ஜோதிடம்
தொடர்கள்
Published:Updated:

சிலிர்க்கும் தரிசனம்!

சிலிர்க்கும் தரிசனம்!
பிரீமியம் ஸ்டோரி
News
சிலிர்க்கும் தரிசனம்!

சிலிர்க்கும் தரிசனம்!

சிலிர்க்கும் தரிசனம்!

மான் சத்தம் கேட்டபிறகு...

வ்வோர் ஆண்டும் மான் சத்தம் கேட்டபின்தான் ஐயனாருக்கு வழிபாடுகளைத் தொடங்கும் ஓர் அதிசயக் கோயில், குரங்கணி அருகே கொட்டக்குடி கிராமத்தில் உள்ளது. போடியிலிருந்து குரங்கணி செல்லும் சாலையில் அமைந்துள்ளது கொட்டக்குடி. இங்குள்ள கொம்புதூக்கி ஐயனார் கோயிலுக்குத் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர்.

இங்கே, சித்திரை மாத முதல் வியாழக்கிழமையன்று மலைவாழ் கிராம மக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து திருவிழா கொண்டாடுகிறார்கள். அப்போது, மான் சத்தம் கேட்ட பிறகே வழிபாட்டைத் தொடங்கவேண்டும் என்பது, மரபாக உள்ளது.

சிலிர்க்கும் தரிசனம்!

ஆதிகோரக்கநாதர் அருளால்...

மிழகம் முழுவதும் சுற்றி, பல அற்புதங்களைப் புரிந்து, பல இடங்களில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டவர் கோரக்கநாதர். இவர் பிரதிஷ்டை செய்த ஆலயம் ஒன்று திருப்பூவனத்துக்கு அருகில் உள்ளது. அங்கு உறையும் ஈசன் ஆதிகோரக்கநாதர் என்று அழைக்கப்படுகிறார். இவரை வழிபட்டால், நோய்கள் நீங்கி ஆரோக்கியம் உண்டாகிறது என்கிறார்கள்.

இந்த ஆலயத்தின் மற்றுமொரு சிறப்பு, இங்கு காவல் தெய்வமாக அமர்ந்திருக்கும் பட்டாணி ராவுத்தர்! கோரக்கநாதரின் மகிமையை அறியாது அவரை எதிர்த்து வந்த பட்டாணி ராவுத்தர், பின்னர் கோரக்கரின்  அடியவராகி அவருக்குச் சேவை செய்து தன் வாழ்வைக் கழித்தார். இந்த ஆலயத்தில் பட்டாணி ராவுத்தரையும், சப்தமங்கையரையும் வணங்கிப் பின், ஆதிகோரக்க நாதரையும் வழிபட்டால், சகல தோஷங்களும் நீங்கி நல்வாழ்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சிலிர்க்கும் தரிசனம்!

கல்லும் கலையான ரகசியம்!

மிழகத்தின் முதல் குடைவரைக் கோயில் என்னும் புகழ்பெற்றது மண்டகப்பட்டு மும்மூர்த்திகள் ஆலயம். கி.பி. ஆறாம் நூற்றாண்டில், அதுவரை இருந்த கட்டடக் கலை மரபை மாற்றி பாறைகளைக் குடைந்து கோயில் செய்யும் புதிய முறை ஒன்றினை உருவாக்கினான் பல்லவ மன்னன் மகேந்திரவர்மன்.

இந்த ஆலயத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று தெய்வங்களுக்கும் தனித்தனிக் கருவறை காணப்படுகின்றன. ஆனாலும் கருவறையில் தெய்வத் திருமேனிகள் எதுவும் தற்போது இல்லை. இந்தக் கோயிலில் காணப்படும் துவார பாலகர்கள் சிற்பங்கள் கண்ணைக் கவரும் விதத்தில் அமைந்துள்ளன.

மண்டகப்பட்டிலிருந்து 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது தளவானூர் சத்ரு மல்லேஸ்வரர் ஆலயம். மகேந்திரவர்மன், சமண சமயத்திலிருந்து மாறி சைவ சமயத்தைத் தழுவியதைக் குறிப்பிடும் வகையில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. காஞ்சிபுரம் மற்றும் மகாபலிபுரத்தில் காணப்படும் கலைப் பொக்கிஷங் களுக்கு முன்னோடிகளாகத் திகழும் இவ்விரு குடைவரைக் கோயில்களும் அனைவரும் கண்டு மகிழத்தக்கன!

சிலிர்க்கும் தரிசனம்!

கௌசிக பாலசுப்பிரமணியர் !

வர் பெயர் முகம்மது கௌஸ். புதுச்சேரியைச் சேர்ந்த இந்த அன்பர், எட்டு வயதிலேயே முருகன் மீது பக்தி ஏற்பட்டு, முருகக் கடவுளின் திருமேனி ஒன்றை வாங்கி வைத்து வழிபட ஆரம்பித்தார். தன் வாழ்வில் முருகக் கடவுளுக்குக் கோயில் கட்டுவதையே லட்சியமாகக் கொண்டு வாழ்ந்தார். அவர் எழுப்பிய, ‘கௌசிக பாலசுப்பிரமணியர் திருக்கோயில்’ இன்னும் அவர் பெயர் சொல்லிப் புதுவையில் பொலிவுடன் திகழ்கிறது.

சிலிர்க்கும் தரிசனம்!

- சைலபதி