அன்பே வடிவான சிவபெருமான், தன் அடியார்களைக் காக்கவும் அதர்மத்தை ஒழிக்கவும் எட்டுவிதமான வீரச் செயல்களை எட்டுத் தலங்களில் புரிந்துள்ளார். அவை அட்டவீரட்டத் தலங்கள் என்று போற்றப்படுகின்றன.

அவற்றில், திரிபுரம் எரித்த விரிசடைப் பெருமான் திரபுராந்தகராக அருளும் தலம் திருவதிகை. இங்குதான் சூலை நோயைக் குணப்படுத்தி மருள்நீக்கியாரை ஈசன் ஆட்கொண்டார். மருள்நீக்கியாரே திருநாவுக்கரசராக மீண்டெழுந்து, பல்லவ மாமன்னர் மகேந்திரவர்மரைச் சைவ சமயத்துக்குத் திரும்பச் செய்தார். இதனால், திருவதிகை தலத்தின்மீது மகேந்திரவர்மன் பெரும்பக்தி கொண்டிருந்தார்.

தொண்டை மண்டலத்தைவிட்டு வெகு தொலைவில் இருந்தது திருவதிகை. அதனால், அத்தலத்தின் இறைவனை அடிக்கடி தரிசிக்க வசதியாக, தன் ஆட்சி எல்லைக்குட்பட்ட பகுதியிலேயே ஓர் அழகிய திருத்தலத்தை அமைத்து, ‘வீரட்டேஸ்வரா்’ எனும் திருநாமத்துடன் ஈசனை எழுந்தருளச் செய்து மகேந்திரவர்மன் வழிபட்டான். அதுவே, தற்போது தாம்பரத்துக்கு அருகில் கீழ் படப்பையில் அருள்பாலிக்கும் ஸ்ரீசாந்தநாயகி சமேத ஸ்ரீவீரட்டேஸ்வரா் திருக்கோயிலாகும்.

தாருகாட்சகன், கமலாட்சகன், வித்யுன்மாலி என்ற மூன்று அசுரர்களையும் ஈசன் அழித்து ஆட்கொண்ட தலம் திருவதிகை. உண்மையில் ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று குற்றங்களையும் ஈசன் அழிப்பான் என்பதே இந்தப் புராணம் சொல்லும் தத்துவம். அவ்வகையில், வடதிருவதிகை என்று கொண்டாடப்படும் கீழ் படைப்பை வீரட்டேஸ்வரா் ஆலயத்துக்கு வந்து வழிபடும் அன்பர்கள், மும்மலங்களும் நீங்கி வாழ்வில் வளம் பெறுவார்கள் என்று கூறுகிறார்கள். மேலும், இங்கு வந்து வழிபட்டால் வயிறு சம்பந்தப்பட்ட வியாதிகள், நரம்பு சம்பந்தமான கோளாறுகள், மன அழுத்த நோய் போன்றவை அகலும். திங்கள் கிழமை களில் இங்கு வந்து நெய் தீபம் ஏற்றிவைத்து வழிபட்டால், நோய்கள் நீங்கி நிவாரணம் கிடைக்கும் என்கிறார்கள்.

அரசு வேலை கிடைக்க இத்தலத்தின் ஈசனை வழிபட்டுப் பலன் பெறுகிறார்கள், பக்தர்கள். திருமணத்தடை நீங்கவும் சந்தான பிராப்தி ஏற்படவும் அன்னை சாந்தநாயகியை வழிபடுகின்றனர்.

நந்திக்கலம்பக நாயகன் நந்திவா்மன். இந்த மன்னன், தான் அடைந்த பெருவெற்றிகளின் காரணமாக வீரட்டேஸ்வரப் பெருமானுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு, பல திருப்பணிகளைச் செய்து மகிழ்ந்துள்ளான். மேலும் அவன், போர்க்களம் செல்லும்போதும் வெற்றி வாகைசூடித் திரும்பும்போதும் தன் படைவீரர்களின் போர்க்கருவிகளை இந்த ஆலயத்தில் வைத்து வழிபாடு செய்யும் வழக்கத்தைக் கொண்டிருந்தான் என்று தலவரலாறு கூறுகிறது.

வரலாற்றில் மறக்கமுடியாத பல போர்கள் நிகழ்ந்த மணிமங்கலம் இத்தலத்திலிருந்து சுமார் 7 கி.மீ. தூரத்தில் உள்ளது. போர் நடைபெற்ற காலங்களில் படப்பை எனும் இவ்வூர், படை வீரர்கள் தங்கும் பாடி வீடாக இருந்துள்ளது. இங்கு கிடைத்த கல்வெட்டுகளில் இத்தலம் ‘தழுவக்கொழுந்த நல்லூா்’ என்று வழங்கப்பட்டதையும் ஈசன் ‘திருவேகம்பமுடைய நாயனார்’ என்று வழங்கப்பட்டதையும் அறிய முடிகிறது.

தொண்டை மண்டல நிர்வாகத்தின் கீழுள்ள படப்பை என்ற இந்த ஊர் இரண்டாயிரம் வேலி பற்றுக்கு உட்பட்டது என்றும் இத்திருக்கோயில் ஈசனுக்கு இந்த பகுதி நிலங்கள் ‘திருநாமத்துக்காணி’ என்ற பெயரில் வழங்கப்பட்டன என்றும் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இந்த நிலங்களின் மூலம் கிடைத்த வருவாய், இறைவனுக்குத் திருமஞ்சனம் செய்யவும் அமுது படைக்கவும் செலவிடப்பட்டதை அறிய முடிகிறது.

மகாமண்டபம், அர்த்த மண்டபம், அந்தராளம், கருவறை என்ற அமைப்பில் சகல ஆகம விதிகளின்படி அற்புதமாய் அமைக்கப்பட்டிருக்கிறது இந்த ஆலயம். கிழக்கு நோக்கிய கருவறையில் லிங்கத் திருமேனிக்குப் பின்புறமாக சோமாஸ்கந்தர் திருவடிவம் புடைப்புச் சிற்பமாக உள்ளது.

சதுர வடிவான ஆவுடையார் மீது மிகப்பிரமாண்டமான லிங்க பாணத்துடன் ஈசன் திருவருள் புரிகின்றார். மகா மண்டபத்தின் பெரிய நான்கு தூண்களிலும் விதானத்திலும் காணப்படும் எழிலார்ந்த சிற்பங்கள், கண்ணுக்கு விருந்தாக உள்ளன. பிரமாண்ட நாயகனுக்கு பிரமாண்ட லிங்கமூர்த்தம் மிகப் பொருத்தம்தான்!

இத்தலத்தின் அம்பிகை ஸ்ரீசாந்தநாயகி எனும் திருநாமத்துடன் ஈசனுக்கு இடப்புறமாகத் தனிச் சந்நிதியில் அருள்பாலிக்கிறாள். திருநாமத்துக்கு ஏற்ப சாந்த சொரூபினியாகத் திகழ்கிறாள், இந்த அம்பிகை. அக்காலச் சிற்பக் கலைஞா்களின் கலைத்திறனுக்கு மிகச் சிறந்த உதாரணம் அம்பிகையின் விக்கிரகம்! கேட்டதையெல்லாம் கொடுக்கும் கருணை நாயகி இவள் என்கிறார்கள் பக்தர்கள்.

வெளிப்பிராகார வலத்தில் கன்னிமூலை கணபதி, காளத்திநாதா், வள்ளி தேவசேனா சமேத முருகர், சண்டிகேஸ்வரா் ஆகியோரின் சந்நிதிகள் அமைந்துள்ளன.

தேவகோட்டத்தில் நர்த்தன கணபதி, தட்சணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, விஷ்ணுதுர்கை ஆகியோர் அருள்கின்றனர். பைரவர், நவகிரகங்கள், நால்வர் மற்றும் சூரிய சந்திரர்களுக்கும் சந்நிதிகள் அமைந்துள்ளன. இத்தலத்தின் தல விருட்சம் வில்வம்.

1,500 ஆண்டுகளைக் கடந்த இந்த ஆலயம் கடந்த பத்து ஆண்டுகளாகச் சிதிலமடைந்து கிடந்தது. தற்போது, ஊர் மக்களால் சீரமைக்கப்பட்டுவருகிறது. பல்லவர்களும், சோழர்களும், சம்புவரையர்களும் கொண்டாடிய இந்த ஆலயம் சீக்கிரமே பொலிவு பெறவேண்டும். இங்கே அரசாளும் வீரட்டேஸ்வரர், சகல ஜனங்களையும் ஆசீர்வதிக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம். அதற்குத் தங்களாலான உதவிகளைச் செய்ய வேண்டும் என்று வேண்டுகிறோம்.

ஆலயங்களை மீட்டெடுக்கச் செய்யப்படும் பொருளுதவி ‘கைவல்ய முக்தியை’ அளிக்கும் என்று ஆன்மிகப் பெரியோர்கள் கூறுவார்கள்.

பற்றுகளை ஒழித்து, பாசத்திலிருந்து விடுபட்டு, கர்மபந்தமின்றி விடுதலை பெறும் ஞான நிலையே கைவல்ய முக்தி. அதுவே ‘ஈசத்துவம்’ என்று சித்த உலகம் போற்றுகிறது. பரமனின் ஆலயத்துக்கு உதவுங்கள்; பரவச முக்தியைப் பெறுங்கள்.

- மு.ஹரி காமராஜ், படம்: பெ.ராகேஷ்

பக்தர்கள் கவனத்துக்கு...

ஸ்வாமி :  ஸ்ரீவீரட்டேஸ்வரர்

அம்பாள் : ஸ்ரீசாந்தநாயகி

பிரார்த்தனைச் சிறப்பு: வயிறு சம்பந்தப்பட்ட வியாதிகள் குணமாகும். நரம்பு சம்பந்தமான கோளாறு, மன அழுத்த நோய் போன்றவையும் அகலும். அரசு வேலை கிடைக்க, திருமணத் தடை நீங்க, சந்தான பிராப்தி ஏற்பட இங்கு வந்து வழிபடுகின்றனர்.

எப்படிச் செல்வது? : தாம்பரம் - காஞ்சிபுரம் சாலையில், படப்பைக்கு முன்பாக வரும் கீழ்ப்படப்பை எனும் பகுதியில் உள்ளது.

வங்கிக் கணக்கு விவரம் :
A/c.Name: ASSSSVT KAINGERYA SABHA
A/c.No: 188501000011430
Bank Name: Indian Overseas Bank
Branch: Padappai
IFSC No: IOBA0001885

தொடர்புக்கு:  கார்த்திகேயன் 94441 49453