Published:Updated:

வரம் தந்த வரதர்!

வரம் தந்த வரதர்!
பிரீமியம் ஸ்டோரி
வரம் தந்த வரதர்!

வரம் தந்த வரதர்!

வரம் தந்த வரதர்!

வரம் தந்த வரதர்!

Published:Updated:
வரம் தந்த வரதர்!
பிரீமியம் ஸ்டோரி
வரம் தந்த வரதர்!

காஞ்சியை விஷ்ணு காஞ்சி, சிவ காஞ்சி, பெரிய காஞ்சி என்று மூன்று பிரிவாகக் கொள்வர். இவற்றில் விஷ்ணு காஞ்சியில் அமைந்துள்ள ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில் தல வரலாறை, பிரும்மாண்ட புராணம் ஹஸ்திகிரி மகாத்மியம் (18 அத்தியாயங்கள்) மூலம் அறியலாம். இது, பிருகு மகரிஷிக்கு நாரத முனிவர் விவரித்தது என்பர்.

ஒருமுறை திருமகள், கலைமகள் இருவருக்கும் இடையே, ‘தங்களில் பெரியவர் யார்?’ என்ற தர்க்கம் எழுந்தது. இருவரும் பிரம்மாவிடம் சென்று தங்களது சந்தேகத்தைத் தீர்க்குமாறு வேண்டினர்.

‘லட்சுமியே சிறந்தவள்’ என்றார் பிரம்மா. அதனால் கோபம்கொண்ட கலைமகள் பிரம்மனின் சிருஷ்டி தண்டத்தைப் பறித்ததுடன், அவரை விட்டும் பிரிந்து சென்றாள். சிருஷ்டி தண்டம் இல்லாததால் படைப்புத் தொழில் ஸ்தம்பித்தது. அதனால் கலங்கிய பிரம்மன், மகாவிஷ்ணுவைக் குறித்து தவம் இருந்தார். அவர் முன் தோன்றிய மகாவிஷ்ணு, ‘`உமது குறை தீர வேண்டுமானால், நூறு அஸ்வ மேத யாகம் செய்ய வேண்டும். இல்லையெனில், ஒன்றுக்கு நூறாக பலன் தரும் திவ்ய க்ஷேத்திரமான காஞ்சிக்குச் சென்று, அங்கு ஒரு முறை அஸ்வமேத யாகம் செய்ய வேண்டும்’’ என்று அருளி மறைந்தார்.

வரம் தந்த வரதர்!

அதன்படி பூலோகம் வந்த பிரம்மன், காஞ்சியில் அஸ்வமேத யாகத்தைத் தொடங்கினார். பத்தினி இல்லாமல் செய்யும் யாகம் பூர்த்தியடையாது என்பதால், வியாசரை அழைத்து, ‘கலைவாணியை அழைத்து வருக’ என்று கட்டளையிட்டார். ஆனால், கலைவாணி மறுத்துவிட்டாள். எனவே, சாவித்திரிதேவியுடன் யாகத்தைத் தொடங்கினார் பிரம்மன். அதனால் அதீத கோபம்கொண்ட கலைவாணி, யாகத்தைத் தடுக்குமாறு அக்னி, அசுரர்கள் ஆகியோரை ஏவினாள்.

இதையறிந்த பிரம்மன், திருமாலைச் சரணடைந் தார். யாகத்தைக் காக்க திருவுளம்கொண்ட பகவான், கலைவாணியால் ஏற்படுத்தப்பட்ட தடைகளைத் தகர்த்தார். இறுதியில் சரஸ்வதி, நதியாகிப் பிரவாகித்தாள். அப்படி வேகவதியாய் பாய்ந்து வந்த நதியை வழிமறித்து குறுக்காகப் படுத்துக் கொண்டார் மகாவிஷ்ணு. நதி, அங்கேயே தடுத்து நிறுத்தப்பட்டது; வெட்கம் அடைந்த சரஸ்வதி, அந்தர்வாகினியாக பூமிக்குள் மறைந்தாள்!

யாகம் இனிதே நிறைவுற்றது. யாகத்தில் ஜோதிப் பிழம்பாகத் தோன்றிய பெருமாள் சிருஷ்டி தண்டத்தைப் பிரம்மனுக்குத் தந்தருளினார். பிறகு, பிரம்மனின் வேண்டுகோள்படி, அங்கேயே புண்ணியகோடி விமானரூடராக- ஸ்ரீவரதராஜர் எனும் திருநாமத்துடன் கோயில்கொண்டார்.

பெருமாள் சிருஷ்டி தண்டத்தைப் பிரம்மனுக்கு அருளியது, கிருத யுகம் - ஐந்தாவது மன்வந்த்ரம் - யுவ வருடம், விருஷப மாதம் (ரிஷபத்தில் சூரியன் இருக்கும் காலம்) - சுக்ல பட்ச சதுர்த்தசி, அஸ்வ நட்சத்திர நன்னாள் என்பர்.

திருமகள் கலைமகள் இருவரும் பிரம்மனிடம் கேட்ட அதே கேள்வியை இந்திரனிடமும் கேட்டனர். அவனும் ‘திருமகளே சிறந்தவர்’ என்றான். அதனால் சினந்த கலைவாணி, மதங்கொண்ட யானை ஆகும்படி இந்திரனைச் சபித்தாள். இந்திரன் வருந்தினான். அவனை ஆறுதல்படுத்திய மகாலட்சுமி, ‘`நீ பூலோகம் சென்று அங்கு, தண்டகாரண்யத்தில் பிரகலாதனைச் சந்தித்து  ஸ்ரீநரசிம்ம மந்திரத்தை உபதேசம் பெறு. பிறகு, ஸ்ரீவரதராஜ க்ஷேத்திரத்தை அடைந்து தவம் செய்தால் சாபம் நீங்கப் பெறுவாய்’’ என்று அருளினார்.

அதன்படியே காஞ்சியை அடைந்து, தன் இதயத்தில் ஸ்ரீநரசிம்ம மூர்த்தியை வைத்து தியானித்தான். ஸ்ரீநரசிம்ம மூர்த்தி பிரத்யட்சமாகி கஜரூபத்தை இரண்டாகப் பிளந்தார். இந்திரன் சுயரூபம் பெற்றான். பிறகு ஸ்ரீநரசிம்மமூர்த்தி, கஜ ரூபத்தை மலையாகக் கொண்டு குகை நரசிம்மராக அவனுக்கு அருள்பாலித்தார். எனவே, இந்தப் பகுதி ஹஸ்தி கிரி எனப்படுகிறது (ஹஸ்தி - யானை).

அதேபோல், தேவ குருவான பிருஹஸ்பதியும் இந்தத் தலத்துக்கு வந்து வழிபட்டு சாபவிமோசனம் பெற்றாராம். நாமும் காஞ்சிக்குச் சென்று வரதனை வழிபட்டு வாழ்வும் வரமும் பெறுவோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism