Published:Updated:

பால் குடம் எடுத்தா... சந்தோஷம் பொங்கும்!

தைப்பூச தரிசனம்!

பால் குடம் எடுத்தா... சந்தோஷம் பொங்கும்!

தைப்பூச தரிசனம்!

Published:Updated:
பால் குடம் எடுத்தா... சந்தோஷம் பொங்கும்!
பால் குடம் எடுத்தா... சந்தோஷம் பொங்கும்!

'பொறையார் முருகன்கிட்ட வேண்டிக்கிட்டா, நம்ம குறைகளையெல்லாம் தீர்த்து வைப்பார் முருகப்பெருமான்’ எனச் சொல்லிச் சொல்லிப் பூரிக்கின்றனர், நாகை மாவட்ட மக்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது பொறையார். இங்கே, தன்னை நாடி வருவோருக்கெல்லாம் அருளையும் பொருளையும் வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார் கந்தகுமாரன்.

பொறையார், தரங்கம்பாடி மட்டுமின்றி நாகை மாவட்ட மக்கள் பலரும், இதனை முருகன் கோயில் என்று சொல்வதில்லை; குமரக்கோயில் என்றுதான் சொல்கிறார்கள். புராதனம் மிக்க அழகிய ஆலயம் இது!

மாதந்தோறும் கார்த்திகை நட்சத்திர நாளில், இங்கு ஏராளமான அன்பர்கள் வந்து வணங்கிச் செல்வார்கள் என்றாலும், வைகாசி விசாகமும் தைப்பூச விழாவும் வெகு விமரிசையாக நடந்தேறுகின்றன.

##~##
ஸ்ரீவள்ளி- தெய்வானை சமேதராக முருகப்பெருமான் அழகுறக் கோயில் கொண்டிருக்கிறார் இங்கே! தைப்பூச நன்னாளில், முருகப் பெருமானுக்கு சந்தனம், குங்குமம் மற்றும் விபூதியால் அபிஷேகம் செய்வதும் அதனைத் தரிசிப்பதும் சிறப்பு என்கின்றனர் பக்தர்கள்.

காலையில் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள், மதியத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம், மாலையில் முருகப்பெருமான் திருவீதியுலா என தைப்பூச நாள் முழுவதும் கோலாகலம்தான்; கொண்டாட்டம்தான்!

குமரக் கடவுளிடம் குழந்தை வரம் கேட்டு வேண்டிக் கொண்டால், விரைவில் வரம் வழங்கி மகிழ்வான் என்பது இந்தப் பகுதி மக்களின் நம்பிக்கை. அப்படிப் பிள்ளை பாக்கியம் பெற்றவர்கள், தங்கள் குழந்தைகளுடன் வந்து பால் குடம் எடுத்து வந்து, நேர்த்திக்கடனைச் செலுத்தி, சிவகுமாரனை தரிசித்துச் செல்வார்கள். அவர்களின் வாழ்க்கையில், நிம்மதியையும்  சந்தோஷத்தையும் பொங்கச் செய்வான் கந்தகுமாரன்.  

தவிர, பிள்ளை பாக்கியம் மற்றும் திருமண வரம் கிடைக்க வேண்டும் என்று முருகப்பெருமானுக்கு எலுமிச்சை மாலை சார்த்துவதும் இங்கு நடைபெறுகிறது. கோயிலில் உள்ள அரச மரத்தில் தொட்டில் கட்டி வழிபட்டால், விரைவில் வீட்டில் தொட்டில் சத்தம் கேட்கும் என்றும், மாங்கல்யச் சரடு கட்டி வேண்டிக்கொண்டால், விரைவில் வீட்டில் கெட்டிமேளச் சத்தம் கேட்கும் என்றும் பெருமிதத்துடன் தெரிவிக்கின்றனர், பக்தர்கள்.

மேலும், செவ்வாய் மற்றும் சர்ப்ப தோஷம் உள்ளவர்கள், முருகப்பெருமானை வழிபட்டு, கோயிலில் உள்ள ஸ்ரீநாகநாத ஸ்வாமிக்கு பால் வைத்து ஒன்பது செவ்வாய்க்கிழமைகள் வந்து வழிபட்டால், தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

           - மா.நந்தினி
படங்கள்: இ.ராஜவிபீஷிகா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism