Published:Updated:

'கூடவே இருப்பார் சாமி!' - ஓவியர் சிவபாலன்

'கூடவே இருப்பார் சாமி!' - ஓவியர் சிவபாலன்

'கூடவே இருப்பார் சாமி!' - ஓவியர் சிவபாலன்

'கூடவே இருப்பார் சாமி!' - ஓவியர் சிவபாலன்

Published:Updated:
'கூடவே இருப்பார் சாமி!' - ஓவியர் சிவபாலன்
'கூடவே இருப்பார் சாமி!' - ஓவியர் சிவபாலன்

  'சிரவணம், கீர்த்தனம்... என்று பக்தியை ஒன்பது வகையா சொல்வாங்க பெரியவங்க. அதில், சாக்ஹியம் என்றொரு வகை உண்டு; ஆண்டவனிடம் நட்பு கொள்ளும் பக்தி! நான் அந்த வகைதான்!'' - தத்துவார்த்தமாகப் பேசுகிறார் ஓவியர் சிவபாலன். இந்த இதழின் அட்டைப் படத்தை அலங்கரிப்பது இவரது ஓவியம்தான்! நளினமும் உயிரோட்டமுமான தெய்வப் படங்கள், படைப்புகள்... எப்படி சாத்தியமாயிற்றாம்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##
''பிறந்தது கோயில் நகரமான கும்பகோணம். அப்புறம் கேட்கவா வேண்டும்! எந்தப் பக்கம் திரும்பினாலும் கோயில்தான்... இந்தச் சூழல்கூட காரணமாயிருக்கலாம். தவிர... இறையருளும் ஒரு காரணம்னு சொல்லணும். பிறந்ததுலேர்ந்து இன்னிக்குவரைக்கும் அதிகம் கஷ்டப் பட்டதில்லேன்னா... அது, திருவானைக்கா சாமியோட திருவருளால்தான்!'' 

அண்ணாமலையாரும், திருவானைக்கா ஈசனும் இறைவியும் இவருக்குக் கண்கண்ட தெய்வங்களாம். திருவானைக்கா கோயிலில்... அம்மனே ஸ்வாமியை பூஜிப்பதான அந்த வைபவம் அற்புதம் என்று சிலாகிப்பவர், தன் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தையும் சொன்னார்.

'கூடவே இருப்பார் சாமி!' - ஓவியர் சிவபாலன்

''என் ப்ரொஃபஷனல்ல அருமையான ஒரு வாய்ப்பு! பெரிய நிறுவனத்துல இருந்து அழைப்பு. ஒரு இடத்துல எனக்காகக் காத்துக்கிட்டிருந்தார் அந்த நிறுவனத்தோட அதிகாரி. குறிப்பிட்ட நேரத்துல அவரைச் சந்திக்கலேன்னா ப்ராஜக்ட் கேன்சலாயிடும்கற சூழல். நானோ ரொம்ப லேட்டு! அடிச்சுபிடிச்சு ஓடிப்போனா... கிட்டத்தட்ட கிளம்பி வாசலுக்கே வந்துட்டாரு. ஒரு நிமிஷம் நான் லேட்டா வந்திருந்தா... அட, அவர்தான் ஒரு நிமிஷம் முன்னாடியே கிளம்பியிருந்தா... எனக்கு வாய்ப்பு பறிபோயிருக்குமே?! இப்படித்தான் சார்... சின்ன சின்ன விஷயங்கள்லயும் நம்மகூடவே இருக்கறதை, சாமி உணர்த்திக்கிட்டிருக்கும்... அதை நாம உணர்ந்துட்டா  நிச்சயம் ஜெயிச்சிடலாம்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism