இருந்தபடி ஆடும் சபைக்கூத்து

நடராஜப் பெருமான், அமர்ந்தபடியே யோக ராஜனாக இருந்தும் ஆடுகின்றார். இது, `இருந்ததும் கூத்து' எனப்படும். இருந்ததும் கூத்தர் `தியாகராஜர்' எனப்படுகிறார். அவர் இருந்தபடியே ஆடும் இடமும் சபை என்றே அழைக்கப்படுகிறது.

அதில் அரச சபைக்குரிய வீரவாள், அஷ்ட மங்கலம், இன்னிசை ஆடல்பாடல்கள் நிறைந்திருக்கின்றன. தியாகராஜரின் நடனம் யோகியர்களால் கொண்டாடப்படும் சபையாதலால் யோக சபை எனப்படுகிறது. அவரது வித்தை, யோக வித்தையாகும். பிரபஞ்சத்தை நடத்துபவராகச் சபையில் கொலுவீற்றிருக்கும் ஈசனும் சபாநாயகன் எனப்படுகிறார்.

ஞான சபை நாயகன்

சிவபெருமான் வைரவ மூர்த்தியாக எழுந்தருளி யுள்ள திருப்புத்தூரிலுள்ள சபையை சப்த தாண்டவ சபைகளில் ஒன்றாகக் கொண்டுள்ளனர். திருப்புத்தூர் புராணம் இந்தச் சபையை கௌரி தாண்டவ சபை எனச் சிறப்பிக்கிறது. அதேபோல், வழுவூர் வீரட்டகாசர் ஆலயத்தில் பெரிய சபையில் கஜசம்ஹாரராக அருள்கிறார், ஈசன்!

கீழ்வேளூர் அட்சய தாண்டவம்

நாகப்பட்டினம் - திருவாரூர் வழியில் உள்ள கீழ்வேளூரில், பெருமான் பத்து கரங்களுடன் அட்சய தாண்டவத்தை ஆடுகிறார். இது பெருமான் ஆடும் காப்புத் தாண்டவமாகும்.

பிரம்மனும் லட்சுமியும் கரத் தாளமிட, நந்தி மத்தளம் முழக்க, இந்திரன் வேணு கானம் இசைக்க, திருமால் மிருதங்கம் வாசிக்க பெருமான் ஆடும் கூத்தை அகத்தியரும் லோபாமுத்திரையும் கண்டுகளிக்கின்றனர். இதைச் சந்தியா தாண்டவம் எனவும் அழைக்கின்றனர்.

கால் மாறி ஆடிய கருணை...

மதுரை மன்னன் ராஜசேகர பாண்டியன், பரதக்கலையைத் தவிர மற்ற எல்லா கலைகளையும் கற்றவன். ஒருமுறை ஆடல் கலையில் சிறந்த ஒருவன் பாண்டியனிடம் பரிசில் பெற்றான்.

அப்போது அவன், ‘ஆடல் கலையைப் பயிலாத உனக்கு எண்ணெண் கலைவல்லான் (அறுபத்து நான்கு கலைவல்லான்) என்ற பெயர் பொருத்தமில்லை' என்று பாண்டியனை இகழ்ந்தான். அதனால் பாண்டியன், இறைவன் ஆடும் அற்புத பரதக் கலையையும் பயின்றான். அப்போது, ஒரு தாளை ஊன்றி மற்றொரு தாளை வளைத்து ஆடியபோது, பாதங்களும் உடலும் நோவதை உணர்ந்தான். சிறிது நேரம் ஆடும் தமக்கே இத்தனை வலியென்றால், சகல ஜீவன்களுக்காக எந்நேரமும் வெள்ளியம்பலத்தில் கால் ஊன்றி நின்றிருக்கும் எம்பெருமானுக்கு எப்படி வலிக்கும் என்று பெரிதும் வருந்தினான்.

பக்தனின் வருத்தத்தை ஈசன் உணர்ந்தார். உடனே ஆடினார். ஆம், வெள்ளியம்பலத்தில் பதஞ்சலியும் வியாக்கிரபாதரும் காண ஆடிக் கொண்டிருந்த கூத்தினை விடுத்துப் புதுமையாக பாதம் மாற்றி வேகமாக அதிரவீசி ஆடினார். இந்தக் கூத்தினைக் கண்ட பாண்டியன் ஆனந்தம் அடைந்தான். அவனின் வேண்டுதலுக்காக வெள்ளியம்பலத்தான் அப்படியே கால் மாறி நின்றார். இப்படி பாண்டியனுக்காக மாறியாடிய சொக்கருக்கு அதிரவீசியாடுவார், மாறியாடிக் கொடியிட்ட பெருமாள் என்ற பெயர்களும் உண்டாயின.

அம்பலத்தின் வகைகள்

அம்பலம் என்பது சோலைகளின் நடுவில் பெரிய மரத்தின் கீழ் அமைந்த மேடையாகும். ஆதியில் தில்லை வனத்தின் நடுவே இருந்த பெரிய ஆலமரத்தின் கீழே அமைந்திருந்த மேடையில் பெருமான் ஆடினார். அதையொட்டியே அது அம்பலம் எனப்பட்டது.

அம்பலம் என்னும் பெயராலேயே ஐம்பெரும் சபைகளும் அழைக்கப்படுகின்றன. சிதம்பரம் - சிற்றம்பலம், தில்லையம்பலம், பொன்னம்பலம் என்றும்; மதுரையில் உள்ள சபை வெள்ளியம்பலம் என்றும்; திருவாலங்காட்டுச் சபை மணியம்பலம் என்றும்; திருநெல்வேலி சபை செம்பொன் அம்பலம் என்றும்; திருக்குற்றாலச் சபை ஓவிய அம்பலம் என்றும் அழைக்கப்படுகின்றன.

தாண்டவ வகைகள்

ஏழு தாண்டவங்களை இறைவன் ஆடுவதாகக் கூறுவர். அவற்றை சப்த தாண்ட வங்கள் என்று போற்றுகின்றன ஞானநூல்கள்.

தில்லை: ஆனந்த தாண்டவம்.
மதுரை: சந்தியா தாண்டவம்
திருப்புத்தூர்: கௌரி தாண்டவம்
குற்றாலம்: திரிபுர தாண்டவம்.
திருவாலங்காடு: காளிகா
தாண்டவம்
திருநெல்வேலி: முனிதாண்டவம்

இவை தவிர, பயங்கரமாகத் திகழும் காட்டில், இறைவன் சங்கார தாண்டவத்தை ஆடுவதாக திருப்புத்தூர் புராணம் கூறுகிறது.

திரிபுர தாண்டவம்

திருமூலர் சிவபெருமானின் திரிபுர தகனத்தைப் பற்றிக் கூறும்போது...

அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்
முப்புரமாவன மும்மல காரியம்
அப்புறம் எய்தமை யார் அறிவாறே

என்று திருமந்திரத்தில் அருளிச் செய்துள்ளார்.

ஆன்மாவில் படிந்துகிடக்கும் மும்மலமே முப்புரங்கள். இறைவன் இந்த மூவினைத் தொகுதி களை அழித்து, தன்னை உணரும் ஞானத்தை அருள்கிறார். மும்மலமாகிய முப்புரக் கோட்டையை அழித்து பெருமான் அருள்புரிந்து ஆடுகிறார். எனவே, இந்த ஆட்டம் திரிபுர தாண்டவம் எனப் படுகிறது.