ஜோதிடம்
தொடர்கள்
Published:Updated:

திருவருள் திருவுலா: மங்கையரின் மனக்குறை போக்கும்... “சப்த மங்கையர்” தலங்கள்

திருவருள் திருவுலா: மங்கையரின் மனக்குறை போக்கும்... “சப்த மங்கையர்” தலங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
திருவருள் திருவுலா: மங்கையரின் மனக்குறை போக்கும்... “சப்த மங்கையர்” தலங்கள்

திருவருள் திருவுலா: மங்கையரின் மனக்குறை போக்கும்... “சப்த மங்கையர்” தலங்கள்

சன் பிரபஞ்ச ரூபமானவன். அயனும் மாலும் முயன்றும் அடிமுடி அறியமுடியாத அற்புதன். ஒருமுறை, அம்பிகைக்கு ஈசனின் சர்வேஸ்வர தரிசனத்தைக் காணும் ஆவல் ஏற்பட்டது.

திருவருள் திருவுலா: மங்கையரின் மனக்குறை போக்கும்... “சப்த மங்கையர்” தலங்கள்

சிரசில் கங்கை சூடிய தரிசனம், சந்திரமௌலி தரிசனம், நெற்றிக்கண் தரிசனம், கழுத்தில் நாகாபரணம் சூடிய தரிசனம், உடுக்கை ஏந்திய தரிசனம், திரிசூலம் தரித்த தரிசனம், பற்றியவரின் பற்றறுக்கும் சிவபாத தரிசனம் ஆகிய ஏழும் ஒருங்கே கூடியதே சர்வேஸ்வர தரிசனம். 

அந்த அற்புத தரிசனத்தைக் காணமுடிய வில்லையே என்று அம்பிகை வாடினாள். அவள் வாட்டம் கண்ட சப்தமாதர்களான பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, மஹேந்திரி, சாமுண்டி ஆகியோர் அன்னையை நெருங்கி ஆறுதல்படுத்தினர். மேலும், பூலோகத்தில் தாங்கள் வழிபட்ட சுயம்புமூர்த்தி தலங்களின் சிறப்பை எடுத்துச்சொல்லி, அம்பிகையை அழைத்துச் சென்று அந்தத் தலங்களில் வழிபட்டனர். அதன் பலனாக ஒவ்வொரு சப்த மங்கை தலத்திலும் ஒரு சிவதரிசனமாகக் கைகூடி, நிறைவில் பார்வதிதேவிக்கு சர்வேஸ்வர தரிசனம் பரிபூரணமாகக் கிட்டியது.

திருவருள் திருவுலா: மங்கையரின் மனக்குறை போக்கும்... “சப்த மங்கையர்” தலங்கள்

ஆண்டுதோறும் பங்குனி மாதம் சித்திரை நட்சத்திர நாளன்று, அன்னை ஈசனுடன் சப்த மங்கைத் தலங்களில் கண்ணாடிப் பல்லக்கில் எழுந்தருள்கிறாள். சப்த மங்கையர்க்குக் காட்சித் தந்தருளும் இந்த நிகழ்வு  `சப்த ஸ்தானப் பெருவிழா' என்று அழைக்கப்படுகிறது. ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஆகிய கிழமைகளிலும் பரணி, அசுவினி, ரோகிணி, பூரம், சுவாதி, அனுஷம், ரேவதி ஆகிய நட்சத்திர தினங்களிலும் இந்தத் தலங்களுக்குச் சென்று வழிபட்டால், மிக உன்னதமான பலன்களை அடையலாம். 

தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டத்தில் அமைந்திருக்கும் ஏழு தலங்களையும் தரிசிப்போம்.

இழந்த பதவி அருளும் சக்கர மங்கை

இறைவன் :  ஸ்ரீசக்கரவாகேஸ்வரர்

அம்பாள்:  ஸ்ரீதேவநாயகி

திருத்தலச் சிறப்புகள் :

மது, கைடபர் எனும் அரக்கர் களால் பெரும் துன்பத்துக்கு ஆளான தேவர்கள், அம்பிகையைச் சரணடைந்தனர். அவர்களைக் காத்தருளியதால், இந்தத் தலத்து அம்பிகை ``தேவநாயகி' என்று பெயர் பெற்றாள்.

திருவருள் திருவுலா: மங்கையரின் மனக்குறை போக்கும்... “சப்த மங்கையர்” தலங்கள்

``அசுரர்களான மது, கைடபரை வதைக்க ஆயுதம் வேண்டும்'' என்று வேண்டிய மகாவிஷ்ணுவுக்கு, சிவபெருமான் சக்ராயுதம் கொடுத்த தலம் இது. ஆகவே, `சக்கராப்பள்ளி' என்றழைக்கப்படுகிறது. சப்த மங்கையரில் பிராமி வழிபட்ட இத்தலத்தில்தான் பிரம்மன் சாபம் நீங்கப்பெற்றார் என்கிறது புராண வரலாறு.

வழிபாட்டுச் சிறப்புகள் : வாகன தோஷம் நீங்குவதற்குரிய தலம் இது. புதிய வாகனம் வாங்கும் அன்பர்கள், அதனை இந்த ஆலயத்துக்கு எடுத்து வந்து சிறப்பு வழிபாடு செய்கிறார்கள். வாகனத்தின் ஆவணங்களைப் பூஜையில் வைத்து வணங்கிச் செல்வதும் உண்டு. இதனால், அந்த வாகனத்தில் பயணிக்கும்போது எவ்வித விபத்துகளும் நேராதபடி அம்மையும் அப்பனும் காத்து அருள் செய்வார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திருவருள் திருவுலா: மங்கையரின் மனக்குறை போக்கும்... “சப்த மங்கையர்” தலங்கள்

இந்தத் தலத்து அம்பாளை வழிபட்டு, இழந்த பதவியை மீண்டும் பெற்றனராம் தேவர்கள்.எனவே, இத்தலத்தில் அர்ச்சனை செய்து வணங்கினால் இழந்த பதவி, வேலை ஆகியவை மீண்டும் கிடைக்கும். அத்துடன், இல்லற வாழ்வு மிக மகிழ்ச்சியாக அமையும் என்பது ஐதிகம்.

எப்படிச் செல்வது :  கும்பகோணம் -  தஞ்சாவூர்  பேருந்து மார்க்கத்தில், கும்பகோணத்திலிருந்து 20 கி.மீ தொலைவில்  சக்கராப்பள்ளி உள்ளது.

பிரச்னைகள் நீக்கும் ஹரி மங்கை

இறைவன் : ஸ்ரீஹரிமுத்தீஸ்வரர்

அம்பாள்: ஸ்ரீஞானாம்பிகை

திருத்தலச் சிறப்புகள் :

ஹரியும் சிவனும் சேர்ந்து சகல ஜீவன்களுக்கும் குறிப்பாக பெண் குலத்துக்குச் சாந்தமயமான, முக்திபூர்வமான வாழ்வை அளிக்கும் தலம் இது.சர்வேஸ்வரனின் சிரசில் கங்கை உறைந்திருக்க, சிவகங்கை தரிசனத்தை அம்பிகை பெற்ற தலம்.விஷ்ணு வழிபட்ட இக்கோயிலில், அன்னப்பறவை வாகனத்தில் 9 திருக்கரங்களுடன் ஸ்ரீஆயுர்தேவி அம்பாள் அருள்பாலிப்பது கூடுதல் சிறப்பு.

திருவருள் திருவுலா: மங்கையரின் மனக்குறை போக்கும்... “சப்த மங்கையர்” தலங்கள்

வழிபாட்டுச் சிறப்புகள் : சப்தத்தைச் செவிமடுக்கும் செவிச்செல்வமும் ஒருவகை ஐஸ்வர்யமே. இதற்கென அருளும் சக்தி தலங்களில் ஹரிமங்கையும் ஒன்று. பேசும் சக்தியை இழந்தவர் களும் காது கேளாதவர்களும் சப்தமி திதி நாள்களில் இங்கு வந்து, அடிப் பிரதட்சணம் செய்து, தாமரை மலர்களால் இங்குள்ள ஈசனை அர்ச்சித்து நலம் பெறலாம். தசமி நாளன்று ஸ்ரீஆயுர்தேவிக்கு 1008 தீபங்கள் ஏற்றிவைத்து, அவளின் சந்நிதிக்கு எதிரிலுள்ள பந்தலில் கொண்டு வரும் காய்கறி மற்றும் பழங்களைத்  தோரணமாகக் கட்டித் தொங்கவிடுகிறார்கள் பக்தர்கள். மறுநாள் அவற்றைச் சமையலில் கலந்து, அனைவருக்கும் அன்னதானம் செய்கிறார்கள்.  இந்தப் பிரசாதத்தை உண்பதால், சகல பிரச்னைகளும் தீரும் என்பது நம்பிக்கை. மேலும் ஸ்ரீஆயுர்தேவிக்கு மஞ்சள் நிறப் பூக்கள், எலுமிச்சைப் பழமாலை, மஞ்சள் நிற புடவை ஆகியவற்றை அணிவித்து வழிபட்டால், எண்ணிய காரியங்கள் கைகூடும்.

திருவருள் திருவுலா: மங்கையரின் மனக்குறை போக்கும்... “சப்த மங்கையர்” தலங்கள்

எப்படிச் செல்வது : கும்பகோணம் - தஞ்சாவூர் பேருந்து மார்க்கத்தில், அய்யம்பேட்டை ரயில் நிலையம் அருகில் உள்ளது. செருமாக்கநல்லூர் வழியாக ஆட்டோ மற்றும் காரில் செல்லலாம்.

சத்ரு பயம் நீக்கும் சூல மங்கை

இறைவன்: ஸ்ரீகிருத்திவாகேஸ்வரர்

அம்பாள்: ஸ்ரீஅலங்காரவல்லி

திருத்தலச் சிறப்புகள்: அப்பர் அருளிய க்ஷேத்திரக்கோவை திருத்தாண்டகத்தில் பாடல் பெற்ற தலம் இது. சப்தமாதர்களில் கௌமாரி பூஜித்த கோயில்.

திருவருள் திருவுலா: மங்கையரின் மனக்குறை போக்கும்... “சப்த மங்கையர்” தலங்கள்

திருவிழாக் காலங்களிலும் தீர்த்தவாரியிலும் தாமே முதன்மையானவராக விளங்கும் வகையில் வரம் பெற்றாராம், அஸ்திர தேவர். சூலத் தேவர் இத்தலத்து இறைவனை வழிபட்டு, சுய உருவம் பெற்றார். அதனால், இத்தலம்  சூலமங்கை என்று அழைக்கப்படுகிறது.

ஈசன், தேவர்களுக்குக் கஜசம்ஹார மூர்த்தியாகக் காட்சியளித்த தலம் இது.

வழிபாட்டுச் சிறப்புகள் :  அஸ்திரதேவரால் வழிபாடு செய்யப்பட்ட இந்தத் தலத்தில், தை மாத அமாவாசை தினத்தில் - சூல விரதத்தன்று,  முறைப்படி விரதம் இருந்து இறை வனை வழிபடுவதால் சகல பிரச்னைகளிலிருந்தும் விடுதலை கிடைக்கும்; சத்ரு பயம் நீங்கும் என்பது ஐதீகம்.

திருவருள் திருவுலா: மங்கையரின் மனக்குறை போக்கும்... “சப்த மங்கையர்” தலங்கள்

மேலும், இந்தத் தலத்துக்கு வந்து,  அம்மையப்பனை வழிபடுவதோடு, திருக்கோயிலை மெழுகிட்டு கோலம் இடுதல், உழவாரத் திருப்பணிகள் செய்தல், திருமுறை பாடுதல், அன்னம் பாலித்தல், தான தர்மங்கள் செய்தல், நித்திய பூஜைகள் தடையின்றி நடைபெற உதவுதல் போன்றவற்றைச் செய்வதால், நீண்ட நெடுங்காலம் பெருந்தவம் செய்த பாக்கியமும் ஒப்பற்ற யாகங்கள் செய்த பலனும் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.

எப்படிச் செல்வது : கும்பகோணம் - தஞ்சாவூர் பேருந்து மார்க்கத்தில், அய்யம்பேட்டை பைபாஸ் சாலையிலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது, சூலமங்கை.

மோட்சம் அருளும் நந்தி மங்கை

இறைவன் : ஸ்ரீஜம்புநாத ஸ்வாமி

அம்பாள்: ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி

திருத்தலச் சிறப்புகள் :

வைஷ்ணவி வழிபட்ட தலம். மேலும் ஆதிசங்கரர், கௌதமர் மற்றும் அநாவத்யநாத சர்மா போன்ற அருளாளர்கள் இங்கு வழிபட்டு அருள்பெற்றுள்ளார்கள்.நின்ற கோலத்தில் இரட்டை விநாயகர்கள் அருள்பாலிப்பது, இத்தலத்தின் சிறப்பு. நந்திதேவர் திருவையாறு பஞ்சநதீஸ்வரரிடம் பஞ்சாட்சர உபதேசம் பெற்று, இத்தலத்து ஈசனை அடைந்து ஸித்தியடைந்தார் என்கின்றன புராணங்கள்.

திருவருள் திருவுலா: மங்கையரின் மனக்குறை போக்கும்... “சப்த மங்கையர்” தலங்கள்

சப்தஸ்தான பெருவிழா அன்று காலையில் சக்கராப்பள்ளி ஈஸ்வரன் மீதும், மாலையில் இத்தலத்து ஈசன் மீதும் சூரியக்கிரணங்கள் விழுந்து வழிபடுவது அரிய வைபவம். ஒரு காலத்தில் பஞ்சநதிகள் பாயும் பகுதியாகத் திகழ்ந்ததாம் இவ்வூர். நெல் செழித்து விளைந்ததால், `நெல்சேரி' என்ற பெயருடன் திகழ்ந்த இவ்வூர், தற்போது `நல்லிச்சேரி' எனப்படுகிறது. கோயிலுக்கு நேர் எதிரில் மயானம் இருப்பதால் இப்பதியில் வாழ்ந்தாலும் இறந்தா லும் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதிகம்.

 வழிபாட்டுச் சிறப்புகள்:  ரிஷப ராசிக்காரர்கள் மற்றும் ரோகிணி நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய தலம் இது. ஸ்வாமியும் அம்பாளும் மணக் கோலத்தில் அருளும் தலம் ஆதலால், இங்கு வந்து வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கும்; குழந்தை பாக்கியம் கிடைக்கும்  என்பது நம்பிக்கை. அதேபோல், அம்பாளை மனமுருகி வழிபட்டால், மனக்குறைகள் நீங்கி மகிழ்ச்சியான வாழ்க்கை அமையுமாம்.

திருவருள் திருவுலா: மங்கையரின் மனக்குறை போக்கும்... “சப்த மங்கையர்” தலங்கள்

எப்படிச்  செல்வது :  கும்பகோணம் -  தஞ்சாவூர் பேருந்து மார்க்கத்தில், பசுபதி கோயிலிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது.

மாங்கல்ய பலம் அருளும் பசு மங்கை

இறைவன் :  ஸ்ரீபசுபதீஸ்வர சுவாமி

அம்பாள்:  ஸ்ரீபால்வளநாயகி 

திருத்தலச் சிறப்புகள் :  மிக அற்புதமாகக் கோசாலை அமைத்து, கோ பூஜை செய்து வந்தார் கௌதம மகரிஷி. இந்த நிலையில், ஒரு பசு மட்டும் தினமும் குறைவாகவே பால் கறந்ததாம்.

திருவருள் திருவுலா: மங்கையரின் மனக்குறை போக்கும்... “சப்த மங்கையர்” தலங்கள்

அந்தப் பசுவைப் பின்தொடர்ந்து சென்று பார்த்தபோது, அது பாம்புப் புற்றுக்குப் பால் வார்த்துக்கொண்டிருந்தது. அந்தப் புற்றில் இருந்த சிவலிங்கத்தில் சிவபெருமான் காட்சி கொடுத்தார். இப்படி, பசு வந்து வழிபட்டதால் இத்தலத்து ஈசன் ஸ்ரீபசுபதீஸ்வரர் என்றழைக்கப்படுகிறார்.

இக்கோயிலில் ஸ்ரீஉச்சிஷ்ட கணபதி மணக் கோலத்தில் அருள்பாலிப்பது சிறப்பு. யானை புகா வண்ணம் அமைக்கப்பட்டுள்ள மாடக்கோயிலான இத்தலத்து ஈசனை, சப்த மங்கையரில் ஒருத்தியான வராகிதேவி வழிபட்டுள்ளாள்.

வழிபாட்டுச் சிறப்புகள்: கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குரிய பரிகாரத் தலம் இது. திருமணக் கோலத்தில் அருளும் இந்தத் தலத்தின் ஈசனின் சந்நிதியில், பெண்கள் தங்களுடைய  மாங்கல்யச் சரடை வைத்து, பூஜை செய்து அணிந்துகொண்டால், தீர்க்க சுமங்கலி பாக்கியம் பெறுவர்.

திருவருள் திருவுலா: மங்கையரின் மனக்குறை போக்கும்... “சப்த மங்கையர்” தலங்கள்

இங்கு வந்து கோ பூஜை செய்து வழிபடுவதால்,  பித்ருக்கள் தொடர்பான தோஷங்களும் சாபங்களும் நீங்கி நற்பலன்கள் கிடைக்கும். தேய்பிறை அஷ்டமி நாளில் இங்கு வந்து வழிபடுவது விசேஷம். இதனால்,  மன நிம்மதி வாய்க்கும்; பிரச்னைகளால் தூக்கமின்றி தவித்த நிலை மாறும்.

எப்படிச் செல்வது : கும்பகோணம் - தஞ்சாவூர் பேருந்து மார்க்கத்தில் பசுபதி கோயிலிலிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது.

வேண்டிய வரங்கள் அருளும் தாழ மங்கை

இறைவன் : ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர்

அம்பாள்:  ஸ்ரீராஜராஜேஸ்வரி

திருத்தலச் சிறப்புகள் : இந்தப் பூவுலகில் ஸ்ரீராஜராஜேஸ்வரி என்ற திருப்பெயரில் ஆதிபராசக்தி அருளும் ஆலயங்கள் அபூர்வம். ஏனெனில், ஆயிரம் கோடி நவராத்திரி பூஜைகள் செவ்வனே நிகழ்ந்தால்தான் ஒரு ராஜராஜேஸ்வரி ஆலயம் உருவாகுமாம்! அந்த வகையில், ஸ்ரீராஜராஜேஸ்வரி அருளாட்சி  புரியும் அற்புதத் தலம் தாழமங்கை.

திருவருள் திருவுலா: மங்கையரின் மனக்குறை போக்கும்... “சப்த மங்கையர்” தலங்கள்

சப்தமங்கையரில் மஹேந்திரியும் நவகிரகங் களில் சந்திரனும் வழிபட்ட தலம் இது. ராதை, துர்கா, லட்சுமி, சரஸ்வதி, சாவித்திரி ஆகிய பஞ்ச தேவியரால் பூலோகத்துக்கு அருளப்பட்ட புண்ணிய விருட்சம் இத்தலத்தில்  அமைந்திருப்பது சிறப்பு.

வழிபாட்டுச் சிறப்புகள் :  ஜாதகத்தில் சந்திர திசை மற்றும் சந்திரப் புக்தி நடைபெறும் ஜாதகர்கள் வழிபடவேண்டிய பரிகாரத் தலம் இதுவாகும்.

இங்கே, பெளர்ணமித் திருநாளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இந்தப் பூஜைகளில் கலந்துகொண்டு மனமுருகி வேண்டுவோருக்கு, வேண்டிய வரங்கள் கிடைக்கும்; எண்ணிய காரியங்கள் அனைத்தும் எண்ணியபடி ஈடேறும்.

திருவருள் திருவுலா: மங்கையரின் மனக்குறை போக்கும்... “சப்த மங்கையர்” தலங்கள்

மூன்றாம் பிறை நாளில் ஸ்ரீசந்திரமௌலீஸ் வரருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், சகலவிதமான கண் நோய்களும் நீங்கும் என்பது நம்பிக்கை

எப்படிச் செல்வது : கும்பகோணம் - தஞ்சாவூர் பேருந்து மார்க்கத்தில், பசுபதிகோயில் மெயின் ரோட்டில் இந்தத் தலம் அமைந்துள்ளது.

திருமணத் தடை நீக்கும் புள்ள மங்கை

இறைவன் : ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர்

அம்பாள்: ஸ்ரீசௌந்தரநாயகி

திருத்தலச் சிறப்புகள் :

தேவர்களும், முனிவர்களும் பல்வேறு விலங்குகளின் உருவில் சிவனாரை வழிபட்டு வரம் பெற்று மகிழ்ந்த திருக்கதைகளைப் புராணங்கள் சொல்கின்றன. ஜகன் மாதாவாம் அம்பிகையும் அவ்வண்ணம் சிவ வழிபாடு செய்து, சிந்தை மகிழ வரம் பெற்றிருக் கிறாள். அப்படி, அவள் மயிலாக வந்து வழிபட்ட தலங்களே மயிலையும் மயிலாடுதுறையும் ஆகும்.

திருவருள் திருவுலா: மங்கையரின் மனக்குறை போக்கும்... “சப்த மங்கையர்” தலங்கள்

அவள் கழுகு வடிவிலும் வந்து கயிலையானை வழிபட்டு, சாப நிவர்த்தி பெற்றிருக்கிறாள். அந்தத் தலம்தான் புள்ள மங்கை. `புள்' என்றால் பறவை என்று பொருள்.

சப்த மங்கையரில் சாமுண்டி வழிபட்ட க்ஷேத்திரம் இது. சாந்நித்தியம் மிக்க துர்காதேவியும் சந்நிதி கொண்டிருக்கும் தலம் இது.பெண்கள் வழிபடவேண்டிய சிறப்புமிகு ஆலயம் இது என்கிறார் கள், உள்ளூர் பக்தர்கள்.

திருவருள் திருவுலா: மங்கையரின் மனக்குறை போக்கும்... “சப்த மங்கையர்” தலங்கள்

வழிபாட்டுச் சிறப்புகள் :  சிவ ராத்திரி, பிரதோஷம் முதலான திருநாள்களில், இங்கு வந்து சிவ தரிசனம் பெறுவதால் விசேஷ பலன்கள் கைகூடும்; சகலவிதமான சரும நோய்கள் நீங்கும் என்கிறார்கள் பக்தர்கள். அம்பாள் செளந்தரநாயகியை மனதார வேண்டிக் கொண்டால்,  திருமணத் தடை நீங்கும், விரைவில் மனதுக்கினிய வாழ்க்கைத் துணை வாய்க்கும், குழந்தை இல்லாதவர்களுக்குப் புத்திரப்பேறு உண்டாகும். வெள்ளிக்கிழமைகளில் துர்கைக்கு தீபமேற்றி வழிபட்டால், நினைத்த காரியம் ஈடேறும்.

எப்படிச் செல்வது : கும்பகோணம் - தஞ்சாவூர் பேருந்து மார்க்கத்தில் பசுபதிக்கோயில் அருகே அமைந்துள்ளது.

-மு.இராகவன், படம்: பா.பிரசன்ன வெங்கடேஷ்