Published:Updated:

வம்சம் தழைக்க... செவ்வாய் பொங்கல்!

வம்சம் தழைக்க... செவ்வாய் பொங்கல்!

வம்சம் தழைக்க... செவ்வாய் பொங்கல்!

வம்சம் தழைக்க... செவ்வாய் பொங்கல்!

Published:Updated:
வம்சம் தழைக்க... செவ்வாய் பொங்கல்!
வம்சம் தழைக்க... செவ்வாய் பொங்கல்!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சி
வகங்கை மாவட்டத்தில் உள்ள நாட்டரசன்கோட்டையில்தான் அப்படியரு விழா விமரிசையாக நடைபெறுகிறது (சிவகங்கை யில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவு). இங்கே வீற்றிருந்தபடி, ஊரையும் உலகையும் செழிக்கச் செய்கிறாள் ஸ்ரீகண்ணுடையநாயகி!

சோழ தேசமான தஞ்சைப் பகுதியில் வாழ்ந்த அந்த வணிகருக்கு  பார்வை பறிபோய் விட, சிவனடியாரான அந்தப் பக்தர் துயரத்தில் மூழ்கிப் போனார். 'உன்னுடைய கண்ணுக்குப் பிரச்னை என்று நாடகமாடியபோது, கண்ணப்ப நாயனார் தனது கண்ணையே பிடுங்கித் தந்தாரில்லையா? கண்ணுக்குக் கண்ணாக, உயிருக்கு உயிராக உன்னையே நினைத்து வணங்கிவரும் எனக்குக் கண்கள் பறிபோய் விட்டதே! நீ என்ன செய்யப் போகிறாய்?’ எனக் கதறினார்!

அப்போது ஊரில் உள்ள ஜோதிடர் ஒருவர், பக்தரின் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு, 'தெற்குத் திசையில் பயணித்து, அங்கே தென்படுகிற அம்மன் ஆலயங்களுக்குச் சென்று வழிபடுங்கள்; சிவனருளாலும், அம்மனின் பேரருளாலும் உங்களுக்கு பார்வை கிடைக்கும்’ என ஆரூடம் சொல்ல... அது வெறும் ஆரூடம் அல்ல, கடவுளின் வேதவாக்கே என யாருக்கும் தெரியவில்லை.

வம்சம் தழைக்க... செவ்வாய் பொங்கல்!

அந்தப் பக்தர், தன்னுடைய மாட்டுவண்டிக்காரனை துணைக்கு அழைத்துக் கொண்டு, வண்டியில் தென்திசை நோக்கிப் பயணமானார்.

வழிநெடுக உள்ள அம்மன் கோயில்களுக்குச் சென்று பிரார்த்தித்தவர்,  செட்டிநாட்டுப் பகுதிக்குள் நுழைந்து, சிவகங்கை சமஸ்தானத்தின் ஆளுகைக்கு உட்பட்ட ஊருக்குள்ளும் வந்தார். அங்கே குளமாகவும் இல்லாமல் ஊருணியாகவும் இல்லாமல் குட்டையெனத் தேங்கிக் கிடந்தது தண்ணீர்.

'இந்தத் தண்ணீரில் முகம், கை-கால் கழுவுங்கள் ஐயா; இருட்டத் துவங்கி விட்டது. இங்கேயே சாப்பிட்டு ஓய்வெடுப்போம்’ என்று சொல்லி, அந்த வணிகரின் கைகளைப் பிடித்து அழைத்துச் சென்று, தண்ணீரில் இறங்கினான் வண்டிக்காரன். குனிந்து, இரண்டு கைகளாலும் தண்ணீரை ஏந்தி, நெற்றி, கண்கள், கன்னம், கழுத்து என முகத்தில் தெளித்துக் கொண்டார்; பின்பு, முகத்தையும் கண்களையும் அழுந்தத் துடைத்துவிட்டுக் கைகளை எடுத்தால்... என்ன ஆச்சர்யம்! எதிரே தேங்கிக் கிடந்த நீரில் மூக்குத்தி மின்னக் காட்சி தந்தாள் அம்பிகை! மெய்சிலிர்த்தவர், 'ஆத்தா, எனக்கு கண் தந்தது நீதானா? என் கண்ணாத்தா நீதானா?!’ என அந்தத் தண்ணீரில் தெரிந்த உருவத்துக்கு முன்னே, நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினார். அதன் பிறகு, அங்கே கோயில் எழுப்பப்பட்டு, அம்மனின் திருவிக்கிரகமும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கண்ணுடைய நாயகி, கண்ணாத்தாள், ஆயிரம் கண்ணுடையாள் எனத் திருநாமம் கொண்டாள் அம்பிகை என்கிறது தல வரலாறு!

வம்சம் தழைக்க... செவ்வாய் பொங்கல்!
வம்சம் தழைக்க... செவ்வாய் பொங்கல்!

கருங்கல் திருப்பணிகளால் ஆன அழகிய கோயில். சிவகங்கை சமஸ்தானத்துக்கு உட்பட்டது. இங்கே அஷ்டபுஜங்களுடன் அசுரனை அழித்த கோலத்தில், ஆனால் சாந்த சொரூபினியா கக் காட்சி தருகிறாள், அம்பிகை. இவளுக்குக் கண்மலர் சார்த்தி வழிபட்டால், கண் நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

ஸ்ரீகண்ணாத்தாள் கோயிலில், நாட்டரசன் கோட்டையில் வாழும் நாட்டுக்கோட்டை செட்டிமார்கள், வருடந்தோறும் தை மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை அன்று பொங்கல் வைத்துப் படையலிட்டு, தாங்களும் தங்களின் வம்சமும் செழிக்கப் பிரார்த்திக்கின்றனர். இதனால், இந்த விழாவை, 'செவ்வாய் பொங்கல் திருவிழா’ என்கின்றனர். இந்த நாளில் நாட்டரசன்

கோட்டையைப் பூர்வீகமாகக் கொண்ட நகரத் தார்கள், தமிழகத்தின் ஏன்... உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இங்கே வந்து பொங்கல் வைத்து வழிபட்டுச் செல்வது வழக்கம்.

முன்னதாக, அந்த ஊரின் நகரத்தார்களின் பெயர்கள் அனைத்தையும் ஒரு துண்டுச் சீட்டில் எழுதி, அம்பாளின் சந்நிதிக்கு முன்னே வைத்து வணங்கிவிட்டு, குலுக்கல் முறையில் ஒவ்வொரு சீட்டாக எடுப்பார்கள். முதலில் யார் பெயர் வருகிறதோ, அவரது குடும்பம் 'முதல் பானைக்காரர்கள்’ என அழைக்கப்படும். தவிர, அவர்களின் பானையில் அடுப்பு மூட்டிய பிறகே, மற்ற அனைவரின் அடுப்புகளிலும் தீ மூட்டப்படும்!

முதல் சீட்டு எடுத்த பின், இரண்டா வது, மூன்றாவது, நான்காவது என வரிசையாகச் சீட்டுகள் எடுத்து, பெயர் களை அறிவிப்பார்கள். அந்தந்த எண்ணில், அந்தக் குடும்பங்கள் அடுப்பு வைத்துப் படையலிடுவார்கள். சீட்டுக் குலுக்கி எண்கள் கொடுத்ததும், முன்னதாக வந்து, தங்களுக்கான இடத்தைச் சுத்தம் செய்து, சாணத்தால் மெழுகிக் கோலமிட்டு, தங்களது அடுப்பையும் வைத்துவிடுவார்கள். ஒரு குடும்பத்தில் மகன் இருந்து, அவருக்குக் கல்யாணமாகிவிட்டால், அந்த வீட்டுக்கு இரண்டு பானைகள் வைக்க இடம் வழங்கப்படுமாம்! 'நான் நல்லாருக்கேன்; என் பையனும் அவனோட வாரிசும் செழிச்சு வளரணும்’ எனப் பிரார்த்திப்பதற்காக, வாழையடி வாழையாகச் சந்ததி சிறக்கவேண்டும் என்பதற்காகவே, இரண்டு பானைகள் வைத்து அம்மனை வணங்குவார்களாம்!

மாட்டுப்பொங்கல் அன்றுதான், சீட்டுக் குலுக்கிப் பெயர் தேர்வு செய்கின்றனர். இதையடுத்து வருகிற செவ்வாய்க்கிழமையில், செவ்வாய்ப் பொங்கல் விழா. நகரத்தார் மட்டுமின்றி, ஊர்மக்களும் பொங்கல் வைத்து வழிபடுவதற்காகத் தனியிடம் ஒதுக்கப்பட்டிருக்கும்.  

வம்சம் தழைக்க... செவ்வாய் பொங்கல்!

செவ்வாய் பொங்கல் விழா முடிந்ததும், கோயில் அர்ச்சகர்கள், ஒவ்வொரு பானைக்கு அருகிலும் வந்து, தேங்காய்- பழம் கொண்டு அம்பாளுக்கு அர்ச்சனை செய்து, 'இந்தக் குடும்பம் நல்லா இருக்கணும்; வாழையடி வாழையா வம்சம் செழிக்கணும்’ எனப் பிரார்த்தித்து அர்ச்சனை செய்வார்கள்.

அன்றிரவு அம்மன் கோயிலுக்கு அருகில் உள்ள கருப்பர் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வருவர். பிறகு, கருப்பருக்குக் கிடாவெட்டு நடைபெறும். முதல் எண் கொண்ட குடும்பத்திலிருந்து கிடாவெட்டி வழிபட வேண்டும் என்பது மரபு. மற்றவர்களும், நேர்த்திக்கடனைச் செலுத்துவதற்காகக் கிடாவெட்டி பூஜை செய்வர். கிட்டத்தட்ட, ஆயிரக்கணக்கான நகரத்தார் களும் நூற்றுக்கணக்கான கிராம மக்களும் கிடாவெட்டி பூஜிக்க... நள்ளிரவு வரை நீளுமாம், இந்த வைபவம்!

வம்சத்தை வாழவைக்கிற இந்த விழாவில் கலந்துகொள் வதும் பேரின்பம்; அப்படிக் குலம் வாழச் செய்கிற தலத்துக்கு வந்து, ஆயிரம் கண்ணுடையாளை வணங்கி வழிபடுவது நல்ல பலனையும், பலத்தையும் தரும்!

செவ்வாய்கிழமை விட்டு செவ்வாய்கிழமை வெளி வருகிறது, உங்கள் சக்தி விகடன்! இதோ... பொங்கல் சிறப்பிதழாக வெளிவருகிற இந்த இதழில், ஸ்ரீகண்ணு டைய நாயகி கோயிலில் நடைபெறும் 'செவ்வாய் பொங்கல்’ விழாவும் இடம்பெறுகின்றது.

'செவ்வாய் பொங்கல்’ வழிபாடு நாட்டரசன் கோட்டை வாழ் மக்களையும், எண்ணற்ற பக்தர்களையும் மேலும் மேலும் செழிக்கச் செய்யும் என்பது உறுதி!

- வி.ராம்ஜி
படங்கள்: என்.ஜி.மணிகண்டன், எஸ்.சாய்தர்மராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism