Published:Updated:

மனம் மலரட்டும்

மனம் மலரட்டும்
பிரீமியம் ஸ்டோரி
மனம் மலரட்டும்

தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகளின் சீரிய சிந்தனைகள்...

மனம் மலரட்டும்

தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகளின் சீரிய சிந்தனைகள்...

Published:Updated:
மனம் மலரட்டும்
பிரீமியம் ஸ்டோரி
மனம் மலரட்டும்

ரு விஷயத்தில் நல்லதும் நல்லது அல்லாததும் கலந்திருக்கும் பட்சத்தில், அல்லாததைத் தள்ளிவிட்டு நல்லதை மட்டுமே பார்த்தால் நிம்மதி உண்டு. எனவேதான் நம் பிரார்த்தனையில் எல்லோரும் நல்லதைப் பார்க்கட்டும் என்ற நோக்கில்  `பத்ராணி பஸ்யந்து’ என்று கூறுகிறோம்.

அதேபோல், `ப்ரசோதயாத்’ என்றொரு பதம் உண்டு. ப்ரசோதயாத் - ப்ரசோதனம் என்றால், செலுத்துவது. ஆகவேதான், காயத்ரி மந்திரத்தில் `தியோயோ நஹ ப்ரசோதயாத்’ என்று சொல்லி எல்லோருக்குமான பிரார்த்தனை செய்யப்படுகிறது.

மனம் மலரட்டும்

மற்றுமொரு வேதபூர்வமான பிரார்த்தனை உண்டு.

`அஸதோமா சத்கமய
தமசோமா ஜ்யோதிர்கமய 
ம்ருத்யோர்மா அம்ருதம் கமய
அஸதஹ மா சத் கமய’ என்கிறது அந்தப் பிரார்த்தனை.

 `அஸத்திலிருந்து சத்-திற்கு அழைத்துச் செல்வாயாக. எது எப்போதும் இருக்கக்கூடியதாகவும் சத்தியமாகவும் இருக்குமோ, எதை இது இப்படித்தான் என்று தெரிந்துகொண்டதும் அது மாறாமல் இருக்குமோ, அங்கே என்னை அழைத்துச் செல்வாயாக’ என்ற கருத்து முதலாவதாகப் போதிக்கப்படுகிறது.

`தமசோமா ஜ்யோதிர்கமய’ என்றால் - இருளாகிய அறியாமையிலிருந்து என்னை ஒளிக்கு அழைத்துச்செல்வாயாக எனப் பொருள்.

கோயிலில் கருவறையில் ஒளியைக் காட்டுவதன் நோக்கம் இதுதான். குரு உபதேசத்தால் தன்னைப் பற்றிய அறியாமையையும், ஈசனைப் பற்றிய அறியாமையையும் நீங்கி, தானும் கரைந்துவிடுகிறது என்பதை உணர்த்தவே கற்பூர ஜோதி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மனம் மலரட்டும்

அடுத்து... `ம்ருத்யோர்மா அம்ருதம் கமய...’

நான் மரணத்துக்கு உட்பட்டவன் என்ற வரையறையில் மாட்டிக் கொண்டிருக்கும் ஜீவனை, `நீ அழியாத பிரம்மம்’ என்ற ஞானத்துக்கு, மரணமில்லா பெருவாழ்வுக்கு இந்த மந்திரம் அழைத்துச்செல்கிறது.

இப்படியான மந்திரங்களை உள்ளார்த்தம் அறிந்து அனுதினமும் சொல்லி, பிரார்த்தித்து வந்தால், ஞானம் புலப்படும்; மனம் மலரும்.

மேலும், பெரியோர்களும் ஞானநூல்களும் நமக்கு வழிகாட்டியிருக் கிறார்கள், யோகம் பயிலச் சொல்லி. அத்துடன் மனதுக்குச் சாந்தி அருளும் விஷயங்களையும் கடைப்பிடித்தாகவேண்டும்.

விரிந்த வானத்தைப் பார்க்கும்போது ஒரு சாந்தி கிடைக்கும். பரந்த சமுத்திரத்தைப் பார்க்கலாம்; அதையொட்டி கற்பனை செய்யலாம். அப்போது அதைப் போலவே நம் மனமும் விரியும்.

எல்லோருக்கும் ஓர் `அஜென்டா’ - ஓர் எதிர்பார்ப்பு இருக்கிறது. இது இப்படி இருக்கவேண்டும்; அவர் இப்படி நடக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஆண்டவனுக்கும்கூட அஜென்டாவை தினசரி கொடுக்கிறோம். ஆனால், அஜென்டா இல்லாத இயற்கையான விஷயங்கள் நிறைய இருக்கின்றன.

மலைச்சிகரங்களை நாம் மாற்ற முயல்வதில்லை; வானத்தை மாற்ற நாம் முயற்சி செய்வதில்லை. அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்கிறோம்.  அதனால்தான் நமக்கு சாந்தி ஏற்படுகிறது. உண்மையில் சொல்வதென்றால்,  சாந்தி நம் சுபாவம். அது ஒன்றும் புதிதாக ஏற்படக்கூடியதல்ல. அது ஏற்கெனவே நமக்குள் இருப்பதுதான்.

மனம் மலரட்டும்

சிகரங்களை, சமுத்திரத்தை... அவை எப்படி இருக்கின்றனவோ அப்படியே அவற்றை ஏற்றுக்கொள்வதுபோல், சக மனிதர்களையும் அப்படியே ஏற்றுக்கொண்டுவிட்டால், சாந்தி கெடாமல் இருக்கும்.

`அவர்கள் அப்படித்தான். நான் அவர்களை எனக்குள் வைக்கவில்லை. அவர்கள் எனக்கு வெளியில் இருக்கட்டும். இனி, என் மனதுக்குள் புகுந்து சலனத்தை ஏற்படுத்த முடியாது’ என்று தீர்மானியுங்கள். தினமும் காலையில் தியானம் செய்யுங்கள். உங்கள் மனதைச் சுமையாக்கிவிடும் எல்லோரையும் வெளியில் எடுத்துவைத்துவிட்டு சாந்தியை உணருங்கள்.

எல்லோரும் நல்லவர்களே. நாம் யாரையும் கெட்டவர் என்று தீர்மானிக்கவேண்டாம். அவர்களுக்கு நீங்கள் மூன்று விஷயங்களைத் தந்தால் போதும்; மன சாந்தி நிச்சயம்.  அவை என்ன தெரியுமா?

அன்பு, பாசம், கவனம்..!

மனம் மலரட்டும்! 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism