மருத்துவ குணம் மிகுந்த விருட்சம் அது; `Ficus’ குடும்பத்தைச் சேர்ந்தது. இந்தக் குடும்ப வகை விருட்சங்கள் நான்கு வகையாகப் பிரித்துப் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றில் `Race Mosa’ என்ற வகையை `cluster fig tree’ என்றும் ஆய்வாளர்கள் அழைப்பார்கள்.

`என்ன இது... சம்பந்தம் இல்லாத விஷயத்தை இந்த ஆன்மிகக் கட்டுரையில் எழுதுவதன் காரணம் என்ன’ என்று நீங்கள் கேட்கலாம். காரணம் இருக்கிறது!

இந்த மரத்தின் பட்டை, இலைகள், பழங்கள், வேர் உள்ளிட்ட அனைத்தும் மருத்துவ குணம் வாய்ந்தவை என்று ஆயுர்வேத மருத்துவர்களும் ஆங்கில மருத்துவர்களும் ஒருசேர ஒப்புக்கொண்டுள்ளனர்.

அந்த மரம்தான் அத்தி!

மிகப் பொருத்தமாக ஆழ்வார்களும் ‘மருத்துவனாய் நின்ற மாமணி வண்ணன்’ என்று அத்திவரதனை ஆராதிக்கிறார்கள். ஆம்! அண்டர் தொழும் அத்திவரதன் அத்தி மரத்தால் செய்யப்பட்டவர். சத்ய யுகத்தில் பிரம்மனால் தொழப்பட்ட அருள்மிகு அத்திவரதன் 40 ஆண்டுகளுக்குப் பிறகு அனந்தசரஸ் திருக்குளத்திலிருந்து எழுந்தருளி நம்மை ஆட்கொள்ள வருவது நாம் செய்த தவம் என்றே சொல்லலாம்.

ஸ்ரீவரதனைப் பூதத்தாழ்வார், நாதமுனிகள், ஆளவந்தார், ஸ்ரீராமாநுஜர், கூரத்தாழ்வான், பராசரபட்டர், நடாதூர் அம்மாள், அப்பிளார், வேதாந்த தேசிகர், மணவாளமாமுனிகள் போன்ற உயர்ந்த ஆசார்யர்கள் போற்றிப் பணிந்துள்ளார்கள்.

தாய் தன் குழந்தையைப் போற்றுவதும், கணவன் தன் மனையாளை வர்ணிப்பதும், குரு தன் சிஷ்யனை மெச்சுவதும் போன்று, திருமாலை அவரின் அடியார்கள் கொண்டாடுவது வியப்பான காரியம் இல்லைதான். ஆனால், வரதன் அவர் அடியார்களுக்குக் கொஞ்சம் விசேஷமானவர். ஆம், அவர் மதங்களைக் கடந்தவர் என்றே சொல்லலாம்.

`எப்போதும் எனக்கு வரதரே!’

‘யஜுர்வேதியாக நான் பிறக்கவில்லையே. அப்படிப் பிறந்திருந்தால், சிவனைப் போற்றும் ஸ்ரீருத்ரம் எனக்குப் பாடம் ஆகியிருக்குமே’ என்று பரிதவித்துப் பாடிய மகான் அப்பய்ய தீட்சிதர். அத்வைத சித்தாந்தத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அப்படிப்பட்டவர் வடமொழியில் எழுதிய ‘வரதராஜ ஸ்தவம்’ என்ற ஸ்தோத்திரப் பாடல்களைக் கேட்டால், இவர் வரதன் மீது எத்தனை வாஞ்சை உள்ளவர் என்று அறிந்துகொள்ளலாம். வரதன் மீது அவர் கொண்டிருந்த தூய காதலை மனமுருகி அனுபவிக்கலாம்.

‘வரதனின் கண்கள் தாமரை மலர்களைப் போன்றவை’ என்று கவிஞர்கள் வர்ணிப்பார்கள். `அது ஏமாற்று வேலை. அத்திவரதனின் கண்கள் வேதங்களாலும் வர்ணிக்க முடியாதவை’ என்கிறார் தீட்சிதர். `மானின் கண்களைப் போன்ற விழிகளைக் கொண்ட வரதனின் அழகைக் கண்டு, தானும் அதுபோன்ற முக பிம்பத்தைப் பெற்றுவிடலாம் என்று எண்ணுகிறான் சந்திரன். அது முட்டாள்தனமானது’ என்றும் கூறுகிறார்.

ஒருமுறை, தீட்சிதரிடம் ஒருவர் வந்து `‘ஐயா இவரோ வரதன் என்ற திருநாமம் கொண்டவர். ஆனால், இவருடைய திருக்கரமோ வரஹஸ்தமாக இல்லாமல் அபயஹஸ்தமாக இருக்கிறதே, ஏன்’’ என்று வினவினாராம். அதற்கு அப்பய்ய தீட்சிதர் சிரித்துக்கொண்டே ‘`தேவாதிதேவர்களால் புருஷோத்தமன் என்று போற்றப்படுபவன் இந்த வரதன். புருஷன் என்றால் கொடுத்துக் கொடுத்து கைகள் நீண்டவர் என்று பொருள். அப்படிப்பட்ட வரதன் அபயஹஸ்தம் வைத்திருந்தால் என்ன, வரஹஸ்தம் வைத்திருந்தால்தான் நமக்கென்ன... அவன் எப்போதும் எனக்கு வரதனே’’ என்றாராம்.

சங்கீர்த்தனாசார்யர் என்று போற்றப்படும் அன்னமாசார்யர் தன் பாடல்களில் ‘காஞ்சி வரதுணிகி’ என்று போற்றுவது குறிப்பிடத் தக்கது. புரந்தரதாசரோ, புண்ணியகோடி விமானத்தின் கீழ் அருள்பாலிக்கும் வரதனைக் காணும் கண்களுக்குத் திருப்பல்லாண்டு பாடுகிறார் (கண்ணாரக் கண்டேனோ அச்சுதன், காஞ்சி புண்ணியகோடி கரிராஜ வரதன்...)!

சிருங்காரம் எனப்படும் காதல் ரசம் மிகுந்த பாடல்களை இயற்றிய முன்னோர்களில் முக்கியமானவர் க்ஷேத்ரக்யர். இவரது இயற்பெயர் வரதப்பா. இவர், காதல்வயப்பட்ட ஒரு பெண்ணைப் போல் வரதனின் மீது முப்பதுக்கும் மேற்பட்ட கீர்த்தனைகளை அருளியுள்ளார். ‘காஞ்சி வரதனே, நான் கொண்ட தீவிரமான காதலுக்கு இதுதான் பரிசா, என்னைத் தவிக்கவிடுவதில் உனக்குப் பெருமையா, அவள் (பெருந்தேவித் தாயார்) உன்னை இந்த அளவுக்குப் பழக்கிவைத்துள்ளாளா’ என்று சுந்தரத் தெலுங்கில் பாடியுள்ளார்.

கர்னாடக சங்கீதத்தில் மும்மூர்த்திகள் என்று போற்றப்படுபவர்கள் தியாகய்யர், ஷ்யாமா சாஸ்திரிகள், முத்துசாமி தீட்சிதர். இவர்கள், தங்களின் இஷ்ட தெய்வங்களை மட்டுமன்றி, திவ்ய ஸ்தலங்கள் தோறும் சென்று ஆண்டவனைப் பாடி வழிபடுவது வழக்கம். இந்த மூவரும் பாடிய ஒரே திருமால் ஆலயம், காஞ்சி வரதர் உறையும் இடம் மட்டுமே.

`அத்தி வரதன் அமரும் திருக்குளம், கலியுகத்தில் நாம் செய்யும் பாவங்களைப் போக்கவல்லது’ என்கிறார் முத்துசாமி தீட்சிதர். வரதன் தாங்கும் ஹஸ்தகிரியை வைகுந்தம் என்று பாடுகிறார், தியாகய்யர்.

ஷ்யாமா சாஸ்திரிகள், கருடசேவை நிகழ்வை வியந்து பாடுகிறார். இப்படி, மூன்று சங்கீத மேதைகளும் பாடித்தொழுத வரதராஜர் கலியுகத்தின் கற்பக விருட்சம். அவரை இந்த 48 நாள்களில் சென்று கண்ணார மனமாரத் தொழுதால், வேண்டியவை அனைத்தும் கிட்டும்; அந்திமக் காலத்தில் அமைதி கிட்டும்; ஆவி பிரிந்தபின் வைகுந்த மோட்சம் கிட்டும்.

வரங்களை அள்ளித் தருவதில் தயாள குணம் கொண்ட வரதனை எந்நாளும் சேவிப்போம்!