''

``அதுவும் சரிதானே..?''

``ஏற்கெனவே காஞ்சிபுரத்தில் பணிபுரிந்து அனுபவம் மிக்க - காஞ்சியின் பிரச்னைகள் குறித்து நன்கு அறிந்தவர் களைச் சிறப்பு அதிகாரிகளாக நியமித்தால்,  நன்றாக இருக்கும் என்கிறார்கள் பக்தர்கள். இதன் மூலம் பிரச்னை களை முன்னதாகக் கணித்து தேவையான ஏற்பாடுகளைச் செய்யவும், விழாவைப் பயன்படுத்தி குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கவும் ஏதுவாக இருக்கும் என்பது அவர்களது கருத்து''

‘`விழாவுக்கு வரும் பக்தர்களுக்கான கழிப்பிட வசதிகள், தங்கும் இடங்கள், குடிநீர் ஏற்பாடுகள் எல்லாம் எப்படி?''

‘`காஞ்சிபுரம் பகுதியிலுள்ள பெரும்பாலான விடுதிகள் புரோக்கர்களால் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டனவாம். எனவே, வெளியூர்களிலிருந்து வருவோர் தங்குவதற்கான சிறப்பு ஏற்பாடுகளை அரசு தரப்பில் செய்துகொடுத்தால் நன்றாக இருக்கும் என்று பக்தர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

அதேபோல் சிறப்பு ரயில், பேருந்துகளையும் இயக்கவேண்டும் என்று ஆன்மிக ஆர்வலர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக, அரசுப் பேருந்துகளை மட்டுமே இயக்கவேண்டும் என்பது அவர்களது கோரிக்கை’’

நாரதர் உலா - அகமகிழச் செய்யுமா அத்திவரதர் தரிசனம்?

‘`ஏன், தனியார் பேருந்துகளையும்  இயக்கினால், இன்னும் வசதியாக இருக்குமே?''

‘`எனக்கும் அப்படித்தான் தோன்றியது.  ஆனால் இதுகுறித்து விசாரித்தால், கட்டண அதிகரிப்பு, பார்க்கிங் பிரச்னை ஆகியவற்றோடு, கட்டுப்படுத்த முடியாதபடி போக்குவரத்து நெரிசலும் உண்டாகும் என்கிறார்கள்.''

``சரிதான்... இந்தக் கோணத்தையும் உரிய அதிகாரிகள் கவனத்தில்கொண்டு செயல்பட வேண்டும்'' என்றோம் நாம்.

``மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால், அதிக அளவில் கண்காணிப்புக் கேமராக்களை வைக்கவேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். அதேபோல், தண்ணீர் வசதியைப் பொறுத்தவரை, தர்மபுரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின்படி அரக்கோணத்துக்கு வரும் தண்ணீரைக் காஞ்சிபுரத்துக்குக் கொண்டுவர ஏற்பாடு செய்யப்படுவதாகத் தகவல். ஆனால், அதுவும் போதுமானதாக இருக்குமா என்பது சந்தேகம்தான் என்கிறார்கள், உள்ளூர் மக்கள்''  என்ற நாரதரிடம்,

‘`அதுசரி... விழா நடைபெறவுள்ள இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பலரும் வசூல் வேட்டையில் இறங்குவார்களே... அதுபற்றி ஏதும் விசாரித்தீரா’’ என்று நம் சந்தேகத்தைக் கேட்டோம்.

‘`மாவட்ட ஆட்சியர் பொன்னையா, அத்திவரதர் தரிசன விழா வைபவத்துக்காக தனியாக எவரும் வசூல் செய்யக்கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறார். ஆனால், கோயிலிலேயே சிலர் சிறப்பு தரிசனம் என்ற பெயரில் ஆயிரக் கணக்கில் பணம் வசூலிப்பதாகவும் பக்தர்கள் தரப்பில் புகார் எழுந்துள்ளது.

இதைத் தடுக்கவேண்டுமானால், சிறப்பு தரிசனம், வி.ஐ.பி. தரிசனம் ஆகியவை மாவட்ட நிர்வாகத்தின் கண்காணிப்பில் இயங்கவேண்டும் என்ற கோரிக்கையும் பொது மக்கள் தரப்பில் வலுத்து வருகிறது'' என்ற நாரதர், தொடர்ந்து  ``அபூர்வமான இந்த விழா வைபவம், எந்தப் பிரச்னையும் இல்லாமல் மிக அற்புதமாக நடக்க அந்தப் பெருமாள் அருள்புரிவார்'' என்றபடியே,  தமக்கு வந்த செல்போன் அழைப்புக்குப் பதில் சொல்லத் தயாரானார்!

- உலா தொடரும்..

ஹரே ராம்!

காந்திஜி ஒருமுறை, `அம்கி' எனும் ஊரில் தங்கியிருந்தார். அப்போது ஆட்டுப்பால் கிடைக்காத தால், காந்திஜி தேங்காய்ப் பால் குடிக்க நேர்ந்தது.

நாரதர் உலா - அகமகிழச் செய்யுமா அத்திவரதர் தரிசனம்?

அதனால் அவருக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. நோயின் கடுமை தாங்காது ஒரு கட்டத்தில் மயங்கி விழுந்துவிட்டார் காந்திஜி.

அதனால் பதறிப்போன மதுபென், ``டாக்டர் சுசீலாவை உடனே அழைத்து வாருங்கள்'' என்று பரபரத்தார். அரை மயக்கத்தில் இருந்த காந்திஜி, ``வேண்டாம்! அதற்கு பதில், `ராமா ராமா...' என்று சொல்லுங்கள் போதும். ராமனே சிறந்த மருத்துவன். என் ஒருவனுக்காக டாக்டர் சுசீலா இங்கு வந்துவிட்டால், அவரை நம்பிக் காத்திருக்கும் நோயாளிகள் ரொம்பவே அவதிப்படுவார்கள்'' என்றாராம்!

அவர் சொன்னபடியே `ஹரே ராம்' என்று அங்கிருந்த எல்லோரும் தொடர்ந்து ஜபித்தனர். காந்திஜியும் குணம் அடைந்தார்.

- தேனி எஸ். மாரியப்பன்