திருத்தலங்கள்
ஜோதிடம்
தொடர்கள்
Published:Updated:

நாரதர் உலா - மீண்டும் கிடைக்குமா தெய்வச் சிலைகள்!

நாரதர் உலா - மீண்டும் கிடைக்குமா தெய்வச் சிலைகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
நாரதர் உலா - மீண்டும் கிடைக்குமா தெய்வச் சிலைகள்!

நாரதர் உலா - மீண்டும் கிடைக்குமா தெய்வச் சிலைகள்!

நாரதர் நம் அறைக்குள் நுழைந்தபோது, இந்த இதழின் கூடுதல் இணைப்பான `அருளாளா அத்தி வரதா' - காஞ்சி அத்தி வரதர் வைபவம் குறித்த சிறப்புத்தொகுப்பு, முழுமையாகத் தயாராகி யிருந்தது. ஆர்வத்துடன் எடுத்தவர், முழுவீச்சில் படித்து முடித்தபிறகே, பேசத் தொடங்கினார்.

நாரதர் உலா - மீண்டும் கிடைக்குமா தெய்வச் சிலைகள்!

``இணைப்பிதழில் முழுமையான தகவல்களைக் கொடுத்திருக்கிறீர்கள்... அருமை'' என்று நம்மைப் பாராட்டியவர், ``அத்திவரதரின் அருளால் அந்த 48 நாள் வைபவம் சீரும் சிறப்புமாக நடக்கட்டும். அதன்பொருட்டு நாமும் வேண்டிக்கொள்வோம்'' என்று கூற, நாமும் ஆமோதித்தோம்.

``காஞ்சி விழா குறித்த தகவல்களை விரிவாகத் தந்திருக்கிறார் உம் நிருபர். தரிசன நேரம், போக்குவரத்து ஏற்பாடுகள், தற்காலிக பேருந்து நிலையங்கள், கழிப்பட வசதிகள்... என ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றாலும், வரும் கூட்டத்தைச் சமாளிக்க, இந்த ஏற்பாடுகள்  போதாது என்றே சொல்கிறார்கள், பக்தர்கள் தரப்பில். குறிப்பாகக் கழிப்பிட வசதிகள், பேருந்து வசதிகள், அவசர மருத்துவ சிகிச்சை ஏற்பாடுகள் ஆகியவற்றில் அதீத கவனம் செலுத்தவேண்டும் என்பது பக்தர்களின் கருத்தாக இருக்கிறது.''

நாரதர் உலா - மீண்டும் கிடைக்குமா தெய்வச் சிலைகள்!

``சகலமும் நல்லபடியாக நடக்கும் என நம்பு வோம்'' - என்று நாம் கூறியதை ஆமோதித்தவராக, வேறொரு விழாவைப் பற்றி பகிரத் தொடங்கினார்.

``காஞ்சியில் வரதர் வைபவம் என்றால், நம் அண்டை மாநிலத்தில் வேறொரு வைபவம் நடைபெறவுள்ளது... தெரியுமா?''

``காரைக்கால் மாங்கனித் திருவிழாவைப் பற்றிச் சொல்கிறீரா..?''

``அதேதான். வருடாவருடம் ஆனி மாதம் நடைபெறும் அற்புதத் திருவிழா அது. நாயன்மார் களில் ஒருவரான காரைக்கால் அம்மையாரைச் சிறப்பிக்கும் வைபவம். இந்த விழாவில் கலந்து கொண்டு, மாங்கனியைப் பெற்றுக்கொண்டால் பிள்ளை வரம் வாய்க்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.''

``தெரியுமே! நான்கு நாள்கள் நடக்கும் உற்சாகம் பொங்க நடைபெறும் அந்த உற்சவம். அப்படித்தானே?''

``இந்த வருடம் ஒரு மாற்றம்...''

``என்ன சொல்கிறீர்?''

``ஆண்டுக்கு ஆண்டு இந்த விழாவுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே  வருகிறது. கூட்டம் அதிகரிப்பதால், வீதியுலா வைபவம் போன்றவற்றை குறித்த நேரத்தில் முடித்து ஸ்வாமியைக் கோயிலுக்குக் கொண்டுவர முடியாத நிலை...''

``அடடா! இந்த வருடம் மாற்று ஏற்பாடுகள் ஏதேனும் செய்யப்பட்டுள்ளனவா. இதுகுறித்து ஆலய நிர்வாகத் தரப்பில் விசாரித்திருப்பீரே?''

``ஆமாம்! கோயிலின் அறங்காவலர் குழுத்  தலைவர் கேசவனிடம் பேசினேன். விழா குறித்து விரிவாகவே பகிர்ந்துகொண்டார் அவர்.

நாரதர் உலா - மீண்டும் கிடைக்குமா தெய்வச் சிலைகள்!

`இந்தாண்டு ஆகம விதிகள் அறிந்த வேத வல்லுநர்களின் ஆலோசனையைப் பெற்று, ஐந்து நாள் விழாவாக நடத்தவுள்ளோம். இதனால், இதுவரையிலும் சில மணி நேரம் மட்டுமே அவசரக்கோலத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த சுவாமி வீதியுலாவும், மாங்கனி இறைத்தல் வைபவமும், இந்த வருடம் பகல் முழுவதும் நடைபெறும் வண்ணம் ஏற்பாடு செய்திருக்கிறோம்.

திருவிழா ஐந்து நாள்கள்தான் என்றாலும் விழாவையொட்டி தொடர்ந்து 30 நாள்கள், சுமார் 4,000  கலைஞர்கள் பங்குபெறும் கலை நிகழ்ச்சிகள் ஆலயத்தில் தினமும் நடக்கும். இந்த நாள்களில், கோயில் அமைந்துள்ள வீதி முழுவதும் சிறப்பு திருவிழாக் கடைகள் அமைக்கவும் ஏற்பாடு செய்துள்ளோம்' என்றார் கேசவன்'' எனக் கூறி முடித்த நாரதர், வேறொரு தகவலைப் பகிர்ந்துகொண்டார்.

நாரதர் உலா - மீண்டும் கிடைக்குமா தெய்வச் சிலைகள்!``கும்பகோணம் - நாச்சியார்கோவில் அருகி லுள்ள ஊர் வடபக்க அக்ரகாரம். இந்த ஊரில்  2000-ம் ஆண்டில் கண்டெடுக்கப்பட்ட சிலைகள் மாயமாகிவிட்டனவாம். நண்பர் ஒருவர் தொலைபேசியில் தெரிவித்த தகவல் இது'' என்றார் நாரதர்.

``விவரமாகச் சொல்லுங்கள் ஸ்வாமி...'' என்று நாம் கேட்டுக்கொண்டதும் அதுபற்றி விரிவாகக் கூறத் தொடங்கினார் நாரதர்.

``இந்த ஊரில் 8.8.2000 அன்று கோவிந்தசாமி என்பவரின் வீட்டுக் குப்பைக்குழியில் பள்ளம் தோண்டியிருக்கிறார்கள். அப்போது நடராஜர், சிவகாமியம்மை, மற்றுமொரு அம்மன் சிலை, இரண்டு நாயன்மார்கள் சிலை ஆகியவையும் இன்னும்சில பூஜைபொருள்களுமாக மொத்தம் 14 பஞ்சலோகப் பொருள்கள் கிடைத்தனவாம்.''

``எந்தக் காலத்தைச் சேர்ந்தவை என்று ஏதாவது அறிய முடிந்ததா?''

``அவை, ஆயிரம் ஆண்டுகள் பழைமையான வையாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தரப்பில் கணிக்கப்பட்டது. ஊர்மக்கள் அந்தச் சிலைகளையும் பொருள்களையும் முறைப்படி பட்டியலிட்டு, ஊரின் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்களாம்.

அப்போது அந்த ஊர் ஆலயம் சிதிலம் அடைந்து இருந்ததால் அந்தச் சிலைகள் அரசின்வசம் ஒப்படைக்கப்பட்டன.

பின்னர், 10 ஆண்டுகள் கழித்து அதாவது 2010-ம் ஆண்டில், அந்த ஊரில் அமைந்துள்ள சிதம்பரேஸ்வரர் ஆலயம் புனரமைக்கப்பட்டு கும்பாபி ஷேகம் நடைபெற்றது.அதன்பிறகு, முறைப்படி அந்தச் சிலைகளை ஊர்க் கோயிலுக்கு வழங்குமாறு, உரிய அரசுத் துறைகளிடம் ஊர்மக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்ட தாம்''

``அது சாத்தியம்தானா?''

``விதிப்படி, ஓர் ஆலயத்தின் 5,00 அடி பரப்பளவுக்குள் சிலைகள் கண்டெடுக் கப்பட்டால், அந்தச் சிலைகள் அந்தக் கோயிலுக்கே சொந்தம். இதன்படியே, இந்தக் கோரிக்கையை முன்வைத்திருக்கிறார்கள். இந்து சமய அறநிலையத்துறையும் இந்தக் கோரிக்கை தொடர்பான பரிந்துரைக் கடிதத்தை வருவாய்த் துறைக்கு அளித்ததாம்.''

``வருவாய்த் துறை சார்பில் என்ன பதில் கிடைத்ததாம்?''

``இதே கேள்வியை, நம்மிடம் இந்தத் தகவலைப் பகிர்ந்துகொண்ட நண்பர் மூலம்,  குறுப்பிட்ட கிராமத்தார் தரப்பில் கேட்டோம். `இந்து சமய அறநிலையத் துறையின் பரிந்துரையை அடுத்து,  2010-ல் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தோம். அதைத் தொடர்ந்து, கும்பகோணம் தாசில்தார் அலுவலகத்தில் கேட்கும்படி அறிவுறுத்தல் கிடைக்கவே, அங்கும் சென்று விசாரித்தோம். அவர்கள் தரப்பில், இதற்கான ஆவணங்கள் ஏதுமில்லை என்கிறார்கள்' என்று வருத்தத்துடன் பகிர்ந்துகொண்டார்கள்.''

விரிவாகப் பேசி முடித்த நாரதரிடம், ``இது தொடர்பாக மேற்கொண்டு நீர் ஏதேனும் விசாரித்தீரா, சம்பந்தப்பட்ட துறைகளில் தகவல்கள் பெற முடிந்ததா'' என்று கேட்டோம்.

 ``வெகுசீக்கிரம் கும்பகோணம் செல்ல வுள்ளேன். உரியவர்களிடம்  நேரில் விசாரித்து, தகவல் சேகரித்தபின் சொல்கிறேன்'' என்றபடியே விடைபெற்றுக்கொண்டார்.

- உலா தொடரும்...