Published:Updated:

வடபழனி முருகன் கோயிலில் தெப்பத் திருவிழா!

வடபழனி முருகன் கோயிலில் தெப்பத் திருவிழா!
வடபழனி முருகன் கோயிலில் தெப்பத் திருவிழா!

சென்னை வடபழனி தண்டாயுதபாணி சுவாமி  கோயிலில் இன்று, பங்குனி தெப்பத் திருவிழா  நடைபெறுகிறது. ஒவ்வோர் ஆண்டும் இக் கோயிலில் பங்குனி மாதத்தில் லட்சார்ச்சனை மற்றும் தெப்பத்திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு திருவிழா, இன்று (மார்ச் 18) திங்கள்கிழமை தொடங்கியது. இந்தத் திருவிழா 21-ம் தேதி வரை நடக்கிறது  

இதையொட்டி, இன்று அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு முருகனுக்கு சிறப்பு அலங்காரமும் அபிஷேகமும் நடைபெற்றது. பின்னர், லட்சார்ச்சனை செய்யப்பட்டது.

முதல்நாள் தெப்பத்தில் தண்டாயுதபாணி திருக்கோலத்திலும், இரண்டாம் நாளில் வள்ளி, தெய்வானையுடன் சண்முகராகவும் முருகக்கடவுள் எழுந்தருள்கிறார்.

மூன்றாம் நாளில், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமண்ய சுவாமியாகக் காட்சிகொடுப்பார். வரும் 22-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை தினமும் இரவு 7 மணிக்கு தெப்பக்குளத்தில் உள்ள நீராழி மண்டபத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

இந்த விழாவையொட்டி, திருக்கோயிலில் யாகங்களும், ஆறுகாலபூஜைகளும் தினமும் நடைபெறும்.

விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள் என்பதால், அங்கு ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.