Published:Updated:

அட்சய பாத்திரம் தந்த ஆதவன்!

அட்சய பாத்திரம் தந்த ஆதவன்!

அட்சய பாத்திரம் தந்த ஆதவன்!

அட்சய பாத்திரம் தந்த ஆதவன்!

Published:Updated:

ஞாயிறு போற்றுதும்..!

அட்சய பாத்திரம் தந்த ஆதவன்!
அட்சய பாத்திரம் தந்த ஆதவன்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிருகு வம்சத்தில் வந்தவர் ஜமதக்னி முனிவர். மகா தபஸ்வியான அவரின் மனைவி ரேணுகாதேவி, கணவனின் மனதுக்கேற்ற கற்புக்கரசி.

ஒருநாள் வெயிலின் தாக்கம் அதிகம். உஷ்ணம் தாங்க முடியாமல், கணவர் சொன்ன பணியை சற்று தாமதமாகச் செய்தாள் ரேணுகாதேவி. இதையறிந்த ஜமதக்னி கோபம் கொண்டார். மனைவியின் தாமதத்துக்குக் காரணம் கதிரோனே என்று, தன் கோபத்தை அவன் மேல் திருப்பினார். சூரியனை அழித்துவிடும் ஆக்ரோஷத்துடன் அஸ்திரத்தை எடுத்து வில்லில் பொருத்தினார். பதறிப் போனார் சூரிய பகவான்.

சட்டென்று ஓர் அந்தணராக உருவேற்று, ஜமதக்னி முனிவரைச் சந்தித்து அவரைச் சாந்தப்படுத்த முயன்றார்.

''மகரிஷியே! சூரியனின் வெம்மையால்தான் பயிர்கள் வளர்கின்றன. பூமியிலுள்ள நீரை ஆவியாக்கி, மேகம் மூலமாக மழையைப் பொழிவதும், மழை நீரால் சகல ஜீவராசிகளுக்கு அன்னம் அளிப்பதும் சூரியனின் செயல்பாடே. இப்படி தங்களுக்கு உணவளிக்கும் சூரியனுக்கு யாகங்கள் தானங்கள் கொடுத்து மனிதர்கள் அவனைச் சந்தோஷப்படுத்துகின்றனர். ஆண்டுதோறும் பொங்கல் திருநாளில் சூரிய நாராயணனுக்குப் பூஜை செய்து, சர்க்கரைப் பொங்கல் படைத்து மகிழ்ச்சியடைகின்றனர். இப்படி நல்லதே செய்யும் சூரிய பகவானை பகைக்கலாமா... அவன் மீது வஞ்சம் தேவையா? யோசித்துப் பாருங்கள்...'' என்றார் சூரியன்.

##~##
வந்திருப்பது சூரியன்தான் என்பதை அறிந்துகொண்டுவிட்ட ஜமதக்னி, ''நீ உலகத்தோருக்கு நன்மை செய்யலாம். இருந்தாலும், என் தாபத்தை அகற்ற வழி என்ன?'' என்று கேட்டார்.

உடனே, ''கவலைப்படாதீர்கள் மகரிஷியே... இதோ, நான் கொடுக்கும் குடையையும் இரு பாதுகைகளையும் அணிந்துகொள்ளுங்கள். இவை வெயிலின் உஷ்ணத்திலிருந்து உங்களைக் காப்பாற்றும். இன்று முதல், எவரெல்லாம் குடையும் செருப்பும் தானம் செய்கிறார்களோ, அவர்கள் சொர்க்கத்துக்குச் செல்வர்.'' என்று அருளி மறைந்தார் சூரிய நாராயணர்.

காசியபர் என்கிற ரிஷியின் மனைவி அதிதி. அவள் கர்ப்பமாக இருந்தபோதும் கணவருக்குச் செய்யும் பணிவிடைகளில் குறை வைத்தது கிடையாது. பொறுமையுடன் சேவை செய்யும் அதிதியைச் சோதிக்க நினைத்தார் தர்மதேவர்.

ஒருநாள் அந்தணராக திருவுருவம் கொண்டு, அதிதியின் வீட்டுவாசலில் வந்து நின்றார். 'பவதி பிக்ஷ£ம் தேஹி’ என்று கேட்டார். கர்ப்பிணி ஆதலால் வேகமாகச் செயல்பட முடியவில்லை அவளால். மெள்ள சமையலறைக்குச் சென்று மிக மெதுவாக அன்னம் எடுத்துக்கொண்டு நடந்து வந்தாள்.

தர்மதேவர் கோபம் கொண்டார் ''வயிற்றிலே உள்ள கருவுக்காக மெதுவாக நடந்து வந்து, என்னை அலட்சியப்படுத்தி விட்டாய். அதனால், உன் வயிற்றில் இருக்கும் கரு மிருகமாகட்டும்...'' என்று சபித்தார்.

இதைக் கேட்டு மயங்கி விழுந்தாள் அதிதி!

அட்சய பாத்திரம் தந்த ஆதவன்!

மனைவியை ஆசுவாசப்படுத்திய காசியபர், 'வருந்தாதே அதிதி... ம்ருத அண்டத்திலிருந்து உனக்கு ஒரு அருமையான குழந்தை பிறப்பான்...’ என்று ஆறுதல் கூறினார். அவ்வாறே ம்ருதமான அண்டத்திலிருந்து அழகிய மகன் தோன்றினான். இதனால் 'மார்த்தாண்டன்’ என்ற காரணப் பெயரை அடைந்த அவர்தான் சூரிய பகவான்!

பாண்டவர்கள் வனவாசம் மேற்கொண்டிருந்த நேரம் அது. கங்கைக்கரை தீரத்தில் தங்கியிருந்த அவர்களுக்கு சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை.  

அன்று இரவுப் பொழுதுக்கு கங்கை நீரையே ஆகாரமாகப் பருகினர். அதேநேரம், தங்களுடன் வந்த வேதியர்கள், ஆகாரம் இல்லாமல் பட்டினி கிடப்பதைக் கண்டு மிகவும் வேதனை அடைந்தார் தருமர்.

''பெரியோர்களே! நாங்கள் ஏதோ காட்டில் கிடைக்கும் காய், கனிகளைப்  பறித்துச் சாப்பிட்டு வயிற்றை நிரப்புகிறோம். விலங்கு களும் வாழும் இந்தக் காடு உங்களுக்கு ஏற்றதல்ல... தயவுசெய்து திரும்பிப் போய்விடுங்கள்...'' என்று வேண்டிக் கேட்டுக்கொண்டார் தருமர்.

ஆனால் அவர்களோ, ''எங்களுக்கு வேண்டிய உணவை நாங்கள் தேடிக்கொள்வோம். எங்களால் எந்தத் தொந்தரவும் இருக்காது...'' என்று கூறிவிட்டனர்.

ஆனால் தருமருக்கு மனசு கேட்கவில்லை. 'அவர்கள் பசியோடு இருப்பதை சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது, பாவம் அல்லவா?’ என வருந்தினார்.

அப்போது தௌமியர் என்ற முனிவர், தருமரை அழைத்து சூரிய நாராயண மந்திரத்தை உபதேசித்தார். அதை உச்சரித்தபடி, கழுத்தளவு நீரில் நின்று சூரியனைக் குறித்து தவம் செய்தார் தருமர். அதனால் மகிழ்ந்த சூரியன், தருமருக்கு அட்சய பாத்திரத்தை

அளித்துவிட்டு மறைந்தார். அதை தர்மர், திரௌபதியிடம் கொண்டு வந்து கொடுத்தார்.சூரியனால் அளிக்கப்பட்ட அட்சய பாத்திரத்தைக் கொண்டு, நாள்தோறும் அனைவருக்கும் உணவு அளித்து, தாங்களும் வயிறாரச் சாப்பிட்டு வந்தனர்.

- எஸ்.வேலாயுதம், சென்னை-21

சூரியனார் கோவில்

அட்சய பாத்திரம் தந்த ஆதவன்!

வக்கிரகங்களே தங்களது சாபம் நீங்க விநாயகர் பிரதிஷ்டை செய்து, வழிபட்டு அருள் பெற்ற தலம் சூரியனார்கோவில். தென்னகத்தில் சூரியனுக்கான தனிக்கோயில் இதுதான்.

இங்கு, உஷாதேவி- சாயாதேவியுடன் அருளும் சூரியனாரைத் தரிசிக்கும் அதே நேரம், குருபகவானின் அருட்பார்வையும் ஒருசேர பெறலாம். சூரிய பகவானைச் சுற்றி நவக்கிரக நாயகர்களும் தனிச் சந்நிதிகளில் அருள்வது விசேஷம்.

கும்பகோணத்திலிருந்து கிழக்கே சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ள இந்தத் தலம் குறித்தும், மகரசங்கராந்தியின் மகிமை குறித்தும், சூரியனார் கோயில் தலைமை அர்ச்சகரான நடன தியாகராஜ குருக்களிடம் கேட்ட போது... 'சூரியன் தை மாதம் மகர ராசியில் சஞ்சரிப்பதையே மகர சங்கராந்தியாகக் கொண்டாடுகிறோம் அன்று சூரியன், தட்சிணாயனத்தில் இருந்து உத்தராயனத்துக்கு  சஞ்சரிக்கும் காலத்தில்... சூரிய பகவானுக்கு கோதுமை சர்க்கரைப் பொங்கல், கரும்பு, வாழை, தேங்காய் கொண்டு நைவேத்தியம் செய்து சிவப்பு வஸ்திரம், செந்தாமரைப் பூக்கள் அணிவித்து வழிபடுவது சிறப்பு. இதனால் சத்ரு நாசம்... சூரிய திசை, சூரிய புத்தியால் ஏற்படும் தோஷங்கள் நிவர்த்தியாகும். கண் கோளாறுகளும் நீங்கி அருள்பெற்றுச் செல்வது இந்தத் தலத்தின் சிறப்பு'' என்கிறார்.

மேலும், இந்தத் தலத்தின் விருட்சமான வெள்ளெருக்கு மரத்தில் சிவப்புத் துணி சாற்றி, மஞ்சள் கட்டி... புதுமணத் தம்பதிகள் வழிபட்டால், சூரியகடாட்சம் நிறைந்த குழந்தைகள் பிறக்கும். தீராத தோல் நோயும் தீரும் என்பது நம்பிக்கை.

- ச.ஸ்ரீராம்,
படம்: செ.சிவபாலன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism