Published:Updated:

மழலை வரம் அருளும் மாங்கனித் திருவிழா!

மழலை வரம் அருளும் மாங்கனித் திருவிழா!
பிரீமியம் ஸ்டோரி
மழலை வரம் அருளும் மாங்கனித் திருவிழா!

அருள்செய் சிவனே!

மழலை வரம் அருளும் மாங்கனித் திருவிழா!

அருள்செய் சிவனே!

Published:Updated:
மழலை வரம் அருளும் மாங்கனித் திருவிழா!
பிரீமியம் ஸ்டோரி
மழலை வரம் அருளும் மாங்கனித் திருவிழா!
மழலை வரம் அருளும் மாங்கனித் திருவிழா!

காரைக்கால் அம்மையார், அறுபத்து மூன்று நாயன்மார்களில் சிறப்பான இடத்தைப் பெற்றவர்.

இறைவனால் ‘அம்மையே’ என்று அழைக்கப்பெற்ற பெருமையுடையவர்.அம்மையார் பிறந்து வளர்ந்த காரைக்காலில், அவர் வரலாற்றைப் போற்றும் வகையில், ஆண்டுதோறும் ஆனி மாதம் பௌர்ணமி நாளில், வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது மாங்கனித் திருவிழா!

மழலை வரம் அருளும் மாங்கனித் திருவிழா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தாண்டு வரும்  ஜூலை மாதம் 13, 14, 15, 16, 17 ஆகிய தேதிகளில் இவ்விழா நடைபெறவுள்ளது. விழாவின் முக்கிய வைபவங்களான ‘மாங்கனி இறைத்தல்’ மற்றும் ‘அமுது படையல்’ ஆகியவை ஜூலை 16 -ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறுகிறது.

மழலை வரம் அருளும் மாங்கனித் திருவிழா!மாங்கனித் திருவிழாவின் மகிமை குறித்து  பரவசத்துடன் நம்மிடம் பகிர்ந்துகொண்டார், சிவஸ்ரீ பால.சர்வேச்வர குருக்கள். இவர், காரைக்கால் அம்மை சந்நிதிகொண்டிருக்கும்  ஸ்ரீகயிலாசநாத ஸ்வாமி திருக்கோயிலில் ஏழு தலைமுறையாக பூஜை செய்து வரும் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

“ஆனி மாதம் பௌர்ணமித் திருநாளன்று, சிவபெருமான் அடியார் கோலத்தில் - பவழக் கால் விமானத்தில் பத்மாசனத்தில் அமர்ந்து, வேதபாராயணம் மற்றும் வாத்தியங்கள் முழங்க திருவீதியுலா வருவார். அப்போது பக்தர்கள், புஷ்பங்களை வாரியிறைப்பதுபோல் மாங்கனிகளை இறைப்பார்கள்.

அப்படி இறைக்கப்படும் மாங்கனிகளை, குழந்தை வரம் வேண்டுவோர் தங்கள் கைகளால் பிடித்துச் சாப்பிட்டால், விரைவில் குழந்தை வரம் கிடைக்கும். அப்படி வரம் வாய்க்கப் பெற்றவர்கள், வேண்டுதல் பலித்தவர்கள் அடுத்த ஆண்டு விழாவின்போது, நேர்த்திக்கடனாக மாம்பழங்களை வாரி இறைப்பார்கள். சகல மதத்தைச் செர்ந்த அன்பர்களும் குழந்தை வரம் வேண்டி இந்த வைபவத்தில் பங்கேற்பார்கள். இந்த விழாவின் மகத்துவம் அப்படி.

மழலை வரம் அருளும் மாங்கனித் திருவிழா!

சுவாமி வீதியுலா முடிந்து கோயிலுக்கு வந்து சேரும்போது, தயிர் அமுதத்துடன் மாங்கனியை வைத்துப் படைத்து நிவேதனம் செய்வர். அந்தப் பிரசாதத்தைப் பெற்று உண்போர்க்கு, நினைத்தக் காரியம் கைகூடும்; திருமணத்தடை அகலும்; குழந்தை பாக்கியம் கிட்டும்.

அம்மையார் கோயிலில் நடந்த இரண்டு நிகழ்வுகள், இப்போது நினைத்தாலும் என்னை மெய்சிலிர்க்க வைக்கும். 1981-ல் என் தந்தையார் அம்மையார் கோயிலுக்குப்  பூஜை செய்து வந்தார். அப்போது கோவையிலிருந்து ஒரு குடும்பம் தரிசனத்துக்காக வந்தது. அவர்களில் ஒரு பெண் குழந்தை, கண் மூடி அம்மையாரை தியானித்து வணங்கும்போது திடீரென ஆவேசம் வந்து ஆடி, அங்குள்ள அனைவருக்கும் அருள்வாக்கு சொன்னாள். 

மழலை வரம் அருளும் மாங்கனித் திருவிழா!

என் தந்தையிடம், `உன் மகளுக்கு முப்பது வயதாகியும் திருமணம் நடக்கவில்லையே என்று  கவலைப்படுகிறாய். கலங்காதே! அம்மையார் அருளால் , இந்தாண்டே  உன் மகள் திருமணமும் நடக்கும்; இக்கோயிலின் திருப்பணியும் நடக்கும்” என்று அவள் சொன்னபோது நாங்கள் திகைத்து விட்டோம்! அவளின் அருள்வாக்குப்படியே, கோயில் கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது; என் சகோதரியின் திருமணமும் நல்லபடியாக நடந்தது. 

2009-ல் அம்மையார் கோயில் கும்பாபிஷேகம் நடந்தபோது, நானும் என் மனைவியும் அம்மையாருக்கு நெய் வாங்கிக் கொடுத்துவிட்டு, திருப்பணிக் கமிட்டியினருக்கு  நன்றி தெரிவிக்கும் வகையில், அனைவருக்கும் சால்வை போட்டு, ருத்திராட்ச மாலை அணிவித்தேன்.

அந்த நிகழ்ச்சி முடியும் தருணத்தில், வயதான பாட்டி ஒருவர் என்னிடம் வந்து, ‘எனக்கேதும்  தர மாட்டியா ...' என்று சிரித்தபடியே கையேந்தி நின்றார். நான் திகைத்துப்போனேன். காரணம், அந்த நேரத்தில் என்னிடம் வேறெதுவும் இல்லை. பணமும் எடுத்துச் செல்லவில்லை. எனினும், நண்பர் மூலம் ஏழு கஜம் புடவை ஒன்று வாங்கி வரச்சொல்லி, பாட்டியிடம் கொடுத்தேன். சந்தோஷமாகப் பெற்றுக்கொண்டார்.

அந்தக்  காரைக்கால் அம்மையாரே நேரில் வந்து வாங்கிக்கொண்டதுபோல் தோன்றியது எனக்கு. அவரை வணங்கும்விதமாய், நான் கண் மூடி கைகூப்பினேன். பிறகு, கண் திறந்து பார்த்தால், அவரைக் காணவில்லை. என்னால் மறக்கமுடியாத அருள் சம்பவம் இது!''

மு. இராகவன் - படங்கள்: குருஸ்தனம்  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism