Published:Updated:

ஆற்றுக்குள் கெத்தாக நிற்கும் குறுக்குத்துறை முருகன்! - நெல்லை ஹைலைட்ஸ் #MyVikatan 

ஆற்றுக்குள் கெத்தாக நிற்கும் குறுக்குத்துறை முருகன்! - நெல்லை ஹைலைட்ஸ் #MyVikatan 
ஆற்றுக்குள் கெத்தாக நிற்கும் குறுக்குத்துறை முருகன்! - நெல்லை ஹைலைட்ஸ் #MyVikatan 

நெல்லையின் முக்கியத்துவம் வாய்ந்த கோயில்களில் குறுக்குத்துறை முருகன் கோயிலும் ஒன்று.

ஆற்றுக்குள் கெத்தாக நிற்கும் குறுக்குத்துறை முருகன்! - நெல்லை ஹைலைட்ஸ் #MyVikatan 

தாமிரபரணி நதியின் நடுவே அமைந்திருக்கும் இந்தக் கோயிலில் இருக்கும் மூலவர், உண்டியல், நகைகள், சப்பரம் உள்ளிட்டவற்றை நதியில் ஏற்படும் வெள்ளத்தின்போது அருகில் இருக்கும் கோயிலுக்குத் தூக்கிச் செல்வார்கள். வெள்ளம் வடிந்தபிறகு கோயிலைச் சுத்தம் செய்து மீண்டும் கொண்டுவந்து வைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். 

ஆற்றுக்குள் கெத்தாக நிற்கும் குறுக்குத்துறை முருகன்! - நெல்லை ஹைலைட்ஸ் #MyVikatan 

17-ம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்களால் தாமிரபரணி ஆற்றின் நடுவில் கட்டப்பட்ட இந்தக் கோயில், கடந்த 300 வருடங்களுக்கும் மேலாகக் கடுமையான பல வெள்ளப்பெருக்கைச் சந்தித்திருக்கிறது. கோயிலின் உள்ளே வெள்ளம் வரும்போது அவை  வெளியேறுவதற்குப் போதுமான இடைவெளி இருப்பதால் கோயிலுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை. அத்துடன், இந்தக் கோயிலின் சுவரானது படகின் முன்பகுதியைப் போல கூர்மையான, மிகுந்த மதிநுட்பத்துடன் கட்டப்பட்டிருப்பதால் எத்தகைய வெள்ளமும் எதுவும் செய்வதில்லை.