Published:Updated:

கந்தனை எண்ணியே வந்தனை செய்வோம்!

கந்தனை எண்ணியே வந்தனை செய்வோம்!

கந்தனை எண்ணியே வந்தனை செய்வோம்!

கந்தனை எண்ணியே வந்தனை செய்வோம்!

Published:Updated:
கந்தனை எண்ணியே வந்தனை செய்வோம்!
கந்தனை எண்ணியே வந்தனை செய்வோம்!
கந்தனை எண்ணியே வந்தனை செய்வோம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தேவர்கள் பூமாரிப் பொழிய, 'வெற்றிவேல் வீரவேல்’ எனும் முழக்கம் திக்கெட்டும் ஒலிக்க, வீரமகேந்திரபுரியை வீழ்த்தி, சூரபதுமனை வென்ற வேலவன், வெற்றிப்புன்னகையுடன் நின்றிருந்தார்!

அசுரகுலத்தை அடக்கி வெற்றிவாகை சூடிய அந்தத் திருவிடத்துக்கு, செந்திலம்பதிக்கு... ஜெயந்திபுரம் என்று அவர் திருப்பெயர் சூட்ட, மகிழ்ச்சியுடன் மீண்டும் ஆர்ப்பரித்தது தேவர்கள் சேனை. அவர்களைக் கையமர்த்திய வீரபாகு, கந்தவேளை வணங்கினான். பிறகு,

''தந்தைக்கே பாடம் சொன்ன தகப்பன் சுவாமியே... சூரனை வதைத்து, அமராபுரியை தேவர்களுக்கு மீட்டுக்கொடுத்து, அவர்களை வாழ வைத்து விட்டீர்கள்.

அதற்குப் பரிசாக தேவேந்திரன் தன் மகளையே தங்களுக்குத் தாரைவார்க்கக் காத்திருக்கிறான். ஆனால், அதுமட்டும் போதாது. மிக மேன்மையாக, இன்னும் ஏதாவது செய்ய வேண்டும் என நினைக்கிறோம்...'' என்று அவன் முருகனின் முகம் நோக்க, அவரோ ''என்ன செய்வதாய் உத்தேசம் வீரபாகு...?'' எனக் கேட்டார்.

##~##
''முருகா, உலகில் உள்ள அனைத்தும் நீங்கள் தந்த பரிசு. அப்படியிருக்க, கொடுப்பதற்கு எங்களிடம் என்ன இருக்கிறது? இமைப்பொழுதும் மறவாமல்  தங்களின் திருநாமத்தை உச்சரிப்பதையும், சரவணபவ எனும் ஆறெழுத்து மந்திரம் கூறி உங்களைத் தியானிப்பதையுமே மேன்மையாகக் கருதுகிறோம். எனவே, தயவுகூர்ந்து... நாங்களும், எங்களின் வழியற்றி உலக மாந்தர்களும் உங்களுக்குச் செய்யவேண்டிய பூஜா விதிகளையும் வழிமுறைகளையும் தாங்களே கூறியருள வேண்டுகிறோம்.''

''அப்படியே ஆகட்டும்'' என்ற சண்முகன், தனக்குரிய வழிபாட்டு முறைகளை அன்பொழுக எடுத்துரைத்தார்.

இப்படி, முருகப்பெருமான் தன்னை வழிபடும் நியதிகளை, வழிபாட்டு விதிமுறைகளை தேவர்களுக்கு எடுத்துச் சொன்னது, உத்தராயன புண்ணிய காலத்தின் துவக்கமாகிய தை மாதத்தில் என்பார்கள். ஆகவேதான்... முருகப்பெருமான் அவதரித்த விசாக நட்சத்திரத்தின் பொருட்டு வைகாசி மாதமும், அவரை வளர்த்த கார்த்திகைப் பெண்களால் கார்த்திகை மாதமும் பேறுபெற்றதுபோல தை மாதமும் புண்ணியம் பெற்றது. தைப்பூசத் திருநாளை தன்னில் கொண்டு முருக வழிபாட்டுக்கு உகந்ததாயிற்று என்று ஆன்றோர்கள் கூறுவார்கள்.

தை மாதத்தில் முருக வழிபாடு குறித்து, வேறு சில காரணங்களையும் பெரியோர்கள் சொல்வது உண்டு.

பொதுவாக பௌர்ணமி தெய்வ வழிபாட்டுக்கும், அமாவாசை திருநாள் பித்ருக்கள் வழிபாட்டுக்கும் உகந்தவை என்பார்கள். பௌர்ணமியுடன் சில சிறப்பு நட்சத்திரங்கள் இணையும் திருநாள், மகிமை பெற்றுவிடும். சித்திரை நட்சத்திரம் பௌர்ணமியுடன் இணைவது சித்ராபௌர்ணமி. இப்படி பௌர்ணமியுடன் சேர்ந்து வரும் வைகாசி விசாகம், மாசி மகம், பங்குனி உத்திரம் போன்று, (பெரும்பாலும்) தை மாத பௌர்ணமியும் பூச நட்சத்திரமும் இணைந்து தைப்பூசமாக, முருகக் கடவுளுக்குரிய திருநாளாக பன்னெடுங்காலம் கடைபிடிக்கப்பட்டுவருகிறது.

கந்தனை எண்ணியே வந்தனை செய்வோம்!

• முருகக் கடவுள் அசுரகுலத்தை அழித்ததன் வெற்றி விழாவாக தைப்பூசம் கொண்டாடப்படுகிறது என்றும் கூறுவர்.

• முருகக் கடவுள் சூரனை வதைக்க  அன்னை சக்தியிடம் சக்திவேல் பெற்றது ஒரு தைப்பூசத் திருநாளில்தான்.

தைப்பூசத்துக்கு வேறு சில சிறப்புகளும் உண்டு.

• ஒரு கல்பத்தில் தைப்பூச தினத்தில்தான் உலகப் படைப்பு தோன்றியது. நீர் முதலில் தோன்றியது; அதில் பிரமாண்டமான நிலப்பகுதி உருவானாது என்று புராணங்கள் கூறுகின்றன. இந்த ஐதீகத்தின் அடிப்படையில் பல்வேறு ஆலயங்களில் அன்று தெப்போற்சவம் நடைபெறுகிறது.

• ஈசனுக்கும் உரிய நாள் தைப்பூசம். வியாக்கிரபாதர், பதஞ்சலி முனிவர்களுக்கு ஞானக்கண் தந்து, தன் திருத்தாண்டவத்தை காணச் செய்த எம்பெருமான் சிவன். அவர்களுக்காக திருநடனம் புரிந்த தினமும் ஒரு தைப்பூசத் திருநாளில்தான் என்பார் திருமுருக கிருபானந்தவாரியார். சிவாலயங்களில் தைப்பூசம் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

• பூசம் அல்லது புஷ்யம் என்று சொல்லப்படும் நட்சத்திரம், நட்சத்திர வரிசையில் 8-வது நட்சத்திரம். இந்த நட்சத்திரம் கடக ராசியில் இருக்கிறது. இதற்குத் தேவதை சனி பகவான் ஆவார். எனவே, பூச நட்சத்திர நாளில் சனி பகவானை பூஜித்தும் சிறப்படையலாம்.

• வடலூரில் தைப்பூசம் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. முருகனை நினைத்துருகி கண்ணாடியில் அவன் தரிசனத்தைக் கண்ட வள்ளலார் தம் ஸித்திவளாகத்தை நிறுவி, அதில் அன்னதானம் செய்த திருநாள் தைப்பூசம் ஆகையால், அன்றைய தினம் வடலூரில் வள்ளலாருக்குரிய தினமாக கொண்டாடப் படுகிறது. தைப்பூசத்தன்று சிறப்பு ஆராதனைகளும் அன்னதானமும் நடைபெறுகின்றன!

தொகுப்பு : செ.கார்த்திகேயன்

கந்தனை எண்ணியே வந்தனை செய்வோம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism