Published:Updated:

கல்லில் செதுக்கப்பட்ட பெரியபுராணம் - தாராசுரம் #மின்னிதழ்

சி.வெற்றிவேல்
கல்லில் செதுக்கப்பட்ட பெரியபுராணம் - தாராசுரம்  #மின்னிதழ்
கல்லில் செதுக்கப்பட்ட பெரியபுராணம் - தாராசுரம் #மின்னிதழ்

தில்லை நடராஜரே `உலகெலாம்’ என்று அடியெடுத்துக் கொடுத்து எழுதப்பட்ட நூல் பெரியபுராணம். இது, இரண்டாம் குலோத்துங்கச் சோழனின் அவையிலிருந்த தெய்வப் புலவர் சேக்கிழாரால் எழுதப்பட்டது. ஆனால், குலோத்துங்கனின் மகனான இரண்டாம் ராஜராஜன் தனது தந்தையை விஞ்சும் விதமாக, ஒரு பெருங்கோயிலை எழுப்பி அதில் அறுபத்து மூவர் வரலாற்றைச் சிற்பங்களாகச் செதுக்கினான். அதுதான் தாராசுரத்தில் அமைந்திருக்கும் `ஐராவதேசுவரர் கோயில்'. கல்லிலே வடிக்கப்பட்ட பெரியபுராணம்தான் தாராசுரம், ஐராவதேசுவரர் கோயில் என்றால் மிகையாகாது. எங்கெல்லாம் சிற்பங்களைச் செதுக்கி பெருமை சேர்க்க முடியுமோ, அங்கெல்லாம் சிற்பங்களைச் செதுக்கியிருப்பார்கள் சோழ சிற்பிகள். தெய்வங்களின் உருவப் பெருஞ்சிற்பங்கள், ராமாயணம் மற்றும் மகாபாரதக் கதைக் காட்சிகள், அங்குல அளவிலான குறுஞ்சிற்பங்கள் என்று கோயில் முழுவதும் கலைக் கூடமாகத் திகழ்கிறது. 

சூரியனை, `சிவசூரியன்' என்று அழைக்கும் மரபு சைவத்தில் உண்டு. கோயிலின் கிழக்குப் பகுதியில் உள்ள கோஷ்டமாடத்தில், 8 கைகள், 4 தலைகளோடு அர்த்தநாரி வடிவத்தில் சூரியனுடைய சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இதை, `அர்த்தநாரி சூரியன்' என்று கல்வெட்டுகளில் பொறித்து வைத்திருக்கிறான். 

பிராகாரத்தைச் சுற்றியுள்ள திருச்சுற்று மாளிகையில் ஓரடி உயரத்தில் 108 சிவனடியார் சிற்பங்கள் இடம் பெற்றிருக்கின்றன. ஒவ்வொருவரின் தலைக்கு மேலும் அவர்களுடைய ஊர், பெயர், தீட்சை பெற்றபிறகு சூட்டப்பட்ட  பெயர் ஆகியன கல்வெட்டுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு, அதில் இடம்பெற்றுள்ள ஒரு பெயர், `குடவாயில் கிழார் உமாபதி ஆழ்வாரான சிகாசிவர்'. 

இந்தக் கோயிலின் கருவறை விமானம் 2 தள அமைப்புகளைக் கொண்டது. முதல் தளத்தில் 8 நதிப்பெண்களின் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. கங்கை, யமுனை, காவிரி உள்ளிட்ட அந்த நதிப் பெண்களின் சிற்பங்கள் அற்புதமானவை. இடுப்புக்கு மேல் பெண் வடிவாகவும், இடுப்புக் கீழ் நீர்ச்சுழலாகவும் அந்தச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. 

இது போன்ற அரிய தகவல்களை அறிந்துகொள்ள, பங்குனி மாத `இறையருள்' இதழை வாசியுங்கள்...

இனி இறையருள் மின்னிதழ்களை விகடன் செயலியில் மட்டுமே வாசிக்க முடியும்... 

bit.ly/2EL4PL7 - இந்த லிங்க்கை க்ளிக் செய்து, முதலில் விகடன் செயலியைத் தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள். பின்னர் `Magazines' பகுதிக்குச் செல்லவும். அங்கே லேட்டஸ்ட் `இறையருள்' இதழ் இடம்பெற்றிருக்கும். அதை `க்ளிக்' செய்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம். ஒருமுறை தரவிறக்கம் செய்துவிட்டால், பின்னர் இணைய இணைப்பு இல்லாதபோதும்கூட படிக்கலாம். முந்தைய இதழ்களும், காணக்கிடைக்கும். அவற்றையும் தரவிறக்கம் செய்து படித்துக்கொள்ளலாம்.

பங்குனி மாத `இறையருள்’ மின்னிதழ், ஒரு பக்திப் பூர்வமான, பரவசம் நிறைந்த அனுபவத்தை உங்களுக்குத் தரும் என்று நம்புகிறோம். இதழ் குறித்த உங்கள் கருத்துகளை bodynsoul@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரியில் பகிர்ந்துகொள்ளுங்கள்.