எண்ணங்கள் அழிவதில்லை. அவை அடிமனதில் எப்போதும் தங்கியிருக்கும். அவற்றின் எச்சங்களாக சொல்லோ செயலோ வந்து விழுந்துவிடுகின்றன. ஆகவேதான் எண்ணங்களில் கவனம் வேண்டும் என்றார்கள் பெரியோர்கள். விழுந்த சொல்லும் செய்த செயலும் கர்மங்களாகிவிடுகின்றன. கர்மத்தின் பலனை அனுபவித்தே ஆகவேண்டும்.

பொய் மானை பொன் மான் என்று சீதை நம்பியதும் அவள் கேட்டுக் கொண்டதால் ராமன் அந்த மானை விரட்டிச்சென்றதும் கர்மாவின் விளைவுகளேயன்றி வேறென்ன! கடவுளே மனிதனாக அவதரித்து வந்தாலும் கர்மாவின்படியே அனைத்தும் நடக்கும். ஜன்மங்கள் கடந்தும் துரத்த வல்லவை கர்மப்பலன்கள். அவற்றால் உண்டாகும் துன்பங்களைக் களைய ஆலய வழிபாடு ஒன்றே தீர்வாகும்.

அவ்வகையில் நளமகராஜன், ஆதிசேஷன், பரீட்சித்து, குண்டு சித்தர் ஆகியோரின் கர்மங்களை - முன்வினைத் துயரங்களை நீக்கி நலமருளிய கார்கோடகபுரீஸ்வரர் ஆலயத்துக்குச் சென்று ஈசனை வணங்கினால், ஏழேழ் பிறவிகளிலும் நாம் அறிந்தும் அறியாமலும் செய்த கர்மங்கள் பொசுங்கிவிடுமாம். ஆனால், மகத்துவம் வாய்ந்த அந்த ஆலயத்தின் திருப்பணிகள் பொருள் இல்லாததால் பாதியில் நிற்கின்றன!

காரைக்காலிலிருந்து தென்மேற்கே 5 கி.மீ தொலைவில் உள்ளது காக்கமொழி கிராமம். இங்குதான் அருள்மிகு கார்கோடகபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. தரிசித்தமாத்திரத்தில் நம் கர்மங்களைப் போக்கி அருளும் இந்த ஆலயம், ஈராயிரம் ஆண்டுகள் தொன்மை வாய்ந்ததாம். ஆனால் காலப்போக்கில் கவனிப்பாரின்றி சிதைந்துபோனது. தற்போது, சில நல்ல உள்ளங்கள் இணைந்து கோயிலைப் புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பரந்துவிரிந்து திகழ்கிறது, அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை கார்கோடகபுரீஸ்வரர் ஆலயத்தின் அமைவிடம். ஆலயத்தில் பரிவார மூர்த்திகள், பைரவர், நடராஜர், கார்கோடகன், நவகிரகங்கள் ஆகிய தெய்வச் சந்நிதிகள் உள்ளன. தீர்த்தம் - சந்திர புஷ்கரணி; தல விருட்சம் - வில்வம். இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி வெள்ளி நாக மோதிரத்தை உண்டியலில் செலுத்தினால் ராகு - கேது தோஷம் நீங்கும்; வில்வ மரத்தில் தொட்டில் கட்டி வேண்டிக்கொண்டால், சந்தான வரம் கிட்டும்; நாகர் சிலைகளுக்கு மஞ்சள் கயிறு கட்டி வழிபட்டால், திருமண வரம் கிடைக்கும் என்று ஊர் மக்கள் கூறுகிறார்கள்.

சனிபகவானின் ஆளுமையால் நாடு, பதவி, செல்வம், உறவுகள் ஆகிய அனைத்தையும் இழந்த நளமகராஜன், இந்தப் பகுதியின் வழியே வந்துகொண்டிருந்த வேளையில், கார்கோடகன் என்ற நாகத்தை ஆபத்திலிருந்து காப்பாற்றினான். ஆனால், கார்கோடகனோ விதியின் கட்டளையால் நளனைத் தீண்டி அவனின் தேகத்தைக் குரூரமாக்கினான். அதனால் மனம் நொந்த நளன் ‘காப்பாற்றியவரையே இப்படிக் கலங்கவைக்கலாமா’ என்று முறையிட்டான். கார்கோடகன் மனம் வருந்தினான். தனது செயலுக்குப் பிராயச்சித்தமாக நளனுக்கு ஒரு பொன்னாடையை வழங்கி, `இதைப் போர்த்திக் கொள். உரிய தருணத்தில் உன் தேகம் பொலிவுபெறும்' என்று கூறிச் சென்றான்.

நளனும் காக்கமொழி ஈசனை வணங்கி ஆசிகள் பெற்றான். அதன்பிறகே திருநள்ளாறு சென்று வழிபட்டு வாழ்வும் வரமும் பெற்றான் என்கின்றன புராணங்கள். நளன் வழிபட்ட தலம் என்பதிலிருந்தே இதன் தொன்மையை அறியலாம் என்கிறார்கள் உள்ளூர் மக்கள். நளனைத் தீண்டிய பாவம் தொலைய கார்கோடகன் இங்கு தவமியற்றி வழிபட்டதால், இங்குள்ள ஈசனுக்குக் கார்கோடகபுரீஸ்வரர் என்று திருநாமம்; ஊரும் கார்கோடகபுரம் என்றானது.

ஒருமுறை, விதிப்பயன் விளைவாக பரீட்சித்து மகாராஜாவைத் தீண்ட வந்தார் ஆதிசேஷன். தப்பி ஓடிய பரீட்சித்துவைத் தேடிக்கொண்டு ஆதிசேஷன் இந்த பகுதிக்கு வந்தபோது இருட்டி விட்டது. அதனால் அன்றிரவு இங்குள்ள சிவாலயத்தில் தங்கினார் ஆதிசேஷன். மறுநாள் பொழுது விடிந்ததும் காக்கைகளின் மொழி கேட்டு ஆதிசேஷன் கண்விழித்து, பரீட்சித்துவைக் கண்டறிந்தாராம். அதனால் இந்த ஊருக்கு காக்கமொழி என்று பெயர் வந்ததாம். தொடர்ந்து ஆதிசேஷனும் பரீட்சித்தும் இவ்வூர் ஈசனை வழிபட்டு வினை நீங்கப்பெற்றார்கள் என்கிறது தலபுராணம்.

சுந்தரச் சோழன் காலத்தில் மகிமைகள் பல புரிந்த குண்டு சித்தர் இங்கு வந்து முன்ஜன்ம வினைகளைத் தீர்த்துக்கொண்டதாகவும், அதனால் சுந்தரச் சோழனிடம் சொல்லி இந்த ஆலயத்தைப் புனரமைத்ததாகவும் கூறப்படு கிறது. இந்த ஆலயத்தைப் பற்றி பிரமாண்ட புராணம், நைடதம் போன்ற ஞானநூல்கள் சிறப்பித்துக் கூறுகின்றன.

தேவாதிதேவர்கள் பலரும் இங்குவந்து ஈசனிடம் வேண்டியவண்ணமே இருந்ததால், அவர்களின் வேண்டுதல்களைத் தொடர்ந்து செவிமடுக்கும் விதமாக, இங்குள்ள நந்திதேவர் தலையை வலப்புறமாகச் சாய்த்து அமைந்திருப்பது விசேஷ அம்சம்! அதுமட்டுமல்ல, இந்த ஆலயத்தில் நித்ய பிரதோஷம் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்டு சிவனாரை வழிபடுவதுடன், நந்திதேவரிடம் முன்வைக்கும் சகல பிரார்த்தனைகளும் விரைவில் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

ஆதிசேஷனும் கார்கோடகனும் வணங்கிய தலம் என்பதால் நாக தோஷம் நீக்கும் ஆலயமா கவும், ராகு-கேது பரிகாரத் தலமாகவும், சனியின் கொடுமைகளிலிருந்து விடுபட நளனுக்கு அருள் கிடைத்த தலம் என்பதால், சனி தோஷ நிவர்த்தி தலமாகவும் திகழ்கிறது, காக்கமொழி திருத்தலம்.

கார்கோடகன் நளனைத் தீண்டி பாவம் பெற்றதால், இந்த ஊரில் இன்றுவரை நாகங்கள் எந்த ஜீவராசியையும் தீண்டுவதில்லை என்கிறார்கள் ஊர் மக்கள். உறவுகளை இழந்தவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், நாக தோஷ பாதிப்பு கொண்டவர்கள், திருமண வரம் வேண்டும் அன்பர்கள், ஆகியோர் இங்கு வந்து கார்கோடகனுக்கு வெண்பட்டு வஸ்திரம் சாத்தி, மருக்கொழுந்து அல்லது தாழம்பூ சூட்டி வழிபட்டால், விரைவில் நல்லதொரு தீர்வு கிடைக்கும்; வேண்டிய வரங்கள் பெறலாம்.

மகிமைகள் நிறைந்த இந்த ஆலயத்தின் திருப்பணிக்கு அள்ளி வழங்குங்கள். காற்று தீயை அணைக்கவும் செய்யும் வளர்க்கவும் செய்யும். செல்வமும் அப்படித்தான். புண்ணிய காரியங்களுக்கு உதவும் செல்வம், உங்கள் பாவங் களை அழிக்கும். முன்வினைகளால் சேரும் பிறவித் துன்பங்கள் நீங்க, இந்த ஆலயத்தின் திருப்பணிக்கு உதவுங்கள்; நலம் பெறுவீர்கள்.

சிவாயநம!

மு. ஹரி காமராஜ், படங்கள்: க.சதீஷ்குமார்

பக்தர்கள் கவனத்துக்கு...

ஸ்வாமி : ஸ்ரீகார்கோடகபுரீஸ்வரர்

அம்பாள் : ஸ்ரீகற்பகாம்பாள்

பிரார்த்தனைச் சிறப்பு: நாக தோஷம் உள்ளவர்கள், உறவுகளைப் பிரிந்தவர்கள், பதவி வேண்டுவோர், மனநலம் பாதித்தோர் இங்கு வந்து வழிபட நலம் பெறுவார்கள்.

எப்படிச் செல்வது? : காரைக்காலிலிருந்து 5 கி.மீ தொலைவில் (நிரவி - ஊழியபத்து சாலையில்) உள்ளது. நிரவி, ஊழியபத்து, விழிதியூரில் இருந்து வாகன வசதிகள் உள்ளன.

வங்கிக் கணக்கு விவரம் :
A/c.Name: SRI KARKOTAKAPUREESWARAR DEVASTHANAM
A/c.No: 537330552
Bank Name: Indian Bank
Branch: NERAVI
IFSC No: IDIB000N045
தொடர்புக்கு: குமார் 6369138872