Published:Updated:

நாளை ஹைதராபாத் திருப்பதி கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

நாளை ஹைதராபாத் திருப்பதி கோயிலில் மகா கும்பாபிஷேகம்!
நாளை ஹைதராபாத் திருப்பதி கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்திலிருக்கும் ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் புதிய வேங்கடாசலபதி கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோயிலின் மகா கும்பாபிஷேகம் நாளை (மார்ச் 13) நடைபெற உள்ளது. 


 

ஹைதராபாத்தில் ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் புதிய வேங்கடாசலபதி கோயில் ஒன்றைத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் கட்டியுள்ளது. இதற்கான பணிகள் கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கியது. இந்தக் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட இருக்கும் மூலவர் விக்ரகம் தமிழ்நாடு நாமக்கல் மாவட்டத்திலிருந்து பெறப்பட்ட கறுப்பு கிரானைட் கற்களால் உருவாக்கப்பட்டது. திருப்பதி வேங்கடேசப் பெருமாளின் சிலையைப் போன்றே வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்தச் சிலையை வடிவமைக்கும் பணிகளை தேவஸ்தானத்தைச் சேர்ந்த சிற்பிகள் மிகவும் கவனத்துடன் செய்துள்ளனர். 


 

இந்தக் கோயிலில் நாளை (13 -ம் தேதி) மகாகும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி, கடந்த 8-ம் தேதி அங்குரார்ப்பணமும், 9-ம் தேதி பஞ்சகவ்ய திவசமும் 10-ம் தேதி சீரா திவசமும், ஜல திவசமும் நடைபெற்றன. நேற்று (திங்கள்கிழமை) ஹோமம் வளர்க்கப்பட்டு முறைப்படியான யாகசாலை பூஜைகள் தொடங்கின. இதையொட்டி, கோயில் வளாகம் வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 

நாளை (13 -ம் தேதி) காலை 6 முதல் 7.30 மணிக்குள் மீன லக்னத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வர். கும்பாபிஷேகம் முடிந்ததும் காலை 9 மணிக்கு மேல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.