வரதராஜர் கோயிலிலுள்ள ‘வையமாளிகை பல்லி’ தரிசனம் சிறப்பானது. ஸ்ரீஸ்ருங்கி பேரர் எனும் முனிவரின் குமாரர்கள் ஹேமன் மற்றும் சுக்லன். இவர்கள், கௌதம முனிவரிடம் வேதம் பயின்றுவந்தனர். தினமும் குருவின் பூஜைக்குத் தேவையான தீர்த்தம் மற்றும் ஹோம சமித்துகளைச் சேகரித்துத் தருவது இவர்களின் வழக்கம். ஒருநாள் குருவுக்கு முன்னால் வைத்திருந்த தீர்த்தக் குடத்திலிருந்து இரண்டு பல்லிகள் துள்ளிக் குதித்து வெளியேறின.

சீடர்களது கவனக்குறைவுதான் இதற்குக் காரணம் என்று எண்ணிய கௌதமர், இருவரையும் பல்லிகளாகும்படி சபித்தார். பிறகு, தவறுணர்ந்து சாப விமோசனம் வேண்டிய சீடர்களிடம், ``ஒன்றுக்கு நூறாகப் பலன் தரும் சத்ய விரதத் தலத்துக்குச் (காஞ்சி) சென்று ஸ்ரீவரதராஜரை தியானித்து தவம் செய்தால் நலம் பெறலாம்!’’ என்றார் குரு. அதன்படியே, சீடர்கள் இருவரும் பல்லி ரூபத்தில் இங்கு வந்து தவம் செய்தனர். பிற்காலத்தில், யானை ரூபத்திலிருந்த இந்திரன், ஸ்ரீநரசிம்மர் அருளால் சுயரூபம் அடைந்தபோது இவர்களும் சாப விமோசனம் பெற்றனர்.

இவர்களின் கதையைக் கேட்டறிந்த இந்திரன் தங்கம், வெள்ளியாலான இரு பல்லி ரூபங்களை இங்கு பிரதிஷ்டை செய்தான். `இதைத் தொட்டு வணங்குபவர்களுக்கு சகல தோஷங்களும் பாவங்களும் நீங்கி, ஐஸ்வர்யங்கள் பெருகும்’ என்பது ஐதீகம்.

அயோத்தி மன்னன் சகரனின் மகன் அசமஞ்சனும், அவன் மனைவியும் சாபத்தால் பல்லிகள் ஆகினர். பின்னர் உபமன்யு முனிவரின் அறிவுரைப்படி இங்கு வந்து ஸ்ரீவரதராஜரை தரிசித்து அருள்பெற்றனர். இவர்கள் நினைவாக அமைந்ததே பல்லி ரூபங்கள் என்றும் ஒரு தகவல் உண்டு.

படங்கள் : சொ.பாலசுப்பிரமணியன்
அட்டைப்படம் : கேசவபாஷ்யம்.VN