Published:Updated:

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தில் குரு பெயர்ச்சி விழா

Vikatan Correspondent
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தில் குரு பெயர்ச்சி விழா
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தில் குரு பெயர்ச்சி விழா
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தில் குரு பெயர்ச்சி விழா

வலங்கைமான்: குரு பகவான் இன்று இரவு ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பிரவேசிக்கிறார். இதையொட்டி ஆலங்குடியில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் கோயில் உள்ளது. தேவார பாடல் புகழ் பெற்ற தலமான இக்கோயில், நவகிரகங்களில் ஒன்றான குரு பரிகார தலமாக விளங்குகிறது.

இக்கோவிலில் ஆண்டுதோறும் குரு பெயர்ச்சி விழா சிறப்பாக நடந்து வருகிறது. குரு பகவான் இன்று இரவு 9.00 மணிக்கு ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பிரவேசிக்கிறார். ஒரு ராசியில் ஓராண்டு காலம் தங்கும் இவர் மிதுன ராசியில் 12 ஜூன் 2014 வரை சஞ்சரிப்பார்.

குரு பார்க்க கோடி நன்மை என்பது ஜோதிட பழமொழி. குருவின் பார்வையால் தான் ஒரு மனிதன் வாழ்வில் திருமணம், குழந்தைப்பேறு, பண வரவு, கல்வியறிவு, சமூக கௌரவம் போன்றவை கிடைக்கும். குரு இருக்கும் இடத்தைவிட, அவரது பார்வை படும்கு இடத்திற்கு பலம் அதிகம். இந்த குரு பெயர்ச்சியால் ரிஷபம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகிய 5 ராசியினருக்கு நன்மை கிடைக்கும். மேஷம், மிதுனம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய 7 ராசியினருக்கு சுமாரான பலன்கள் கிடைக்கும். இதனால் மேஷம், மிதுனம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்வது நல்லது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

##~~##
இதையடுத்து ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் முதல்கட்ட லட்சார்ச்சனை கடந்த 16 முதல் 23ஆம் தேதி வரை நடந்தது. 2ஆம் கட்ட லட்சார்ச்சனை குரு பெயர்ச்சிக்கு பிறகு, வரும் 30 முதல் ஜூன் 6ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த லட்சார்ச்சனை காலை 9 முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 4.30 முதல் இரவு 8 மணி வரையும் நடைபெற உள்ளது.
இந்த விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. லட்சார்ச்சனையில் கலந்துகொள்ள பல பகுதிகளில் இருந்தும், லட்சக்கணக்கில் பக்கதர்கள் வருவார்கள் என்பதால் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.