Published:Updated:

வருண யாகத்தைத் தொடர்ந்து கோடை வெம்மையைப் போக்க கோயில்களில் நடைபெறும் தாராபிஷேகம்!

வருண யாகத்தைத் தொடர்ந்து கோடை வெம்மையைப் போக்க கோயில்களில் நடைபெறும் தாராபிஷேகம்!
வருண யாகத்தைத் தொடர்ந்து கோடை வெம்மையைப் போக்க கோயில்களில் நடைபெறும் தாராபிஷேகம்!

ற்போது, தமிழகத்தில் கடுமையான கோடை வெயில் சுட்டெரித்துக்கொண்டிருக்கிறது. நீர்நிலைகள் அனைத்தும் வறண்டுவிட்ட நிலையில், மழை பெறவேண்டி கோயில்களில் சிறப்பு வருண யாகம் நடத்த அறநிலையத் துறை உத்தரவிட்டிருந்தது. தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் வருணயாகம் நடைபெற்றுவரும் நிலையில், தற்போது அக்னி வெயிலின் தாக்கத்தைக் குறைக்க திருவண்ணாமலை உள்ளிட்ட சிவன் கோயில்களில் சிவபெருமானுக்கு தாராபிஷேகம் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். 

வருண யாகத்தைத் தொடர்ந்து கோடை வெம்மையைப் போக்க கோயில்களில் நடைபெறும் தாராபிஷேகம்!

சிவபெருமான் அக்னியின் சொரூபமாக இருப்பவர். அதனால், அவருக்கு குளிர்ச்சியான வில்வத்தால் அர்ச்சனை செய்யப்படும். திருமால் குளிர்ச்சியாக இருப்பவர். அதனால், அவருக்கு வெம்மையான துளசியால் அர்ச்சனை செய்யப்படும். கோடைக்காலத்தில் சிவபெருமானை குளிர்விக்க, மதிய வேளைகளில் தாராபிஷேகம் நடத்தப்படுகிறது. அதன்படி, தினமும் உச்சிக்கால பூஜை தொடங்கி, சாயரட்சை பூஜை வரை கருவறை மூலவருக்குத் தாராபிஷேகம் செய்யப்படுகிறது.

வருண யாகத்தைத் தொடர்ந்து கோடை வெம்மையைப் போக்க கோயில்களில் நடைபெறும் தாராபிஷேகம்!

அப்போது வெட்டிவேர், ஏலக்காய், ஜாதிக்காய், ஜவ்வாது, சந்தனம் போன்ற வாசனைத் திரவியங்களை, பன்னீரில் கலந்து தாரா பாத்திரத்தில் வைத்து, சிவலிங்கத்துக்கு மேலே தொங்கவிட்டு விடுவார்கள். இந்தத் தாரா பாத்திரத்திலிருந்து நீர் துளித் துளியாக இறைவன்மீது தொடர்ந்து விழுந்து இறைவனைக் குளிர்விக்கும். இதுவே தாராபிஷேகம் எனப்படுகிறது. இதனால், கோடையின் தாக்கம் குறைந்து, போதிய மழை பெய்யும் என்பது நம்பிக்கை. சில தலங்களில் தோஷ நிவர்த்தியாகவும் இந்த அபிஷேகம் செய்யப்படுகிறது. அக்னி நட்சத்திரத்தின்போது தொடங்கிய தாராபிஷேகம், இந்த மாதம் மே 29-ம் தேதி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Vikatan