ஜோதிடம்
தொடர்கள்
Published:Updated:

மழை வேண்டி மஹா யாகம்...

மழை வேண்டி மஹா யாகம்...
பிரீமியம் ஸ்டோரி
News
மழை வேண்டி மஹா யாகம்...

மழை வேண்டி மஹா யாகம்...

முருகப்பெருமான் வள்ளிமலையில் வள்ளிப்பிராட்டியை மணந்தபின், திருத்தணிகை நோக்கிச் செல்லும் வழியில் முதன்முதலில் வந்து தங்கிய மலை ஞானமலை. சித்தர்களும் பக்தர்களும் வந்து வழிபடும் இந்தத் திருத்தலத்தில் முருகப்பெருமான் ‘ஞான பண்டித ஸ்வாமி’யாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார். நான்கு கரங்களுடன் ‘பிரம்மசாஸ்தா’ கோலத்தில் எழுந்தருளி முருகன் அருளும் இந்தத் தலத்தின் சிறப்புகள் அநேகம். இத்தகைய சிறப்புகளை உடைய ஞானமலையில் கடந்த ஆண்டு சீரும் சிறப்புமாகக் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் முதல் ஆண்டு நிறைவு விழாவினைக் கொண்டாட ஞானாச்ரமம் அறக்கட்டளை வெகுவிமர்சையாக ஏற்பாடு செய்துள்ளது.

மழை வேண்டி மஹா யாகம்...

20.6.19 அன்று மாலை 4 மணிக்கு ஞானசித்தி கணபதி திருக்கோயிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாட்டோடு நிகழ்வு தொடங்குகிறது. அன்று மாலை 6  மணிக்கு, ஞானச்ரமம் திருமாளிகையில் ‘குறமகள் தழுவிய குமரன்’, ‘அருணகிரிநாதர்’ ஆகிய உற்சவமூர்த்திகளுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளன. இசைக் கலைஞர்களின் திருப்புகழ் இசைவழிபாடும் அத்தருணத்தில் நடைபெற உள்ளது.

மறுநாள் 21.6.19 அன்று காலை 5 மணி முதல் சிறப்பு ஆராதனைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலசஸ்தாபனம் செய்து வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க ஸம்வத்ஸ்ராபிஷேக ஹோமம் நடைபெற உள்ளது. மழை வேண்டி, விசேஷ வருண ஜபமும், பர்ஜன்ய சாந்தி ஹோமமும், வருண சாந்தி ஹோமமும் ஸ்ரீகாங்கேயமூர்த்தி பிரார்த்தனையும் நடைபெற உள்ளன.

மழை வேண்டி மஹா யாகம்...

மழை வேண்டி ஸ்ரீதண்டபாணி சுவாமிகள் அருளிய மழைப்பதிகமும் பாராயணம் செய்யப்படும். நிகழ்வுகளில் கலந்துகொண்டு தவத்திரு திருவடிக்குடில் சுவாமிகள் ஆசியுரை வழங்கவிருக்கிறார். உலக நன்மைக்காக நடைபெறும் இந்த வைபவங்களில் பக்தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானின் நல்லருள் பெற ஞானாச்ரமம் அறக்கட்டளையினர் அழைப்பு விடுத்துள்ளனர். முருகா சரணம்!

- சைலபதி

எப்படிச் செல்வது ?

சென்னை வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் காவேரிப்பாக்கத்திலிருந்து சோளிங்கர் செல்லும் வழியில் மங்கலம் என்ற ஊருக்கு அருகில் கோவிந்தச்சேரி என்னும் கிராமத்தில் இந்த ஆலயம் உள்ளது.

தொடர்பு : 73391 16334 / 94426 71847