Published:Updated:

திருப்பட்டூர் அற்புதங்கள்!

திருப்பட்டூர் அற்புதங்கள்!

திருப்பட்டூர் அற்புதங்கள்!

திருப்பட்டூர் அற்புதங்கள்!

Published:Updated:
திருப்பட்டூர் அற்புதங்கள்!
திருப்பட்டூர் அற்புதங்கள்!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'ஒ
ன்றை இழந்தால்தான் ஒன்றைப் பெற முடியும்’ என்பதே உலக நியதி. அப்படி ஏதோ ஒன்றை இழந்து, இன்னொன்றைப் பெறுகிறபோது, அப்படிப் பெறப்பட்டது நமக்கு மகிழ்ச்சியையும் ஆனந்தத் தையும் தரவேண்டும். நமக்கு மட்டுமின்றி நம்மைச் சார்ந்தவர்களுக்கும் அதனால் மகிழ்ச்சியும் ஆனந்தமும் தருபவை அனைத்துமே நல்லவை என்றும், துக்கத்தையும் வேதனையையும் தருபவை அனைத்தும் கெட்டவை என்றும் நமக்குச் சொல்லித் தெரிய வேண்டும் என்பதில்லை! ஆக, கெட்டதை இழந்துவிட்டு, நல்ல விஷயத்தைப் பெறுகிறபோது, அந்த நிம்மதிக்கும் நிறைவுக்கும் எல்லையே கிடையாது அல்லவா?  

திருப்பட்டூர் எனும் திருத்தலம், அருளை வாரி வழங்குகிற தலம். நம் தலையெழுத்தையே மாற்றித் திருத்தி, நல் வாழ்க்கையை நமக்குத் தந்து, நம்மைக் காத்தருள்கிறார்கள் சிவனாரும் பிரம்மாவும். இந்தத் தலத்துக்கு வந்து, சிவனாருக்கு அபிஷேகம் செய்து, அம்பிகையருக்குப் புடவை சார்த்தி, பிரம்மாவுக்கு மஞ்சள் காப்பு செய்து, பிராகார வலம் வந்து மனமுருகி வேண்டிக் கொண்டால், நம் தலையெழுத்து மாறிவிடுமா? நல் வாழ்க்கை அமைந்துவிடுமா? சிவனாரின் அருளும் பிரம்மாவின் அருளும் ஒருசேர நமக்குக் கிடைத்துவிடுமா?

'ஒன்றை இழந்தால்தானே ஒன்றைப் பெற முடியும்?’ அதாவது, நம்மிடம் இருக்கிற ஒன்றை இழந்து நின்றால்தான், இறைவனின் பேரருள் நமக்குக் கிடைக்கும். அப்போதுதான் நம் தலையெழுத்து திருத்தி எழுதப்படும். அப்படியெனில் எதை இழக்கவேண்டும்?

மன்னன் ஒருவன், மிகுந்த இறை பக்தி கொண்டவன். அதேபோல் மக்கள் மீதும் அதிக நேசத்துடன் இருந்தான். அவர்களுக்கு அன்னதானம் செய்து, பல நிதியுதவிகள் தந்து, நல்லாட்சி நடத்தினான். கடவுளின் திருவடியை அடைய வேண்டும் என்று ஆவல் கொண்ட மன்னன், ஊரின் வனப்பகுதியில் தங்கித் தவம் இயற்றி வந்த ஒரு ரிஷியைச் சந்தித்து, தன் ஆவலைத் தெரிவித்தான். அந்த ரிஷியோ, ''மன்னா, நான் செத்ததும் வாருங்கள்'' என்றார்.

திருப்பட்டூர் அற்புதங்கள்!

'இவர் இறந்த பிறகு வருவதா? என்ன உளறுகிறார்? இவர் இறந்த பிறகு நான் வந்து என்ன பயன்?’ என யோசித்துக்கொண்டே இருந்த மன்னனுக்குச் சட்டென்று அது புரிந்தது... 'நான்’ எனும் கர்வம் செத்த பிறகு வா என்கிறார் ரிஷி. அதாவது, கர்வத்தை அழித்துவிட்டு வரச் சொல்கிறார்’ என்று உணர்ந்துகொண்டான்.

'என்னைவிட இறைவன் மீது பற்று கொண்டவர் எவருமில்லை’ என்கிற இறுமாப்பு மன்னனுக்கு! 'என் அளவுக்குக் கடவுளுக்கு அபிஷேக - ஆராதனைகள்,  திருப்பணிகள் செய்வதில், எனக்கு இணையானவர்கள் எவரும் இல்லை’ என்று கர்வம்!  அதேபோல், 'என்னை விட நல்லாட்சியை எவரும் தரமுடியாது. மக்கள் நலனில் அக்கறை கொண்டவனை,  உலகில் வேறெங்கும் பார்க்க முடியாது’ என்று அகம்பாவத் துடன் இருந்தான் மன்னன்.

அகம்பாவமும் ஆணவமும் இருக்குமிடத்துக்குக் கடவுள் ஒருபோதும் வரமாட்டார். ஆணவம் எங்கு இருக்கிறதோ, அங்கே ஆண்டவனின் அருள் வியாபிக்காது போகும். இறுமாப்பு கொண்டவர்களி டத்தில், இறைவனின் பார்வை கூடப் படாது. 'நான்’ என்பதை மறந்தால்தான், 'நான்’ என்பதைத் துறந்தால்தான், 'நான்’ என்பதை அழித்தால் தான் கடவுளின் அருளுக்குப் பாத்திரமாக முடியும்!

இறைவனே இறைவனைத் தொழுது வணங்கிய தலம் இது. ஆனானப்பட்ட பிரம்மா, சிவப் பரம்பொருளை வணங்கி வழிபட்டு, வரம் பெற்று, இழந்த தன் பதவியைத் திரும்பப் பெற்ற தலம் இது. அப்படி வரத்தையும் இழந்ததையும் பெறுவதற்கு, பிரம்மாவும் ஒன்றை இழந்தார். ஒன்றை இழந்தால்தான் ஒன்றைப் பெற முடியும் என்பதை உலகுக்கு உணர்த்துவதற்காக, தனது கர்வத்தைத் துறந்தார்.  

அதுமட்டுமா? இரண்ய வதம் முடிந்தும் கூட, நரசிம்ம மாக திருமால் கடும் உக்கிரத் துடன் இருந்தார். செய்த வதம், இருக்கும் உக்கிரம் ஆகியவற்றால் மகா கர்வமும் சேர்ந்து ஆக்ரோஷத்துடன் இருந்த திருமாலை எவராலும் நெருங்க முடியவில்லை. அப்போது சிவனார், சரபேஸ்வரராக உருவெடுத்து, நரசிம்மரின்  கர்வத்தை அழித்து, கோபத்தைத் தணித்து, ஆக்ரோஷத்தில் இருந்து விடுபடச் செய்தார் என்றொரு தகவல் புராணத்தில் உண்டு. இதோ... இந்தத் தலத்தில், நரசிம்மருக்கு  அருளும் சரபேஸ்வரரின் சிற்பக் காட்சியைத் தரிசிக்கலாம்.

திருப்பட்டூர் அற்புதங்கள்!

இன்னொன்றும் இங்கே உண்டு. 'என்னைப் போல் பலசாலியும் இல்லை; சிவ பக்தியில் திளைத்தாரும் இல்லை’ எனும் இறுமாப் புடன் இருந்தான் ராவணன்.  அவன், கயிலை மலையை  அப்படியே தூக்கி அசைக்க முயற்சிக்க... தன் கால் கட்டை விரலை லேசாக அழுத்தினார் சிவபெருமான். மலையின் அடியில் நசுக்குண்டு, சிக்கித் திணறினான் ராவணன். அங்கு வந்த நாரத மாமுனிவர், 'சிவப்பரம்பொருள் உன் அபாரமான இசைக்குக் கட்டுப்படுவார். இதிலிருந்து விடுபட உனக்கு அருள்வார்’ என்று அறிவுரை சொல்ல... தான் மிகப்பெரிய பலசாலி, மிகச் சிறந்த சிவபக்தன் என்கிற கர்வத்தையெல்லாம் விட்டுவிட்டு, தன் முதுகு எலும்பையே வீணையாக்கி, தன் நரம்புகளையே அதன் தந்திகளாக்கி, அவன் மோகன ராகம் இசைக்க... அந்த இசைக்கு வசமான சிவனார் அவனை விடுதலை செய்தார் என்கிறது புராணம்!

மலையைத் தூக்குகிற ராவணனையும், அவனுக்கு அருள் புரிகிற சிவ - பார்வதி யையும் நாத மண்டபத்தின் விதானச் சிற்பங்களில் காணலாம்.

கடவுள் எனும் சக்தி மகா பிரமாண்டம். அந்தச் சக்திக்கு முன்னே நாம் எல்லோரும் வெறும் தூசு. 'விதி இருப்பின் விதி கூட்டி அருளுக!’ என்று பிரம்மாவுக்கு அறிவுறுத்தி, வரம் வழங்கிய வள்ளல் குடியிருக்கிற பூமி இது!  

திருப்பட்டூர் ஸ்ரீபிரம்மபுரீஸ் வரர் மற்றும் ஸ்ரீகாசி விஸ்வ நாதர் கோயில்களுக்குச் சென்று, வாசலில் செருப்பைக் கழற்றிப் போடுகிறபோது, ஒட்டுமொத்த கர்வத்தையும் கழற்றிப் போட்டுவிட்டு, உள்ளே செல்லுங்கள்.

திருச்சந்நிதியில் நிற்கும் போது, 'இந்த உடம்பும் உயிரும் நீ போட்ட பிச்சை. எனக்கும் என் குடும்பத்துக்கும் என்ன தரவேண்டுமோ, அதைத் தந்து எங்களை வாழவைப்பது உன் பொறுப்பு’ என்று மனமுருகிப் பிரார்த்தனை செய்யுங்கள்.

அப்படி ஆத்மார்த்தமாகப் பிரார்த்தனை செய்தவர்களும், அந்த வேண்டுதலால் பலன்கள் பெற்று மனநிறைவுடன் வாழ்கிறவர்களும் மிக மிக அதிகம்!

இப்போது, கர்வம் ஒன்றை இழந்து விட்டீர்கள் அல்லவா... எனவே, பதிலுக்கு நீங்களும் ஒன்றை - அதுவும் நன்றை அடைந்தே தீருவீர்கள்!

- பரவசம் தொடரும்
படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism