Published:Updated:

தேவி தரிசனம்... பாப விமோசனம்!

தேவி தரிசனம்... பாப விமோசனம்!

தேவி தரிசனம்... பாப விமோசனம்!

தேவி தரிசனம்... பாப விமோசனம்!

Published:Updated:
தேவி தரிசனம்... பாப விமோசனம்!
தேவி தரிசனம்... பாப விமோசனம்!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ழிபாடுகள் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்துவிட்ட மரபு, நம்முடையது. அதன் உந்துதலில்தான், 'கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்றும் சொல்லி வைத்துச் சென்றார்கள் நம் முன்னோர்கள்.

'எல்லையில் இருக்கும் தெய்வம், ஊரைக் காக்கும்’ என்ற நம்பிக்கை நிறைய உண்டு நம்மவர்களிடம். அதனால்தான்... அய்யனார், கருப்பண்ணசாமி, சுடலைமாடன், அம்மன்... என்று அவர்கள் வழிபட்ட காவல் தெய்வங்களும், அந்த சாமிகள் குறித்த கதைகளும் ஏராளம் நம் தமிழகத்தில்!

தேவி தரிசனம்... பாப விமோசனம்!

அப்படித்தான்... நான்கு எல்லைகளிலும் ஊரின் மையத்திலுமாக வெவ்வேறு திருநாமங்களுடன் கோயில் கொண்டு, காளிதேவியே காவல் காக்கும் ஓர் ஊர் உண்டு. அதன் பெயர் காளி! ஆம், காளி எனும் கிராமத்தைக் காவல் காக்கின்றனர், காளிதேவியர்!

நாகை மாவட்டம், மயிலாடுதுறை தாலுகாவில் உள்ளது காளி கிராமம். ஒருகாலத்தில், ஸ்ரீநிவாசபுரம் எனப்பட்டதாம்! திடீரென ஒருநாள், ஊர் மக்கள் பலரும் விஷக்காய்ச்சலால் சுருண்டு தவித்தனர்; வாந்தி-பேதியால் வாடிப்போனார்கள். இந்த நிலையில், வெள்ளம் வந்து ஆற்றைக் கடந்து வயல்களுக்குள் பாய்ந்தது; பயிரெல்லாம் மூழ்கின! அந்த வெள்ளம் அத்தோடு நின்றதா? தெருக்களுக்குள்ளேயும் புகுந்தது. வீட்டுக்குள்ளும் கழுத்தளவு தண்ணீர் புகுந்தது கண்டு அரண்டு போனவர்கள், ஊர் எல்லையில் தஞ்சம் புகுந்தனர். எல்லையே இல்லாத தெய்வத்தைச் சரணடைவதைத் தவிர, அவர்களுக்கு வேறு கதியேது?!

'நிலத்தையும் மக்களை யும் காப்பாத்து ஆத்தா... உனக்குப் பொங்கல் வைக்கிறோம்’ என்று வானம் பார்த்துக் கதறினார்கள்.

'ஆடு-மாடுகளையும், சேனை பெருமக்களையும் நோய்நொடியிலேருந்து மீட்டுக் கொடும்மா.

உனக்கு, கோழி வெட்டி, பலி கொடுக்கறோம்’ என்று நெஞ்சில் அடித்துக் கொண்டு வேண்டினர்.

குழந்தைகள் அழுதால், தாயுள்ளம் வேடிக்கையா பார்க்கும்? அவர்களது குறைதீர்த்து அருள்புரிய ஒரே நேரத்தில், பல்வேறு திருவுருவங்களில் இங்கு பிரத்யட்சமானாளாம் காளிதேவி!

மகிஷாசுரனை வதம் செய்தாளே தேவி... எருமையென வந்த அசுரனின் தலை, பூமியில் விழக்கூடாது; விழுந்தால் பூமிக்கு ஆபத்து என்று, அசுரனின் தலையைக் கொய்ததுடன், பூமியில் விழாமல் கரங்களில் ஏந்தி நின்றாளாம் அவள். அப்படி அவள் நின்ற திருவிடம், கிடாத்தலைமேடு என்று திகழ்கிறது.

தேவி தரிசனம்... பாப விமோசனம்!
தேவி தரிசனம்... பாப விமோசனம்!

இங்கே காளிதேவி, ஸ்ரீதுர்கையாக எழுந்தருள்கிறாள். மிகுந்த உக்கிரமும் அதேநேரம் அளவற்ற கருணையும் கொண்ட ஸ்ரீதுர்காதேவி, காளி கிராமத்தை மட்டுமின்றி மொத்த உலகத்தையும் காத்தருள்கிறாள்! இங்கேயுள்ள இவளது திருமேனி கொள்ளை அழகு; அதுமட்டுமா? மூக்கின் நுனியில் மூக்குத்திப் போடுவதற்கான துளையுடன் திகழ்கிறாள், தேவி!

அடுத்து, ஊரின் நுழைவாயிலிலேயே குடிகொண்டிருக்கிறாள், மந்தகரை ஸ்ரீகாளியம்மன். செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு கால வேளையில் இவளை வணங்கினால் பெண்களின் திருமண தோஷங்கள் யாவும் விலகிவிடும் என்பது நம்பிக்கை!

தேவி தரிசனம்... பாப விமோசனம்!

ஊரின் இன்னொரு எல்லையில், ஸ்ரீமாரியம்மனாக கோயில் கொண்டிருக் கிறாள். பங்குனி மாதம்- பௌர்ணமி நாளில், தீமிதித் திருவிழாவும், பால்காவடியும் என ஊரே அமர்க்களப்படும்! கிராமங்களின் வளர்ச்சியால், காளியின் எல்லையான இந்தப்பகுதி, நத்தம் எனும் சிறிய கிராமமாக வளர்ந்துவிட்டது, இன்றைக்கு! 'நத்தம் மாரியம்மனை வணங்கினால், நாலு தலைமுறைக்கும் குறையிருக்காது’ என்கின்றனர் பக்தர்கள்.

வடக்கு எல்லையில், வடகாளியம்மன், வெக்காளியம்மன், பத்ரகாளியம்மன் எனப் பல திருநாமங்களுடன் கோயில் கொண்டிருக்கிறாள் தேவி. இவளின் சந்நிதியில் சப்த கன்னியரும் பரிவார தெய்வங்களாகக் காட்சி தருகின்றனர். எலுமிச்சை மாலை சார்த்தி, குங்குமத்தால் அர்ச்சித்து வழிபட்டால், ஸ்ரீபத்திர காளியம்மன் இல்லறம் செழிக்கவும் வியாபாரம் பெருகவும் பக்கத்துணையாக நிற்பாள் என்பது ஐதீகம்!

நாலாதிசையிலும் நான்கு தேவியராகக் கோயில் கொண்டு, ஊரைச் செழிக்கச் செய்வது மட்டுமின்றி, ஊரின் மத்தியிலும் கோயில் கொண்டு, அருள்பாலிக்கிறாள் தேவி!

காளி கிராமத்தின் நடுவே, பிரமாண்டமாகத் திகழ்கிறது ஸ்ரீகாமேஸ்வரர் கோயில். இங்கேயுள்ள ஸ்ரீதுர்காதேவி, அஷ்டபுஜங்களுடன் காட்சி தருகிறாள். கரங்களில் ஆயுதங்கள் ஏந்தியிருந்தாலும், அவை எத்தர்களுக்குத்தானே?! தன் அன்புக்குரிய பக்தர்களை... சாந்தமுகமும் மென்மையானச் சிரிப்பும் கொண்டு, வாழ்விக்கிறாள் தேவி! ஊர்ப் பெரியவர்களின் கனவில் தோன்றி, 'நான்தான் இந்த ஊரில் பலருக்கும் குலதெய்வம்’ என்று சொன்னாளாம் அம்மன்! இவளை, மகாகாளி எனப் போற்றுகின்றனர்.

தேவி தரிசனம்... பாப விமோசனம்!
தேவி தரிசனம்... பாப விமோசனம்!

ஆக, அம்பிகையானவள், ஐந்து இடங்களில் ஐந்து திருவுருவங்களுடன் அருள்பாலிக்கிற அற்புதமான தலம், காளி கிராமம்! அதுமட்டுமா? ஸ்ரீகாமேஸ்வரர் கோயிலில் ஸ்ரீபாலசுகாம்பாள், ஸ்ரீஅபிராமியம்பிகை என்று இரண்டு அம்பிகைகள்!

ஸ்ரீபாலசுகாம்பாளுக்கு நெய்தீபமேற்றி, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து, மனதாரப் பிரார்த்தித்தால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய்ப் பிரச்னைகள் முதலானவற்றைத் தீர்த்து வைப்பாளாம்!

ஸ்ரீஅபிராமியம்பிகைக்கு பச்சைநிற வஸ்திரம் சார்த்தி விளக்கேற்றி வழிபட்டால், கல்வி-ஞானத்தில் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை!

ஆக, ஐந்து காளிகளும் இரண்டு அம்பிகை களுமாக ஏழு தேவியர் அருள்பாலிக்கும் காளி கிராமத்தில் நம் காலடி பட்டாலே போதும்... நம் பாவமெல்லாம் பறந்தோடும்; துக்கமெல்லாம் தொலைந்துவிடும்!

  படங்கள்: ந.வசந்தகுமார்

கல்யாண வரம் தரும் பெருமாள்!

தேவி தரிசனம்... பாப விமோசனம்!

ஸ்ரீகாமேஸ்வரர் கோயிலில் அழகும் அன்பும் பொங்க, கருணையுடன் காட்சி தருகிறார், ஸ்ரீநித்திய கல்யாண பெருமாள். திருவிடந்தை திருத்தலத்தைப் போலவே, கல்யாண வரம் தந்தருளும் பெருமாள் இவர்!

ஏழு தேவியரையும், ஸ்ரீகாமேஸ்வரரையும், ஸ்ரீநித்திய கல்யாண பெருமாளையும் ஒரேநாளில் தரிசித்து, நித்திய கல்யாண பெருமாளுக்குத் திருமஞ்சனம் செய்து வழிபட்டால், எதிரிகள் பயமில்லை; பில்லி-சூனியப் பிரச்னைகள் கிடையாது; கணவரின் நோய்நோடி தீர்ந்து, தாலிபாக்கியம் நிலைக்கப் பெறலாம்; திருமணத்தடைகள் நீங்கி, இல்லறம் சிறக்க, சந்ததி செழிக்க வாழ்வாங்கு வாழ்வார்கள் என்று சிலிர்ப்புடன் சொல்கின்றனர், பக்தர்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism