Published:Updated:

திருப்பட்டூர் அற்புதங்கள்!

திருப்பட்டூர் அற்புதங்கள்!

திருப்பட்டூர் அற்புதங்கள்!

திருப்பட்டூர் அற்புதங்கள்!

Published:Updated:
திருப்பட்டூர் அற்புதங்கள்!
திருப்பட்டூர் அற்புதங்கள்!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'தீ
தும் நன்றும் பிறர் தர வாரா’ என்பார்கள். நம் வாழ்க்கையின் ஏற்ற இறக்கங் களுக்கும், நல்லது கெட்டதுகளுக்கும், லாப நஷ்டங்களுக்கும் நாமே காரணம்! நம் சிந்தனையிலும் செயலிலும் நல்லது இருப்பின், நாம் சந்திக்கிற எல்லா விஷயங்களும் நல்லனவாகவே இருக்கும். வாழ்க்கையில் ஒரேயோரு நல்ல விஷயம் நடந்துவிட்டால், பிறகு அடுத்தடுத்து நடக்கிற எல்லாக் காரியங்களும் நல்லனவாகவே அமையும்!

எண்ணம் போல் வாழ்க்கை என்பார்கள். நம் எண்ணம் போல் நம் வாழ்க்கை அமைவதற்கு, வாழ்வில் நல்லதொரு திருப்பம் நிகழ்வதற்கு, பேரருள் புரியும் திருத்தலம்தான் திருப்பட்டூர்!

திருச்சியில் இருந்து சென்னை செல்லும் வழியில், சமயபுரத்தை அடுத்து உள்ள சிறுகனூரில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள திருப்பட்டூர் திருத்தலத்துக்கு இன்றைக்கு எங்கிருந்தெல்லாமோ வந்து செல்கிறார்கள், பக்தர்கள்.

'திருப்பட்டூருக்கு வந்தால் திருப்பம் ஏற்படும்’ என்றும், திருப்பதிக்கு நிகரான புகழுடன் பிராபல்யமாகும் திருத்தலம் என்றும் ஓலைச்சுவடிகள் தெரிவிக்கிற அற்புதத் தலத்துக்கு- ஸ்ரீகாசிவிஸ்வநாதரின் கோயிலுக்கு வந்து, ஸ்ரீவியாக்ரபாதர் உருவாக்கிய திருக்குளத்தின் தண்ணீரைச் சிரசில் தெளித்துக்கொண்டு, அந்த ஆலயத்தின் ஸ்ரீவிசாலாட்சி அம்பாளை யும் ஸ்ரீகாசிவிஸ்வநாதரையும் தரிசித்துப் பூரிக்கின்றனர்.

திருப்பட்டூர் அற்புதங்கள்!

அதையடுத்து, அங்கேயுள்ள ஸ்ரீவியாக்ரபாதரின் திருச்சமாதிக்கு அருகில் ஒரு பத்து நிமிடம் கண் மூடி அமர்ந்து, அந்த மகரிஷியின் நல்லதொரு அதிர்வை உணர்ந்து சிலிர்க்கின்றனர். பிறகு, ஸ்ரீபிரம்ம சம்பத் கௌரி சமேத ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோயிலுக்குச் சென்று, அங்கே ஸ்ரீபிரம்மா வணங்கிய பல தலங்களின் மூர்த்தங்களையும் தனிச்சந்நிதியில் அருளும் ஸ்ரீபிரம்மாவையும் தரிசித்து மனமுருகப் பிரார்த் திக்கின்றனர். அங்கேயுள்ள பதஞ்சலி முனிவரின் திருச்சமாதிக்கு அருகிலும் கண் மூடி அமர்ந்து பிரார்த்தித்து, அங்கேயுள்ள அதிர்வை உணர்ந்து சிலிர்த்த வாசக அன்பர்கள் ஏராளம்!  

அந்த அன்பர்களின் அனுபவங்களையும் பிரார்த்தனை ஈடேறிய தகவல்களையும் அடுத்தடுத்துப் பார்க்க இருக்கிறோம்.

அதற்கு முன்னதாக, சிவாச்சார்யர்களுக்கு அருளும் திருத்தலம் இது என்பதை முன்னரே பார்த்தோம் அல்லவா?! 'ஆகமச் செல்வர்களுக்கு அருளும் இறைவனே!’ என்று இந்தத் தலத்து இறைவனைப் போற்றிப் புகழ்ந்துள்ளனர் என்றும், ஆகமங்களைக் கட்டிக் காக்கிற, ஆலயங்களில் உரிய பூஜைகளைச் செய்கிற ஆசார்யர்கள் எனப்படும் அர்ச்சகர்களுக்கு அருளக்கூடிய ஒப்பற்ற தலம் என்றும் பார்த்தது நினைவிருக்கிறதுதானே?!

இந்தத் தலத்துக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. பிரம்மோபதேசம் என்றும் யக்ஞோப வீதம் என்றும் சொல்லப்படும் உபநயனம்... அதாவது பூணூல் கல்யாணம் எனும் சடங்கை, இந்தத் தலத்தில் செய்வது விசேஷம் என்கிறார்கள், ஆசார்யப் பெருமக்கள்!

ஆகமச் செல்வர்கள் எனப்படும் அர்ச்சகர் களும் மற்ற அந்தணப் பெருமக்களும் அவர்கள் தம் குழந்தைகளுக்கு சிறுவயதில் உபநயனம் செய்து வைப்பார்கள். அந்த உபநயனத்தை, பிரம்மோபதேச வைபவத்தை ஸ்ரீபிரம்மதேவன் குடிகொண்டிருக்கும் இந்தத் திருவிடத்தில் நடத்தினால், அந்தக் குழந்தை பின்னாளில் கல்வியிலும் ஞானத்திலும் சிறந்து விளங்குவான் என்பது ஐதீகம்!

கிரகிக்கும் திறனும் முகத்தில் தேஜஸும் கொண்டு, கல்வியில் சிறந்து விளங்கி, ஞானத்துடன் நம் பையன் திகழ வேண்டும் என்பதுதானே ஒவ்வொரு பெற்றோரின் நினைப்பும் கவலையும்?! திருப்பட்டூருக்கு வந்து, ஸ்ரீவியாக்ரபாதர் உருவாக் கிய திருக்குளத்து நீரைத் தெளித்துக்கொண்டு, இரண்டு ஆலயங்களையும் வழிபட்டுப் பிரார்த்தித்தாலே... பித்ருக்களாகிய முன்னோரின் ஆசியுடன் குருவருளும் திருவருளும் கிடைக் கப் பெற்று, நம் சந்ததி சிறக்கும் என்பது ஆசார்யர்களின் வாக்கு! அதன்படி, மாணவர்கள் இங்கு வந்து வழிபட்டாலே சர்வ நலனும் பெற்று வாழ்வாங்கு வாழ்வார்கள். ஆசார்ய புருஷர்களும் அந்தணர் களும் அவர்களின் மகன்களுக்கு இங்கு வந்து உபநயனம் செய்து வைத்தால்... இன்னும் பொலிவோடும் வலுவோடும் திகழ்வார்கள் என்பது உறுதி!

திருப்பட்டூர் அற்புதங்கள்!

அதேபோல், சுற்றுவட்டாரத் தில் இருந்தெல்லாம் விவசாயிகள், இங்கு வந்து அம்பாளின் திருவடியில் விதை நெல்லை வைத்து வணங்கி விட்டு, பிறகு அதனை ஊர்வலமாக எடுத்துச் சென்று, தங்களின் வயல்களில், விதைப்பார்களாம்! அப்படி வழிபட்டு விதைத்தால், அந்த முறை போட்டதெல்லாம் முளைக்கும்; தானியங்கள் பெருகி லாபம் கொழிக்கும் என்கின்றனர் விவசாயிகள்.

சித்திரை மற்றும் ஆடி மாதங்களில் செட்டி குளம், துறையூர், முசிறி, சிறுகனூர், பாடலூர் உள்ளிட்ட பல ஊர்களில் இருந்தும் விவசாயிகள் விதை நெல் அல்லது தானியப் பயறு வகைகளை அம்பாளின் திருவடியில் வைத்து பூஜித்து, ஊர்வலமாக எடுத்துச் செல்கின்றனர். கிட்டத் தட்ட, திருப்பட்டூர் கோயில்களின் விழாக்களில் ஒன்றாகவே இந்த வைபவம் நடைபெறுமாம்!

விளை நிலங்கள் செழித்து வளர்ந்தால்தான் உலகில் தானியங்கள் பெருகும். குழந்தைகள், அறிவுடனும் செறிவுடனும் வளர்ந்தால்தான் அகிலத்தில் ஒவ்வொரு குடும்ப மும் உன்னதமான நிலைக்கு உயரும். இந்த இரண்டையும் தந்தருளக்கூடிய, காத்தருளக் கூடிய தலம்தான் திருப்பட்டூர்!

எத்தனையோ மகரிஷிகளின் பாதம் பட்ட பூமி இது. மன்னர்கள் பலரும் திருப்பணிகள் செய்து, நிவந்தங்கள் அளித்து ஆராதித்த ஸ்தலம் இது! 'தில்லை மூவாயிரம் திருப்பிடவூர் மூவாயிரத்து ஒன்று’ என்கிற சொலவடைக்கு ஏற்ப, இங்கே ஒருகாலத்தில் வேத கோஷங்கள் எப்போதும் ஓங்கி ஒலித்து,  அதிர்வலைகளைப் பரப்பிய இடம்... என்று பெருமைகள் பல கொண்ட திருப்பட்டூர்... இன்றைக்கு மெள்ள மெள்ள வளர்ந்து கொண்டிருக்கிறது. தென் மாவட்டங்கள், சென்னை, வேலூர் ஆகிய ஊர்களிலிருந்து மட்டுமின்றி, வெளி மாநிலங் களில் இருந்தும் எண்ணற்ற பக்தர்களின் வருகை தினமும் அதிகரித்தபடியே உள்ளது.

பிரதோஷ பூஜையைத் தரிசிக்கவும், வியாக்ரபாதரின் திருக்குளத்தில் இருந்து கொஞ்சம் தீர்த்தத்தை பாட்டிலில் அடைத்து எடுத்துக் கொண்டு, வர இயலாத வயோதிகர்களுக்காகவும் நோயுற்றிருப்பவர் களுக்காகவும் கொண்டு போய்க் கொடுக்கிற அன்பர்கள் அதிகரித்துக் கொண்டே இருக் கிறார்கள். திருப்பட்டூர், தன் ஒட்டுமொத்த சாந்நித்தியத்தையும் இன்னும் இன்னும் மக்க ளுக்கு உணர்த்தப் போகிறது பாருங்களேன்!

- பரவசம் தொடரும்
படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism