Published:Updated:

சிறப்பு விருந்தினர் பக்கம்! - பித்துக்குளி முருகதாஸ்

சிறப்பு விருந்தினர் பக்கம்! - பித்துக்குளி முருகதாஸ்

சிறப்பு விருந்தினர் பக்கம்! - பித்துக்குளி முருகதாஸ்

சிறப்பு விருந்தினர் பக்கம்! - பித்துக்குளி முருகதாஸ்

Published:Updated:
சிறப்பு விருந்தினர் பக்கம்! - பித்துக்குளி முருகதாஸ்

'ஸ்ரீரமண மகரிஷி, சுவாமி ராமதாஸ், சிவானந்த சரஸ்வதி சுவாமிகள்... இவங்க மூணுபேரும்தான் என்னோட குருக்கள். அவங்க வாழ்ந்த காலத்துல நானும் வாழ்ந்திருக்கேன்னு நினைக்கும்போது பெருமையா இருக்கு!''- பக்தியும் பரவசமுமாக பேச ஆரம்பித்தார் பித்துக்குளி முருகதாஸ். 93 வயது என்றபோதும், குரலில் அதே இனிமை; அதே குழைவு; அதே கம்பீரம்!

''சின்ன வயசுல நான் சந்தித்த கஷ்டநஷ்டங் கள்லாம் இந்த மூன்று மகான்களையும் சந்திப்பதற்காக இறைவன் நடத்திய திருவிளையாடல்னு தான் சொல்லணும்!'' என்று சற்று கண்மூடி யோசித்தவர், மகான்களைத் தரிசித்த தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##
''அது 36-வது வருஷம் (1936). திருவண்ணா மலையில் ரமணரை முதன்முதலா சந்தித்தபோதே, அவர் முகத்துல இருந்த தேஜஸும் ஒளியும் என்னைக் கட்டிப்போட்டது. இவர்தாண்டா உன்னோட குரு; கெட்டியா பிடிச்சுக்கோன்னு மனசு சொன்னதை அப்படியே ஏத்துக்கிட்டேன். கொஞ்ச நாளைக்கு அவருடனேயே தங்கிட்டேன்.

ராமதாஸரைச் சந்தித்ததும் அற்புதமான அனுபவம்தான். கர்நாடகத்தின் தெற்கில் 'கன்சன்காட்’ங்கற ஊரில், சுவாமி ராமதாஸரை தரிசிச்சேன். கொஞ்சகாலம் அவரோட இருந்து உபதேசம் பெற்றேன்! சிறு வயதில் கில்லித் தண்டு விளையாடும்போது, கண்ணுல அடிபட்டு, பார்வை மங்கி, ஒரு கண்ணையே இழந்துட்டேன்.இன்னொரு விழியும் தொந்தரவு கொடுக்க, அந்த வலியோடயே சுவாமி ராமதாஸோட ஆஸ்ரமத்துல நடந்த பஜனைக்குப் போயிருந்தேன். அங்கே, ஆவேசம் வந்து ஆடிக்கிட்டிருந்த மூதாட்டி ஒருவர், என் வலது கண்ணை வருடிக் கொடுத்து, 'உன்னோட இந்தக் கண்ணுக்கு ஆயுசு கெட்டி’ன்னு சொன்னார்.

மறுநிமிடம் வலி காணாமப் போச்சு. இதுக்கு குருவருளும், என் தகப்பன் சாமியும்தானே காரணமா இருக்கணும்!'' எனச் சிலாகிப் பவருக்கு, முருகதாஸ் எனும் திருநாமம் சூட்டியதும் சுவாமி ராமதாஸ்தானாம்!

''ஒரு கும்பமேளாவின்போதுதான் சுவாமி சிவானந்தரின் தரிசனம் கிடைச்சது. அவரோட ஆஸ்ரமத்திலயும் பணிவிடைகள் செஞ்சிருக் கேன். அப்போதைய அனுபவங்களும் உபதேசங்களும் இன்னிக்கும் உறுதுணையா இருக்கு!'' என்கிறார் பித்துக்குளி முருகதாஸ்.

பெரும்பாலும் முருகனையே பாடிப் பரவிய இந்த முருக பக்தர், (தாஸன் என்ற புத்தகத்தில்) தன்னைக் கவர்ந்த இந்த மகான்களைப் பற்றியும் அந்தாதி பாடியிருக்கிறாராம்! குருவருள் துணை நிற்கும்!

- செ.கார்த்திகேயன்.
படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism